Followers

Saturday, February 22, 2014

நூறு அனாதை இளைஞர்களுக்கு திருமண உதவி!



நமது இந்திய நாட்டில் பெண்களுக்கு திருமண உதவிகளை செல்வந்தர்கள் செய்வதைப் பார்த்திருப்போம். பெண்ணைப் பெற்ற தகப்பன் கோவில், பள்ளிவாசல், சர்ச்களில் 'எனக்கு நான்கு பெண் குழந்தைகள் திருமணம் முடிக்கும் வயதில் உள்ளார்கள். நான் பரம ஏழை. எனவே எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்' என்று சுய மரியாதையை விட்டு பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் இந்த விஷயத்தில் அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக உள்ளனர். வரதட்சணையை வாங்கி அனுபவிப்பதில் ஆணைப் பெற்ற பெற்றோருக்கு அவ்வளவு அலாதி பிரியம். திருமணத்துக்கு பிறகும் கூட இந்த கொடுமை தொடர்ந்து வருகிறது. வரதட்சணை பிரச்னையால் பெண்களை உயிரோடு கொளுத்தும் மாபாவிகளும் நமது இந்திய தேசத்திலே நிறைய உண்டு.

இந்து மதத்தில் வரதட்சணை ஒரு பாவமாக சொல்லப்படாததால் அதனை சர்வ சாதாரணமாக வெட்கமில்லாமல் கேட்டே வாங்குகின்றனர். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துக்களைப் பார்த்து காப்பி அடித்து 'எனக்கு வீடு தா: கார் தா: நிலம்தா: நகை தா' என்று வெட்கமில்லாமல் கேட்கிறான். குர்ஆனில் இறைவன் பெண்களுக்கு மஹராக ஒரு பெரும் தொகையை கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறான். அந்த தொகையை நிர்ணயிக்கும் பொருப்பையும் அந்த பெண்ணிடமே தருகிறான் இறைவன். இந்த குர்ஆன் வசனம் சவுதியில் அனைத்து குடும்பங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 20 வருடங்களாக தவ்ஹீத் ஜமாத்தின் அயராத பிரசாரத்தால் இஸ்லாமியர்களிடத்தில் தற்போது சவுதியைப் போல் ஒரு பெரும் தொகையை மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் வழக்கம் பரவலாக நடைபெறுகிறது.

பணக்கார நாடான சவுதியில் ஒரு இளைஞன் திருமணம் முடிக்க குறைந்தது இரண்டு லட்சம் ரியாலாவது வேண்டும். கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 26 லட்சம் வரும். வசதியுடைய பெற்றோருக்கு பிறந்த இளைஞர்களுக்கு தகப்பனின் பணத்தைக் கொண்டு மஹர் கொடுக்கப்பட்டு திருமணம் முடிக்கப்படும். நான்கு சக்கர வாகனம், பெண்ணுக்கு நகை, வசிக்க வீடு, அந்த வீட்டில் அனைத்து பொருள்களையும் மணமகனே சேர்க்க வேண்டும். ஒரு சாதாரண சவுதி இளைஞன் இந்த பொருளாதாரத்தை திரட்டி முடிக்கும் போது அவனுக்கு 40 வயதை தாண்டியிருக்கும். இதை பரவலாக நாம் சவுதியில் பார்க்கலாம். இதனால் சில சவுதி இளைஞர்கள் வெளி நாட்டு பெண்களை திருமணம் முடிப்பதும் ஆங்காங்கே நடக்கிறது.

அரசாங்கம் இது போன்ற ஏழை மணமகன்களுக்கு மான்யமாக தொகைகளை அள்ளி வழங்குகிறது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் நட்சத்திர ஹோட்டலான 'ஹாலிடே இன்னில்' சென்ற வியாழக்கிழமை வறுமையில் வாடும் 100 அனாதை இளைஞர்களுக்கு கூட்டாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 'இன்சான்' என்ற தொண்டு நிறுவனம் இந்த இளைஞர்களுக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தது. ரியாத் கவர்னர் ஹாலித் பின் பந்தர் தலைமையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்த திருமண தம்பதிகளுக்கு பல பரிசுப் பொருட்களும் பலராலும் அளிக்கப்பட்டது. நட்சத்திர ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டனர். 'அல்ஹொகைர்' குரூப் இதற்கான ஸ்பான்சரை செய்தது.

'இன்சான்' என்ற இந்த தொண்டு நிறுவனம் இது வரை 41000 அனாதைகளுக்கு புனர் வாழ்வு அளித்துள்ளது. இந்த அமைப்பு செய்து வரும் நலத்திட்டப பணிகளை விளக்கும் டாகுமெண்டரி குறும்படம் ஒன்றும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இந்த நிறுவனம் புது திருமண தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பிறகு மணமக்கள் எவ்வாறு புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான கவுன்சிலிங்கை இஸ்லாமிய பாடங்களோடு நடத்துகிறது.

