Followers

Sunday, February 23, 2014

'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை!



கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெயரில் படிப்பறிவில்லா மக்களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத்தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண்களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆலயங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை காரணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது. கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது.

போராடும் உளியம்மா

இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளியம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிரபலங்களின் தலையீடு காரணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மாவிற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டேசன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும் சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க்கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சாட்டை! சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன்றும் தொடரும் இந்த அவலத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;

இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என்பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவதைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது. சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறோம். சமூகத்தில் பெண்கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன்றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும் தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அவரின் வார்த்தை உண்மையானது.

இப்பொழுதுள்ள கருநாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவுவாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி: விடுதலை

23-02-2014

இந்த காலத்திலும் இப்படி ஒரு கொடுமையை அரங்கேற்றுவார்கள். இதற்கு வக்காலத்து வாங்க படித்த மேதாவிகள் சிலர் வெட்கமின்றி பொது மேடையில் ஆதரித்து பேசுவார்கள். இந்த கொடுமைகளை கண்ட மனம் வெம்பி இஸ்லாத்தை ஒருவன் ஏற்றால் அவனையும் ஏசுவார்கள். இதுதான் யதார்த்தமாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது.




10 comments:

UNMAIKAL said...

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டுமென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) உள்ளிட்டவர்கள் இந்த தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள்.

பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பாக, பெரியாரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது.

பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், அன்றைய சென்னை மாகாணம் என்பது இன்றைய தமிழகம், ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள், ஒரிசா எல்லை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

அந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்துவந்தது. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலெட்சுமிதான், சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.

சட்டமன்றத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி, தேவதாசி முறையை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

இந்த மசோதாவைப் பற்றியும் அதனை நிறைவேற்றுவது பற்றியும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார்.

எனினும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

மசோதாவை எதிர்த்துப்பேசிய காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி ஐயர் , “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் முத்துலெட்சுமி சத்தியமூர்த்தியைப் பார்த்து, “ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றால், அதை ஒரு சமுதாயத்துப் பெண்கள்தான் செய்ய வேண்டுமா? அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? இதுவரை எங்கள் சமூக மோட்சம் பெற்றது போதும். இனி உங்கள் குலப்பெண்கள் தேவதாசிகளாக இருந்து மோட்சத்தை அடையலாமே? என்று சத்தியமூர்த்தியைப் பார்த்து சட்டமன்றத்தில் சத்தமாகக் சூடாகக் கேட்டார்.

UNMAIKAL said...

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது.

சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம்.

படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது.

இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம்.

இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் தேவதாசி முறை நின்று நிலைபெற்று வருகின்றது.

கர்நாடக மாநிலம் இதற்கு நல்ல உதாரணம். கடவுளின் பெயரால் இடம்பெறுகின்றது இப்பாலியல் தொழில்.

பெல்காம் மாவட்டம் சோந்தத்தி,கொக்கனூர் கிராமஙகளில் தேவதாசி சடங்குகள் ரகசியமாக நடத்தப்பட்டு சிறுமிகள் தேவதாசிகளாக மாற்றப்படுகிறார்கள்.
சிறுமிகளை தெய்வத்திற்கும்(தேவி,கோவிலுக்கும்சமர்பணம் செய்யப்படுகிறார்கள் என்ற பெயரில் நடைபெறும் ஆச்சார சடங்குகளே தேவதாசி சடங்கு என்று அழைக்கப்படுகிறது.

சில பிரத்யேக சடங்குகள் செய்யப்பட்டவுடன் அந்த சிறுமிகள் தேவதாசிகளாக கருதப்படுகிறார்கள்.
ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள் , நகரத்திலும் ஊரிலும் பணம், செல்வாக்கு ஆகியன உள்ள பெரிய மனிதர்கள் போன்றோருக்கு இச்சிறுமிகள் சேவையாற்றுதல் வேண்டும். பாலியல் திருப்தியை கொடுக்க வேண்டும்.

