Followers

Tuesday, October 01, 2013

மோடியின் அடுத்த பொய்யும் வெளிச்சத்துக்கு வந்தது!

'இந்திய பிரதமரை 'கிராமத்து பெண்' என்று பாகிஸ்தான் பிரதமர் எப்படி சொல்லப் போயிற்று?' என்று இரண்டு நாள் முன்பு நடந்த டெல்லி கூட்டத்தில் மோடி பாகிஸ்தான் பிரதமரை வசை பாடினார். ஆனால் அவ்வாறு தாம் கூறவில்லை என்று நவாஸ் ஷெரீஃப் மறுத்துள்ள செய்தியை 'ஹிந்து' பத்திரிக்கை செய்தியாக இன்று வெளியிட்டுள்ளது. வழக்கமாக இந்த செய்தியும் தினமலரிலும், தினமணியிலும் வராது. அதனாலென்ன நாம் வெளியிட்டு விடுவோம். :-)

மோடிக்கு பொய்களைத் தவிர வேறு எதுவும் தெரியாதோ....

இனி செய்தியை பார்ப்போம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை 'கிராமத்துப் பெண்' என்று தாம் ஒருபோதும் அழைக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம், கடந்த சில நாட்களாக நீடித்துவந்த சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணைபோகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவிவருவதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் இந்த அணுகுமுறை குறித்து நவாஸ் ஷெரீப் தன்னிடம் பேசியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஹமித் மிர் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், கிராமத்துப் பெண்ணைப் போல மன்மோகன் சிங் நடந்துகொள்வதாக, நவாஸ் ஷெரீப் கூறியதாகக் குறிப்பிடிருந்தார்.

இந்த விவகாரம், ட்விட்டரில் இணையவாசிகளால் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால், சர்ச்சை வலுக்க ஆரம்பித்தது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, இந்திய நாட்டின் பிரதமரை பாகிஸ்தான் பிரதமர் அவமானப்படுத்திவிட்டதாகவும், இதைத் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாகப் பேசினார். இதனால், இந்த சர்ச்சை மேலும் வலுவானது.

இந்த நிலையில், லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை 'கிராமத்துப் பெண்' என்று தாம் ஒருபோதும் அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்ததாகவும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஒருபோதும் துணை நிற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆதாரம் 'ஹிந்து' தினசரி

1-10-2013

நம் நாடு எப்படி இந்துத்வாவாதிகளிடம் மென்மையான போக்கை கடை பிடிக்கிறதோ அதே போல் பாகிஸ்தானும் சில தீவிரவாத குழுக்களிடம் மதத்தின் பெயரால் மென்மையாக நடந்து கொள்கிறது. அவர்களுக்கும் அரசியல் பண்ண வேண்டும் அல்லவா... பாகிஸ்தானில் உள் விவகாரங்களில் ஏதும் பெரும் பிரச்னை ஏற்பட்டால் உடன் காஷ்மீரில் துப்பாக்கி சூடுகளை நடத்தி 'இந்தியா தாக்க வருகிறது' என்ற செய்தியை கசிய விட்டால் அனைத்து போராட்டங்களும் பிசுபிசுத்து விடும். நமது ஆட்சியாளர்களும் சில நேரங்களில் இந்த ஃபார்முலாவை பயன் படுத்துவதுண்டு. இதனை நான் கண்டிக்கிறேன். தவறு செய்யும் எந்த தீவிரவாதிகளையும் மதத்தின் பெயரால் கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கு என்று மாறுமோ அன்று தான் இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ முடியும். இதை உணர வேண்டிய ஆட்சியாளர்கள் மெத்தனமாக இருப்பது வருத்தத்திற்குரியதே....


1 comment:

Unknown said...

பொய்யிலே பிறந்து !
பொய்யிலே வளர்ந்த
மோடி பெருமாணே !