'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, November 16, 2012
குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!
குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!
மனிதன் பயன்படுததும் விலங்குகளிலேயே குதிரை ஒரு வித்தியாசமான பிராணி என்று சொல்லலாம். அதன் கம்பீரம்: அதற்குள்ள வேகம்: அது நடக்கும் அழகு: என்று சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கார்பரேஷன் பள்ளிக்கு குதிரை வண்டியில் போனது உண்டு. தாத்தா தனது வயல் வேலையாகவும் கடை வேலையாகவும் செல்லும் போது என்னையும் ஏற்றிக் கொண்டு செல்வார். குதிரை வண்டியில் போகும் ஆர்வத்தினாலேயே பள்ளிக்கு மட்டம் போடாமல் தொடர்ந்து போய் வந்தேன்.
'டக்..டக்...டக்...' என்ற குளம்போசை தாள லயத்தோடு அந்த குதிரை எங்களை இழுத்துக் கொண்டு ஓடும் அழகே தனி. இது ஐந்து வருடம் தொடர்ந்தது. பிறகு நான் வேறு பள்ளி மாறிய போது எனக்கு சைக்கிள் கிடைத்ததால் குதிரை சவாரி நின்று போனது. எனினும் இன்று கூட குதிரைகளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் வந்து போகும்.
'காசை குதிரை உட்றான்' என்று சொல்வார்கள். அதுபோல் எங்கள் ஊரில் ஆசைக்கு குதிரைகளை வாங்கி அதிலேயே பெரும் தொகைகளை இழந்தவர்களும் உண்டு. அந்த காலத்திலிருந்து இன்று வரை குதிரை தனது செல்வத்துக்கு ஒரு அளவு கோளாக மனிதன் பாவித்து வந்திருக்கிறான்.
---------------------------------------------------
இந்த குதிரையின் ஓட்டத்தை வைத்து குர்ஆன் சில விஷயங்களை சொல்கிறது. அதனையும் பார்ப்போம்.
'மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும்,
தீப் பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும்,
அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,
அதனால் புழுதியை பரப்பி வருபவை மீதும்,
படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!
மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அவனே இதற்கு சாட்சியாக இருக்கிறான்.
அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.'
-குர்ஆன் 100: 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இனி இந்த வசனத்தின் சந்த அழகை பார்ப்பதற்கு மூல மொழியான அரபியில் இந்த வசனங்களை பார்போம்.
'வல்லாதியாத்தி லப்ஹன்:
வல் மூரியாத்தி கத்ஹன்:
ஃபல் முகீராத்தி சுப்ஹன்:
பஃதர் நபிஹி நக்அன்:
பவசத் நபிஹி ஜம்அன்:
இன்னல் இன்சான லிரப்பிஹி லகனூத்:
வஇன்னஹூ அலா தாலிக லஸஹீத்:
வஇன்னஹூ லிஹூப்பில் ஹைரி லஸதீத்'
என்ன அழகிய வார்த்தை சீரமைப்பு. சந்தம் எந்த அளவு நெருங்கி வருவதைப் பாருங்கள். பலர் எழுதும் கவிதைகளில் சந்தங்கள் சரியாக அமைந்தால் பொருள் ஏனோ தானோ வென்று இருக்கும். பொருள் அருமையாக இருந்தால் ஏதோ உரை நடையை படிப்பது போல் இருக்கும். இங்கு இரண்டுமே மிக அழகாக பொருந்தி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இந்த ஒரு இடம் மட்டும் தான் என்று இல்லை. குர்ஆன் முழுக்க இந்த வசன நடை தொடர்ந்து வருவதை பார்த்திருக்கலாம். அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இந்த வார்த்தை கட்டுக்கள் இன்னும் சிறந்த ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால் தான் அரபி மொழி நன்கு தெரிந்த அன்றைய அரபு புலவர்கள் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டால் கைகளால் காதை பொத்திக் கொள்வார்களாம். அதன் வசன நடையும் அதற்குள் பொதிந்திருக்கும் சிறந்த கருத்துக்களும் தங்களின் சிந்தையை கலைத்து இஸ்லாத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என்று அஞ்சுவார்களாம். அந்த அளவு குர்ஆனின் கருத்துக்களில் அன்றைய அரபு புலவர்கள் கலக்கம் அடைந்திருந்தனர்
இனி குர்ஆனின் விளக்கத்தைப் பார்ப்போம்.
மூச்சிறைத்து ஓடும் ஒரு குதிரை எந்த அளவு உண்மையானதோ, கால் குளம்பின் தீப் பொறி பறக்க ஓடும் குதிரை எந்த அளவு உண்மையானதோ, போர்க் காலங்களில் அதிகாலையில் உக்கிரமாக தாக்குதல் நடத்தும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, அந்த சண்டையில் புழுதியைக் கிளப்பும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, போரில் படைகளுக்கு நடுவே ஊடுருவிச் செல்லும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ அதே அளவு உண்மையோடு மனிதன் தனது இறைவனுக்கு நன்றி மறந்தவனாக இருக்கிறான். அதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கிறான். அழிந்து போகும் உலக செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கவும் செய்கிறான் என்கிறான் இறைவன்.
