Followers

Friday, September 13, 2013

இந்துத்வா ஆட்சி கட்டில் ஏறினால் எப்படி இருக்கும்?

மோடி பிரதமாராகவே ஆகி விட்டதாக தினமலரில் ஒரு பெரும் மேல் சாதி கூட்டம் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. பாவம்....அவர்களுக்கும் கனவு காண உரிமையிருக்கிறது அல்லவா! பாஜகவுக்கு முடிவுரை எழுத இன்று மோடியை முன்னுறுத்தியுள்ளனர். மோடி பிரதம வேட்பாளராக அறிமுகப்படுத்தப் பட்டதால் ராகுலின் பிரதமர் கனவு வெகு இலகுவாக நிறைவேறப் போகிறது. நிதிஷ் குமார், முலாயம் சிங், லல்லு பிரசாத், கருணாநிதி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, என்று மிகப் பெரும் அரசியல் தலைவர்களின் எண்ணம் மோடியை பிரதமராக்கக் கூடாது என்பதே... மேலும் அத்வானியின் குழி பறிப்பு வேலைகளுக்கும் இனி பஞ்சம் இருக்காது. குஜராத் கலவர கேஸ் இனி ஒவ்வொன்றாக ஆதாரங்களோடு காங்கிரஸ் மக்கள் மத்திக்கு கொண்டு செல்லும். இனி வருங்காலங்களில் பல தமாஷாக்களை பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.

இந்துத்வா அதிகாரத்துக்கு வந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு விகடன் தரும் இந்த செய்தியை பாருங்கள்.

விருதுநகர்: பள்ளிக்கு வராமல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களை தலைமையாசிரியர் கண்டித்த விவகாரத்தில் இந்து முன்னனியினருக்கும், போலீசாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இந்து முன்னனியினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், பாண்டியன்நகரில் இயங்கி வருகிறது சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் குமார், மாரியப்பன் உள்பட 20 பேர் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு வராமல், இந்து முன்னனியினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் நல்லதம்பி, 'ஏன் பள்ளிக்கு வரவில்லை' என்று சொல்லி, இன்று பள்ளிக்கு வந்த 20 மாணவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் இந்து முன்னனி நிர்வாகிகள் ராமதாஸ், ராஜா, அருள்தாஸ் ஆகியோர் பள்ளிக்கு சென்று, 'தலைமையாசிரியர் நல்லதம்பி திராவிடர் கழகத்தை சேர்ந்தவர். அதனால்தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்ற மாணவர்களை பள்ளி உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்' என்று சொல்லி தகராறு செய்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர்
சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று இந்து முன்னனியினரை கண்டித்தார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இந்து முன்னனியினர் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சட்டை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் இந்து முன்னனி நிர்வாகிகள் ராமதாஸ், ராஜா, அருள்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பிறகு கல்வித்துறை அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற 20 மாணவர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செய்தி: எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

http://news.vikatan.com/article.php?module=news&aid=19222

-------------------------------------------------------------------

சமூகத்தை இரு துருவங்களாக்கும் தலைவர் எப்படி பிரதமராக முடியும்? என்று நரேந்திர மோடி குறித்து அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி விமர்சித்துள்ளார்.

சுதீந்திர குல்கர்னி வியாழக்கிழமை டுவிட்டர் இணையதளத்தில், நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “நாட்டு மக்கள், மத்தியில் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த மாற்றத்தை யாரால் கொடுக்க முடியும்? சமூகத்தை இரு துருவங்களாக்கும் தலைவரால் அந்த மாற்றத்தைக் கொடுக்க முடியுமா? அவரால் சமூகத்தில் அமைதியையும், சீரான ஆட்சியையும் வழங்க முடியுமா? பாஜகவில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.” என்று சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------

6 comments:

Anonymous said...

பாட்னா : பிரதமர் வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., மற்றும் மோடியை கடுமையாக சாடி உள்ளார். அவர் கூறுகையில், பா.ஜ., செய்வது கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கை; இது எங்களுக்கு முன்னரே தெரியும்; அதனால் தான் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்; பா.ஜ.,வின் மோடி குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே அறிந்ததால் தான் அதனை எதிர்த்‌தோம்; பா.ஜ.,வில் அனைவரும் நடித்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=803633

Anonymous said...

