Followers

Monday, September 23, 2013

பாகிஸ்தான், கென்ய வன்முறைகளை கண்டிப்போம்!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்காளின் என்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்திற்குள் 10 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் இந்தியா, அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

--பத்திரிக்கை செய்தி..

------------------------------------------------

அதே போல் நேற்று பாகிஸ்தானில் ஒரு சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமான கிறித்தவர்கள் பலியான செய்தி கேட்டு மனது சங்கடப்பட்டது. இந்த செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். இஸ்லாமிய பெயரை பயன் படுத்தில் இதனை எவனாவது செய்திருப்பானேயானால் அவனுக்கு முதலில் குர்ஆனின் விளக்கத்தை தண்டனை காலங்களில் கொடுக்க வேண்டும். போர்க் கலங்களில் கூட 'பெண்கள், முதியோர், சிறுவர்கள், மத குருமார்கள் போன்றவர்களை தாக்க வேண்டாம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. போர்க்கலங்களில் கூட நீதத்தை கடைபிடிக்க சொல்லும் இது போன்ற வன் செயல்களை ஆதரிக்குமா!

பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை வைத்து தாலிபான்களை தேடுகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொத்து கொத்தாக அமெரிக்கா கொன்று குவித்தது. அதில் பாதிக்கப்பட்ட யாராவது இத்தகைய காரியத்தை செய்திருக்கலாம். ஆனால் இந்த வழி முறை முற்றிலும் தவறு.

ஆப்கானிஸ்தானத்திலும், பாகிஸ்தானிலும் தங்களின் ஒப்பந்தத்தை அதிகரிக்க உள்ளூர் ஆட்களை வைத்து அமெரிக்கா செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். இதற்கு மொசாத்தும் துணை நின்றிருக்கும். இது போல் பல முறை அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வன்முறையை ஆரம்பித்து வைத்துள்ளது. யார் செத்தாலும் பரவாயில்லை. அவர்களின் ஒப்பந்தம் காலாவதியாகி விடக் கூடாது. இவ்வாறு வன்முறை நிகழ்ந்தால்தான் 'நாங்கள் இன்னும் 3 வருடம் இருப்பது அவசியமாகிறது' என்று கூறி ஒப்பந்தத்தை அதிகரிக்க முடியும்.

இந்த வன்முறை வெறியாட்டத்தை யார் செய்திருந்தாலும் இறைவன் முன் தண்டனை பெறுவார்கள். அவர்கள் மனித குல விரோதிகள். அவர்கள் முஸ்லிம்களானாலும், இந்துக்கள் ஆனாலும், கிறித்தவர்கள் ஆனாலும் சரியே!

------------------------------------------------------

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்த நிகழ்ச்சியைக் காணுங்கள்!

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் 'நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.

நூல் : திர்மிதி 1866

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2617

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.

நூல் : புகாரி 1313

ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே இது போல் உரிமையியல் தொடர்பான வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அதன் விபரம் வருமாறு:- ஒரு முஸ்லிமுடைய பொருளை அபகரிப்பதற்காக யார் பொய்யாகச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) என்ற நபித்தோழர் 'என் விஷயமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ஒரு நிலம் தொடர்பாக எனக்கும், ஒரு யூதருக்கும் விவகாரம் இருந்தது. அவர் அதை எனக்குத் தர மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உன்னிடம் சான்று ஏதும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். இல்லை' என்று நான் கூறினேன். உடனே யூதரிடம் 'நீ சத்தியம் செய்!' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உடனே நான் குறுக்கிட்டு 'அல்லாஹ்வின் தூதரே! இவன் சத்தியம் செய்து என் சொத்தை எடுத்துக் கொள்வான் எனக் கூறினேன். அப்போது 3:77 வசனத்தை அல்லாஹ் அருளினான்' என்று அஷ்அஸ் கூறினார்.

நூல் : புகாரி 2357, 2411, 2417, 2516, 2667


குர்ஆன் 3:77.

" யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப் பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் (பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு."




இந்த நபி மொழிகள் குர்ஆனிய வசனங்கள் எல்லாம் மாற்று மதத்தவர்களுடன் கனிவுடனும், அன்புடனும் நீதமாகவும் நடந்து கொள்ள கட்டளையிடுகிறது. இவ்வளவு அழகிய மார்க்கத்தை பின் பற்றும் ஒருவன் அப்பாவிகளை கொல்கிறான் என்றால் தவறு இஸ்லாத்தில் இல்லை. அதை விளங்காத அந்த பெயர் தாங்கி முஸ்லிமிடமே உண்டு.





6 comments:

சிராஜ் said...

இந்த வன்முறைகளுக்கு என் கடும் கண்டனங்கள்...

பதிவில் கூறப்பட்டுள்ளது போல், இதை யார் செய்து இருப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை...

முஸ்லிம்கள் செய்ததாக வைத்துக்கொண்டு பேசினால், இது போன்ற செயல்கள் தேவை அற்றது... ஒரு இஸ்லாமிய நாட்டில் அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பது தான் நமக்கு பெருமை.... நாம் தான் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்...

