Followers

Sunday, April 01, 2018

கண்ணியத்திற்குரிய கொள்கை சகோதரர்களே...


கண்ணியத்திற்குரிய கொள்கை சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த முபாஹலாவில் நமக்கு கிடைத்தது வெற்றி என்பதை விட..

நம்மோடு சில நாட்களாக கருத்து முரண்பட்டு நின்ற நம் சகோதரர்களுக்கு உண்மையை புரிய வைக்க நமக்கு கிடைத்த சரியான சந்தர்ப்பமாக எடுத்து கொள்ளுங்கள்.

சினிமா மீம்ஸ்களை போட்டு கிண்டல் செய்வது ஒருமையில் பேசி வம்பு செய்வது இதெல்லாம் ஒருபோதும் அவர்களுக்கு உண்மையை உணர்த்தாது. அவர்களை மீட்டெடுக்காது.

சகோதரர் அல்தாஃபி அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்திருப்பார். சிங்கமே வா சிறுத்தையே வா தலைமை தாங்க வேண்டிய உனக்கு தாய்லாந்தில் என்ன வேலை?

என உசுப்பேற்றி உசுப்பேற்றியே அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது ஒரு குள்ளநரி கூட்டம் என்பதை அவர் உணரும் தருணம் இது.

இது அல்லாஹ் சகோதரர் அல்தாஃபிக்கு வழங்கிய அறிய வாய்பு. முபாஹலா எனும் இறை சாபத்திலிருந்து தப்பிக்க இறைவனே செய்த ஏற்பாடு என்று தான் பார்க்க முடிகிறது.

அவர் தவறை உணர்ந்து உறுப்பினராக மீண்டும் இணைவாரேயானால் அதை தடுக்க இங்கே யாருமில்லை.

இந்த முகநூலிலே ஒரு குள்ளநரி கூட்டம் சுற்றி திரிகிறது. அது எப்படியான கூட்டம் என்றால்..

அல்தாஃபியே லைவில் வந்து முழு தவறுகளும் என் மீது தான் இருக்கிறது. அல்லாஹ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்று சொன்னாலும் கூட..

அல்தாஃபி தவ்ஹீத் ஜமாத்தினரால் மிரட்டப்பட்டு இருக்கிறார். அல்லது அல்தாஃபிக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொல்லும் கூட்டம் அது.

தவ்ஹீத் ஜமாஅத் எது சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்கிற ஒற்றை புத்தியில் வாழ்க்கை நடத்தும் சொத்தை கூட்டம் அது. அந்த அறிவீனர்களை அலட்சியம் செய்யுங்கள்.

உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்த கூடாது.

இந்த முகநூலை தாவா களமாக பதப்படுத்துங்கள்.

கடந்த ஒரு மாத காலமாக நம் அழைப்பு பணிகள் அடைபட்டு கிடக்கின்றன. அதன் அணைகளை தகர்த்து எறியுங்கள்.

பழைய சகோதரர்களின் பழைய நாட்களை மீட்டெடுக்க அவர்கள் உணரும்படி உண்மையை சொல்லுங்கள்.

உளத்தூய்மையோடு தாவா செய்த எவனாலும் தனித்து இருக்கவே முடியாது அவனை மீட்டெடுங்கள்.

இலையுதிர் காலம் உண்டு.
கிளையுதிர் காலம் ஏது.

அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

கூத்தாநல்லூர் ஜின்னா


No comments: