Followers

Monday, April 16, 2018

குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுதலை!


அசீமானந்தா - குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுதலை!

RSS பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் :  
  
இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம். ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.


குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.


ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.


குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.


பா.. எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.


2005
ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன். 


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால்  ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.


அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.


சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 

2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர், நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம் என தெரிவித்தார். அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." ---இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். 

Source For Photos and News : OUR SINCERE THANKS TO :-
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp


இந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளான தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஹைதராபாத் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலை செய்தது.

தமிழ் இந்து நாளிதழ்
16-04-2018



2 comments:

Dr.Anburaj said...

பத்திாிகை செய்திகள் நம்பத் தகுந்தவை அல்ல என்று பலமுறை பதிவு செய்துள்ளீா்கள்.குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிரூபிப்பது சற்று கடினமானது.சில பிழைகள் ஏற்பட்டாலும் குற்றவாளிகளை நீதி மன்றம் விடுவித்து வீடுவதுண்டு.பகிரங்கமாக கொலை செய்தவன் கூட சுலபமாக வழக்கில் இருந்து விடுதலை பெற முடியும்.சாட்சிகள் பிறள்தல் வக்கிலின் வாதத் திறன் போன்ற கருவிகள் முக்கியம்.

இறைவனின் சந்தியில் உள்ள நீதி மன்றதின் வாரண்டில் இருந்து எந்த கயவா்களும் தப்ப முடியாது.காலம் பதில் சொல்லும்.
இதுபோல் அரேபிய மத காடையா்கள் கூட பல வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள்.கோவையில் திரு.செல்வராஜ் என்ற காவலா் கொலை செய்யப்பட்டாா்.பெரும் கலவரம் ஏற்பட்டது.குற்றம் சமத்தப்பட்டவர்களை நீதி மன்றம் விடுவித்து செய்திகள் வந்தது. மேல்முறையீடு செய்தார்களா ? பலன் இருந்ததா ? தெரியவில்லை.

இந்துக்களுக்கு எதிராக களள வழக்கு பண்ணம் குணம் ஒரு போதும் தங்களுக்கு மாறாது.
அரேபிய காடையன் விடுதலை அடைந்தால் அது பொய் வழக்கு.எனவே முஸ்லீம்கள் ஜெயித்து விட்டாா்கள் என்று பதிவு செய்யப்படுகின்றது.அதுவே இந்து என்றால் ????

Dr.Anburaj said...

ஒரு முஸ்லீம் ஆண்மகன் -அரேபிய மத பெண் கள்ளக்காதல்.எப்படியோ ஆண்மகன் கொலை செய்யப்பட்டான்.
தமிழ்நாடு, வேலூரில்தான் சுவனப்பிரியன். காவல்துறைதான் அடித்து கொன்று விட்டார்கள் என குற்றம் சாட்டி வேலூா் நகர அரேபிய மத மக்கள் பெரும் கலவரம் செய்தார்கள்.காவல்துறை வாங்கிய அடி சொல்லில் அடங்காது.விடியோ காட்சிகள் உள்ளது. காவல்துறை மௌனமாக பட்ட அடியை தாங்கிக் கொண்டது. முஸ்லீம்கள் மீது வழக்க போட அரசு விரும்பாது. அந்த வழக்கு என்ன ஆச்சு ? எந்த முஸ்லீமும் தண்டிக்கப்பட மாட்டான்.பாருங்கள்.