இந்த விஷயத்தில் நான் அரபு நாடுகளை வெகுவாக பாராட்டுகிறேன்...

Unknown said...

சுவனம் நான் நினைச்சது போல் நீங்கள் எழுதவில்லை.

இதற்கு காரணம் இஸ்ரேல், யூதக்குழுக்கள்

மோடி, இந்துதுவாக்கள்

இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் நிகழ்த்தவில்லை?

suvanappiriyan said...

//இந்த விஷயத்தில் நான் அரபு நாடுகளை வெகுவாக பாராட்டுகிறேன்...//

உண்மைதான் சகோ....இங்கு மாற்று மதத்தவர்களை கண்ணியமாக நடத்துவதால்தான் கவரப்பட்டு அதிகம் பேர் இஸ்லாத்தை இங்கு தழுவுகின்றனர்.

suvanappiriyan said...

//இதற்கு காரணம் இஸ்ரேல், யூதக்குழுக்கள்

மோடி, இந்துதுவாக்கள்//

அப்படியும் இருக்கலாம். மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகளில் முதலில் கைது செய்யப்பட்டது முஸ்லிம்களே.... பிறகு தான் விசாரணையில் இந்துத்வா கும்பலின் கை வரிசை என்பது தெளிவானது. தற்போது சிறை வாசம் அனுபவித்த அப்பாவி முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கூறி ஹைகோர்டின் உத்தரவை பார்த்தீரா....

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தில்குண்டு வெடித்து 80கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு குரானிய வர்ணாஸ்ரமம்தான் காரணம். குரான் கோலோச்சும் நாட்டில் ” காபீர் ” களுக்கு இடம் கிடையாது என்பதைமகம்மது பல முறை தெளிவாக கூறியுள்ளாா். யுதர்களை அரபு மண்டலத்திலிருந்து தன்னை ஏற்காத ஒரே காரணத்திற்கான படுகொலை செய்து விரட்டிய அன்பின் சொரூபம் அணணல் மகம்மது வாழ்க.

Dr.Anburaj said...

கருணை மதம் Conference calls for boycottof Ahmadis: Participants were told to wage holy war against the community. PHOTO: SHAMSUL ISLAM

The Radd-i-Qadianiyat Conference was held at Jamia Naeemia. The participants were told they had a duty to wage a holy war against Ahmadis. The audience which included a large number of students of the Jamia, vowed to wage ‘jihad’ against Ahmadis through their writings, speech, charity funds and corporal strength.

Maulana Ghulam Hussain Kiani, one of the speakers, said they would force Ahmadis to leave the city. “Their presence has polluted the city… their so-called places of worship are in fact centres of conspiracies against Muslims,” he said.

Kiani said that he had the ‘honour’ of ensuring the removal of Kalma Tayyeba from Darul Zikr, an Ahmadi worship place, at Garhi Shahu.

Advocate Badiuz Zaman, another speaker, told the participants not to befriend any Ahmadis. “Sharing utensils with Ahmadis is sinful,” he said, “Being friends with them is worse… the Holy Prophet (pbuh) disapproved of that.”

Zaman asked the participants to promise that they would do everything in their power to oppose Ahmadis in every way.

Stage Secretary Maulvi Muhammad Asghar urged the participants to take practical measures against the ‘blasphemers’. “How can you eat your meals in peace while there are Ahmadis living peacefully in your city?” he said. Asghar accused former Supreme Court Bar Association president Asma Jehangir of committing blasphemy, “That must be stopped at all cost,” he said.

Asghar also told the participants to stop consuming foods and beverages produced by Shezan. “They are made by Ahmadis. Buying these helps their movement against Muslims,” he said.

“There are 1,200 Ahmadis currently fighting for the Israel Defence Forces,” Asghar said, “They torture innocent Muslim Palestinians… Muslims shouldn’t even shake hands with Ahmadis.”

Sahibzada Syed Ibrarul Hasan Shah was also critical of the Ahle Hadith.

He said, “I don’t know why they think they are the ‘thekedars’ (guardians) of Khatam-i-Nabuwat … they don’t even have the proper respect for the Holy Prophet (pbuh).”

The head of Jamia Naeemia said that according to the law, Ahmadis could not call themselves Muslims or preach their faith. They could also not call their places of worship mosques, but did.

The state should take action against them for violating the law, he said. “All schools of Islamic thought agree that Ahmadis are not Muslims,” he said.

Several people recited poems insulting Ahmadis and their religious leaders.

Mufti Haseeb Qadri, another speaker, regretted the language and criticised the conference organisers. “There should be some difference between the language used in the streets and a conference in a religious seminary,” he said, “The speakers should not have used indecent language. They should have focused on the subject.”

Munawar Ali Shahid, a member of the Ahmadiya community told The Express Tribune that the Anti-Ahmadi campaign was making their lives difficult.

He said the community in Lahore feared for their lives. “Many Ahmadi businessmen have left the city… instead of curbing such hateful speech the government provides these people security,” Shahid said.