அதாவது அனைத்து சுகங்களையும் இறைவன் தந்திருக்க அதற்கு நன்றி மறந்து நாத்திக கருத்துக்களை சிலர் பரப்பி வருவதை பார்க்கிறோம். சிலர் படைத்த இறைவனை மனம் போன போக்கில் நிந்திப்பதை பார்க்கிறோம். இன்னும் சிலர் மனிதர்களை தெய்வங்கள் என்றும் தெய்வத்தின் அவதாரங்கள் என்றும் நம்பி தங்களின் பொருளையும் கற்பையும் ஒரு சாதாரண மனிதனிடம் இழந்து நிற்பதைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுபட்டு நம்மை படைத்த இறைவனை அவன் வணங்க சொன்ன வழியில் வணங்க வேண்டும் என்று மானிடர்க்கு இங்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.
குர்ஆனில் குதிரை சம்பந்தமாக வந்திருக்கும் வேறு சில வசனங்கள்.
'பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம், மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள், ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். இறைவனிடம் அழகிய புகலிடம் உள்ளது.'
-குர்ஆன் 3:14
உலகம் முழுவதும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் உலக மக்களால் இன்று வரை கவர்ச்சிக்குரியதாகவே எடுத்துக் கொள்ளப்படுவதை பார்க்கிறோம்.
'குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'
குர்ஆன் 16:8
அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
Labels:
கார்ட்டூன்கள்,
குர்ஆன்,
சமூகம்,
பொருளாதாரம்,
விலங்கினங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
PART 1. அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து
இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ பாதிரியார்.
உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்…
டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் “Masters in Divinity” பட்டம் பெற்றவர்.
உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.
பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.
சொடுக்கி டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), படம் பார்க்க
இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.
அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ்.
அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்
சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். சுபானல்லாஹ்.
ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும்.
டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான்.
சுலபத்தில் அது நடந்து விடவில்லை.
இந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்….
“நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.
இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன்.
ஆனால், ஏசு (அலை) அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை.
ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.
என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991.
அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம்.
அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன.
அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது.
அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.
எங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார்.
அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து, “நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா?” என்று கேட்டார்.
உளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.
முஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது.
நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம்.
ஜமால் அவ்வப்போது குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார்.
நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை.
அவர் குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.
ஆனால் ஜமால் அவர்களின் தாவாஹ் மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை.
அவருடைய தாவாஹ் என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர்.
வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.
காலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது.
Wa’el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
CONTINUED …..
PART 2. அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து
இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ பாதிரியார்.
இப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்,
“என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது?, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம்.
ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம்?, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது? “
நான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.
நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன்.
அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை.
அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.
குரானைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur’an).
அதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன்.
நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது.
இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).
இந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை.
நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன்.
குரான் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மன போராட்டங்கள் ஆரம்பித்தன.
இது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.
அது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம்.
அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி,
“உங்கள் மதம் என்ன?”
“கிருத்துவன்” என்று பூர்த்தி செய்தேன்.
சிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,
“மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்?”
இந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.
“என்ன கேள்வி இது?, நாமென்ன முஸ்லிமா?, நாம் கிருத்துவர்கள் தானே?” என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.
நான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார்.
இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.
* அப்படி என்ன டென்ஷன் எனக்கு?
* அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன்.
* இதையெல்லாம் விட, நான் ஏன் “நாமென்ன முஸ்லிமா?” என்று கேட்க வேண்டும்.
எது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.
பிறகு என் மனைவி சொன்னார், “இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்”.
பிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குரான் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன்.
இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன்.
நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன.
இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.
அதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன்.
அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன்.
அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.
CONTINUED ..
PART 3. அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து
இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ பாதிரியார்.
ஆக, குரானைப் படிக்கிறேன்,
முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன்,
ஐவேலை தொழுகிறேன்,
ஆனால் முஸ்லிமில்லை.
உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது.
ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது.
நான் இன்னும் கிருத்துவன் தான்.
என்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன்.
அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை திறந்து படித்துக் கொண்டிருந்தேன்.
ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான மஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார்.
அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து,
“நீங்கள் முஸ்லிமா?” என்று பணிவுடன் கேட்டார்.
ஆனால் நானோ மிகக் கடுமையாக,
“NOoooooooooooooooooooooooooo………….”
என்று எரிச்சலுடன் கத்திவிட்டேன்.
இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர்.
ஆனால், என்ன ஆயிற்று எனக்கு?, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்?, அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர்?.
இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று?
இப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன்.
சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
“உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன்.
இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.
நீங்கள் என்னிடம், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்”
நான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.
என்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.
“ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்” என்று சொல்லி விடைபெற்றார் அவர்.
நிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன்.
என்னை அறியாமலேயே ஆங்கில்த்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன்.
ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது.
என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை.
இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
பிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம்.
அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன்.
இப்போது நான்,
* ஈசா (அலை) அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை.
* இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன்.
* முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன்.
* ஐந்து வேலை தொழுகிறேன்.
* நோன்பு நோற்கிறேன்…
இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன்.
ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான்.
CONTINUED …
PART 4. அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து
இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ பாதிரியார்.
கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும்.
ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.
என்னைப் பார்த்து “நீங்கள் முஸ்லிமா?” என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன்.
கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.
இப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.
ஒரு பாலஸ்தீன முதியவருடன், பாலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.
எதிரே வந்த அந்த சகோதரர் சலாம் சொன்னார், நான் பதிலளித்தேன்.
தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார்.
எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள. ஆம். அதே கேள்விதான்.
“நீங்கள் முஸ்லிமா?”
இப்போது என்ன சொல்வது?. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது.
ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.
எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும்.
வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,
* ஒன்று “நாம்” (N’am, அரபியில் “ஆம்” என்று அர்த்தம்),
* மற்றொன்று “லா” ( La, “இல்லை” என்று அர்த்தம்).
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை.
இப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,
“திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்”
ஆம், அது நிச்சயமான உண்மை.
இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?
அல்ஹம்துலில்லாஹ்…சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது….
“நாம்”…………………..
இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்…அல்ஹம்துலில்லாஹ்…”
சுபானல்லாஹ்.
இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம்.
நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை.
அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது.
ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர்.
இன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர்.
முஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர்,
அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை,
சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்).
டர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, “Islam Our Choice: Portraits of Modern American Muslim Women” என்ற புத்தகத்தை எழுதியவர்.
அதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,
* இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம்,
* ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள்,
* தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள்
என்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.
CONTINUED
PART 5. அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து
இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ பாதிரியார்.
இறைவன் இந்த தம்பதியருக்கு,
மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக…ஆமின்
டெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம்,
“Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam”.
இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது.
ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது.
இதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல.
ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர்.
தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட புத்தகம் தான் இது.
இதில்,
* முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை,
* பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை,
* எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள்
என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.
CNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள்.
அவர்களில் பெண்களே அதிகம்.
இந்த எண்ணிக்கை எப்போதும் போல அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன…அல்ஹம்துலில்லாஹ்.
பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
இறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக…ஆமின்
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக…ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
நன்றி: கிளியனூர்.நெட்
சகோ சு.பி
நல்ல பதிவு
எனினும் சில விவரங்கள்.
1.குதிரை என அரபி மூலத்தில் இருக்கிறதா? இப்படி செயல் செய்யும் எதையும் இதற்கு பொருத்தலாம் அல்லவா?
2. அரபி மூலட்தில் சத்தியமாக என இருக்கிறதா ?
3. நீங்கள் அண்ணன் பி.ஜே மொழியாக்கம் காட்டுகிறீர்கள் ,அல்லாஹ் 5 ஆம் வசனத்தில் ஒரே ஒருமுறை சத்தியம் செய்கிறார். இங்கே பாருங்கள்.
//100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.//
இங்கே 1,5 வசனங்க்களில் இருமுறை அல்லாஹ் சத்தியம் செய்கிறான். குதிரை அடைப்புக் குறியில் வருகிறது.
ஆகவே சத்தியம் மூல மொழியில் இருக்கிறதா,மொழியாக்கத்தில் சத்தியம் எத்த்னை முறை போடலாம்? அல்லாஹ் ஏன் சத்தியம் செய்ய வேண்டும்?
4.// குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'/
குர்ஆன் 16:8 கோவேறு கழுதை படைப்பா? அல்லது................????
அறியாதவற்றை இனி படைப்பான் என்றால் எப்போது, இந்த வசன்ம் என்ன கூறுகிறது??
5. //அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.//
அல்லாஹ் &முகமது(சல்) உட்பட ஹி ஹி
நம் கேள்விகளுக்கு எப்படியாவது[சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!!] பதில் சொல்லாவிட்டல் கிடைக்கும் சுவனக்கன்னிகளின் [ஹூரி] எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும்.
நன்றி
சகோ உண்மைகள்!
//அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து
இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்தவ பாதிரியார்.//
அருமையான ஒரு வரலாற்று நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி!
சகோ.சார்வாகன்
//குதிரை என அரபி மூலத்தில் இருக்கிறதா? இப்படி செயல் செய்யும் எதையும் இதற்கு பொருத்தலாம் அல்லவா? //
இங்கு அல்லாஹ்வே இறைவன் என்று சான்றளிகின்றான்....
இயற்பியலில் குதிரைத்திறன் என்னும் அலகு எதனால் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்வது நலம்.. குதிரை ஒன்று தான் வாயில் நுரை தள்ளும் அளவு ஓடினாலும் ஒரே வேகத்தில் செல்லும்..அதனால் தான் மின் மோட்டார் போன்றவற்றின் வேகத்தை குதிரை திறனில் அளப்பர்...
