Followers

Sunday, February 16, 2014

ஏ ஆர் ரஹ்மானுக்கு சில ஆலோசனைகள்!

உங்களின் முன்னேற்றத்தை கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று கூறும் அந்த தன்னடக்கத்தைக் கண்டு வியந்துள்ளேன். இளையராஜா, எம் எஸ் வி என்று பல மூத்த இசையமைப்பாளர்களை மேடையில் சந்தித்தாலும் இதுவரை அவர்களின் கால்களில் விழுந்ததில்லை. சுயமரியாதைக்காரர். இறைவனுக்கு மட்டுமே எனது தலை சாயும் என்ற கொள்கையுடையுவர். கடவுள் ஸ்தானத்திற்கு உங்களை சிலர் மேடையில் உயர்த்திய போது அதனை கடுமையாக அங்கேயே எதிர்த்தவர். காலை நேர தொழுகை தவறி விடக் கூடாது என்பதற்காக ஒலிப்பதிவை இரவு முழுக்க வைப்பவர். ஐந்து வேளை தொழுகையை தவறாமல் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்துபவர். மாற்று மதத்தவர்கள் மத்தியில் அதிகம் வேலை செய்தாலும் அனைவருடனும் எந்த முறுகலும் இல்லாமல் அன்போடு அனைவரையும் அரவணைத்து செல்பவர் என்று உங்களின் நல்ல செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு நல்ல செயல்களுக்கு சொந்தக்காரரிடம் சில குறைகள் இருப்பதை நான் அறிவதால் அதனை ஞாபகப்படுத்தும் முகமாக இந்த பதிவிலே சில குறைகளை பதிக்கிறேன்.

மனிதர்களுக்கு தலை வணங்காத நீங்கள் இறந்து விட்ட ஒரு சில அடியார்களின் சமாதிகளில் உங்கள் தலையை சாய்க்கிறீர்கள். நாகூர் தர்ஹா, அஜ்மீர் தர்ஹா என்று அவ்வப்போது தர்ஹாக்களுக்குச் சென்று உங்களின் வணக்கத்தைச் செலுத்துகிறீர்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமான செயல். முகமது நபி கூட 'தனது அடக்கஸ்தலத்தில் யாரும் பிரார்த்தனை செய்ய வர வேண்டாம். இறைவனிடம் மட்டுமே தொழுது கேளுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த சமாதி வழிபாடு என்பது ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாய மன்னர்கள் அதிகம் பேர் ஷியாக்களாக இருந்ததால் நகர் வலம் வரும் போது ஆங்காங்கு உள்ளவர்கள் ஏதேனும் ஒரு சமாதியைக் காட்டி அரசர்களிடம் இனாமாக நிலங்களை பெறுவார்கள். இது ஒரு மறைமுக வியாபாரமாக அந்த காலத்தில் நடந்தது. அடங்கியிருப்பவர் நல்லவரா கெட்டவரா என்பது கூட பலருக்கு தெரியாது.

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை இறைவன்தான் முடிவு செய்ய முடியும். மேலும் குர்ஆனில் பல இடங்களில் தனக்கு இணையாக சிறு தெய்வ வழிபாடு செய்பவர்களை இறைவன் கடுமையாக கண்டிக்கிறான். அந்த தவறை மன்னிக்கவே மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்கிறான். தொன்மையான இந்து மதம் சீரழிந்து அதன் உண்மை முகத்தை இழந்ததற்கு முக்கிய காரணம் சிறு தெய்வ வழிபாடே. இந்த சிறு தெய்வ வழிபாட்டை இந்துக்கள் எதிர்க்காமல் அனுமதித்ததால்தான் ஏக தெய்வ வணக்கம் நமது தமிழர்களிடத்தில் மறைந்து போனது.

