Followers

Saturday, October 05, 2013

போலீஸ் ஃபக்ருதீனும் தின மலரும்!

தினமலருக்கு ஒரு வாரத்துக்கு சுடச்சுட பொய் செய்திகளை தருவதற்கு போலீஸ் ஃபக்ருதீன் மேட்டர் கிடைத்து விட்டது. இனி உளவுத் துறை சொன்னது, காவல் துறை சொன்னது என்று எந்த அளவு இஸ்லாமியர்களையும் இஸ்லாத்தையும் இந்த பிரச்னைகளில் சிக்க வைக்கலாம் என்று தினமலர் குழு யோசித்துக் கொண்டிருக்கும்.

போலீஸ் ஃபக்ருதீன் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் சட்டம் அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கட்டும். அப்போதுதான் இந்த தீவிரவாத செயல்கள் ஒரு முடிவுக்கு வரும். சாதி மத வித்தியாசம் பாராமல் நம் நாட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் வர இது போன்ற தண்டனைகள் அவசியம். அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் தின மலரில் இந்த செய்திக்காக 100 க்கு மேற்பட்டவர்கள் பின்னூட்டம் அளித்துள்ளார்கள். எல்லா விலாசமும் வழக்கமாக தினமலரில் வாசகர் கடிதத்தில் வரும் பெயர்களே... அனைத்திலும் சொல்லி வைத்தாற்போல் 'இந்த கூட்டத்தை ஒழிக்கனும்', 'இஸ்லாம் வன்முறை மார்க்கம்', 'சவுதி அரேபியா உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்புகிறது', 'முஸ்லிம் தீவிரவாதியை உடனே தூக்கிலிட வேண்டும்' , 'அது ஏன் எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே மாட்டுகின்றனர்' எனற ரீதியில் நுற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் ஒன்றிரண்டு மணிகள் வித்தியாசத்தில். தின மலரில் வேலை செய்யும் ஆபீஸ் பாயிலிருந்து நிறுவனர் வரை அனைவருக்கும் 20 போலி ஐடிகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களே இது போன்ற நச்சுக் கருத்துக்களை தமிழக மக்களின் கருத்தாக பரப்ப முயற்சிக்கின்றனர். இந்த வெறுப்பை விதைத்து மோடிக்கு ஆதரவை அதிகரிக்க செய்யலாம் என்பது தினமலரின் நினைப்பு.

ஆனால் பார்பனர்களைத் தவிர இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த சூழ்ச்சிகளை நன்கு அறிந்து வைத்தே உள்ளனர். நம்மோடு சகோதர பாசத்தோடு பழகி வரும் இந்த முஸ்லிம்கள் இது போன்ற ஈனச் செயல்களை செய்ய மாட்டார்கள் என்பது பெரும்பான்மை இந்து சகோதரர்களுக்கும் தெரியும். எனவே தான் தினமணி, தினமலரில் வரும் செய்திகளை படித்து விட்டு சிரித்து விட்டு சென்று விடுகின்றனர்.

அதே தின மலரில் அந்த செய்திக்கு கீழ் வந்து சில பின்னூட்டங்ளையும் பார்ப்போம்.

போலீஸ் பாக்ருதீனை நேற்று ஆந்திராவில் பிடித்ததாகவும் இன்று சென்னையில் பிடித்ததாகவும் தினமலர் செய்தி தருகின்றது. இவர்கள் நான்கு மாதங்களாக போலீஸ் பிடியில் உள்ளதாக வாசகர் ஒருவர் எழுதுகின்றார். அப்பாவி வட இந்திய வாலிபர்களை ஷூட் செய்து அனைத்து கொள்ளை வழக்கு பைல்களையும் மூடியதுபோல் இவர்களை முடித்து அனைத்து BJP யை சேர்ந்தவர்கள் கொலை பைலையும் மூடிவிடலாம் என போலீஸ் நினைக்கலாம். மேலிட பிரஷ்ஷர் அவ்வாறு இருக்கலாம். தீவிரவாதிகள் மத வேறுபாடன்றி ஒழிக்கப்படவேண்டும். முஸ்லிம் பெயரில் உள்ளதாக கூறப்படும் தீவிரவாதிகள் மதம் மாறி வந்தவர்களாகவே உள்ளனரே அது ஏன்? சமூக ஆர்வலர்கள் இதை பற்றி யோசித்தால் நல்லது.

