இவர்கள் அறிவாளிகளா? அல்லது அறிவிலிகளா?
கார்த்திகை செல்வன்:
மூடப் பழக்கங்கள்,
சாதிகள் அனைத்து மதங்களிலும் இருக்கிறது. ஆனால்
இந்து மதத்தை மட்டுமே உங்களைப் போன்றவர்கள் சாடுவதின் நோக்கம் என்ன?
ஏ.ராஜா:
கிறித்தவ மதத்தில்
சாதி உள்ளது. மறுக்கவில்லை. ஆனால் ஏசு நாதர் சாதியை வலியுறுத்தினாரா?
இஸ்லாமிய மதத்திலும்
சில சாதிகள் உண்டு. ஆனால் குர்ஆனில் சாதி வலியுறுத்தும் வசனங்களை காட்ட முடியுமா?
முடியாது.
ஆனால் இந்து மதத்தில்
வேதங்களிலும் இதிகாசங்களிலும் சாதிகளை வலியுறுத்துவதை பார்க்கிறோம். எனவேதான் மற்ற
மதங்களில் இல்லாத சாதி பிடிப்பு இந்து மதத்தில் உள்ளது. எனவே தான் இந்து மதத்தையும்
அது போதிக்கும் புராண இதிகாசங்களையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
புதிய தலைமுறை தொலைக்
காட்சி பேட்டியில் ராஜா.
இங்கு ஒன்றை நாம்
கவனிக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாத ராஜாவுக்கு குர்ஆனில் சாதி போதிக்கப்படவில்லை
என்று தெளிவாக தெரிகிறது. ஆனால் இஸ்லாமியரிடத்தில் ஹனஃபி, ஷா.பி, ஹம்பலி, மாலிக்கி என்று சாதிகளாக பிரித்து வைத்துள்ளார்கள்.
அதற்குள்ளும் உட் பிரிவுகளாக ராவுத்தர், லெப்பை, தக்னி என்று மூடர்கள்
பிரித்து வைத்துள்ளார்கள். முன்பு விளங்காமல் இருந்தது. தற்போது விளங்கி இஸ்லாத்தில்
சாதிகள் இல்லை என்று நாம் சொன்னால் நம்மை குழப்பவாதி என்கிறார்கள்.
சாமான்ய மக்களிடம்
இதை எடுத்து சொன்னால் உடன் விளங்கி ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால்
ஏழு வருடம் மதரஸாவில் ஓதி ஆலிம்(அறிஞர்) பட்டம் பெற்ற ஒருவரிடம் நீங்கள் சென்று இதனை
சொன்னால் 'நீ ஆலிமா(அறிஞனா?)
நான் ஆலிமா?(அறிஞனா)?' என்று கேட்கிறார்கள்.
சிந்திக்க மறுக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள்...
இவர்கள் ஆலிம்களா? (அறிஞர்களா?)
அல்லது ஜாஹில்களா? (அறிவிலிகளா?)
4 comments:
ஐயா
சுவனப்பிரியன் ஒவ்வொரு நாடடிலும் பலவித பிரச்சனைகளுக்கு தீா்வுகள் பலவிதமாக காணப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்ததை அரேபியாவில் நடந்ததோடு ஒத்துபப் பார்க்கஅவசியம் இல்லை.ஆதிகாலம் தொட்டு
இன்று இந்தியாவில் லட்சக்கணக்கான கலாச்சார பிரிவுகள் மொழிகள் வட்டார வழக்கங்கள் இருக்கின்றன என்ற ஒரு விசயமே எந்தவொரு சாதியும் கலாச்சார பிரிவுகளோ மொழி பேசும் கோத்திர மக்களோ அழிக்கப்படவில்லை என்பதற்கு ஒரு நிரூபணம் ஆகும்.இன்றும் அவர்கள் இயல்பான பரிணாம வளா்ச்சி் கண்டு வாழ்கின்றார்கள்.காப்பதுதான் சிறப்பு.அழிப்பது சிறப்பு அல்ல.
அதற்காக இந்து வேதங்களை தாங்கள் போற்ற வேண்டும்.
தீண்டாமை ஆதிக்க மனப்பான்மை போன்றவை இடைச்செரூகலாக ஏற்பட்டது.மனித மனத்தின் கோணல்.
