Followers

Sunday, April 15, 2018

மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்துவது பொய்தானே!


மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்துவது பொய்தானே!


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவர் 4 மாணவிகளை அதிகாரத்தில் உள்ள உயர் மட்ட பெரும் புள்ளிகளுடன் படுக்கைக்கு சம்மதித்து அவர்களின் ஆசைக்கு ஒத்துப்போக வற்புறுத்தும் ஆடியோ ஒன்று தற்போது சமூச வலைதளத்தில் பரவி வருகின்றது.

அந்த பெரும் பள்ளிகளின் ஆசைக்கு இணங்கினால் உங்களுக்கு பணம் கிடைப்பதோடு நல்ல மதிப் பெண்ணும் கிடைக்கும் என மாணவிகளுக்கு அவர் ஆசை வார்த்தை கூறுகின்றார்.
19 நிமிட உரையாடலில் இறுதியில் அந்த மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததும் , ”அந்த பெரும்புள்ளிகள் யார் என்று தெரிந்தால் நீங்க மறுக்க மாட்டீங்க அவங்க பேர நான் சொல்லக் கூடாது அது டாப் சீக்கிரட் ஆளுநர் வீடியோ ஒன்னு அனுப்பியிருந்தேனே அத பாத்தீங்களா அத பாத்தீங்கன்னா உங்களுக்கு தெரியும் எந்த அளவு எனக்கு தொடர்பு இருக்கு என அந்த ஆசிரிர், ஆளுநர் பெயரை கூறி அந்த மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறுகின்றார்.
அந்த ஆளுநர் யார் ? என்ன வீடியோ ? என்ற விபரங்கள் ஆடியோவில் இல்லை.
அந்த பெரும் புள்ளிகளுக்கு அர்ஜெண்ட்டா அடுத்தவாரம் ரெகுயுர்மண்ட் (படுக்கைக்கு அனுப்ப) இருக்காம். அதான் அவங்க கேட்டுகிட்டே இருக்காங்க என எந்த கூச்சமும் இல்லாமல் அந்த பெண் ஆசிரியர் மாணவிகளிடம் கேட்கின்றார்.
என்னை அவர்கள் பல முறை டெஸ்ட் செய்து விட்டார்கள் என பச்சையாக தான் பாழாகி போனதை அந்த மாணவிகளிடம் அந்த பெண் ஆசிரியர் கூறுகின்றார்.
அவர்களுக்கு சப்ளே செய்ய நாங்கள் இதில் 400 பேர் கிட்ட இருக்கோம் என அந்த பெண்களிடம் கூறி அவர்களை ப்ரைன் வாஷ் செய்கின்றார் அந்த ஆசிரியர்.

இதனால் தான் எனக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் எல்லாம் வந்தது. அந்த வாய்ப்பை உங்களுக்கும் பெற்று தர ஆசைப் படுகின்றேன் நீங்க மறுக்காதீர்கள் என திரும்ப திரும்ப மாணவிகளை அவர் வற்புறுத்துகின்றார்.
இறுதி வரை அந்த மாணவிகள் தொடர்ந்து மறுக்கின்றனர். கடைசியாக இது வெளிய யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க. இன்னும் 2 நாள் டைம் எடுத்துக் கோங்க. 2 நாள் கழிச்சு நீங்க முடிவு சொல்லுங்க. அவசரப்பட வேண்டாம் என்பதுடன் போன் உரையாடல் முடிகின்றது.
நான்கு மாணவிகளில் ஒரு மாணவியின் தந்தை ஒருவர் நக்கீரன் இதழ் அலுவலகத்தை அணுகி இது போன்றவற்றை தடுக்க இந்த ஆடியோவை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நக்கீரன் இதழ் இதை செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.3 comments:

Dr.Anburaj said...