இது தெய்வத்துக்கு செய்கின்ற திருத்தொண்டாகவே கொள்ளப்படுகின்றது.

சிறுமிகளுக்கு கருப்பு நிறத்திலுள்ள உத்திராட்ச மாலை அணிவித்து கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் கலநது கொள்ளவைக்கப்பட்டு ஆச்சார சடங்குகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அந்த சிறுமிகள் தேவதாசிகளாக அறிவிக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டும் அவலமும் நிலவுகிறது.

தேவதாசிகளாக மாற்றப்படும் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த மும்பையில் இருந்தும் கோவாவில் இருந்தும் பல்வேறு ‘செக்ஸ் ராக்கெட்’ சங்கங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த கிராமத்திற்கு வருகை தருகிறார்கள். செக்ஸ் ராக்கெட் சங்கங்கள் சிறுமிகளை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.

கர்நாடகத்தில் மாத்திரம் வருடாந்தம் 23000 பெண்கள் தேவதாசிகளாக உடலை விற்கின்றனர். கடவுளின் அடிமைகள் என்றும் தேவதாசிகள் அழைக்கப்படுகின்றனர்.

தற்போதைய கர்நாடக அரசின் இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்றியதனை ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை மேற்கொண்டு வரும் வேளையில் அவர்களின் எதிர்ப்புகளை கடந்து அரசு துணிவுடன் இச் சட்டத்தினை அமுல்படுத்தினால் தேவதாசி கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விடும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இதேவேளையில் புனேயில் மூட நம்பிக்கைகளை தடை செய்ய வேண்டும் என்று பலவருடங்களாக போராடி வந்த சமூக ஆர்வலர் நரேந்திர தாபோர்கரை சங் பரிவார் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.

காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் இன்றும் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை மறைமுகமாகப் பின்பற்றப்பட்டு ஒரு சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

UNMAIKAL said...

தேவதாசி முறையைப் பற்றி ய சில கலை ஆர்வலர்களின் கருத்துக்கள் இதுப்பொன்றவைதான். PART 1.

16 வயதே நிரம்பிய ரூபா தேவதாசி முறையில் கர்நாடகாவின் எல்லம்மா கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். அவர் சொல்கிறார், "11வயதில் நான் பருவத்திற்கு வரும் முன்பே என் கன்னித்தன்மையை அர்ப்பணித்துவிட்டேன். முதல் முறை மிகவும் வலிதருவதாக இருந்தது. என்னுடன் இரவைக் கழித்தவர் ரேசர் ப்ளேடுகளால் என் பிறப்புறுப்பில் கீறலகளைப் போட்டார். இப்போது எனக்கு பழகிவிட்டது". இது 'ஒரு' தேவதாசியின் கதை.

இந்தியக் கோவில்களின் வரலாறு நெடுகே கோடிக்கணக்கான ரூபாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புறுப்புகளும், உடல்களும் உயர்சாதி ஆண்களால் பொழுதுபோக்கு மைதானங்களைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஆழமாய்த் தேடினால், தேவதாசிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நெஞ்சை உறைய வைப்பதாக, கண்ணில் நீர் தழும்ப வைக்கும் கொடூரத்துடனேயே இருக்கின்றன.

இந்தியாவெங்கும் தேவதாசிகள் உருவானது புத்தமதம் அழிந்தபின்புதான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

புத்தமதம் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டு சைவ-வைணவம் தழைத்தோங்கத் துவங்கிய காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும், குறிப்புகளிலும் தேவதாசிகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, புத்த துறவிகளாக இருந்தப் பெண்களை தேவதாசி முறையில் விபச்சாரப் பெண்களாக அக்காலத்திய சைவ-வைணவ புரோகிதர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கினார்கள் என்ற தகவலும் உள்ளது.

