Followers

Tuesday, April 03, 2018

தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்?


தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்?

இன்று இணையம் மற்றும் தமிழக கிராமங்கள் தோறும் அதிகம் விமரிசனத்துக்கு உள்ளாவது தவ்ஹீத் ஜமாத். தற்போது தவ்ஹீத் ஜமாத்தில் நடக்கும் பிரச்னையானது கொள்கை சம்பந்தப்பட்டது அல்ல. நிர்வாகிகள் நம்பகத்தன்மை சம்பந்தப்பட்டது. பிஜே, கோவை ரஹ்மதுல்லா, அல்தாஃபி இவர்கள் சொல்வது உண்மையா என்பதை அலசி ஆராய கடமைபட்டவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை உறுப்பினர்கள். பல லட்சக்கணக்கான உறுப்பினர்களை உலகம் முழுவதும் கொண்ட ஒரு அமைப்பில் இது போன்ற சலசலப்புகள் எழுவது இயல்பு. இதனை ஒரு அறைக்குள் அமர்ந்து பேசி என்றோ முடிவை எட்டியிருக்கலாம்.

ஆனால் இங்கு நடப்பதோ வேறு. தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிராக எழுதி பிரச்னையை பெரிது படுத்துபவர்கள் பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள். தமுமுக, எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக், மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிம்சாக்கள், சமாதி வழிபாட்டாளர்கள், தரீக்காவாதிகள் போன்ற இவர்கள்தான் மும்முரமாக எதிர்க்கின்றனர்.

சம்பந்தமில்லாமல் ஏன் இவர்கள் பிரச்னையை ஊதி பெரிதாக்குகிறார்கள்? காரணம் இல்லாமல் இல்லை.

தமுமுக, எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக் போன்ற அரசியல் அமைப்புகள் தேர்தலை நோக்கமாக கொண்டு செயல்படுபவை. இவர்களிடம் இல்லாத கட்டுக் கோப்பான ஒழுக்கமுடைய இளைஞர் படை தவ்ஹீத் ஜமாத்திடம் உள்ளது. தவ்ஹீத் ஜமாத் யாரை வெற்றி பெற நினைக்கிறதோ அவரே வெற்றிக் கனியை பறிக்கிறார். அவ்வாறு வந்தவர்தான் தற்போதய தமீமுன் அன்சாரி. இனி தமிழக அரசியல்களம் இப்படித்தான் இருக்கப் போகிறது இன்ஷா அல்லாஹ்.

இதுதான் இவர்களுக்கு பெரும் இடியாக இருக்கிறது. அரசியலில் ஈடுபடாத தவ்ஹீத் ஜமாத் கடந்த 10  வருடங்களுக்கு மேலாக ரத்ததானத்தில் முதலிடத்தில் உள்ளது. ஆம்புலன்ஸ் சேவை, முதியோர் இல்லம், இஸ்லாத்தை தழுபவர்களுக்காகன பயிற்சி பட்டறை, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாடெங்கும் தண்ணீர் பந்தல்கள் என்று இந்த ஜமாத்தின் பொதுப் பணிகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

இதுதான் எதிரிகளை எரிச்சலடைய செய்கிறது. தேர்தலில் ஆதாயம் காணாமல் இத்தனை கட்டுக் கோப்பாக உள்ள இந்த அமைப்பை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் முடிவில் தோல்வியையே வழக்கமாக அடைவார்கள். ஏனெனில் இந்த அமைப்பானது குர்ஆனை ஆதாரமாக காட்டி வளர்க்கப்பட்ட அமைப்பு. நபிகள் நாயகத்தை தலைவனாக காட்டி வளர்க்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் உறுதியை ஸ்திரப்படுத்தும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்வான் என்று மட்டும் ஏகத்துவ எதிரிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

5 comments:

Ashak S said...

விபச்சாரத்தில் முதலிடத்தில் உள்ளது , ஜகாத் பணத்தை ஆட்டையை போடுவதில் முதலிடத்தில் உள்ளது , மந்த ஆடுகளை போல் அண்ணன் சொல்வதை கேட்பதில் முதலிடத்தில் உள்ளது என்ற குற்ற சாட்டும் உள்ளது.
உங்கள் லட்சணத்தை தான் முபாலஹா செய்த பொது பார்த்தோமே , கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் , அல்லாஹ்வின் பயம் இல்லாமல் அந்த பெண் சொன்னதை நம்புகிறோம் என்று முபாலஹா செய்தீர்கள், எந்த பெண்? அவர் யார் என்று சொல்லும் தைரியம் உண்டா? ௪ சாட்சிகளை கொண்டு வந்து அல்தாபி செய்தது தவறு என்று நிரூபிக்கும் திராணி உண்டா? ஆண்மை உண்டா? நீங்கள் எக்கேடு கேட்டு போனால் எங்களுக்கு என்ன? நீங்கள் நாசமாக போகிறீர்களா? இல்லை பொய் சொல்லி ஒவ்வொருவராக வெளியேற்றுகிறீர்களா என்று பார்ப்பதா எங்களின் வேலை ?

Ashak S said...

இதுவரை உங்கள் ஜமாத்தை விட்டு போனவர்கள் செய்த தவறை ஆதார பூர்வமாக நிரூபித்தது உண்டா? பாக்கர் மற்றும் அல்தாபி யின் குற்றசாட்டு விபச்சாரம் , அதற்கான 4 சாட்சிகளை எங்கே கொண்டாய் வந்தீர்? இதுதான் இஸ்லாம் காட்டி கொடுத்த வழிமுறையா? நாடே காரி உமிழக்கூடிய செயல்களை செய்து விட்டு , வெக்கம் இல்லாமல் மார்தட்டும் திராணி , வெக்கம் கெட தன்மை உங்களுக்கு எங்கே இருந்து வந்தது ?

Ashak S said...

தேர்தலில் ஈடுபாடாத போதே ஜெயலலிதாவின் காலில் விழுந்த கதை தெரியாதா? மிகவும் கேவலமாக அரசியலில் ஈடுபட்ட கூட்டம் தான் உங்கள் கூட்டம்

Ashak S said...

coward, where is my comment?

SHERIFF PEER said...

உண்மைதான் இன்று தவ்ஹீத இயக்கத்தினரை பிிற இயக்கத்தவர் கழுவி கழுவி ஊற்றுகின்றனதவ்ஹவ்ஹீத் தலைவர்களோ தங்கள் வாயில் மலத்தையும் சிறுநீரையும் அதக்கிக் கொண்டு ஒருவர்மீது ஒருவர் து்ப்பிக் கொள்கின்றனரே.