என்ன அண்ணாச்சி அடியில எரியுதா?

கொஞ்சம் பெட்ரோல் ஊத்தினா அடங்கும்.

குண்டுவைக்க உங்கள் கும்பல் கிளம்பியாச்சா?

உங்கள் தாய் இத்தாலியின் முகம் குளிர குண்டு வைக்கவேண்டும்.

காசு...பணம்...மணி...துட்டு எல்லாம் இத்தாலியில் இருந்து வந்துவிடும்.

இப்படிக்கு...
நானேதான்.

suvanappiriyan said...

//குண்டுவைக்க உங்கள் கும்பல் கிளம்பியாச்சா?//

அதுதான் உங்கள் கூட்டம் பிளான் பண்ணி ஏற்கெனவே கலவரத்தை உண்டு பண்ண முஸா.பர் நகர் கிளம்பியாச்சே....இன்னும் என்னவெல்லாம் பிளான் வைத்துள்ளீர்கள்? மோடியிடமும், அமீத் ஷா விடமும் கேட்டு சொல்லவும். ஆனால் இந்து மக்களும் மிக தெளிவாகவே இருக்கின்றனர். எவ்வளவுதான் ரத்த ஆறுகளை நீங்கள் ஓட விட்டாலும் மோடியை பிரதமராக்க எந்த தாய் மண்ணை நேசிக்கும் இந்தியனும் துணிய மாட்டான்.

Anonymous said...

Aloor Shanavas

/Nambi Narayanan / உங்கள் வரலாறே அழிவில் எழுவதுதானே. ஆர்.எஸ்.எஸ் காரர் வல்லபாய் பட்டேலை காங்கிரசுக்குள் அனுப்பி, சூழ்ச்சியால் நாட்டையே பிரித்தீர்கள். காந்தியை கொன்று முஸ்லிம் மீது பழி போட்டீர்கள். காமராஜரை உயிரோடு எரிக்க முயன்றீர்கள். நாடு முழுவதும் கலவரங்களை நிகழ்த்தி சமூகத்தை கூறு போட்டீர்கள். நரசிம்மராவ் என்ற ஆர்.எஸ்.எஸ் காரரை காங்கிரசுக்குள் ஊடுருவ விட்டு பாபர் மஸ்ஜிதை இடித்தீர்கள்.கோத்ராவில் ரயிலுக்கு நீங்களே தீ வைத்து விட்டு கலவரம் செய்தீர்கள். அஜ்மீர், புனே, மாலேகான் என நாடுமுழுவதும் குண்டு வைத்துவிட்டு இந்தியன் முஜாகிதீன் என்றீர்கள். தென்காசியில் உங்கள் ஆபீசில் நீங்களே குண்டுவைத்து மாட்டிக் கொண்டீர்கள். திண்டுக்கல்லில் உங்கள் வீட்டில் நீங்களே குண்டுவீசி பிடிபட்டீர்கள். ஆடிட்டர் ரமேசை கொன்றது யார் என்றே விசாரணையில் தெரியாத போதும் முஸ்லிம்தான் கொன்றான் என்றீர்கள். சீனாவில் உள்ள ஹைடெக் தெருவைக் காட்டி இது மோடியின் அகமதாபாத் என்றீர்கள். அமிதாப் மோடிக்கு ஆதரவாக பேசினார் என்று கிளப்பி விட்டு பின்னர் அமிதாப் மறுத்தவுடன் திருதிருவென முழித்தீர்கள். அமேரிக்காகாரன் சிலரை அழைத்து மோடியை சந்திக்க வைத்து இதோ விசா தந்துவிட்டார்கள் என்று பரப்பினீர்கள். இங்கிலாந்திலிருந்து அழைப்பு வந்தது என்று கதை விட்டீர்கள். இரண்டையுமே அந்த நாடுகள் மறுத்ததும் ஓடி ஒழிந்தீர்கள். கரன் தாப்பரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் உங்கள் இரும்பு மனிதர் மோடி துருபிடத்த பழைய இரும்புச் சாமான் போல திருட்டு முழி முழித்ததை மறந்து விட்டு கரன் தாப்பர் மீதே குற்றம் சுமத்தினீர்கள். எப்பப்பா மோசடியின் மொத்த உருவமே இந்துத்துவ மதவெறிக் கூட்டம் தான்.

Anonymous said...

விருதுநகர் அரசு மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர் நல்லதம்பி செய்தது நியாயமா?
தி.க.வில் மாநில துணைத் தலைவராக பொறுப்பிலிருக்கும் ஒரு நபர் பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்தால் அங்கே என்ன பாடம் கற்பிக்கப்படும். இந்த பள்ளியில் நடந்த உண்மை சம்பவம்
1. இராஜாபாளையத்தில் நடந்த தி.க. மாநாட்டிற்கு பள்ளிக்கு வந்த மாணவர்களை வருகை பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு தி.க. மாநாட்டிற்கு அனுப்பி வைத்தது நியாயமா?
2. தந்தை பெரியார் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினார். ஏன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்த முடியாதா? மூட நம்பிக்கையாக தாலி கட்டி குடும்பம் நடத்தி வருகிறார்கள் முட்டாள்கள். வரும் கால கட்டத்தில் மாணவர்களாகிய நீங்கள் தாலி கட்டாமல் குடும்ப நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு திருமணத்தை கடைபிடிக்க வேண்டும். இதை மாணவர்களாகிய நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று பாடம் நடத்தியது சரியா?
3. குங்குமம் இட்டும், திருநீறு இட்டும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பயித்தியக்காரங்கள். குங்குமம், திருநீறு இட்டு வந்தால் நீங்கள் பாசாக முடியுமா? மூட நம்பிக்கையை விட்டு திருநீறு, குங்குமம் இடாமல் வந்து பெரியார் சொன்ன வழியில் நடங்கள் என்று அந்த தி.க வெறிபிடித்த நல்லதம்பி சொன்னது சரியா?
4. மாரியாத்தாவால வேப்பமரத்துல பால் வருது. விநாயகரான அரச மர இலையில வால் போல் நீட்டிக்கிட்டிருக்கு. இதுல பால் வருது அதுல வால் வருது. நீங்களே புரிந்துகொள்ளுங்க என்று சிரித்து இரட்டை அர்த்தம் பேசிய நல்லதம்பி எவ்வளவு பெரிய பகுத்தறிவாளர் என்று இந்துக்கள் புரிந்து கொள்வோம்.
5. அன்பால சொன்ன கேட்காத குழந்தையும் கேட்கும். படிக்காத குழந்தையும் படிக்கும் என்று மாணவர்களை அடிக்க கூடாது என்று அரசாங்கம் ஆர்டர் இட்டும் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தாமல் பகுத்தறிவு என்று தி.க. இயக்கம் பற்றி முழு நேர ஊழியராக செயல்பட்டு வரும் நல்லதம்பி கையால் பிரம்பை எடுத்து மாணவர்களின் கை கால்களை புண்ணாக்கிய தலைமையாசிரியர் நல்லதம்பி செய்தது சரியா?
மேலே சொன்ன எல்லாவற்றிற்கும் சாட்சி ,ஆதாரம், இருக்கிறது.
திக மாநாட்டிற்கு சென்ற மாணவனும் இருக்கிறான். இதையெல்லாம் கேட்க போன இந்து முன்னணி நிர்வாகிகளின் மீது பணத்தை கொடுத்து பொய் வழக்கு போடச் சொன்னது நியாயமா?
அடிபட்டு ஆஸ்பத்திரியில் சுரேஷ்குமார் எஸ்.ஐ. மாதக்கணக்கில் இருந்தாரா? மணிக்கணக்கில் இருந்தாரா? நிமிடக் கணக்கில் இருந்தாரா?
பொய் வழக்கு போடுவதற்கும் ஒரு வரைமுறை இல்லையா?
மேலே உள்ள சம்பத்தை கண்ணால் கண்டும் காதால் கேட்டும் தீர விசாரித்தும் நாட்டின் நலம் கருதி வெளியிடும் நபர்கள்
இந்த மாதிரி ஆசிரியர்களும், காவல்துறை அதிகாரிகளும் இருந்தால் நாடு நலம் பெறுமா?

இவண்
விருதுநகர் பொதுமக்கள் நலம் கருதி

safdasdf said...