Followers

Thursday, September 19, 2013

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.

பெண்கள் விளையாட்டு என்றாலே அது உடை குறைப்பாகத்தான் இருக்கும். அங்கு குழுமும் கூட்டமும் விளையாட்டை பார்க்க வராது. அந்த பெண்களின் அங்கங்களை ஆராய்வதற்கே வரும். ஆண்கள் போட்டிகளை விட பெண்கள் அரை குறை ஆடைகளோடு கலந்து கொள்ளும் போட்டிகளில் நமது ஆண் மக்கள் அரங்கு நிரம்பி வழிவதும் அதற்குத்தான்.

35 வயதான குல்சும் அப்துல்லா அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய பெண். கம்யூட்டர் என்ஜினியரிங்கில் பிஎச்டி பண்ணியுள்ளார். சர்வதேச பளு தூக்கும் போட்டியில் பெண்கள் இவ்வாறுதான் அரை குறை ஆடை அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால் இவர் மேலதிகாரிகளோடு வாதிட்டு 'இஸ்லாமிய உடை, பளு தூக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. நான் இஸ்லாமிய உடைகளோடு மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்வேன்' என்று கூறி முடிவில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிகாரிகள் தற்போது போட்டியின் விதி முறைகளை திருத்தி இஸ்லாமிய உடை அணிந்தும் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று மாற்றியுள்ளனர்.

தற்போது இந்த உடையில் இந்த பெண்ணை நாம் பார்க்கும் போது நம்மையறியாமல் மரியாதை வருகிறது. போராடினால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பதற்கு இந்த பெண் முன்னுதாரணமாக உள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி...

இதே போல் ஈரானிய பெண்கள் முழு ஆடையோடு விளையாட வந்ததற்காக ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இனி வரும் காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெண்கள் தங்கள் உடலை மறைத்து கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும். இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

பெண்கள் புர்கா அணிந்து வெளியில் வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியாது என்று சொல்பவர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் குல்சும் அப்துல்லா.

6 comments:

சிராஜ் said...

// இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.//

போராடிய குல்சும் அவர்களும், அவரின் கோரிக்கைய ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியும் பாராட்டப்படவேண்டியவர்கள்...

Unknown said...

இதுவரை காலமும் இஸ்லாமிய உடையை அணிந்து விளையாட்டுக்களில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களைத் தடுத்து வந்த மேற்குலகம், இப்போது சிறிது சிறிதாக அந்தத் தடைகளை நீக்கி வருகிறது.

முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம் பெண்கள், பொதுவாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது இல்லை. விரும்புவதும் இல்லை. ஏன் உள்ளூர் விளையாட்டுக்களில் கலந்து கொள்வதுமில்லை.

தன்னிச்சையாக இவர்கள் கலந்து கொள்ளாததால், நமது சமூகம் இன்றுவரை தமக்கே உரித்தான இஸ்லாமியப் பண்பாடு, ஒழுக்க விழுமியங்களைக் காத்து வந்திருக்கிறது.

இப்போது தடையும் சிறிது சிறிதாக நீக்கிக் கொண்டு வருகிறார்கள். இனியென்ன, இனிவரும் காலங்களில் முஸ்லிம் பெண்களும் இஸ்லாமிய உடைகளோடு (?) விளையாட்டு மைதானங்களில் பவனி வரப் போகிறார்கள்.

எல்லாமே சர்வ சாதாரணமாகப் போகப் போகிறது.

நடுவர்களில் இருந்து, பயிற்சியாளரிலிருந்து புகைப்படம், வீடியோ எடுக்கும் எல்லாருமே ஆண் வர்க்கங்கள்தான்!

இவர்களுக்கு முன்னால் போஸ் கொடுக்கத்தான், இந்தத் தடை நீக்கமா?

மர்ஹத்தைப் பேணிக் கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.

சபிக்கப்பட்ட இரு கூட்டங்களும் உடும்புப் பொந்திற்குள் சென்றாலும், நாமும் செல்வோம் என்ற நமது மனோபாவம், தடை நீக்கத்திற்கு பாராட்டுத் தெரிவிக்கிறது.

எம்மை நாமே திருத்திக் கொள்ளாதவரை, இறைவனும் திருத்துவதில்லை.

enrenrum16 said...

மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்ற குல்சும் விளையாட்டில் ஆர்வமுள்ள பல முஸ்லிம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி...முஸ்லிம் பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்த விளையாட்டுத் துறை விரைவில் அவர்கள் வசம் வரும் தருணம் வந்துவிட்டது... அல்ஹம்துலில்லாஹ்.

Anonymous said...

என்ன முன்மாதிரியோ?

விளையாட்டுத்துறை முஸ்லிம் பெண்களுக்கு எப்போது எட்டாக் கனியாகப் போனது?

Dr.Anburaj said...

ஆடைகுறைப்பு என்பது ஒரு முட்டாள்தனமான காரியம்.ஒருவர் தனது சுயமதிப்பை தானே குறைத்துக் கொள்ளும் அறிவுகெட்டச் செயலாகும்.உடை விசயத்தில் போட்டியாளர்களுக்கு நிபந்தனை வழங்க விளையாட்டு போட்டியை நடத்துபவர்களுக்கு உரிமை கிடையாது. இப்பெண்ணின் விவேகம் பாராட்டுககுரியது.முன்உதாரணமான இச்செயதிக்கு அதிக பிரச்சாரம் செய்ய வேண்டும். அதிக மக்களுக்கு இது போய் சேர வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூாிகளுக்கும் இச்செய்தியை அனுப்ப வேண்டும். உடனே செய்ய வேண்டும்.