உம் அப்துல்லா என்ற பெண்மணி கூறும்போது 'எனது மகனுக்கு தந்தை இல்லை. அவனுக்கு சரியான வருமானமும் இல்லை. எனது மகனின் கனவை நனவாக்கிய இந்த நிறுவனத்துக்கு நான் நன்றி கூறுகிறேன்' என்றார்.

ஹாமத் அல் தோஸ்ரி என்ற மணமகன் கூறும் போது 'மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணத்துக்காக முயற்சி செய்தேன். திருமண செலவு, எனது கனவை தள்ளிப் போட வைத்தது. தற்போது எனது துணைவியை தேர்ந்தெடுத்துள்ளேன். எனது கனவு நனவாகியுள்ளது. இனி எனது வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்' என்றார்.

ஃபஹத் அல் கப்பானி என்ற மணமகன் கூறும்போது ''இன்சான்' எனக்கு திருமணத்தை மட்டும் நடத்தி வைக்கவில்லை. திருமணம் என்றால் என்ன? அது நமது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ணும்: இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்ற உண்மையையும் எனக்கு விளக்கியுள்ளார்கள்' என்கிறார்.

தனது ஒரு திருமணத்தை முடிக்கவே இத்தனை சிரமங்களை இந்த இளைஞர்கள் அனுபவிக்கிறார்களே! ஆனால் நமது நாட்டில் மூன்று நான்கு பெண் குழந்தைகளை பெற்ற வறிய தகப்பனிடம் இறைவனின் பயம் இல்லாமல் வரதட்சணை கேட்கிறோமே! கொஞ்சமாவது கேட்பவர்களுக்கு மனசாட்சி இல்லையா?

இதனை படிக்கும் திருமணம் ஆகாத இளைஞர்களே! உங்கள் திருமணத்தை மஹர் கொடுத்து முடிக்கிறேன் என்று சபதம் எடுங்கள். இறைவன் உங்களின் வாழ்வை வளமாக்குவான்!

தகவல் உதவி

அரப் நியூஸ்
22-2-2014

7 comments:

Anonymous said...

மற்ற வலைத்தளங்கள் போல், லேட்டஸ்ட் கமெண்ட்ஸ் பார்க்கும் வசதியிருந்தால் நன்றாயிருக்கும்.

Anonymous said...

26 அட்டை பெட்டிகளில் 625 கிலோ எடையுள்ள பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் பறிமுதல்.

செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேனை போலீசார் வழிமறித்து சோதனையிட்டதில் பெரும் நாசத்தை விளைவிக்கும் பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்டுள்ளது.

வேன் டிரைவர் ஜெயவேலு (வயது 32) மற்றும் வேனில் இருந்த ஆரணியை சேர்ந்த டெல்லி ராமு (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்- மாலைமலர்.

அவர்கள் இரண்டு பேரும் பத்திரிகை தர்மத்தில் பயங்கரவாதிகள் அல்ல இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் அவ்வளவு தான்.

அந்த இருவரும் பெரும் கேடு விளைவிக்கக் கூடிய பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்களை எதற்கு எடுத்துச் சென்றார்கள் ?. இவ்வாறு எடுத்துச் சென்றவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா ?. இவர்களை ஏன் பயங்கரவாதிகள் என்று மாலைமலர் எழுதவில்லை ?.மாலை மலரின் மலைக்கண் பார்வையில் இவர்கள் அஹிம்சாவாதிகளா ?.

முஸ்லீம்கள் என்றால் ஒரு பார்வை , ஹிந்துக்கள் என்றால் ஒரு பார்வை என்ற நிலை போலிஸ் துறையிலிருந்தும், நீதித் துறையிலிருந்தும், பத்திரிகை துறையிலிருந்தும், துடைத்தெறியப்படாத வரை இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது.

ஏன் என்றால் ? ஹிந்து முஸ்லீம்கள் மத்தியில் கலவரம் உருவாக பல வழிகளில் அன்றைய ஆங்கிலேய அரசு நாட்டின் பிரிவினைவாதிகளான Rss காரர்களுக்கு மிகவும் பக்க பலமாக திகழ்ந்தது என்பதற்கு ஒரு சான்று:

1837ல் பகதுர்ஷா அவர்கள் டில்லி அரியணையில் ஏரியதும், மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டீஷார் செய்த முயற்சிகள் பல. அதில் ஒன்று 1847ல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள் என்பதால் முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பானி கொடுப்பர் இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நாளை டில்லியில் இந்து, முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று எழுதினான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, இந்த வருடம் மட்டும் ''ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் மாடுகளை குர்பானி கொடுக்க வேண்டாம்'' என்று பிரகடனப் படுத்தினார் இதனால் கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது... ஆதாரம்: வீரசாவர்க்கர், எரிமலை. பக்கம்,58.