இங்கு அல்லாஹ் மூச்சு திணற ஓடும் என்று கூறுகிறான் ..சார்வகனும் ஓடுவார். ஓடினால் மூச்சு திணறும்..திணறினால் ஓடமாட்டார் நின்று விடுவார்...இப்படி அல்லாஹ் கூறுவது குதிரை தான் என்றும் குதிரை மட்டுமே அவ்வாறு ஓட முடியும் என்று அறிந்து கூறிய அல்லாஹ்வே மிகைத்தவன் மிக்க ஞானமுடையவன் !!!
நன்றி !!!
சகோ சார்வாகன்!
//1.குதிரை என அரபி மூலத்தில் இருக்கிறதா? இப்படி செயல் செய்யும் எதையும் இதற்கு பொருத்தலாம் அல்லவா? //
அது குதிரையைத்தான் குறிக்கிறது என்று முகமது நபி சொன்ன விளக்கவுரையை அடிப்படையாக வைத்தே விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த வசனங்கள் இடம்பெறும் 100 வது அத்தியாத்துக்கே 'வேகமாக ஓடும் குதிரைகள்' என்பது பெயராகும்.
//2. அரபி மூலட்தில் சத்தியமாக என இருக்கிறதா ?//
ஆம். எந்த ஒரு சொல்லுக்கும் முன்னால் வாவ் என்ற எழுத்து சேர்க்கப்பட்டால் அது அந்த பொருளின மீது சத்தியமிடுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பொருளின் நம்பகத் தன்மையை குறிக்க நமக்கு தெரிந்த பொருட்களின் மீது சத்தியமிட்டுக் கூறுவது அன்றைய அரபுகளின் வழக்கம். எனவேதான் அந்த மக்களின் பேச்சு வழக்கை யொட்டி சில வசனங்களும் அமைந்துள்ளன.
//3. நீங்கள் அண்ணன் பி.ஜே மொழியாக்கம் காட்டுகிறீர்கள் ,அல்லாஹ் 5 ஆம் வசனத்தில் ஒரே ஒருமுறை சத்தியம் செய்கிறார். இங்கே பாருங்கள்.//
மூலத்தில் ஒரே ஒரு முறை சத்தியம் செய்தாலும் அந்த வாக்கியத்தின் அனைத்தையும் அது உள்ளடக்கும். எனவேதான் தெளிவாக விளங்குவதற்காக ஒவ்வொரு வசனத்திலும் அதனை சேர்த்தது.
4.//குர்ஆன் 16:8 கோவேறு கழுதை படைப்பா? அல்லது................????//
கழுதையும் குதிரையும் இணைந்து பிறந்ததே கோவேரு கழுதை. மூலமான குதிரையையும் கழுதையையும் யார் படைத்தது? இறைவன் தானே! அந்த மூலத்திலிருந்து வந்ததுதானே கோவேரு கழுதையும்!
//அறியாதவற்றை இனி படைப்பான் என்றால் எப்போது, இந்த வசன்ம் என்ன கூறுகிறது??//
முகமது நபி காலத்துக்கு பிறகு இன்று வரை கார், விமானம், ராக்கெட் என்று எதை எதையோ மனிதன் தனது பயணத்துக்கு கண்டுபிடித்து விட்டான். அந்த அறிவை பின்னால் வரும் சமுதாயத்துக்கு தரப் போகிறேன் என்று இறைவன் கூறுகிறான். நமது காலத்துக்கு பிறகு இன்னும் புதிய கண்டுபிடிப்புகள் வரலாம். அந்த அறிவை மனிதனுக்கு இறைவன் கொடுக்கும் போது.
//5.அல்லாஹ் &முகமது(சல்) உட்பட ஹி //
அல்லாஹ் அறிவான். நீங்களோ நானோ அறிந்திருக்க முடியாது. ஏன்? முகமது நபியே கூட அறிந்திருக்க முடியாது.
//நம் கேள்விகளுக்கு எப்படியாவது[சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!!] பதில் சொல்லாவிட்டல் கிடைக்கும் சுவனக்கன்னிகளின் [ஹூரி] எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும்.//
ஹா..ஹா..பரிசு கொடுத்தால் யார்தான் மறுப்பர்? உங்களுக்கு வேண்டாமா? அதுதான் நிரந்தர வாழ்வு. இந்த உலக வாழ்க்கை வெறும் அற்பமே....
சகோ சு.பி
// அது குதிரையைத்தான் குறிக்கிறது என்று முகமது நபி சொன்ன விளக்கவுரையை அடிப்படையாக வைத்தே விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த வசனங்கள் இடம்பெறும் 100 வது அத்தியாத்துக்கே 'வேகமாக ஓடும் குதிரைகள்' என்பது பெயராகும்.//
தலைப்பிலும் குதிரை என தெளிவாக குறிப்பிடப் படவில்லை என்பதே உண்மை. குதிரை யும் பொருந்தும் என்பதை மறுக்கவில்லை.
