Followers

Thursday, July 31, 2014

யுவன் சங்கர் ராஜாவின் அடுத்தடுத்த மாற்றங்கள்!

யுவன் சங்கர் ராஜாவின் அடுத்தடுத்த மாற்றங்கள்!



(மசூதியில் நோன்பு திறக்கும் நேரம்)

இன்று பிரபல இசையமைப்பாளர் யுவனும் நடிகர் ஜெய்யும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர். நாங்களெல்லாம் தாய் தந்தையர் இஸ்லாமியர் என்பதனால் இன்று இஸ்லாத்தில் இருக்கிறோம். ஆனால் இந்த இருவரும் இஸ்லாம் என்றால் என்ன என்று விளங்கி வந்துள்ளனர். இஸ்லாத்துக்கு வந்தவுடன் அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். நாளாக நாளாக இஸ்லாத்தின் பிடிப்பு அதிகமாகிக் கொண்டு செல்கிறது.



(பெருநாள் தொழுகைக்கு நடிகர் ஜெய்யுடன் நேற்று வந்தபோது)

தனது தந்தை, தனது அண்ணன், தனது தங்கை என்று எவருடனும் எந்த முறுகலும் இல்லாமல் தனது மார்க்க கடமைகளை யுவன் இன்று வரை நிறைவேற்றி வருகிறார். இஸ்லாத்தை ஏற்று தொடர்ந்து தொழுது வருவதால் முகத்தில் அதீத வசீகரமும் தற்போது வந்துள்ளது. பெருநாள் தொழுகை தொழுது விட்டு தனது குடும்பத்தவருக்கு மகிழ்ச்சியோடு பிரியாணியும் கொடுத்து அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளார் யுவன்.



(பெருநாள் தொழுகை முடிந்து வந்து தனது குடும்ப உறுப்பினர்களோடு சந்தோஷமாக பிரியாணி சாப்பிட்டவுடன்)

அவர் பணிபுரியும் சினிமா துறையை வைத்து சிலர் விமரிசிக்கின்றனர். போகப் போக அதுவும் சரியாகும். உள்ளங்களை அறிபவன் இறைவனே! இணை வைக்கும் பெரும் பாவத்திலிருந்து மீண்டு விட்டார். சிறு சிறு தவறுகளையும் இனி திருத்திக் கொள்ள பிரார்த்திப்போம்.

சீக்கிரமே ஒரு நல்ல மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துவோம்.



ஆஹா..... யுவன் சங்கர் ராஜா வீட்டில் பிரியாணி ரெடியாகுதுங்கோ.... பிரேம்ஜி பிரியாணியை கிண்டுகிறார்..... :-)

2 comments:

Anonymous said...

கட்டுரை அருமை. ஆனால் கடைசி இருவரிகள்?

அப்படியானால் இஸ்லாத்திற்கு மாறியபின் ஏற்கனவே திருமணம் ஆனவரும் இஸ்லாம் பெண்ணை மணம்புரிய வேண்டுமோ? என்ன நியாயம்?

Anonymous said...

இந்த பெருந்தன்மை இந்துக்களிடம் மட்டுமே இருக்கும். முஸ்லிம்கள் இதை கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்.