எனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்! - விவசாயி
தற்கொலை
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி
ஒருவர், கடன் தொல்லை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டார். தான் எழுதிவைத்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு பிரதமர் மோடியே காரணம் என்று குற்றம்
சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா
மாநிலம், யவத்மால் மாவட்டம், ரஜுவர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாபுராவ்
சாவ்ரே(வயது55). இவருக்கு மனைவியும், திருமண வயதில் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சங்கர் தனக்குச் சொந்தமாக 9 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது நிலத்தில் பருத்தி பயிரிடுவதற்காக தனியார்
நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1.50 லட்சம்
கடன் பெற்றுள்ளார். ஆனால், பருத்தியில் நோய் தாக்கல் ஏற்பட்டு, வேளாண்மையில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. நிதிநிறுவனத்தைச்
சேர்ந்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்தக்கோரி சங்கருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால், கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த சங்கர் நேற்று
வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது
தற்கொலைக்கு முன் 6 பக்கங்களில் ஒப்புதல் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தான் இந்த நிலைக்கு கடனாளியாக பிரதமர் மோடியே காரணம். அவரின் அரசின்
செயல்பாடுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
11-04-2018
No comments:
Post a Comment