ஸூரத்துல் ஆதியாத்தி=(வேகமாகச் செல்லுபவை)=The chargers
குதிரைக்காக் குரானில் குறிப்பிடும் சொல் கய்யில்
(8:60:9) l-khayli horses
ஹதிதை வைத்து மட்டுமே குதிர என பொருள் கொள்கிறோம் என்றால் ஆட்சேப்னை இல்லை. குரான் ஹதித் இலாமல் விள்ங்க முடியாது என அறிந்த விடயமே.ஏன் எனில் பல(7?) பொருள் குரான் கொடுக்கும்,த்ளிவாக் சொல்வது இல்லை.
// ஆம். எந்த ஒரு சொல்லுக்கும் முன்னால் வாவ் என்ற எழுத்து சேர்க்கப்பட்டால் அது அந்த பொருளின மீது சத்தியமிடுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். //
அப்படி எனில் அண்ணன் மொழிபெயர்ப்பில் 5ஆம் வசனம் மட்டும் வாவ் இருக்க வேண்டும்.சரியா?
பவசத் நபிஹி ஜம்அன்:
http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=100&verse=5
(100:5:1) பவசத் =fawasaṭna=Then penetrate (in the) center
(100:5:2) நபிஹி =bihi=thereby
100:5:3)ஜம்அன்:= (jamʿan=collectively
Sahih International: Arriving thereby in the center collectively,
Pickthall: Cleaving, as one, the centre (of the foe),
Yusuf Ali: And penetrate forthwith into the midst (of the foe) en masse;-
Shakir: Then rush thereby upon an assembly:
Muhammad Sarwar: which engulfs the enemy.
Mohsin Khan: Penetrating forthwith as one into the midst (of the foe);
Arberry: cleaving there with a host!
சத்தியமாக சத்தியம் என்னும் சொல் இருப்பது போல் தெரியவில்லையே விளக்குங்கள்..
நன்றி
//மூலத்தில் ஒரே ஒரு முறை சத்தியம் செய்தாலும் அந்த வாக்கியத்தின் அனைத்தையும் அது உள்ளடக்கும். எனவேதான் தெளிவாக விளங்குவதற்காக ஒவ்வொரு வசனத்திலும் அதனை சேர்த்தது.//
சரி சத்தியம் செய்கிறார் என்றாலும், அல்லாஹ் குதிரை மீது சத்தியம் செய்யலாமா?
சரி என்றால் மூமின்கள் ஹலால் விலங்குகள் அனைத்தின் மீதும் சத்தியம் செய்யலாமா?
(அழிந்து விட்ட) டைனோசார் மீது (சத்தியமாக அறிந்து கொள்ளவே கேட்கிறேன்)
******
கோவேறு கழுதை விடயம் ஏற்கெனவே (நாம்) விவாதித்தது என்றாலும் (புதிதாக) ஏதேனும் அறிவியல் வித்தை காட்டூவீர்கள் என எதிர்பார்த்தேன்.அதை ஏற்கிறேன்.
******
////அறியாதவற்றை இனி படைப்பான் என்றால் எப்போது, இந்த வசன்ம் என்ன கூறுகிறது??//
முகமது நபி காலத்துக்கு பிறகு இன்று வரை கார், விமானம், ராக்கெட் என்று எதை எதையோ மனிதன் தனது பயணத்துக்கு கண்டுபிடித்து விட்டான். அந்த அறிவை பின்னால் வரும் சமுதாயத்துக்கு தரப் போகிறேன் என்று இறைவன் கூறுகிறான். நமது காலத்துக்கு பிறகு இன்னும் புதிய கண்டுபிடிப்புகள் வரலாம். அந்த அறிவை மனிதனுக்கு இறைவன் கொடுக்கும் போது.//
அப்போது உயிருள்ளவை எதையும் படைப்பேன் என அந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். என்க்கென்னமோ இனிமேல் கொடுக்கப்படும் சுவனக் கன்னிகள் பற்றிக் கூறுவதாக் தெரிகிறது.
இறுதிக் காலத்தில் ஒரு மிருகம் வேறு வந்து மனிதர்களைத் திருத்தும் எனவும் சொல்கிறார்களே ஒருவேளை அதுவோ
27:82. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
இந்த 100 சூரா ஆதியாத்தி( ஹி ஹி அடி ஆத்தி!! மாதிரி இல்லை)!!!
மெக்காவில் வழங்கப்பட்ட சூரா என்பதால் இப்படித்தான் இருக்கும்.
ஒரே குழப்பமப்பா!!!!!!!
