Followers

Saturday, September 28, 2013

மோடிக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!

மோடிக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!



இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது லால் பகதூர் சாஸ்திரியின் உத்தரவின் பேரில் தரிசாக கிடந்த நிலங்களை ஹரியானா, பஞ்சாப், ஹிமாசல பிரதேசங்களை சேர்ந்த சீக்கியர்களுக்கு தானமாக நமது அரசால் அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் இந்திய எல்லையோரத்து மக்கள். தங்கள் சொந்த ஊர்களை துறந்து அரசு அழைத்ததன் பேரில் குஜராத்தை நோக்கி வந்த ஏழைகளை இன்று சிரமததிற்குள்ளாக்க நினைக்கிறார் மோடி. அந்நிலங்களை தங்களின் உழைப்பால் இன்று சிறந்த நிலைக்கு மாற்றியுள்ளனர் இதன் உரிமையாளர்களான சீக்கியர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிலங்களின் மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது அந்நிலங்களை யாருக்கும் விற்க மோடி அரசு தடை விதித்துள்ளது. பட்டா வழங்கலையும் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து அந்த விவசாயிகள் மாநில ஹைகோர்டை நாடினர். தீர்ப்பு விவசாயிகளுக்கு சாதகமாக வந்துள்ளது. உடனே மோடிக்கு மூக்கில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. அந்த தடையை எதிர்த்து தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது மோடியின் அரசு.

ஐம்பது வருடங்கள் கடின உழைப்புக்கு பிறகு அந்த நிலங்களை இன்று சிறந்த நிலைக்கு உயர்த்திய அந்த மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வர மோடி முயற்சிக்கிறார். டாடா, அம்பானிகளோடு ஏதும் பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டாரோ என்னவோ.... இதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களை அபகரித்து கார்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்தாகி விட்டது. இனி பாக்கி உள்ள நிலங்களையும் பண முதலைகளுக்கு கொடுத்து விட்டால் 'குஜராத் ஒளிர்கிறது' என்ற பொய்யான கோஷத்தை மேலும் விரிவாக்கலாம்.

எங்கெல்லாம் உழைக்கும் மக்கள் இருக்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் முதல் எதிரி மோடி என்பது இந்த நிகழ்வின் மூலம் மேலும் நிரூபணமாகிறது.

Sikh cultivators settled in Kutch over 50 years ago when the area bordering the Rann and Pakistan was barren. Two years ago, as farmland prices shot up, the State government barred them from either selling, or taking loan or subsidy on their land under the Bombay Tenancy and Agricultural Lands Act, 1958. It also stopped issuing certified copies of land records. The farmers challenged the order in the Gujarat High Court and won. However, the government filed an appeal in the Supreme Court against the order.

The farmers appealed to Mr. Badal, SGPC president A.S. Makkar and the National Commission for Minorities, which urged Gujarat to withdraw the case. On Saturday, Mr. Badal said he would take up the matter with BJP president Rajnath Singh and Mr. Modi. However, Mr. Modi blamed it on the Congress, saying the party had no right to speak about the Sikh community as it was responsible for the massacre of Sikhs in the 1984 riots in Delhi.

http://www.thehindu.com/news/national/other-states/modi-reaches-out-to-badal-on-kutch-sikh-farmers-issue/article4994931.ece

1 comment:

Anonymous said...

ஒரு இந்து நண்பரின் ஆதங்கம்....

மோடி ஊருக்குள் வந்தாலே இஸ்லாமியர்களின் கல்லூரிகளை எல்லாம் மூடச் சொல்லி உத்தரவு போடவேண்டியிருக்கிறது என்றால், பிரதமராக வந்தால் என்னென்ன நடக்கும் என சிந்தித்துப் பாருங்கள்?

மோடியை பொது இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரானவராக பொதுப்படையாகக் கருதினால் ஆபத்து புரியாது.

நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் குழந்தையை அக்கறையாகப் பார்த்துக் கொள்ளும் பானு அக்கா,

ரம்ஜானுக்கு உங்கள் வீட்டைத் தேடி வந்து பிரியாணி கொடுக்கும் உங்கள் பள்ளி நண்பர் அப்துல்லா,

கறி வாங்கும் போது உங்கள் குழந்தைக்கு பிடிக்கும் என்பதற்காக புன்னகைத்தபடியே ரெண்டு நல்லி எலும்பு எக்ஸ்ட்ரா வைக்கும் பாரக் பாய்,

ஒரே தட்டில் உங்களுடன் உணவைப் பகிர்ந்த கல்லூரி நண்பன் அசாரூதீன்

என அனைவருக்கும் எதிரானவர்கள் மோடியும் அவர் கூட்டமும்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். காவிகள் சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல. மனித சமூகத்திற்கே எதிரானவர்கள்.