ஜைன மதத்துறவிகளையும், புத்தமதத் துறவிகளையும் (ஆண் துறவிகளை) கழுவிலேற்றும், கொதிக்கும் சுண்ணாம்பில் எறியும் காட்சிகள் புடைப்போவியங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் உள்ளதை இன்றும் காணலாம்.

இப்போது பெண் துறவிகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியையும், மேலே சொல்லப்பட்டுள்ள புத்தமத வீழ்ச்சியின் காலத்தையும், தேவதாசி முறையின் துவக்கத்தையும் ஒன்றிணைத்தோமானால் நமக்கு பதில் எளிதில் கிடைத்துவிடுகிறது.

இப்படித் தோன்றிய இந்த முறை பின் வழிவழியாக தொடர தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் ஏழைக் கூலிகள், விவசாயிகளின் குழந்தைகளான இவர்கள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டிருக்கிறார்கள். ராஜராஜசோழனின் காலம் பார்ப்பனர்களுக்கும், அரசகுடும்பங்களுக்கும் பொற்காலமாக விளங்கியதேயொழிய ஏழைகளுக்கும், சாதிய படிமத்தில் கீழே இருந்தவர்களுக்கும் அல்ல.

பார்ப்பனர்களுக்கு கிராமம் கிராமமாக அள்ளிவழங்கிய சோழர்கள்தான் வண்ணார்களின் சலவைக்கல்லுக்கு வரி விதித்த கேலிக்கூத்தையும் செய்தார்கள். பெண்களை உடன்கட்டை ஏறச்செய்வது, வர்ணாசிரம தர்மத்தை முறைப்படி கடைபிடிப்பது, தாழ்த்தப்பட்டோர் பள்ளங்களிலும், உயர்சாதியினர் மேடான இடங்களிலும் வாழவேண்டும் என உத்தரவிட்டது, பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்று ஏழைகளைப் பிரித்து தனிச்சேரிகளில் வைத்தது என ராஜராஜசோழன் நிறுவனமயமாக்கிய அசிங்கங்கள் ஏராளம், ஏராளம். அவன் ஆரம்பித்து வைத்த அவளங்கள் தான் இன்னும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. இதைப் பற்றிப் பேசினால் தனிப்புத்தகமே வேண்டுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஏழைக் குடும்பப் பெண்களை கடவுளின் பேரால் விபச்சாரிகளாக மாற்றியாகிவிட்டது. இப்போது இழப்பீடு வழங்கவேண்டுமல்லவா? அப்போதுதானே தொடர்ந்து தேவதாசியாக பெண்கள் வருவார்கள்! அதற்காக சோழர் காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரிசு நிலங்களை தேவதாசிகளுக்கும், விளைநிலங்களை பூசாரிகளுக்கும் ஒதுக்கிய பாரபட்சமும் நிகழ்ந்தேறியுள்ளது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது கோவில் நகைகளை அணிந்து இவர்கள் ஆடியிருக்கின்றனர். பின் கால ஓட்டத்தில் உடலுக்கு காசு என்ற அளவில் இந்த மரியாதை சுருங்கியது தனிக்கதை.

இப்படி வழிவழியாக கோவிலில் தேவரடியார்களாக இருக்கும் இப்பெண்களின் ஆண் குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகளைக் கற்று கோவிலிலேயே பணி செய்திருக்கிறார்கள். விபச்சாரம் ஒழிந்துவிட்டாலும் இன்னமும் கோவில்களில் இசைப்பணி புரியும் சமூகத்தவர்கள் இவர்கள் வழி வந்தவர்களே.

தேவதாசி முறை குறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்று, ஆளும் வர்க்கம் மற்றும் கடவுளை முழுதாய் கையில் வைத்திருந்த (வைத்திருக்கும்) பார்ப்பன வர்க்கத்திற்கும் நிலவிய காமத்தேவைக்கு வடிகாலாக தேவதாசி முறை பயன்பட்டதாகவும், அதன்காரணமாக தங்களிடமிருந்த கடவுள் மற்றும் மதத்தை பயன்படுத்தி தேவதாசி முறையை தோற்றுவித்தனர் என்றும் தெளிவாகத் தெரிவிக்கிறது.- DON ASHOK

Continued…..