நன்றி
//சத்தியமாக சத்தியம் என்னும் சொல் இருப்பது போல் தெரியவில்லையே விளக்குங்கள்..//
'வல் ஆதியாத்தி லப்கன்' என்ற இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் 'வாவ்' வருகிறதே! அதன் தொடர்ச்சியாக அதே குதிரையைப் பற்றி வாக்கியம் தொடர்கிறது. முதல் வசனத்தில் வந்த சத்தியம் அடுத்த வசனங்களுக்கும் தொடர்கிறது. முதல் வசனத்தில் ஆரம்பிக்கும் குதிரை சம்பந்தமான செய்தி ஐந்தாம் வசனத்தில் வந்து முடிவடைகிறது. எனவே தான் இந்த சத்தியம் முதல் வசனத்திலிருந்து ஐந்தாம் வசனம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
//சரி சத்தியம் செய்கிறார் என்றாலும், அல்லாஹ் குதிரை மீது சத்தியம் செய்யலாமா?//
சத்தியம் எதற்கு செய்யப்படுகிறது? குதிரையும் அதன் செயல்களும் எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் மனிதன் நன்றி கெட்டவனாக இருப்பதும் என்கிறான் இறைவன். அந்த சத்தியம் உவமானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டுமே உண்மதான். நம் கண் முன்னே இருக்கும் குதிரையின் ஆற்றலும் உண்மைதான். உலகில் பல மனிதர்கள் இறைவனால் நல்ல வசதி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இறைவனை நிந்தித்து மக்களை நாத்திகத்தின் பால் அழைத்து வருகின்றனர். நீங்களும் அதனையேதான் செய்து வருகிறீர்கள். இதுவும் உண்மைதான். உடனே இந்த செல்வம் என்பது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது என்று கூற வேண்டாம். ஏனெனில் உங்களை விட அதிகம் கஷ்டப்படுபவர்கள் உங்களை விட கீழான நிலையில் இருப்பதை பார்க்கிறீர்கள். எனவே ஒருவனுக்கு பொருள் வருவது என்பது அவனது திறமையினால் அல்ல. அவனது இறைவன் தீர்மானித்ததால் வரக் கூடியது.
//சரி என்றால் மூமின்கள் ஹலால் விலங்குகள் அனைத்தின் மீதும் சத்தியம் செய்யலாமா? //
முன்பு செய்து வந்தார்கள். குர்ஆன் இறங்கிய பிறகு அது தடை செய்யப்பட்டது. அவ்வாறு மனிதர்கள் எதனையும் நிரூபிக்க சத்தியம் செய்ய அவசியம் ஏற்பட்டால் 'இறைவன் மீது சத்தியமாக!' அல்லது 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக' என்று கூற வேண்டும்.
//அப்போது உயிருள்ளவை எதையும் படைப்பேன் என அந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை.//
உயிருள்ளவையாகவும் இருக்கலாம். உயிரற்றவையாகவும் இருக்கலாம். அதை இறைவனே அறிந்தவன்.
//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். என்க்கென்னமோ இனிமேல் கொடுக்கப்படும் சுவனக் கன்னிகள் பற்றிக் கூறுவதாக் தெரிகிறது.//
சுவனக் கன்னிகள் மேல் ரொம்பவும் ஆசைப்படுவது போல் தெரிகிறது. :-) ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு முகமது நபியை தூதராகவும் ஏற்றுக் கொண்டால் தீர்ந்தது பிரசினை.
/
சகோ சு.பி ஸலாம்,
மிக்க நன்றிகள்.
//சுவனக் கன்னிகள் மேல் ரொம்பவும் ஆசைப்படுவது போல் தெரிகிறது. :-) ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு முகமது நபியை தூதராகவும் ஏற்றுக் கொண்டால் தீர்ந்தது பிரசினை. //
சுவனக் கன்னிகள் மீது எனக்கு மட்டுமா கண்??? உண்மையை சொல்லுங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இருப்பினும் நாம் எதனையும் சான்றுகள் அடைப்படையில் மட்டுமே ஏற்போம் என்பதால் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி என ஒன்றோ ,பலவோ இருப்பதை அறிய இயன்றால் மட்டுமே மதங்கள் பற்றி யோசிப்போம்.
அவ்வப்போது பரிணாமம் பற்றியும் எழுதுங்கள்!! போரடிக்கிறது
மூமின்கள் உள்ளிட்ட அனைவரையுமே சகோதர்களாக ஏற்று இருக்கிறோம். அல்லாஹ்,முக்மது(சல்) ஏற்பது [குறைந்த பட்சம் இப்போது] சாத்தியம் இல்லை! .மனதில் இருப்பதை வெளிப்படையாக் பேசி அனைத்துக்கும் சுமுக தீர்வு காண இயலுகிறோம்.அவ்வள்வுதான்.
சகோ மீரானுக்கும் நம்து ஸலாம்
நன்றி
சலாம் சகோ நாகூர் மீரான்!
//இயற்பியலில் குதிரைத்திறன் என்னும் அலகு எதனால் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்வது நலம்.. குதிரை ஒன்று தான் வாயில் நுரை தள்ளும் அளவு ஓடினாலும் ஒரே வேகத்தில் செல்லும்..அதனால் தான் மின் மோட்டார் போன்றவற்றின் வேகத்தை குதிரை திறனில் அளப்பர்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!
திரு நம்பள்கி!
