'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் எஜீத் என்போன்'
கொன்றான் இமாம் ஹூசைனை.. குடியரசு சாய்ந்ததம்மா....
குடியரசு சாய்ந்ததம்மா'
நாகூர் அனீஃபாவின் அடுத்த பிதற்றல். சண்டாளன் எஜீத்
என்கிறார். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திய சிறந்த இஸ்லாமியர் ஹனீஃபாவின்
பார்வையில் சண்டாளனாம். நாமும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தோம். யாரோ ஒரு ஷியா
கவிஞர் எழுதித் தந்ததை படித்து விட்டு சென்று விட்டார். கர்பலா யுத்தத்தில் யார்
பக்கம் நியாயம் உள்ளது என்பதை இறைவன் அறிவான். எகிப்திலிருந்து வந்த யூதர்கள்
இஸ்லாமியர்களாக நடித்து நபிகளாரின் பேரனை நம்ப வைத்து கழுத்தறுத்தனர். தவறு யார்
பக்கம் என்ற ஆராய்ச்சியில் நான் புகவில்லை. ஆனால் சண்டாளன் எஜீத் என்று தீர்மானிக்கும்
உரிமையை நாகூர் அனீஃபாவுக்கு யார் கொடுத்தது?
//நாகூர் ஹனீபா தனது பாடல்கள் மூலம் இலட்சகணக்கான மக்கள்
மனதில் இறை சிந்தனையை ஊட்டியவர்// Abbas Al Azadi
எப்படி இறை சிந்தனையை ஊட்டினார்?
'எமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே' என்றும்
'அடியார்க்கு
அருள் செய்யும் அம்மா.... அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா' என்றும் அல்லவா பாடி விட்டு சென்றார். இதில் இறை சிந்தனை
வருமா? அல்லது
இறை சிந்தனை நம்மை விட்டு போகுமா?
1 comment:
அன்பிருக்குது அறம் இருக்குது அரபு நாட்டிலே
என்று அருமையான பாடலைப் பாடி தான் ஒரு அரேபிய வல்லாதிக்க அடிமை என்பதை ஊருக்கு பறைசாற்றியவா்.
நாத்திகன் ........ கருணாநிதியை நாக்கு காப்பு பிடிக்கும் அளவிற்கு புகழ்ந்து பாடல்கள் நிறைய பாடியவா்.இன்றும் திமுக கட்சி கூட்டம் என்றால் திரு.அனிபா பாடல்கள் தான் முழங்குகின்றது.
Post a Comment