Followers

Wednesday, April 11, 2018

இமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்


இமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  இஸ்லாமிய பெண்களுக்கு நற்போதனைகளும் மார்க்க கல்வியும் வழங்கிவரும் அன்னைசுமையா (ரலி) பெண்கள் மதரஸாவின்  முதல்வர் மீது வடுகப்பட்டியில் வைத்து காவி பயங்கரவாதிகள் கண்மூடிதனமாக கொடுரமாக  கொலை வெறி தாக்குதல் நடத்திய காவி பயங்கரவாதிகளை   வன்மையாக கண்டிக்கிறது

 (10/4/18) காலை 6:00 மணியளவில் மதரஸாவில் இருந்து மனஸ்தாபம் காரணமாக சொல்லாமல் கொள்ளாமல் மதரஸா வை விட்டு  சென்ற இரண்டு மாணவிகளை கண்டுபிடித்து அழைத்து செல்ல வந்த மதரஸாவின் முதல்வர் மௌலானா அப்துல் காதர் முனீரி ஹழ்ரத் அவர்கள் மற்றும் மதரஸாவின் உதவியாளர் காதர் மீரான் மைதீன் ஆகியோர் தப்பி வந்த மாணவிகளை கண்டுபிடித்து மதரஸாவிற்கு அழைத்து செல்ல முற்ப்பட்டபோது பெரிய குளம் அருகில் உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தலையிட்டு மாணவிகளை உங்களோடு அனுப்ப முடியாது என்று வாக்கு வாதம் செய்து மதரஸாவின் முதல்வர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதன் பிறகு காவல் துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து காவி  பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டு விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி சென்றவர்கள் முதலில் எங்கே வைத்துள்ளார்கள் என்றும் கூட  தெரியவில்லை மக்களை பல மணிநேரம் அலைக்கழிக்க பட்டார்கள் பிறகு கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை கண்டித்து போராட்டம் நடத்திய பொது மக்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த செயலை செய்த காவிபயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போகும் தேனி மாவட்ட காவல் துறையையும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கின்றது!

தமிழக அரசே! காவல் துறையே! உடனே நடவடிக்கை எடு!
மதரஸாவின் முதல்வர் மீது வேண்டுமென்றே கொலை வெறி தாக்குதல் நடத்திய வடுகப்பட்டி காவி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடு !

பொய்யான தகவல்களை உண்மையை களஆய்வு செய்யாமல் வெளியிட்ட மாலை மலர் மற்றும் தினமணி நாளிதழின் எடிட்டர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிடு!

பாதிக்கப்பட்ட மதரஸாவின் முதல்வர் மற்றும் மைதீன் மீதும் மற்றும் இதை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை  உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

இதனை செய்ய தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இயக்கங்களை ஒன்று திரட்டி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் போராட்டம் நடத்தும்.! (இன்ஷாஅல்லாஹ்)

 மக்களை போராடத் தூண்டாதே!

இந்த நிகழ்வு இந்தியா இறையாண்மை மற்றும் சமூக நல்லிணக்க ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் இதை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வண்மையாக கண்டிக்கின்றது!

 இது போன்ற சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் குண்டர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் காவல் துறையினருக்கு  வலியுறுத்துகிறது!

இப்படிக்கு

 *மௌலானா
J. முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி ஹஜ்ரத், மாநில செயலாளர்,  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், தமிழ் நாடு._*
1 comment:

Dr.Anburaj said...

மதுவினால் வரும் கேடு : புதிய ஆய்வு தரும் திடுக்கிடும் தகவல்!


மதுவினால் வரும் கேடுகள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. திருக்குறள் சொல்லாத உண்மையா?

இருந்தாலும் கூட தமிழக அரசு உள்ளிட்ட பல அரசுகள் அதைத் தடை செய்யவில்லை.

இப்போது பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் Medical Research Council of Molecular Biology பிரிவு நடத்திய ஆய்வு பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.

மது அருந்துவது டி என் ஏ -ஐ சேதப்படுத்துகிறதாம்! முதன் முறையாக இந்த உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விஞ்ஞானிகள் மது அருந்துவோரை அவர்கள் குடிக்கும் அளவை உடனடியாகக் குறைக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

முற்றிலுமாக நிறுத்தினால் பிழைத்தார்கள்!

பிரிட்டனில் வருடா வருடம் 12000 பேர்கள் கான்ஸர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் - மது அருந்துவதால்!

பிரிட்டனின் ஆய்வு, மது அருந்துவதால் அது உடலில் Acetaldehyde

என்ற கெமிக்கலை உருவாக்கி DNA -ஐ சேதப்படுத்துவதை உறுதி செய்கிறது.

உடலில் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள் ஆக்ஸிஜனை ஏந்திச் சென்று தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த ரத்த ஸ்டெம் செல்களுக்கு மது சேதம் ஏற்படுத்துகிறது.

புதிதாக உருவாகிய கெமிக்கல் டி என் ஏ -ஐ மாற்றி மரபணு கோடை (Genetic Code) மாற்றி விடுகிறதாம்.

இந்தத் தகவல் நேச்சர் (Nature) பத்திரிகையில் “மிக முக்கியம்” என்று குறிப்பிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுவைத் தவிருங்கள் என்று அறிவுறுத்துகிறது கட்டுரை! கேன்ஸர் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்கும் நிபுணரான Prof Linda Bauld , “இந்த அரிய ஆராய்ச்சி, செல்கள் சேதமாகும் விஷயத்தை விளக்குகிறது” என்கிறார். மது ஏழு விதமான கேன்ஸருடன் தொடர்பு கொண்டுள்ளது.
Liver-Breast-Bowel-Upper Throat-Mouth-Oesophagal-Larynx

ஆகிய இடங்களில் ஏற்படும் கேன்ஸருக்கும் மதுவிற்கும் தொடர்பு உண்டு.

எப்படி மது உடலைப் பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் நீர்த்த மதுவை எலிகளுக்குக் கொடுத்தனர்.

பிறகு அவற்றின் டி என் ஏ-ஐ சோதனை செய்தனர்.

ஜெனிடிக் ப்ரேக் ஏற்பட்டு, குரோமோசோம்கள் மாற்றப்பட்டு டி என் ஏ ப்ளூபிரிண்ட் மாறப்படுவதை அவர்கள் கண்டனர்.

புரபஸர் Ketan Patel கேன்ஸர் ஆராய்ச்சியில் நிபுணர். அவர் கூறுகிறார்:- “ ஸ்டெம் செல்களில் டி என்ஏ -யின் சேதத்தினால் சில கேன்ஸர்கள் உருவாகின்றன!”

இப்படி நாளுக்கு நாள் மதுவின் தீமை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

illicit liquor bulldozed in Patna,Bihar.

பரிதாபத்திற்குரியவர்கள் தமிழ் நாட்டின் ஏழை எளிய மக்கள்.

திராவிட ஆட்சி வந்தவுடன் அவர்களைக் “குடிக்கப் பழக்கினார்கள்”.

அவர்கள் புத்தியை மழுங்க அடித்தார்கள்.

அவர்களுக்கு கேன்ஸர் உள்ளிட்ட பல வியாதிகளை உண்டாக்கினார்கள்.

பல லட்சம் குடும்பங்கள் பாழாயின; பாழாகிக் கொண்டிருக்கின்றன!

இறைவன் தான் தமிழ்நாட்டின் எளிய “குடி மக்களைக்” காக்க வேண்டும்.

அனைவரும் வேண்டுவோமாக!thanks tamilveda

***