நாம் தினம்தோறும் குளிக்கின்றோம்.வீட்டை தினம் தினம் பெருக்க வேண்டியதுள்ளது.வாரத்திற்கு ஒருமுறை ஒட்டடை அடிக்க வேண்டியுள்ளது.மாதத்திற்கு ஒரு முறையாவது முழுவதும் துடைத்து கழுவி சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. சமூதாயம் மட்டும் அதற்கு விலக்கு அல்ல.நோய்கள் அழுக்குகள் சோ்ந்து கொண்டேயிருக்கும் .துடைத்துக்கொண்டேயிருப்பதுபோல் பலவித சமூக நோய்கள் இந்தியாவை இந்து சமூகத்தை பிடித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் அனைத்திற்கும் வைத்தியம் பார்க்கும் முயற்றிகள் முழு வீரியத்துடன் நடந்து கொண்டேயிருந்தது.அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
வைத்தியம் பார்க்கும் நடைமுறை தடை செய்யப்பட்டது முஸ்லீம்களின் காட்டாச்சியில் என்பதை மறந்து விட வேண்டாம்.
பலசாதிகள் பல கோத்திரங்கள் பலமொழிகள் பலபல கலாச்சார பிரிவுகள் சமூதாய ஒட்டத்திற்கு அவசியம் என்பது இந்தியாவில் தோன்றிய நமது முன்னோர்களின் கொள்கை.ஆகவேதான் சாதி பிரிவுகள் இருப்பதை ஆதரித்தார்கள். ஒருவன் இன்றொருவனை எமாற்றவதை சாதியைக் காட்டி அவமானப்படுத்துவதை நமது முன்னொா்கள் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை.
குறிஞ்சி நில மக்களுக்கும் பாலை நில மக்களுக்கும் ஒரே கலாச்சாரம் என்பதை நமது முன்னோா்கள் ஆதரிக்கவில்லை. அதே வேளையில் பிடிவாதமாக முரண்டுத்தனமாக கருத்துக்களையும் முன்வைத்து பேயாட்டம் போடவில்லை.
சுவாமி விவேகானந்தா் ஞானதீபத்தில் இக்கருத்து ஆழமாக வலியுறுத்தப்படுகின்றது.
ஸ்ரீகௌதம புத்தா் காலத்தில் சாதி கொடுமைகளை அவா் கண்டிப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.சமூக நோய்களுக்கு வைத்தியம் பார்த்ததுதான் முக்கியம். காட்டுமிராண்டியாக வாழ்ந்தவன் மனிதன்.அனைத்து துறைகளிலும் பரிணாமம் அடைந்து வருகின்றான். கலாச்சார ஏணியில் பல படிநிலைகள் இருப்பதுபோல் பரிணாம நிலையிலும் அனைவரும் பல நிலைகளில் இருந்துதான் மேல்நோக்கி பயணிக்கின்றோம். அதுதான் யதார்த்தம். இதை நன்கு உணா்ந்தவா்கள் இந்து முன்னோர்கள்.கா்ணணை பிறப்பு காரணமாக பலரும் அவமானப்படுத்தியது ஆணவம்.ஆனால் துரியோதனன் கா்ணணை எப்படி நேசித்தான் பாருங்கள்.தா்மா் போன்ற உத்தமா்கள் அவனை என்றும் இழிவ படுத்தியதில்லை. ஸ்ரீகண்ணன் அவனை தேரோட்டியின் மகன் என்று அவனது பிறப்பை இழிவு படுத்தியதில்லையே. இதுதான் வேண்டும். கலாச்சார இருட்டில் இருந்துதான் -கீழ்படியில் இருந்துதான் மேல்படிக்கு பயணிக்கின்றோம்.
பசவண்ண்ர் திருக்குறள் ஆசாரக்கோவை சிலப்பதிகாரம் சித்தா்கள் தாயுமானவா் வள்ளலாா் பாடல்கள் பெரியபுராணம் திருமந்திரம் போன்ற முன்னணி நூல்களில் ஏதேனும் குற்றம் காண தங்களால் முடியாது.அரேபிய அடிமைத்தனம் தான் தங்களை பிடித்த நோய்.என்ன வைத்தியம் பார்ப்பது? எந்த வைத்தியமும் செய்து கொள்ள மறுத்து வருகின்றீா்கள் .
