Followers

Saturday, September 14, 2013

மற்றுமொரு தாஜ்மஹாலை கட்டும் பைத்தியக்காரன்!



இறந்து போன தனது மனைவிக்காக பேரரசன் சாஜஹான் பைத்தியக்காரத்தனமாக 20000 பேரை வேலை வாங்கி பல லட்சங்களை செலவழித்து 'தாஜ்மஹால்' என்ற ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினான். அந்த பணத்தைக் கொண்டு கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் பாரதம் இன்று வரை வளம் கொழித்திருக்கும். இப்படி ஊதாரித்தனமாக கருவூல பணத்தை எடுக்கலாமா என்று அன்று யாரும் கேள்வி கேட்கவில்லை. அதைப் பார்த்து தற்போது ஒரு முஸ்லிம் தனது மனைவி இறந்ததற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று அதே போன்றதொரு சமாதியை எழுப்புகிறாராம். இந்த பைத்தியத்துக்கு இஸ்லாம் என்றால் என்ன? இறந்த தனது மனைவிக்கு செய்ய வேண்டிய காரியங்களாக இஸ்லாம் சொல்வது என்ன? என்பது கூட தெரியாமல் தனது வாழ்நாளை வீணாக்கியிருக்கிறார்.

இந்தியா போன்று வறியவர்கள் அதிகம் உடைய நாட்டில் செல்வம் உடையவர்கள் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் உதவ முன் வந்தால் பலரது வாழ்வில் ஒளி ஏற்படும். கல்வி கட்டணம் கட்ட வழியில்லாமல் எத்தனையோ சிறுவர்கள் படிப்பை பாதியில் விடுகின்றனர். ஒரு வேளை சோற்றுக்கு பிச்சை பாத்திரம் ஏந்தும் எத்தனையோ சிறுவர்களை வழி நெடுக பார்க்கிறோம். இருந்தும் செல்வந்தர்கள் இது போன்ற வறட்டு கௌரவத்தில் பணத்தை தாறுமாறாக செலவு செய்து சமூக அவலங்களை தேடிக் கொள்கின்றனர்.

இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இஸ்லாம் எவ்வாறு பட்டியலிடுகிறது என்பதை இனி பார்ப்போம்.

1 .

அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 59:10)

இவ்வாறு இறந்தவர்களுக்காக பிழை பொறுக்கத் தேடி பிரார்த்தனை செய்ய இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று விசயங்களை தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகின்றன அவைகள்

1 . நிரந்தர தர்மம்
2 . பயன்தரும் கல்வி
3 . அவனுக்காக துஆ செய்யும் நல்ல குழந்தை
என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுýரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3358)

2 . தர்மம் செய்தல்

ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் திடீரென இறந்து விட்டார், அவர்கள் அந்நேரத்தில் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படி சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் சார்பாக நான் தர்மம் செய்தால் எனது தாய்க்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! கிடைக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1388)

3 . இஸலாம் அனுமதியளிக்கும் விஷயத்தில் ஒருவன் நேர்ச்சை வைத்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அதை நிறைவேற்றலாம்

ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது, ஆனால் அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். நான் என்ன செய்யலாம்? என்று மார்க்க தீர்ப்பு கேட்டார்கள் அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ (2761)

4 . மரணித்தவருக்கு ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவருக்காக அதை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்கள், அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்தவாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ1852)

5. நோன்பு கடமையாகி அதை நிறைவேற்ற முடியாமல் அல்லது நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவர்சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

நோன்பு கடமையான நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் அந்த நோன்பை நோற்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1952)

6 . இறந்தவர் கடனாளியாக இருந்து அவர் எந்த சொத்து இல்லாத ஏழையாக இருந்தால் அவருடைய கடனை அவரின் உறவினர்கள் நிறைவேற்ற வேண்டும்.

இங்கு சவுதியில் பல செல்வந்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பல ஆயிரம் ரியால்கள் செலவு செய்து இறந்தவர்கள் பெயரால் இலவசமாக வழங்குவதை பார்த்துள்ளேன். இது போன்ற செயல்களை பேரூந்து நிறுத்தங்களில் செய்ய முயற்சிக்கலாம்.

நூலகங்களை இறந்தவர்கள் பெயரால் திறக்கலாம்.

ஒரு டிரஸ்டை இறந்தவர் பெயரால் திறந்து அனாதை குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கும் செலவழிக்கலாம்.

இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த அழகிய வழி முறைகளை அந்த பெரியவருக்கு யாராவது எடுத்துச் சொல்லி அவரை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவார்களாக!

4 comments:

Seeni said...

mmm....

Anonymous said...

வேலூர்: பா. ஜ., கட்சி பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைதான ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.பா. ஜ., கட்சி மாநில மருத்துவ அணி செயலாளராக இருந்தவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி. இவரை கடந்தாண்டு ஆயுத பூஜை அன்று வேலூரில் உள்ள அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போது மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலையில் பின்னணியில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி வசூர்ராஜா இருந்தது தெரிந்தது. வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை செய்து கூலிப் படையை சேர்ந்த டவுன் உதயா, 28, சின்னா, 24, சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ், 26, அரியூர் ராஜா, 32, பிச்சை பெருமாள், 28, சோளிங்கர் தரணி, 24, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இதில், ரவுடி பிச்சை பெருமாள் மீது பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளியே வந்த பிச்சை பெருமாள், வழிப்பறி வழக்கில் வேலூர் வடக்கு போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.கைதான பிச்சை பெருமாள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேலூர் எஸ்.பி., விஜயகுமார் பரிந்துரை செய்தார். கலெக்டர் சங்கர், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். போலீஸார் பிச்சை பெருமாளை குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=804051

திண்டுக்கல் தனபாலன் said...

ந(க)ரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவார்களாக...!

திண்டுக்கல் தனபாலன் said...

ந(க)ரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவார்களாக...!