-Athirai Farook

Anonymous said...

நரேந்திர மோடி பிரதமராக எதிர்ப்பு!
பா.ஜ.க ஒரு கலவர கட்சி - மம்தா பானர்ஜி கடும் தாக்கு...

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கலவர சக்திகளின் கட்சியான பாஜவின் வேட்பாளர் மோடி பிரமராக கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனியார் டிவிக்கு மம்தா அளித்த பேட்டியில் கூறியதாவது, பாஜ ஒரு கலவர சக்திகளின் கட்சி. அது ஆட்சிக்கு வருவது கலவர சக்திகள் ஆட்சிக்கு வருவதற்கு சமம். எனவே மோடி பிரதமராக வரக் கூடாது. பாஜ ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று அல்ல. அதே போல் காங்கிரஸ் கட்சியும் பாஜவுக்கு மாற்று கிடையாது. பாஜ போன்ற கலவர கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றிவிட முடியாது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி கூட்டணி நிச்சயம் 42 இடங்களையும் கைப்பற்றும். மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து திரிணாமுல் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு திறமையும், செல்வாக்கும் உள்ள எத்தனையோ தலைவர்கள் பிரதமராக ஆவதற்கு தயாராக உள்ளனர். அடுத்த பிரதமர் யார் என்பதை ஜனநாயக முறையில்தான் முடிவு செய்ய வேண்டும். அதை தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள். இந்த தேர்தலில் பாஜவும், காங்கிரசும் பாதிக்கு பாதி சரிவடையும். முற்போக்கு சக்திகள்தான் முன்னுக்கு வரும்.இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் படுதோல்வி அடையும். எனவே 3-வது அணி என்ற பேச்சுக்கே அங்கே இடம் இருக்காது. இவ்வாறு மம்தா கூறினார்.

தினகரன்

Anonymous said...

வேண்டாம் சீட்

காயீதே மில்லத் சென்னை மாகாணத்தின் எதிர் கட்சித் தலைவராக இருந்த நேரம். அவர் விருந்து ஒன்றில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதைய காங்கிரஸ் கட்சி கல்வி அமைச்சரான அவினாசிலிங்கம் செட்டியார் பேச்சின் நடுவே எப்பபடியிருக்ககிறது உங்கள் மகனின என்ஜினீயரிங் படிப்பு என்று கேட்டார்.

காயிதே மில்லத்துக்கு ஆச்சரியம் . என் மகன் என்ஜினியரிங் படிப்பபது உங்களுக்கு எப்பபடித் தெரியும் ?" என்றார்.

எப்படித் தெரியாமல் போகும் ? அவருக்கு காலேஜ் சீட் கொடுத்ததே நான் தானே ? விண்ணப்ப படிவத்தில் அவர் உங்கள் மகன் என்று தெரிந்தது . பிறகு எப்பபடி அவருக்கு சீட் கொடுக்காமலிருப்பது ? " என்றார் அவினாசிலிங்கம்.

மறுநாள் காலையில் மகனை கூப்பிட்டு கல்லூரிக்குப் போகவேண்டாம் எனக் கூறிவிட்டார். உறவினர்கள் , நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.

நான் எதிர்க்கட்சி என்பதால் சீட் கொடுத்தேன் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப்பபட்ட தயவு நமக்கு வேண்டாம் " என்றார் உறுதியாக.

விஸ்வேஸ்வரன். திருநெல்வேலி

ஆனந்த் சாகர் said...

//இந்து மதத்தில் வரதட்சணை ஒரு பாவமாக சொல்லப்படாததால் அதனை சர்வ சாதாரணமாக வெட்கமில்லாமல் கேட்டே வாங்குகின்றனர்.//

இஸ்லாத்தில் பெண்ணுக்கு ஆண் வரதட்சிணை (மஹர்) கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனால் அரபு நாடுகளில் ஏழை ஆண்கள் திருமணம் செய்து கொள்வது கடினமாகிறது. அல்லாஹ் விதித்த இந்த முட்டாள்தனமான சட்டம் அரபு அடிமையான உங்களுக்கு பெருமையாக தோன்றுகிறது. பெண்கள் மட்டும் வெட்கமில்லாமல் ஆண்களிடம் வரதட்சிணை வாங்கலாம், அதில் வெட்கப்பட எதுவும் இல்லை என்ற உங்கள் வெட்கங்கெட்ட அரபு அடிமைத்தனத்திற்கு அளவே இல்லை.

