Followers

Tuesday, April 17, 2018

பக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு!


பக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு!

'பாரத் மாதா கீ ஜே' என்று வருவான் பாப்பா.....

அவன் அருகே கூட சென்று விடாதே பாப்பா......

'தேச பக்தி.. தேச பக்தி' என்று சொல்வான் பாப்பா.....

உன் தேகத்தை ருசி பார்க்க வருவான் பாப்பா.....

கல்லூரிக்கு நீ சென்றாலும் பாப்பா...

உன் கற்பை விலை கேட்பார் பாப்பா.....

கோவில் புனிதம் என்று சொல்வார் பாப்பா....

கோவிலுக்குள்ளேயே உன்னை சிதைப்பார் பாப்பா.....

சாதியை காரணம் காட்டி தள்ளி வைப்பார் பாப்பா....

கற்பை சூறையாடும் போது சாதி பார்பதில்லை பாப்பா...

'பாரத் மாதா கீ ஜே' என்று இனி எவனாவது வந்தால் பாப்பா...

நெஞ்சை நிமிர்த்தி அவன் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.......

பக்தாள்ஸ் யாராவது இனி உன் அருகே வந்தால் பாப்பா.......

உன்னைக் காத்துக் கொள்ள ஓடி ஒளிந்து கொள் பாப்பா!

3 comments:

Dr.Anburaj said...

வயதுக்கு வராத சிறுமிகளை பாலியில் வக்கிரங்களுக்கு பயன்படுத்தும் கலையில் வல்லவா்கள் அரேபியா்கள்தாம்.

இந்தியாவில் இது கிடையாது. அரெபியா்களோடு சோ்ந்து கழுதைகளோடு சோ்ந்து கன்றும் மலம் தின்பதுபோல் இந்துக்களும் கெட்டுபோய் விட்டாா்கள்.

8வயது சிறுமியை ????? நினைக்க பயமாகத்தான் உள்ளது.

கொல்லப்பட்டது சிறுமியை ஒரு முஸ்லீம் சிறுமியாக பார்த்து முஸ்லீம்களை உசுப்பேத்தும் முயற்சியில் ஈடுபடுவது மனித நேயத்திற்கு அவமானம்.

பெண்களை மலினப்படுத்துவது காட்டுமிராண்டித்தனம். ஆனால் இது பொன்ற சம்பவங்கள் பல நடந்து கொண்டு வருவது வேதனைக்குரியது.ஆனால் அப்போதெல்லாம் முஸ்லீம்கள் வாயைப் பொத்திக் கொண்டு போய்விடுவார்கள்.

அசாமில் முஸ்லீம் இந்து பெண்ணை கற்பழித்தால் முஸ்லீம்களைப் பொருத்தமட்டில் காபீா் பெண்கள் மீது முஸ்லீம்களுக்குள்ள உரிமை என்பார்கள் போலிருக்கின்றது.

பகைவனின் வீட்டு பேரழகு பெண்ணைப் பார்த்து இந்து மன்னா் ஸ்ரீசிவாஜி அவர்கள்”
தாயே உன் வயிற்றில் நான் பிறந்திருந்தால் இதை விட அழகாக பிறந்திருப்பேன்” என்றாா்.குமுஸ் பெண் சிக்கினாள் என்று கற்பழிக்கவில்லை.

இதுதான் இந்துமதம்.இந்துத்துவா. இந்திய பண்பாடு.RSS முகாம்களில் இந்த கருத்துதான் ஸவயம் சேவக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
சுவாமி விவேகானந்தாிடம் ஒரு அமெரிக்க மாது ” நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் எனது அழகும் உங்கள் அறிவும் இணைந்த அற்புதமான குழந்தையைப் பெற்று உலகம் உய்ய கொடுக்கலாம் என்றாா்.அதற்கு சுவாமி விவேகானந்தா் தங்களை எனது தாயாக ஏற்றுக் கொண்டேன்.என்னை தங்களின் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தாா்.
மதசாா்பற்ற தன்மை இந்துக்களை பாழாக்கி வருகின்றது.

Dr.Anburaj said...

பாரதிய ஜனதாக் கட்சியின் இணையம் தமிழ்தாமரையில் வெளியானது

ஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது.

அதிலும் ஐஎஸ்ஐஎஸ் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த முஸ்லீம்களை குறை சொல்லக் கூடாது, பாதிரிகளின் சல்லாபங்களுக்கு ஒட்டு மொத்த கிருஸ்தவர் மீது குற்றம் சொல்லக் கூடாது என நமக்கு போதித்தவர்களே இதை விரும்பி செய்கின்றனர்.

அதோடு கடலூரில் ஒருகுறிப்பிட்ட சமூக ஆஷிபா அதே சமூக காமுகன் ஒருவனால் கொலை செய்யப்பட்டு மாற்று சமூகத்தின் மீது பழி சுமத்திய போது பொங்கிவிட்டு அதே சமூகம் என்று தெரிந்தவுடன் மௌனியானவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக கண்ணீர் சிந்துகிறார்கள். சென்னையில் ஒரு ஆஷிபாவை கொலை செய்ததோடு தன் தாயையும் கொலை செய்தவனின் சாதி தேடியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக குரல் கொடுக்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு ஆஷிபா சராமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட போது, காதலித்து ஏமாற்றினால் வெட்ட தான் செய்வான் என நியாயம் பேசியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக நியாயம் கேட்கிறார்கள்.

