Followers

Monday, November 19, 2012

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?


பதிவர் திரு நம்பள்கி அவர்கள் போன பதிவில்

//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//

என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த பதிவை தருகிறேன்.

அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்

'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73


மற்றோர் இடத்தில்....

'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41


இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம் புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம் கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.

இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.

'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'

-குர்ஆன் 2:26


அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.






1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.





இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

---------------------------------------------------------

கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.

http://harunyahya.com/en/works/3043/the-miracle-in-the-mosquito/chapter/161

http://www.answering-christianity.com/mosquitoes_miracle.htm

http://miracleinthemosquito.com/3.htm

http://kaheel7.com/eng/index.php/gods-creations/340--mosquitos-head

http://www.islamicbulletin.org/newsletters/issue_20/science.aspx

http://doesgodexist.multiply.com/journal/item/122?&show_interstitial=1&u=%2Fjournal%2Fitem

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கேள்விற்கான பதில் அசத்தல்... விளக்கத்துடன் அருமை பதிவு... கொசு வலை தான் சிறந்தது...
நன்றி...

விஜய் said...

கொசு ஏன் மனிதனை விரட்டி விரட்டி கடிக்கிறது? இதற்கு ஏதாவது காரணம் சொல்லப்பட்டிருக்கிறதா?

Unknown said...

ஸலாம்

அல்ஹம்துலில்லாஹ் ... சரியான ...

கொசுவை பற்றிய அருமையான தகவல் .. நீங்கள் தான் இதை தமிழில் மொழி பெயர்தீர்களா சுவனன் ...
//
1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.//

ஒன்னும் சொல்வதற்கில்லை ....

இனி யாராவது தான் செய்யும் வேலை இலகுவாக இருப்பதை .. இப்படி சொல்வார்கள் .. அந்த வேலைலாம் நமக்கு கொசு மாதிரி ... அப்படின்னு சொல்ல யோசிக்கணும் ...

உங்களுக்கு புரியலைல .. நான் சொன்னது ... :)

Anonymous said...

கொசுவை பற்றி பதிவை போட்டு புட்டீங்க. குசுவை பற்றி ஏதாவது பதிவு போட முடியுமா? நபி நாய்யகம் எல்லாத்தை பற்றியும் சொல்லியிருக்காரு. அதை பத்தியும் ஏதாவது சொல்லியிருப்பரு தானே

suvanappiriyan said...

அனானி!

//கொசுவை பற்றி பதிவை போட்டு புட்டீங்க. குசுவை பற்றி ஏதாவது பதிவு போட முடியுமா? நபி நாய்யகம் எல்லாத்தை பற்றியும் சொல்லியிருக்காரு. அதை பத்தியும் ஏதாவது சொல்லியிருப்பரு தானே//

காற்று பிரிதல்

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஆதாரம் : அபூதாவுத்

Anonymous said...

நீங்கள் இப்படி பகிரங்கமாக அந்த சந்தேகத்தை போட்டிருக்க தேவையில்லை.

Anonymous said...

" மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது."

இந்த கணக்கு தவறானது. பதிவர் வவ்வால் பார்க்க முன் திருத்தவும். அல்லது விடில் வௌவால் பின்னூட்டம் போட்டே கிழித்து விடுவார்

Anonymous said...

நான் நீங்கள் மட்டும் தான் படிப்பீர்கள் என்று "குசு" என்று போட்டேன். நீங்கள் பிரசுரிப்பெர்கள் என்று தெரிந்திருந்தால் அபான வாயு என்றே போட்டிருப்பேன்.

suvanappiriyan said...

//இந்த கணக்கு தவறானது. பதிவர் வவ்வால் பார்க்க முன் திருத்தவும். அல்லது விடில் வௌவால் பின்னூட்டம் போட்டே கிழித்து விடுவார் //

எனது தவறுதான். திருத்தி விட்டேன்.

//நான் நீங்கள் மட்டும் தான் படிப்பீர்கள் என்று "குசு" என்று போட்டேன். நீங்கள் பிரசுரிப்பெர்கள் என்று தெரிந்திருந்தால் அபான வாயு என்றே போட்டிருப்பேன். //

பின்னூட்டம் இடுவது பிரசுரிக்கத்தானே! :-)

தனி மனித தாக்குதல், ஆபாசம், அவதூறுகள் இல்லாத பின்னூட்டங்களை கூடியவரை மட்டுறுத்தாமல் அனுமதித்து விடுவேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ சுல்தான் மைதீன்

//இனி யாராவது தான் செய்யும் வேலை இலகுவாக இருப்பதை .. இப்படி சொல்வார்கள் .. அந்த வேலைலாம் நமக்கு கொசு மாதிரி ... அப்படின்னு சொல்ல யோசிக்கணும் ...

உங்களுக்கு புரியலைல .. நான் சொன்னது ... :)//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லையே!

suvanappiriyan said...

திரு விஜய்!

//கொசு ஏன் மனிதனை விரட்டி விரட்டி கடிக்கிறது? இதற்கு ஏதாவது காரணம் சொல்லப்பட்டிருக்கிறதா?//

ஒவ்வொன்றுக்கும் காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தால் குர்ஆன் பல வால்யூம்களாக ஆகி விடும். ஆனால் ஒவ்வொரு உயிரினத்தையும் தக்க காரணத்தோடேயே படைத்திருப்பதாக பொதுவாக இறைவன் கூறுகிறான். வருங்காலங்களில் அவை கண்டு பிடிக்கப்படலாம்.

"வானங்களையும் மற்றும் பூமியையும் அவ்விரண்டிற்க்கும் இடைப் பட்டதையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுடனும் தவிர நாம் படைக்கவில்லை. நம்மை மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்."

குர்ஆன் (26:03)

suvanappiriyan said...

//நீங்கள் இப்படி பகிரங்கமாக அந்த சந்தேகத்தை போட்டிருக்க தேவையில்லை.//

நீங்கள் இப்படி பகிரங்கமாக அந்த சந்தேகத்தை கேட்டிருக்க தேவையில்லை. :-(

Unknown said...

///// நீங்கள் இப்படி பகிரங்கமாக அந்த சந்தேகத்தை போட்டிருக்க தேவையில்லை.//

நீங்கள் இப்படி பகிரங்கமாக அந்த சந்தேகத்தை கேட்டிருக்க தேவையில்லை. :-( ////

செம பஞ்ச்....

சுவனப்பிரியன் இனி சொல்லிவிடுவார் போல ...

" நான் காந்தியா இருக்குறதும் சுபாஸ சந்திரபோசா மாறுறதும் உங்க கைலதான் இருக்கு "

டிஞ்சராக்கும் பஞ்ச்கள் தொடரட்டும் .....!!!

நன்றி !!!



suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//" நான் காந்தியா இருக்குறதும் சுபாஸ சந்திரபோசா மாறுறதும் உங்க கைலதான் இருக்கு "//

அடடே...இந்த பஞ்ச் டயாக் அதை விட நல்லாயிருக்கே! :-)

நம்பள்கி said...

இப்போழுது இங்கு காலை. படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்...!

உங்கள தொழில் தர்மம்..great...!

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//உங்கள தொழில் தர்மம்..great...!//

இதை எனது தொழிலாக செய்யவில்லை. ஏனெனில் இதற்காக எனக்கு எந்த பண முடிப்பும் கிடைப்பதில்லை. வேலை குறைவாக உள்ள நேரங்களிலும் ஓய்வு நேரத்திலும் இது போன்ற பதிவுகள் எழுத நேரம் ஒதுக்கி கொள்கிறேன். ஒருக்கால் இதற்கான வெகுமதி இறப்புக்கு பின்னால் கிடைக்கலாம்.

முதலில் இப்படி ஒரு பதிவுக்கு ஐடியா இல்லை. உங்களின் பின்னூட்டம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

UNMAIKAL said...

காவல்துறை, ஹிந்துத்துவ இயக்கங்களை –

சாமியார்களின் ஆசிரமங்களை
நெருங்க முடியுமா?

குறிவைக்கப்படும் "ஜம்யியத்துல் உலமா"


Tuesday, 20 November 2012 08:29 MARUPPU

NOV20, மும்பை போலீஸ், முஸ்லிம் இயக்கங்களை குறிவைத்து கண்காணிப்பதாகவும், குறிப்பாக "ஜம்யியத்துல் உலமா ஹிந்த்" அமைப்பு குறித்து, துருவித்துருவி விசாரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார், மாநில சட்டத்துறை செயலாளர் குல்சார் ஆசமி.

நேற்று (19/11) ஜம்யியத்தின் "இமாம் பாடா" அலுவலகத்துக்கு வந்த, முஸ்லிம் பிரிவை கவனிக்கும் ("M"பிரான்ச்) போலீசார் இருவர், தன்னிடம் ஜம்யியத் தலைவர்கள் குறித்து சரமாரி கேள்விகள் கேட்டதாக தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜம்யியதுல் உலமா நிர்வாகிகள் குறித்த, பாஸ்போர்ட், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து சென்ற "M" பிரிவு போலீசார், மீண்டும் மீண்டும் தங்களை "குறிவைத்து" விசாரிப்பது, முஸ்லிம் சமூகத்தையே குற்றப்பரம்பரையினராக சித்தரிப்பதாக உள்ளது என்றார்.

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஜம்யியத், கடந்த 1919 முதல், பதிவு செய்யப்பட்டு செயல்பட்டுவரும் இயக்கமாகும்.

முஸ்லிம் சமூக மேம்பாடுகளுக்காக பாடுபட்டு வரும் இந்த இயக்கம், வெளிப்படையான செயல்பாடுகள் கொண்டது என்றார்.

மேலும், இவ்வியக்கத்தின் வரவு-செலவு கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறை தணிக்கை அதிகாரிகளின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இதன் நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட விவரங்களும் பட்டியலும், ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு தெரியப்படுத்தப்படுவதாக சொன்னார்,ஆசமி.

முஸ்லிம் இயக்கங்களுடன் இப்படி நடந்துக்கொள்ளும் காவல்துறை,

ஹிந்துத்துவ இயக்கங்களை -

சாமியார்களின் ஆசிரமங்களை நெருங்க முடியுமா?

எனக்கேள்வி கேட்டார்.


SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/624--q-q-

vasu said...

கொசுவிடம் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அது உங்களைவிட 100 மடங்கு பார்வைதிறன் உள்ளது. மனித இனத்தையே அழிக்கும் வல்லமையை நாம் அதற்க்கு கொடுத்தோம். அதை அற்ப்பமாக நினைக்க வேண்டாம்.

கடவுளிடம் வந்தது என்றால் இந்த தொனியில் அல்லவா இருக்க வேண்டும். கடவுள் படைப்பில் எதுவும் அற்பம் கிடையது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு கொசுவிற்க்கு 100 கண்கள் இருக்குனு எப்படி தெரியும். அதனால்தான் அற்ப்பம் என்று மஹமத் சொல்லிஇருக்கார்.

//**எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் **//
//** மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் **//

முரண்பாடுகள் தெரிகிரதா நண்பா.

//**that of a mosquito or what is smaller than it**/

இது எப்படி கொசுவின் மேல் உள்ள பூச்சி என்று அர்தம் வரும். குரான் வசனங்களை மாற்றினால் நரகத்தில் என்ன தண்டனை தெரியுமா நண்பா.