// குர்ஆனில் இறைவன் பெண்களுக்கு மஹராக ஒரு பெரும் தொகையை கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறான். அந்த தொகையை நிர்ணயிக்கும் பொருப்பையும் அந்த பெண்ணிடமே தருகிறான் இறைவன். //

இஸ்லாத்தில் பெண்ணுக்கு ஆண் கொடுக்கிற வரதட்சிணை(மஹர்) என்பது அந்த ஆண் அந்த பெண்ணின் பெண்ணுறுப்பை அனுபவிப்பதற்கு கொடுக்கப்படும் தொகை என்பது இஸ்லாமிய கோட்பாடு. இதில் உங்களுக்கு ஏதாவது ஐயம் இருப்பின் உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இதை விட ஒரு பெண்ணை ஒருவன் எவ்வாறு அவமானப்படுத்த முடியும்? இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பு இதுதான். இந்த லட்சணத்தில் வரதட்சிணை தொகையை மணமகளே நிர்ணயிக்கும் பொறுப்பை அவளுக்கே அல்லாஹ் கொடுக்கிறான் என்று வெட்கமில்லாமல் பெருமை வேறு பேசுகிறீர்கள். என்ன மனிதர் நீங்கள் எல்லாம்?

Anonymous said...

/// இஸ்லாத்தில் பெண்ணுக்கு ஆண் கொடுக்கிற வரதட்சிணை(மஹர்) என்பது அந்த ஆண் அந்த பெண்ணின் பெண்ணுறுப்பை அனுபவிப்பதற்கு கொடுக்கப்படும் தொகை என்பது இஸ்லாமிய கோட்பாடு.... இதை விட ஒரு பெண்ணை ஒருவன் எவ்வாறு அவமானப்படுத்த முடியும்? ///
-----

ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவிய ஒரு சகோதரியின் நிக்காஹ்வில், அந்த பெண்ணுக்கு ஒரு வீடும், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கமும் மஹராக மணமகன் கொடுத்ததை பார்த்த அந்த பெண்ணின் ஹிந்து உறவினர்கள் வாயடைத்து போய்விட்டனர்.

அங்கே மணமக்களை வாழ்த்திய ஒரு ஹிந்து நன்பர், ஹிந்து சகோதரர்களைப் பார்த்து "பெண்ணை அடிமையாக்கி வரதட்சனை பிடுங்கும் இந்த கொடிய ஹிந்து மதத்தில் இனிமேலும் இருக்க விரும்புகிறீர்களா இல்லை பெண்ணைக் கண்ணியப் படுத்தி அவளுடைய உரிமைகளை காக்கும் இஸ்லாத்தில் சேர விரும்புகிறீர்களா" என கேட்ட போது அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

பகுத்தறிவுள்ள ஹிந்து சகோதரர்களை திருத்தி விடலாம். நீ எவ்வளவு சொன்னாலும் சரி, மாட்டு மூத்திரம்தான் குடிப்பேன், சிவனின் ஆணுறுப்பையும் பார்வதியின் யோனியையும்தான் வணங்குவேன் என அடம்பிடிக்கும் பகுத்தறிவு முடங்கிய காட்டுமிராண்டி காபிரை யாரால் திருத்த முடியும்?

Dr.Anburaj said...

செங்கொடி வலைதளத்தில் இவவேராடு விளையாடியிருக்கின்றேன்.
முஸ்லீம்கள் மத்தியிலும் வரதட்சணை உள்ளது என்பதை ஒத்துக் கொண்டபின் இவ்வளவு சல்லி அடிப்பினால் என்ன பயன் கிட்டும்.தாங்கள் பதிவு செய்த விசயங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்தது தானே. இசுலாம் என்ன ஏகபத்தினி விரதத்தையா போதிக்கின்றது. ஈராக்க சிரியா போன்ற நாடுகளில் உள்ள முஸ்லீம் அல்லாத எஸ“டி இன பெண்களை கடத்திச் சென்று ஐஎஸ்ராணுவ முகாம்களில் செக்ஸ் அடிமைப் பெண்களாக தேவதாசிகளாக வைத்துக் கொண்டது என்ன வகை? குரான் படித்தவன் .குரானை காக்கப்புறப்பட்டவன் கதையும் லட்சணமும் இதுதானே ? இந்துமதத்தில் பல உள்ளது. ஆனால் அனைத்தும் காலப் போக்கில் மாற்றப்படும் என்பதுதான் அங்குள்ள வாய்ப்பு.. 9 வயது ஆயிசாவை வயதிற்கு வரும் முன் திருமணம் செய்து அச்சிறுமியோமு பாலியல் உறவு வைத்துக்கொண்ட முகம்மதுவை விட மோசமானசெயல் ஏதும் இல்லை.
----------------------------------