Sound Saroja - Thangachimadam,இந்தியா
05-அக்-201313:25:26 IST Report Abuse

--------------------------------------------------------

செய்தி வெளியாகி 2 மணி நேரத்திலேயே 100 க்கும் மேற்பட்ட கருத்துக்கள் வழக்கமாக எழுதும் அதே நபர்கள் அதே காங்கிரஸ் திமுக எதிர்ப்பு அதிமுக பிஜேபி ஆதரவு வசனங்கள் இது எப்படி சாத்தியம்

-skr - - kuwait,குவைத்
05-அக்-201313:56:19 IST Report Abuse


நானும் கடந்த இருபது வருடங்களாக பார்த்து வருகிறேன். கொலை, கொள்ளையில் அதிகம் பிடிபடும் முஸ்லிம்களில் அதிகமான பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இமாம் அலியிலிருந்து இந்த கதை தொடர்கிறது. மதம் மாறுபவர்களை மிரட்டுவதற்காக காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டு இவர்களை வழக்குகளில் சிக்க வைக்கிறார்களா? அல்லது இந்துத்வாவாதிகளே இஸ்லாத்துக்கு மாறுவதாக நடித்து இஸ்லாத்தை களங்கப்படுத்த முயற்ச்சிக்கிறார்களோ என்று நான் சந்தேகிக்கிறேன். முஸ்லிம் பெண்களை காதலித்து பிறகு அவர்களை நடுத் தெருவில் விட்டுச் சென்ற பல இந்துத்வா வாதிகளின் செயல்களை நாம் அறிவோம். இவ்வாறு செய்யச் சொல்லி முன்பு ராம கோபாலனே பகிரங்கமாக அறிவித்தது நினைவிருக்கலாம். இதனால் உண்மையை உணர்ந்து உளப்பூர்வமாக இஸ்லாத்தில் தினமும் இணைபவர்களுக்கும் இந்த நடிகர்கள் சங்கடத்தை உண்டு பண்ணுகிறார்கள். எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களை நாம் தொடர்ந்து நமது கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். கலிமா சொல்லிக் கொடுத்ததோடு நமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி விடாமல் அவர்களின் செயல்பாடுகளையும் சில ஆண்டுகளாவது நாம் கூர்ந்து கவனித்து வர வேண்டும். அவர்களின் நிரந்தர வருமானத்திற்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களின் வறுமையை பயன்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கலாம். தற்போதய கால கட்டத்தில் இது மிக அவசியமாக படுகிறது.

ஏனெனில் மோடியை பிரமராக்கி பார்க்க வேண்டும்: அழிந்து கொண்டிருக்கும் வர்ணாசிரமத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று தினமலர் கும்பல் இரவும் பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர்களின் சதித் திட்டம் வெற்றியடைய நாம் காரணமாகி விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை நடந்த சில நாளிலேயே ஒரு பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாம் செய்திகளில் பார்த்தோம். அதன் பிறகு அதை பற்றிய செய்தியையே காணோம். அவரது மனைவி தீ குளிக்காமல் வேறொரு பெண் ஏன் தீ குளித்தார்? அவருக்கும் ஆடிட்டர் ரமேஷூக்கும் என்ன தொடர்பு? அந்த பெண் இறந்தது தற்கொலையா? அல்லது திட்டமிட்ட கொலையா? பெண் விவகாரத்தால் அவரது கொலை நடந்ததா? என்ற ரீதியில் விசாரிததிருந்தால் என்றோ கொலையாளி பிடிபட்டிருப்பான்.

ஆனால் பெரும்பாலான ஊடகங்களும், காவல்துறையின் சில கறுப்பு ஆடுகளும் எந்த வகையிலாவது இஸ்லாத்தை இதில் சம்பந்தப்படுத்த பெருத்த முயற்சி எடுத்து வருகின்றனர்.