குரான் சாதி பிரிவை ஆதரிக்கவில்லை என்பதுதான் பல கொடூரமான போர்களுக்கு காரணம்.ஒரே கலாச்சாரம் என்பதை எற்றுக்கொண்ட இசுலாம் முஸ்லீம் ஆனவா்கள் மற்றவா்களை காபிா் என்று அழிக்க கற்றுக் கொடுத்தது.இசுலாம் இன்றும் செய்துகொண்டிருக்கும் மனித கொலைகளுக்கு காரணம் வேறு என்ன ?அரேபியனாக இரு அல்லது அரேபியனை காப்பிஅடித்து வாழ் இல்லையேல் செத்து தொலை என்பதுதானே இசுலாம் ? குரான் காட்டும் சாதிகள் இரண்டு.ஒன்று முஸ்லிம் மற்றது காபீர். காபீா்களை கொன்று கொண்டேயிருக்கின்றீா்கள். இந்தியாவில் இருந்து பிழைப்பிற்குச் சென்ற தொழிலாளா்களை -ஈராக் நாட்டை வளப்படுத்த சென்ற இந்தியா்களை - 39 பேர்களை இசுலாமிய அரசு வீரா்கள் படுகொலை செய்துள்ளார்களே ? இதற்கு குரானின் ஒரரே சாதி ஒரே மதம் என்ற கொள்கைதான்காரணம்.தோட்டத்தில் ஒரு வகை மரம்தான் புங்காவில் ஒரே ஒரு வகை மலா்தான் இருக்க வேண்டும் என்கிறான் ஐஎஸ் காடையா்கள். இந்த கருத்தை எங்கே இருந்து அவர்கள் பெற்றார்கள் ? குரான்தான் ?
முஸ்லீம்களுக்குள் சியா சன்னி அகமதி என்ற சாதி -கோத்திரங்கள் -கலாச்சார பிரிவுகளின் நிலை என்ன ? பயங்கரவாத தாக்குதல்கள் மூலம்தானே தீா்வுகள் காண முயற்றிகள் நடைபெறுகின்றன.அகமதிகளை சமஉாிமையுடன் நடத்துகின்றீா்களா ? குரான் மீது சத்தியம் செய்ய முடியுமா ?
கூடுதலாக ஒரு தகவல்.
பல விதமான சமூதாயங்கள் கலாச்சார குழுக்கள் இருப்பது சமுதாய் ஒட்டத்திற்கு சமூக நிா்வாகத்திற்கு அவசியம் என்று கருதிய இந்து சான்றோா்கள் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பு நட்பு சமூக கலப்பிற்கும் வழி வகுத்தாா்கள். கன்னிப் பெண்ணுக்கும் துறவிகளுக்கும் சாதி கிடையாது என்று சட்டம் வகுத்தாா்கள். மனம் ஒத்த கலாச்சார பரிணாமம் கொண்ட குழுக்களிடையே திருமண பந்தம் சாத்தியமாக்க கன்னிப் பெண்ணுக்கு-அதாவது திருமணமத்திற்கு கோத்திர சாதி வரம்பு கிடையாது என்று தெளிவாக வரையறுத்துள்ளது கவனிக்கத்தக்கது. துறவு நெறியையும் எந்த சாதியினரும் மேற்கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
மக்களிடையே சுயநலம் தலை தூக்கும் போது எந்த சட்டமும் தோற்று போகும்.
இதற்கு முஸ்லீம்கள் விதிவிலக்கு அல்ல.
மக்களிடையே சுயநலம் தலை தூக்கும் போது எந்த சட்டமும் தோற்று போகும்.
இதற்கு முஸ்லீம்கள் விதிவிலக்கு அல்ல.
------------------------------------------------------------
மக்களிடையே சுயநலம் பேராசை ஆணவம் அகம்பாரம் மமதை கொழுப்பு கல்விச் செருக்கு
தலை தூக்கும் போது எந்த சட்டமும் தோற்று போகின்றது.
பாஸ்ரா போா்- மஹம்மதின் மனைவிக்கும் மருமகன் அலிக்கும் இடையே ஏன் போா் ஏற்பட்டது ?சமாதானமாக பிரச்சனைகளை பேசித் தீா்க்க முடியவில்லையே ஏன் ?
Post a Comment