'லவ் ஜிகாத்' என்ற பெயரில் காம ஆட்டம் நடத்தி ஒரு ஆஷிபாவை நாடு கடத்த முயன்ற போது தடுத்த அவளது தந்தையை எட்டி உதைத்து நகைத்தவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக களத்தில் போராட நினைக்கிறார்கள்.

கேரளாவில் பள்ளிக்கு சென்ற ஒரு ஆஷிபாவின் வயிற்றில் கருவை கொடுத்த போது சிறுபான்மை நலம் பேசியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக கைகளை உயர்த்துகிறார்கள்.குற்றங்கள் எங்கு நடந்தாலும் குற்றம் தான். சிறுபான்மை பெரும்பான்மை பேதம் குற்றங்களுக்கு இல்லை.

மகாபாரத யுத்தம் நடக்கும் போது, கண்ணனிடம் அர்ஜுனன் கேட்கிறான், "கண்ணா… எதிரே நின்று நான் சண்டையிடப்போகிறவர்கள் எனது சகோதரர்கள், எனது ஆசான், எனது பிதாமகன், அவர்களை நான் எப்படி கொல்ல முடியும்?" என்று. கண்ணன் கூறினான், "அவர்கள் உனக்கு சகோதரர்களாக இருக்கலாம். ஆனால் பெண்ணை அவமானம் செய்த அதர்மிகள். அவர்கள் உனது ஆசானாகவோ பிதாமகனாகவோ இருக்கலாம்,

ஆனால் பெண்ணிற்கு நடந்த அநீதியை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு தர்மத்தை காக்க தவறியவர்கள். அவர்கள் எத்தனை உத்தம குணமும் திறனும் கொண்டிருந்தாலும் அதை விட பெண் நீதியை மறுத்த பாவிகள். அவர்கள் யாராக இருந்தாலும் கொல்ல தயங்காதே. வில்லினை எடு வீரா" என்று மறுமொழி கூறினான். இந்துத்துவம் மோசனமானதல்ல. ஆனால் இந்துத்துவத்தில் மோசமானவர்கள் இல்லாமல் இல்லை. இந்துத்துவவாதிகளை விட இந்துத்துவமே முக்கியம். இந்து என்ற காரணத்திற்காக மட்டும் அநீதி இழைப்போரை மன்னித்துவிடச் சொல்லி இந்துமதம் என்றும் கூறவில்லை. அதனால் ஆஷிபா கொலையில் அவளின் துயரும் கொடுமையுமே நமக்கு தெரிய வேண்டுமே தவிர அவளது மதமோ இனமோ அல்ல…

குதிரை மேய்க்க சென்றவளை இரு சிறுவர்கள் வன்புணர்வு செய்ய முயலும் போது, "பாலியல் குறித்த விழிப்புணர்வு அளிக்காத சமூகத்திடம் கோபம் கொள்ளாமல், அவள் மயங்கியவுடன் அந்த சிறுவனின் தந்தை கோயிலுக்குள் மறைத்து வைத்த போது தவறுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது கடுமைகாட்டாத சட்டத்தின் மீது கோபம் கொள்ளாமல்கொள்ளாமல், அதை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி தாங்களும் அந்த தவறில் பங்கு கொண்டபோது ஊழலின் மீது கோபம் கொள்ளாமல், தவறை கண்டுபிடிக்க வேண்டிய குழுவில் தவறு செய்தவனே இருக்கும் அதிகாரிகளின் மீது வராத கோபம் அவர்கள் சார்ந்த மதத்தின் மீது மட்டும் வந்துவிடும் என்றால் நிச்சயம் இது அரசியல் தான்…

ஆஷிபா குழந்தை. அதுவும் பெண்குழந்தை. அதற்கு அநீதி நடந்துள்ளது. அதற்கான நீதியை பெற்றுத் தர மனிதனாகவோ இந்துவாகவோ நமக்கு கடமை இருக்கிறது. அந்த கடமைக்காக எங்களது கரங்கள் உயர்ந்தே நிற்கும். அரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபாக்களின் கல்லறைகளில் வேண்டாம்.

Dr.Anburaj said...

இந்துஸ்தானத்து சித்தர்கள் அமுத மொழிகள்


கோபமறு, குன்றாப் புகழுக்கு...


கோபம் எத்தனை பெரிய அறிவாளியையும் முட்டாளாக்கிவிடுகிறது. எவ்வளவோ சிறப்புள்ளவரையும் சீரழியச் செய்துவிடுகிறது, கோபம் கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். தன்னையே மறக்கச் செய்துவிடும். கோபத்தால், மதியையும், மானத்தையும், நிம்மதியையும் இழக்க நேரிடும்.

கோபம் ஏற்படுத்தும் விளைவுகளை, பாதிப்புக்களை நாம் அறிய முற்படுவதில்லை. எது கோபத்தை தூண்டியது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதெல்லாம் பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை.

ஆனால், சித்தர்கள் கோபத்திற்கு மூலமான மாயையை அகற்றி விடுகிறார்கள், மாயை இல்லாத இடத்தில் , ஆசை, கோபம் இருப்பதில்லை, தங்கள் மனதை அடக்கியதால் தான் சித்தர்களுக்கு யோகம் சித்தியானது. முத்தி நிலை வாய்த்தது.

இதையே,

"மனமானது அடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டுக் கரையேறலாச்சு
சினமென்னும் கோபம் அறுந்தாச்சு யோகம்
சித்தியாகவே முத்தியும் ஆச்சு."

என்று பாடுகிறார் கல்லுளிச் சித்தர்.