நான் மீண்டும் சொல்கிறேன்: இது போன்ற கொலைகளை செய்தது ஃபோலீஸ் பக்ருதீனும், அவனது கூட்டாளிகளுமாக இருக்கும் பட்சத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அதைத்தான் முஸ்லிம்களும் விரும்புகின்றனர். தமிழக முஸ்லிம்கள் என்றுமே தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. ஆனால் யாரையோ காப்பாற்ற இவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி அப்பாவிகளுக்கு சிறை தண்டனை பெற்று தந்தால் நம் தமிழக காவல்துறையின் மீதும் நீதித் துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பர். முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவாராக....

மேலும் தினமலரும், தின மணியும் தினம் ஒரு பொய் செய்திகளாக போட்டு வருவதால்தானோ என்னவோ தற்போது 'தமிழ் தி இந்து' வின் பக்கம் பெரும்பாலோரின் பார்வை திரும்பியுள்ளது. சமீப காலமாக தினமலரின் சர்குலேஷன் குறைந்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பார்த்தேன். இப்படியே பொய் செய்திகள் தின மலரில் தொடர்ந்தால் பார்ப்பனர்களும், இந்துத்வாவாதிகளும் மட்டுமே படிக்கும் ஒரு பத்திரிக்கையாக மதிப்பிழக்கும் அபாயம் உள்ளது. அதை நாமும் வரவேற்போம்.. :-)

-------------------------------------------------------
புதிய தலைமுறை பிடிபட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி தருகிறது.



ஆனால் ஒரு மாலைப் பத்திரிக்கையோ அந்த செய்தியை எப்படி கொடுத்துள்ளது பாருங்கள். இதுதான் இந்திய ஊடகத் துறை....




8 comments:

ஹுஸைனம்மா said...

//ஆடிட்டர் ரமேஷ் கொலை நடந்த சில நாளிலேயே ஒரு பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக//

சேலம் ஆடிட்டரின் கோர படுகொலைக்கு பிறகு மனம் தாளாமலும், அரசும் காவல் துறையும் நடந்து கொண்ட அலட்சிய போக்கையும், அசிரத்தையையும் கண்டித்தும் நியாயமான நீதி விசாரணை வேண்டும் என கோரி பாஜக மகளிரணி மண்டல தலைவி சகோதரி ராஜராஜேஸ்வரி தீக்குளித்ததாக தமிழ் ஹிந்து தளம் கூறியிருக்கிறது. அதன்படி பார்த்தால், அவரது தியாகம், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்த முத்துக்குமரனின் தியாகத்திற்கு ஈடானது!! அப்பேர்ப்பட்ட தியாக்த்தை, பி.ஜே.பி.யும் அதன் தலைவர்களும் மதிக்காதது வருத்தமானது. ஆடிட்டர் மரணத்தை ஒட்டி சேலம் வந்த அத்வானி, மற்றும் பிரச்சாரம் செய்ய வந்த மோடி உள்பட தலைவர்கள் யாருமே அவர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகத் தெரியவில்லை. ஒரு பெண் என்பதாலேயே அவர் தியாகம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறதா என்று சந்தேகம் வருகிறது. விவாதங்களில் பங்குபெறும் திருமதி தமிழிசை கூட எங்கும் இதுகுறித்துப் பேசவில்லை.

Unknown said...

சலாம் சகோ. சுவனப்பிரியன் !

இவர்கள் போகிற போக்கில் சொல்லி கொண்டு போவதை நாம் அப்படியே விட்டு விடுவதால்தான் இந்த காவிகளின் ஏஜெண்டுகள் முஸ்லிம்கள் மீதான பொய் செய்தியை தொடர்ந்து ஊக்கத்துடன் பரப்பி வருகின்றனர்...! இவர்கள் தருகின்ற ஒவ்வொரு செய்தியையும் நாம் பதிவு செய்து கொண்டு வரவேண்டும்...பின்பு ஒரு நாள் உண்மை தெரியவரும் போது நாம் இவர்களின் முந்தைய செய்தியை மக்கள் முன் பகிரங்கப்படுத்த வேண்டும்..! இவ்வாறு செய்து வந்தால் மக்களுக்கு இவர்கள் செய்கின்ற பித்தலாட்டம் தெரிய வரும்..! செய்திகளை பதிவு செய்து நம்மை தோலுரிக்கின்றனர் என்ற பயத்தால் இவர்களின் கொட்டமும் அடங்கும் !