//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...! //
மதம் அல்லது மார்க்கம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. நீங்கள் நாத்திகர் என்று சொன்னாலும் உங்கள் மனைவியையோ அல்லது உங்கள் சொந்தத்தையோ மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது. ஆனால் அந்த மதத்தை வைத்து மற்றவர்களை இம்சை படுத்துவதை நானும் எதிர்க்கிறேன்.
மற்றபடி இன்னும் இரண்டொரு நாளில் உங்கள் ஆசையும நிறைவேறும்.
மிஸ்டர் சார்வாகன்,
///சுவனக் கன்னிகள் மீது எனக்கு மட்டுமா கண்??? உண்மையை சொல்லுங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///
பொதுவாக முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான், போபியா முதல் சாதாரண தளங்கள் வரை சுவனக் கன்னிகளைப்பற்றி அலசி ஏளனம் செய்வார்கள்.
நரகத்திலிருந்து பாதுகாப்பும் சுவனத்தை அடையும் நிலைப்பாட்டிலும் வாழ்வதுதான், முஸ்லிம்களின் இறுதி இலட்சியம்.
எந்தவொரு முஸ்லிமும் சுவனக் கன்னிகளைக் கொடு என்று இறைவனிடம் இறைஞ்சுவதில்லை. அதைப்பற்றி சதா நினைப்பதும் இல்லை.
///இருப்பினும் நாம் எதனையும் சான்றுகள் அடைப்படையில் மட்டுமே ஏற்போம் என்பதால் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி என ஒன்றோ ,பலவோ இருப்பதை அறிய இயன்றால் மட்டுமே மதங்கள் பற்றி யோசிப்போம். அவ்வப்போது பரிணாமம் பற்றியும் எழுதுங்கள்!! போரடிக்கிறது///
பரிணாமத்தையும் சான்றுகளின் அடிப்படையில்தான் ஏற்று நம்புகிறீர்களா?
மிஸ்டர் சார்வாகன்,
///சுவனக் கன்னிகள் மீது எனக்கு மட்டுமா கண்??? உண்மையை சொல்லுங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///
பொதுவாக முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான், போபியா முதல் சாதாரண தளங்கள் வரை சுவனக் கன்னிகளைப்பற்றி அலசி ஏளனம் செய்வார்கள்.
நரகத்திலிருந்து பாதுகாப்பும் சுவனத்தை அடையும் நிலைப்பாட்டிலும் வாழ்வதுதான், முஸ்லிம்களின் இறுதி இலட்சியம்.
எந்தவொரு முஸ்லிமும் சுவனக் கன்னிகளைக் கொடு என்று இறைவனிடம் இறைஞ்சுவதில்லை. அதைப்பற்றி சதா நினைப்பதும் இல்லை.
///இருப்பினும் நாம் எதனையும் சான்றுகள் அடைப்படையில் மட்டுமே ஏற்போம் என்பதால் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி என ஒன்றோ ,பலவோ இருப்பதை அறிய இயன்றால் மட்டுமே மதங்கள் பற்றி யோசிப்போம். அவ்வப்போது பரிணாமம் பற்றியும் எழுதுங்கள்!! போரடிக்கிறது///
பரிணாமத்தையும் சான்றுகளின் அடிப்படையில்தான் ஏற்று நம்புகிறீர்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் சுவனப்பிரியன்.
அருமையான பதிவு.. குரானின் சீரான வசன நடையை கண்டு நானும் பல முறை வியந்ததுண்டு..இதையே நீங்களும் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி!
சகோ யூசுஃப் இஸ்மத
//பொதுவாக முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான், போபியா முதல் சாதாரண தளங்கள் வரை சுவனக் கன்னிகளைப்பற்றி அலசி ஏளனம் செய்வார்கள்.
நரகத்திலிருந்து பாதுகாப்பும் சுவனத்தை அடையும் நிலைப்பாட்டிலும் வாழ்வதுதான், முஸ்லிம்களின் இறுதி இலட்சியம்.
எந்தவொரு முஸ்லிமும் சுவனக் கன்னிகளைக் கொடு என்று இறைவனிடம் இறைஞ்சுவதில்லை. அதைப்பற்றி சதா நினைப்பதும் இல்லை. //
காஃப்ரி போல் பேசாதீர்கள்.
அல்லாஹ் சுவனக் கன்னி குரானில் கொடுப்பதாக சொல்கிறானா?
அதை வர்ணிக்கிறானா? இல்லையா?
அதனை பல இஸ்லாமிய அறிஞர்கள் போற்றி புகழ்ந்து எழுதி இருக்கிறார்களா?
அதைக் கேட்பது தவறா ?
ஆகவே இப்படி அல்லாஹ் செய்தும் நீங்கள் அதை கேட்பது இல்லை என்றால் ஏன்? அதை கேவலமாக நினைப்பதால்தானே.
அல்லாஹ் 4 மனைவி, எண்ணற்ற பாலியல் அடிமைகள்(வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட பெண்கள்) வைக்க அழகிய முறையில் அனுமதி கொடுத்தாலும் பல் மூமின்கள் ஒருமனைவியோடு காஃபிர்களின் நடைமுறையை கடைப்பிடிப்பது ஏன்?
