Followers

Saturday, April 21, 2018

கண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.


கண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.

ஆண்களின் கண்களுக்கு விருந்தாக சில பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து வருகின்றனர். இதனால் நல்லவன் கூட சில நேரங்களில் பொல்லாதவனாக மாறி விடுகிறான். இங்கு காவல் துறையை சேர்ந்த பெண்கள் உடல் தெரியும் படி ஆடை அணிந்து வரும் பல பெண்களை நிறுத்தி அவர்கள் உடையை சரி செய்வதை பார்க்கிறோம். இது மிகச் சிறந்த பணி. பெண்கள் ஆடையை கண்ணியமாக உடுத்த ஆரம்பித்தாலே 80 சதவீத குற்றங்களை தடுத்து விடலாம்.

இஸ்லாம் சொல்லும் ஆடை
 ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் (நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று சாதாரணமாக வெளியில் தெரியக் கூடியதைத்தவிர வேறு எதையும் வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: 
குர்ஆன் 24:31




2 comments:

Dr.Anburaj said...

முகத்தை மறைக்கக் கூடாது. கருப்ப நிற உடை அணிய வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. தளா்வான உடல் பிதுக்கங்களை மறைக்கும் கண்ணாடி போன்ற தசையை காட்டாததுமான உடைகளைத்தான் பெண்கள் அணிய வேண்டும்.தங்கள் கருத்து எனக்கு உடன்பாடு.

Dr.Anburaj said...

அக்ரகாரத்து மாமிகள் மடிசாரில் பாருங்கள். உடை பற்றிய அனைத்து இலக்கணங்களும் நிறைவேறியிருக்கும்.