உதாரணத்திற்கு , மோடி திருச்சிக்கு வரும் போது கோவையில் தனக்கு தானே குண்டு வெடித்த பிஜேபி காரன் பற்றி இன்றைய தினத்தந்தி செய்தியில் வந்திருக்கிறது....! அதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்..அப்போது வந்த தினமலம் செய்தியையும் ஒப்பிட்டு நாம் ஆதாரங்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்..! இன் ஷா அல்லாஹ் !

உதயம் said...

சிறுவனாக இருந்த போது மம்முட்டி நடித்த ஒருபடம் பார்த்தேன். ( நியூ டெல்லி என்று ஞாபகம்) பத்திரிகை அதிபராக இருக்கும் மம்முட்டி தன் அடியாள் தியாகராஜனை வைத்து சில பிரமுகர்களை கொலை செய்ய வைப்பார். தியாகராஜனிடம் கொலைக்கான கட்டளை கொடுத்தவுடனே தன் பத்திரிகையில் முந்தி கொண்டு செய்தியை பிரசுரித்து விடுவார். மற்ற பத்திரிகைகளில் வரும் முன்னரே இவரது பத்திரிகையில் அந்த கொலை பற்றிய தகவல் வருவதால் இவரது பத்திரிகை விற்பனையில் முந்தி இருக்கும். கொல்லப்படும் நேரம் பத்திரிகை அச்சிடும் நேரம் எல்லாவற்றையும் கச்சிதமாக கணக்கிட்டு இந்த ஆட்டம் நடந்து வரும். ஒரு முறை தியாகு சொதப்பிவிடுவார், அவரை நம்பி செய்தி பிரசுரித்த மம்முட்டியின் திரைமறைவு லீலைகள் வெளிச்சத்திற்கு வரும்.

வேறு ஒன்றுமில்லை "தமிழ் முரசு" பத்திரிகை உயிரோடு பிடிபட்டவர்களை "சுட்டு கொலை" என்று தலைப்பிட்டு செய்தியை முந்தி தருவதாக நினைத்து சோரம் போய் நிற்கின்றனர்.

உதயம் said...

சிறுவனாக இருந்த போது மம்முட்டி நடித்த ஒருபடம் பார்த்தேன். ( நியூ டெல்லி என்று ஞாபகம்) பத்திரிகை அதிபராக இருக்கும் மம்முட்டி தன் அடியாள் தியாகராஜனை வைத்து சில பிரமுகர்களை கொலை செய்ய வைப்பார். தியாகராஜனிடம் கொலைக்கான கட்டளை கொடுத்தவுடனே தன் பத்திரிகையில் முந்தி கொண்டு செய்தியை பிரசுரித்து விடுவார். மற்ற பத்திரிகைகளில் வரும் முன்னரே இவரது பத்திரிகையில் அந்த கொலை பற்றிய தகவல் வருவதால் இவரது பத்திரிகை விற்பனையில் முந்தி இருக்கும். கொல்லப்படும் நேரம் பத்திரிகை அச்சிடும் நேரம் எல்லாவற்றையும் கச்சிதமாக கணக்கிட்டு இந்த ஆட்டம் நடந்து வரும். ஒரு முறை தியாகு சொதப்பிவிடுவார், அவரை நம்பி செய்தி பிரசுரித்த மம்முட்டியின் திரைமறைவு லீலைகள் வெளிச்சத்திற்கு வரும்.