நீங்கள் சுவனக் கன்னி கேட்காமல் இருக்க ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கலாம். அனைத்து முஸ்லிம்களும் அப்படி என சொல்லக் கூடாது.
இவை அல்லாவின் அருட்கொடை!!!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!!!
சுவனக் கன்னிகள் பற்றி குரான்,ஹதித்,தஃப்சீர் அடிப்படையில் விவாதிக்கலாமா?
பரிணாமம் என்பது சான்றுகளின் மேல் கட்டப் பட்ட,இப்போதைய அறிவியலின் உய்ரித் தோற்ற விள்க்க கொள்கை.
டிஸ்கி: நான் கிண்டல் அடிக்கிறேன் சகோ சு.பி பதில் சொல்கிறார். மனிதப் புனித வேடதாரிகளை நமக்கு பிடிப்பது இல்லை!!!
நன்றி
ஐயா உங்கள் படங்கள் உண்மையிலே அழகாக உள்ளன....நீங்கள் திறமைசாலிதான். சில பதிவுகளில் சொதப்பி விடுகிறீர்கள்.
//சுவனக் கன்னிகள் மேல் ரொம்பவும் ஆசைப்படுவது போல் தெரிகிறது. :-) ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு முகமது நபியை தூதராகவும் ஏற்றுக் கொண்டால் தீர்ந்தது பிரசினை. //
நான் ஏக இறைவனையும் ஏற்றுக்கொள்கிறேன்,முகமது நபியையும் ஒரு தூதராக ஏற்றுக்கொள்கிறேன். இது மட்டும் போதுமா?
திரு புரட்சி மணி!
//நான் ஏக இறைவனையும் ஏற்றுக்கொள்கிறேன்,முகமது நபியையும் ஒரு தூதராக ஏற்றுக்கொள்கிறேன். இது மட்டும் போதுமா?//
ஏக இறைவனை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏக இறைவனையும் ஏற்றுக் கொள்வேன் என்றால் அதோடு வேறு தெய்வங்களையும் ஏற்றுக் கொள்வேன் என்றாகிறது.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு முகமது நபியையும் ஏற்றுக் கொண்டு பெரும் பாவங்களான வட்டி வாங்குதல், விபசாரம் செய்தல், கொலை செய்தல், போன்றவைகளிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தால் அவர் சுவர்க்கம் புகுவதாக ஒரு நபி மொழி உண்டு. புரட்சி மணி என்ற பெயரிலேயே இருக்கலாம். பெயர் மாற்றம் அவசியம் இல்லை. அல்லாஹ் என்று சொல்லாமல் இறைவன் என்று சொன்னாலும் ஓகே.
//ஆகவே இப்படி அல்லாஹ் செய்தும் நீங்கள் அதை கேட்பது இல்லை என்றால் ஏன்? அதை கேவலமாக நினைப்பதால்தானே.//
யாரும் கேவலமாக நினைக்கவில்லை. ஒரு நல்ல செயலை செய்வது அதனை எதிர்பார்த்து அல்ல என்றே சொல்ல வருகிறார். எத்தனையோ பேர் முடமாக குருடாக ஊமையாக படைக்கப்பட்டிருக்கும் போது எனக்கு அனைத்தையும் நலமாகவும் மூளையையும் ஸ்திரமாக கொடுத்து கௌரமான வாழ்வையும் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல இந்த 100 வயது பத்தாது. இதற்கே நாள் போதாத போது மற்ற சந்தோஷங்களை இறைவன் நம்பிக்கையாளர்களுக்கு தருவது அவனளிக்கும் பிச்சை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
//ஏக இறைவனை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏக இறைவனையும் ஏற்றுக் கொள்வேன் என்றால் அதோடு வேறு தெய்வங்களையும் ஏற்றுக் கொள்வேன் என்றாகிறது.//
ஐயா ஏக இறைவன் மற்றும் முகமது நபி இருவரையும் குறிப்பதால் தான் நான் ஏக இறைவனையும் ஏற்றுக்கொள்கிறேன்,முகமது நபியையும் ஒரு தூதராக ஏற்றுக்கொள்கிறேன் என்றேன்.
//ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு முகமது நபியையும் ஏற்றுக் கொண்டு பெரும் பாவங்களான வட்டி வாங்குதல், விபசாரம் செய்தல், கொலை செய்தல், போன்றவைகளிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தால் அவர் சுவர்க்கம் புகுவதாக ஒரு நபி மொழி உண்டு. புரட்சி மணி என்ற பெயரிலேயே இருக்கலாம். பெயர் மாற்றம் அவசியம் இல்லை. அல்லாஹ் என்று சொல்லாமல் இறைவன் என்று சொன்னாலும் ஓகே. //
அப்ப நீங்கள் சொல்வதை பார்த்தால் நான் ஏற்க்கனவே சுவனத்திற்கு தகுதியடையவனாகத்தான் இருக்கிறேன். நன்றி ஐயா.
Post a Comment