UNMAIKAL said...

தேவதாசி முறையைப் பற்றிய … PART 2.

இதில் ஈடுபடுத்தப்பட்ட அத்துணை பெண் குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட சாதியை, சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூத்திர ஆண்கள் மனுதர்மப்படி தீண்டப்படக்கூடாதவர்கள், ஆனால் காமத்தில் ஏது தீண்டாமை? எல்லாவற்றுக்கும் தான் மனுதர்மத்தில் பரிகாரமும் இருக்கிறதே!!!

இப்படி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார்கள் அங்கேயே பகல் நேரத்தில் ஆடல், பாடல்களைக் கற்று இரவு நேரங்களில் விபச்சாரம் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள்.

இந்தத் தொழிலில் வரும் வரும்படியில் ஏழ்மையில் உழலும் தங்கள் குடும்பத்தைக் காக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லம்மா தெய்வத்திற்கு இன்னமும் பெண் குழந்தைகள் தேவதாசிகளாக நேர்ந்துவிடப்படுகிறார்கள்.

ஏழ்மையான சூழ்நிலையில் இப்படி ஆக்கப்படும் குழந்தைகள் தங்கள் உடலை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஏழு, எட்டு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் ஓரவிற்கு உடல் ஒத்துழைக்கும் வரை இத்தொழிலைச் செய்துவிட்டு 45வயதிற்கு மேல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கத் துவங்கிவிடுகிறார்கள்.

அரசால் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட பழக்கமாக இருந்தாலும், கோவில் பூசாரிகள் இன்னமும் இச்சடங்குகளைச் செய்து பெண்களை தேவதாசிகளாக அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலும் தேவதாசிகளாக தங்கள் குழந்தைகளை ஆக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விபச்சாரம்தான் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தும், கடவுள்-மதம் எனக் காரணங்களைச் சொல்லி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பல நேரங்களில் பச்சிளங்குழந்தைகள் கூட நேர்ந்துவிடப்படுகின்றன. இந்த குழந்தைகளை அங்கு ஏற்கனவே இருக்கும் ஜோகினிக்கள் (தாசிகள்) வளர்த்து, ஏழெட்டு வயதிலேயே படுக்கையறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்திய தேவதாசி முறை குறித்து எழுதியிருக்கும் ஜோகன் ஷங்கர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இம்முறைக்கான மூலகாரணம் அக்காலத்திய புரோகித சமூகம் (பார்ப்பன சாதி) ஏனைய சமூகங்களை தனக்குக் கீழாக எப்போதும் வைத்திருக்க வேண்டுமென்பதால் அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம் உருவாக்கியதே தேவதாசி முறை ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள்.

சாதி அடுக்கை காப்பாற்றும் அதே நேரம், காமவேட்கையையும் தீர்த்துக்கொள்ளும் முறையாகவே இது இருந்திருக்கிறது. கடவுளின் மனைவிகள் என நேர்ந்துவிடப்பட்டப் பெண்களை உயர்சாதி மனிதர்கள் மாறி மாறி புணர்ந்ததை கலாச்சார வளம் பொருந்தியதாய் பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நகைமுரண்.

தேவதாசி முறைக்கு எதிராக பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இந்தியாவில் 2.5லட்சம் மேலான தேவதாசிகள் இருக்கிறார்கள் என இந்திய பெண்கள் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திராவில் 16,625 தேவதாசிகளும், கர்நாடகவாவில் 22,941 தேவதாசிகளும், மஹராஷ்ட்ராவில் 2479 தேவதாசிகளும் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் ராஜராஜசோழனால் முழுவீச்சில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவதாசி முறை இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. இதில் பெரியார், முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரது பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இப்படி சாதியின் பேரால், கடவுளின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அசிங்கமான வழக்கத்தை பரதத்தில் பட்டம் பெற்ற சிலர் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அந்த முறை எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்திருந்தால் நாம் காஞ்சிகாமகோடி போன்றோரின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியதில்லையே என அவர்கள் உள்ளுக்குள் நினைத்தார்களோ என்னவோ!!

எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஊரில் மிகப்பெரிய கெட்டவார்த்தையாக கருதப்படுவனவற்றில் முக்கியமான ஒன்று "தேவடியா மகனே" என்பது. ஒருவேளை தேவரடியார்கள் நம் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன், வளத்துடன் நடத்தப்பட்டிருந்தார்களேயானால் அவர்களின் பெயரில் எப்படி ஒரு கெட்டவார்த்தை உருவாகியிருக்க முடியும்?

இன்று தேவதாசி முறையை போற்றிப்புகழக் கிளம்பியிருக்கும் மேட்டுக்குடி கூட்டத்தை நாம் "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவடியா மகன்களே.. தேவடியா மகள்களே" எனக் குறிப்பிட்டால் பொறுத்துக் கொள்வார்களா?

விபச்சாரம் புனித விபச்சாரமாக சித்தரிக்கப்பட்டாலும் விபச்சாரம், விபச்சாரம் தானே! இல்லை அது புனிதம் தான் என்றால் அந்தத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கும் மேட்டுக்குடி கலை ஆர்வலர்கள் உடனடியாக அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்களை தேவதாசிகளாக பதிவுசெய்துகொண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம். - DON ASHOK


Ref: http://donashok.blogspot.com/2013/07/blog-post_30.html

UNMAIKAL said...

நம் நாட்டின் குழந்தைகள் பாலியல் கொடுமை.

நம் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம் குழந்தைகள் உள்ளனர். இதில், 150 கோடிக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், 5 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், ஆசியக் குழந்தைகள் ஆணையம், குழந்தைகள் தகவல் தொடர்பு மய்யம் ஆகியன ஆய்வு செய்து மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் மேலே உள்ள விவரங்கள் உள்ளன.

மும்பையில் 70 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்தியப் பெண்கள் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவிகிதம் பெண்கள் சிறுவயதில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.

இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தைகளிடம் தவறாக நடந்துள்ளார்கள்.

சென்ற 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் வன்முறையில் டில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டா மிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் கணக்கெடுத்து வாட்ச் டாக் இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கொடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 33.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Anonymous said...

இஸ்லாத்தில் நான்கு திருமணங்கள் செய்யலாம். ஆனால் ஹிந்து காபிர் திருமண சட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்திதான்.

மணைவி நோயாளியாகி விட்டாலோ இல்லை எதோ காரணத்தால் அவளுடன் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க முடியாத நிலை வந்துவிட்டாலோ, ஒரு ஹிந்துவால் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. அவருக்கு ஒரே வழி யாரையாவது வப்பாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

கோயில் பூசாரி, சங்கராச்சாரி போன்ற தரும நியதிகளுக்கு கட்டுப்பட்ட பிராமணரால் ஆசை நாயகி வைத்துக் கொள்ள முடியாது. தேவதாசி அமைப்பின் மூலம் தாங்க முடியாத விரகதாபத்தை கோயில் வளாகத்திலேயே தணித்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு வழி கிடைக்கிறது.

தேவதாசி முறை அழிக்கப்பட்டதால்தான், நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் பெருகி விட்டன. குடும்பப் பெண்கள் தைரியமாக நடமாட வேண்டுமானால், தேவதாசிகளுக்கு சட்ட பூர்வமான பாதுகாப்பு, மாத சம்பளம், பென்ஷன், வீடு போன்றவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்பதை விட்டால், ஹிந்துக்களுக்கு வேறு வழியில்லை.