வேறு ஒன்றுமில்லை "தமிழ் முரசு" பத்திரிகை உயிரோடு பிடிபட்டவர்களை "சுட்டு கொலை" என்று தலைப்பிட்டு செய்தியை முந்தி தருவதாக நினைத்து சோரம் போய் நிற்கின்றனர்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//சேலம் ஆடிட்டரின் கோர படுகொலைக்கு பிறகு மனம் தாளாமலும், அரசும் காவல் துறையும் நடந்து கொண்ட அலட்சிய போக்கையும், அசிரத்தையையும் கண்டித்தும் நியாயமான நீதி விசாரணை வேண்டும் என கோரி பாஜக மகளிரணி மண்டல தலைவி சகோதரி ராஜராஜேஸ்வரி தீக்குளித்ததாக தமிழ் ஹிந்து தளம் கூறியிருக்கிறது.//

'தமிழ் இந்து' தளத்தை இந்துக்களே நம்புவதில்லை. எனவே அதன் கருததை ஒரு பொருட்டாக எடுக்கத் தேவையில்லை. தீக்குளிக்கும் அளவுக்கு அவருக்கும் ஆடிட்டர் ரமேஷூக்கும் உள்ள தொடர்பை ஏனோ காவல் துறை கண்டு கொள்ள மறுக்கிறது.

இந்த உண்மை தெரிந்ததால்தானோ என்னவோ இந்துத்வா வாதிகள் இந்த பெண்ணின் தற்கொலையை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். எப்படியும் உண்மை தானாக வெளியில் வரும் அதுவரை பொறுத்திருப்போர். என்கவுண்டரில் போட்டு தள்ளி கேஸை ஊத்தி மூடாமல் மூவரையும் உயிரோடு பிடித்து ஜெயிலில் அடைத்துள்ள காவல் துறையை பாராட்டலாம்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//இவர்கள் போகிற போக்கில் சொல்லி கொண்டு போவதை நாம் அப்படியே விட்டு விடுவதால்தான் இந்த காவிகளின் ஏஜெண்டுகள் முஸ்லிம்கள் மீதான பொய் செய்தியை தொடர்ந்து ஊக்கத்துடன் பரப்பி வருகின்றனர்...//

நம்மிடம் சிறந்த தினப் பத்திரிக்கை இல்லாததுதான் இது போன்ற பொய்கள் அரங்கேற காரணம். செல்வந்தர்ள் இனியாவது முயற்சித்து தினப் பத்திரிக்கை ஆரம்பிக்க முயற்சிப்பார்களாக!

suvanappiriyan said...

சகோ உதயம்

//சிறுவனாக இருந்த போது மம்முட்டி நடித்த ஒருபடம் பார்த்தேன். ( நியூ டெல்லி என்று ஞாபகம்) பத்திரிகை அதிபராக இருக்கும் மம்முட்டி தன் அடியாள் தியாகராஜனை வைத்து சில பிரமுகர்களை கொலை செய்ய வைப்பார். தியாகராஜனிடம் கொலைக்கான கட்டளை கொடுத்தவுடனே தன் பத்திரிகையில் முந்தி கொண்டு செய்தியை பிரசுரித்து விடுவார். மற்ற பத்திரிகைகளில் வரும் முன்னரே இவரது பத்திரிகையில் அந்த கொலை பற்றிய தகவல் வருவதால் இவரது பத்திரிகை விற்பனையில் முந்தி இருக்கும். கொல்லப்படும் நேரம் பத்திரிகை அச்சிடும் நேரம் எல்லாவற்றையும் கச்சிதமாக கணக்கிட்டு இந்த ஆட்டம் நடந்து வரும். ஒரு முறை தியாகு சொதப்பிவிடுவார், அவரை நம்பி செய்தி பிரசுரித்த மம்முட்டியின் திரைமறைவு லீலைகள் வெளிச்சத்திற்கு வரும்.//

நானும் அந்த படத்தை பார்த்துள்ளேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம் சகோ,

செல்வந்தர்கள் மட்டுமல்ல நம்மை போன்ற இணைய சகோதரர்கள் சேர்ந்து முயன்றால் கூட இன்ஷா அல்லாஹ் தின பத்திரிக்கையோ,வார பத்திரிக்கையோ கூட தொடங்கலாம்.....நமது சகோதரர்கள் அதற்கு முன் வர வேண்டும்...அதுவரை இதுபோன்ற பொய் நிகழ்ச்சி நிரல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாததே.