தெரிந்துக்கொள்வோம்
!
மயிலாடுதுறை மணிக்கூண்டு
மயிலாடுதுறை கடை வீதியில்
நடு மையமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் ஜனாப் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக்
கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு
அவர் நிறுவியது. இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது. அப்போதைய
சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை
வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு
கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று
"நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் துனிசியா
வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும்
இருக்கிறது.
அது என்ன துனிசியா
வெற்றி?
உலகப் போரில் இங்கிலாந்து
தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்ல
இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக துனிசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து
வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச்
சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்.
(வட ஆப்பிரிக்காவில்
துனிசியா இருக்கிறது).
வாட்ஸ் அப் தகவல்.....
5 comments:
மிக்க நன்றி
http://anbudanseasons.blogspot.in/2014/02/blog-post_6861.html
எங்கள் தந்தைதான் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்
இன்று அனைவரின் கையில் செல்போன் கை கடிகாரம் உள்ளது.எனவே மணிக்கூண்டு தேவையில்லாதது.போக்குவரத்துக்கு பெரும் இடையுராக சாலையின் நடுவே உள்ள இந்த தேவையற்ற கட்டடத்தை உடனே உடைத்து அப்புறபடுத்த தம்ழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
Last year it was painted tricolur on the occasion of golden jublee. You may post it
Last year it was painted tricolur on the occasion of golden jublee. You may post it
Post a Comment