காபிருக்கு காபிர் வழி, முசல்மானுக்கு முசல்மான் வழி. பிரச்னையென்ன?

Anonymous said...

ஹிந்து கல்யாணங்களில் சொல்லப்படும் "மாங்கல்யம் தந்துனானே , மம ஜீவன ஹேதுனா" என்கிற மந்திரத்துக்கு இதுதான் அர்த்தம்.

இதில் மணமகளை பார்த்து ஐயர் சொல்லும் மந்திரமாவது.. "முதலில் நீ பிரம்மனுக்கு மனைவியாகவும், பிறகு சூரியனுக்கு மனைவியாகவும் இருந்தாய். பின் சந்திரனுக்கு மனைவியாகவும் , இந்திரனுக்கு மனைவியாகவும் இருந்தாய் . பிறகு மனுவுக்கு மனைவியாகவும் , இந்த நாட்டு அரசனுக்கு மனைவியாகவும் இருந்தாய், பிறகு என் போன்ற பிராமணனுக்கு மனைவியாக இருந்து, இதோ இப்போது உன் பக்கத்தில் இருக்கும் இந்த சாதிக்காரனுக்கு மனைவி ஆகிறாய்".

அதாவது ஐயரை வைத்து திருமணம் செய்துக் கொள்ளும் ஒருவன் அவனுடைய மனைவிக்கு எட்டாவது கணவன் என்று ஆகிறது. உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவிக்கு எட்டாவது கணவன் ? ஒவ்வொருவராக சொல்லுங்கள் .

Anonymous said...

//காபிருக்கு காபிர் வழி, முசல்மானுக்கு முசல்மான் வழி. பிரச்னையென்ன?//


கண்டிப்பாக எந்த பிரச்சினையும் இல்லை, முசல்மான் அந்த அவனது வழியை மட்டும் பின்பற்றும் வரை. இது காபிர் தேசம், இதை அல்லாவின் தேசமாக மாற்ற வேண்டும் என்று இங்கே மத மாற்ற ஈன வேலைகள் செய்யும்போது தான் பிரச்சினை துளிர் விடுகிறது. காபிர்களும் எல்லா காலத்திலும் பொறுத்து கொண்டு இருக்க மாட்டார்கள் அல்லவா?

Anonymous said...

//ஒரு ஹிந்துவால் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. அவருக்கு ஒரே வழி யாரையாவது வப்பாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.//


யுவன் சங்கர் எதற்கு மதம் மாறினார் என்பது இப்போது தெளிவாகிவிட்டதே, வெளியில் சொல்லும்போது இந்த காரணத்தை சொல்லவா முடியும். கொள்கை, வாழ்க்கை நெறி, என்று வாயில் வந்ததை கூறி கொள்ள வேண்டியது தான்

Anonymous said...

//யுவன் சங்கர் எதற்கு மதம் மாறினார் என்பது இப்போது தெளிவாகிவிட்டதே,//
-----

சரி போனதையே பற்றி 1400 வருடங்களாக புலம்புவதைத் தவிர ஹிந்து மதத்தை சீர்திருத்த முடிந்ததா உங்களால்?.

52 சதவீத தலித்துக்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால், அனைவரையும் தேவர், முதலியார், ஐயர், ஐயங்கார், கவுண்டரென்று உயர்ஜாதிக்கு மாற்றிவிடுங்கள். உங்களுடைய கடவுள்கள் கண்ணன், முருகன் போல் ஹிந்துக்கள் பலதார மணம் செய்யலாமென ஹிந்து திருமண சட்டத்தை மாற்றுங்கள். இல்லாவிட்டால், கூடிய சீக்கிரம் உங்கள் பாரதமாதாவை புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பி விடுவோம்.

முழு மாட்டை முசல்மானுக்கு தாரைவார்த்து விட்டு மாட்டு மூத்திரம் குடிக்கும் இந்த காபிர்களை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா புரியவில்லை.