ஆம் .குரு என்றால் யாா் ? நமது பள்ளிக் கூட வாத்தியாா்கள் பேராசிரியா்கள் இல்லவேயில்லை. கூலிக்கு மாரடிக்கும் இவர்கள் குரு என்ற பதத்திற்கு சற்றும் பொருத்தமானவா்கள் இல்லை. இறைவன்தான் பலவேளைகளில் குரு வாக வந்துள்ளாான் என்ற கருத்து பரவலாக உள்ளது.மௌனமாக இருந்து ஆழ்ந்த பொருளை உணா்த்தும் ஒரு அவதார புருஷராக ஸ்ரீதட்சணாமூா்த்தி யை சொல்வார்கள்.அவர்தான உண்மையான குரு. ஆகவே இந்த பழமொழியின் பொருள் நிச்சயம் வேறுதான்.

Dr.Anburaj said...கம்பன் ஒரு உண்மைக் காட்சியை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறான். கும்ப கர்ணனுக்கு, ஒரு வீரன் போல அனுமன் சவால் விடுக்கிறான். கும்பகர்ணனும் அதை ஏற்று ஒரேயடியில் அனுமனை வீட்டுக்கு அனுப்புகிறான். பின்னொரு முறை கும்பகர்ணன் அனுமனே! உன் கூட சண்டை போட எனக்கு ஆசை. வாயேன் என்கிறான். அப்போது அனுமன் உண்மை பேசுகிறான். இதோ பார்! நான் ஒரு முறை உனக்குச் சவால் விட்டேன். தோற்றால் இனிமேல் உன்னுடன் சண்டை போட மாட்டேன் என்றேன்; நான் தோற்றதால் இனிமேல் எனக்கு போர் செய்ய நியாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டு போய் விடுகிறான். சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு? முன் ஒன்று பின் ஒன்று பேசுவார் அக்காலத்தில் இல்லை!

யுத்த காண்டத்தில் கும்ப கர்ணன் வதைப் படலத்தில் கம்பன் ( அனுமன் வாய் மொழி மூலம்) சொல்கிறான்:

எறிகுவென் இதனை நின்மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை

அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னொடு அமரும் செய்யேன்

பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும்புகழ் பெறுதி என்றான்

பொருள்

இந்த மலையை உன்மேல் எறியப் போகின்றேன். இமைப் பொழுதில் உன் சக்தி அழியும். ஆனால் நீ இந்த மலையைத் தடுத்துவிட்டால், உன் பலத்தை உலகமே தெரிந்து கொள்ளும். அப்படித் தடுத்துவிடால் நான் திரும்பிப் போய்விடுவேன். உன்னோடு சண்டை போட மாட்டேன். இந்தச் செயலைச் செய்து உலகப் புகழ் பெறலாமே! என்று அனுமன் கிண்டல் தொனியில் பேசுகிறான்.

அதற்குக் கும்பகர்ணன் சொன்னான்:--

மாற்றம் அஃது உரைப்பக் கேளா மலை முழை திறந்தது என்னக்

கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை

ஏற்றெனன் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்

தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான்

பொருள்

அனுமன் சொன்ன சொல்லைக் கேட்டு கும்பகர்ணன் நகைத்தான். மலைக் குகை போன்ற வாயைத் திறந்து சிரித்தான். நீ எறியும் மலையைத் தாங்கும் போது என் தோள்கள் சிறிது தளர்ந்தாலும் நான் தோற்றவன் ஆவேன் என்றான் கும்ப கர்ணன்.

அடுத்த இரண்டு பாடல்களில் அனுமன் மலையை எறிந்ததையும் அது கும்பகர்ணனின் தோளில் பட்டு நூறாகச் சிதைந்து போனதையும், அதைப் பார்த்து அனுமன், இவனை ராமனின் அம்புகள் மட்டுமே தாக்க முடியும் என்று எண்ணித் திரும்பிப் போனதையும் சொல்கின்றன.

அவ்வளவு வலிமை ராவணன் தம்பிக்கு!
இதே படலத்தில் பின் ஒரு காட்சி. சுக்ரீவன் மீது கும்பகர்ணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்து விடுகிறான். அபோது கும்பகர்ணனும் அனுமனின் செயலை- ஆற்றலை --- வியந்து என்னுடம் போருக்கு வா என்கிறான். அதற்கு அனுமன் சொன்ன பதில்:

முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய

பின் இலை பழுது எனப் பெயர்ந்து போயினான்

பொருள்:
முன்பு இனிமேல் உன்னை எதிர்த்துப் போரிட மாட்டேன் என்று சொல்லி போரை முடித்துக் கொண்டேன். இனிமேல் உன்னுடன் போர் செய்வது பிழையாகும் என்று விளம்பிவிட்டு அனுமன் அகன்றனன்.

சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்; அனுமனுக்கும் கூட தோல்வி வரும்!

(

Dr.Anburaj said...


கம்பனின் கவி இன்பம் அனுபவிப்போமே!
யுத்த களத்தில்

நீ ராமன் தம்பி, நான் ராவணன் தம்பி, வா, கொஞ்சம் வீர வசனம் பேசுவோம்; அதில் யார் வெல்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம் என்கிறான்” கும்பகர்ணன்.

அதற்கு இலக்குவன் பதில் சொல்கிறான். “அப்பனே நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்த பாடம் வேறு; நீங்கள் சொல்லினால் பேசுவீர்கள்; நாங்கள் வில்லினால்தான் பேசுவோம்; அதுதான் நான் கற்ற பாடம்”.

முதலில் போர்க்களத்தில் வாக்குவாதம் நடத்துவது என்பதே இந்திய வழக்கு; பகவத் கீதை இதற்குச் சான்று. யுத்த காண்டத்தில் பல எதிர் எதிர் தரப்பு வீரர்கள் சொற் கணைகளைப் பெய்த பின்னரே விற்கணைகளைத் தொடுப்பர் என்பதைக் கம்பனும் காட்டுவான் .
இலக்குவன் மட்டும் எங்கள் ஸ்கூல் சிலபஸ் School syllabus வேறு என்று சொல்வதை கம்பன் கவி வழி சுவைப்போம்:

இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்

பொரநின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்

பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து

விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா

யுத்த காண்டம், கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

பொருள்

நீ ராமனுக்குத் தம்பி; நான், ராவணனுக்குத் தம்பி. இருவரும் இப்போது போரிட நிற்கிறோம். இப்போரினைப் பார்க்க தேவர்களும் வந்தனர். புகழத் தக்க பழமையான போர் முறையில், நம் பலத்துக்கேற்ற வகையில் முதலில் கொஞ்சம் கதைப்போம்; பின்னர் கை கலப்போம் – என்று கும்ப கர்ணன் செப்பினான்.

இலக்குவன் பதில்

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர்

மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்பால்

வில்லினால் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச்

சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்–

பொருள்

இருளையே உருக்கி வார்த்து செய்தாற் போல இருந்த கும்ப கர்ணன் சொல்லினைக் கேட்ட (மல்யுத்தம் செய்ததால் உரம் ஏறிப்போன தோள் கொண்ட) இலக்குவன் உரைத்தான்— “உனக்கு பதில் சொல்வது வில்லினால் மட்டுமே இயலும். வீரத்துக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் சொல்லினால் சொல்ல யாம் கற்கவில்லை”.

என் வில்தான் பேசும்; சொல் வேண்டாம்; இதுதான் நான் கற்றது.

நல்ல அருமையான பதில்

சில கம்பன் பாட்டில் சொல் நயம் இருக்கும்; சில கம்பன் பாட்டில் பொருள் நயம் இருக்கும்; இன்னும் சில பாடல்களில் இரு நயமும் இருக்கும்.

படித்துச் சுவையுங்கள்.