இஸ்லாமிய வேத நூலான குர்ஆனும், இறைத் தூதரான முகமது நபி இது போன்ற தர்ஹா வணக்கங்களை தடை செய்திருப்பதாலும் இனி வரும் காலங்களில் தர்ஹா வணக்கங்களை தவிர்த்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து நேற்று உங்கள் தளத்தில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தீர்கள். அதன் வாசகமானது "Music can change the world" - Beethoven என்று வருகிறது. அதாவது 'இந்த உலகை மாற்றும் சக்தி இசைக்கு உண்டு' என்று சொல்கிறீர்கள். பீத்தோவன் என்ற இசைக் கலைஞருக்கு இந்த செய்தி உண்மையாக தோன்றியிருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் இவ்வாறு எண்ண மாட்டான். இந்த உலகை மாற்றிப் போடும் சக்தி இறை வேதமான குர்ஆனுக்குத்தான் உண்டு. இசை என்பது நமது வாழ்வில் ஒரு அங்கம் அவ்வளவுதான். இசையே வாழ்க்கையாகி விடாது. இசைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் அதற்கு சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது இஸ்லாம்.

உங்களின் நண்பர் யுவன் சங்கர் ராஜா சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றதை அறிவீர்கள். இசையை உருவாக்கி அதில் பல வெற்றியும் கண்டவர் யுவன் சங்கர். 100 படங்களுக்கு மேல் சொந்த இசையால் இளைஞர்களை கட்டிப் போட்டவர். ஆனால் அந்த இசையில் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவருக்கு மன அமைதியைக் கொடுத்தது குர்ஆனின் வசனங்கள் தான். அதனை அவரே பத்திரிக்கை பேட்டியில் சொன்னதை பார்த்தோம்.

'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28

மேற்கண்ட இறை வசனத்தின் மூலம் இறைவன் மன அமைதி பெறுவதற்கு இறைவனைப் பற்றிய நினைவை வழியாகக் காட்டுகிறான். இரு முறை அதனை அழுத்தமாக சொல்வதிலிருந்து குர்ஆனின் வார்த்தைகள்தான் ஒரு மனிதனின் மனதை அமைதிப் படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் தான் யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றம். எனவே நிரந்தர மன அமைதி இசையால் கிடைக்காது நம்மை படைத்த இறைவனின் வார்த்தைகளால்தான் கிடைக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அடுத்து உங்களின் புதிய ஹிந்தி படமான "HIGH WAY" ல் ஒரு பாடல் வருகிறது. "PATHKHA GUDDI" என்ற பாடலில் 'நாம் ரப்புகா நாம் சாயிகா அலி...அலி...அலி' என்று வருகிறது. இது பஞசாபி பாடல். நான் விளங்கிக் கொண்ட வகையில் முகமது நபியின் மருமகன் அலியை நினைத்து பாடுவதாக நினைக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் இம்தியாஸ் அலி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இதற்கு முந்தய படமான 'ராக்ஸ்டார்' லும் தர்ஹா வணக்கத்தை வலிந்து புகுத்தினார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதில் என்ன காட்சிகளை புகுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. ஷியாக்கள் கலீபா அலியை மிக உயர்த்தி அபுபக்கர், உஸ்மான் போன்ற கலீபாக்களை மட்டம் தட்டுவர். அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் என்று பொய்யுரைப்பர். தகவல் தொடர்பு அதிகம் இல்லாத அந்த காலங்களில் இஸ்லாமிய எதிரிகள் இடையில் புகுந்து முஸ்லிம்களுக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்கி விட்டனர். குர்ஆனிலோ நபி மொழிகளிலோ ஷியா என்ற வார்த்தையே கிடையாது என்பதிலிருந்து இவர்கள் புதிதாக உருவாகிய கூட்டத்தினர் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்த படத்தின் கதையின் நாயகன் அலி என்றும் அதனை பற்றி நீங்கள் பாடுவதாக இருந்தால் நமக்கு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் கலீபா அலியை உயர்த்தி நீங்கள் பாடுவதாக காட்சி அமைத்திருந்தால் இது போன்ற தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

அடுத்து இஸ்லாத்தை சொல்ல எத்தனையோ வழிகள் இருக்க சினிமாவை தேர்ந்தெடுக்க வேண்டாம். ஒரு தொழில் என்ற முறையில் அதில் ஈடுபடுங்கள். இஸ்லாமும் சில கட்டுப்பாடுகளோடு இசையை அனுமதிக்கிறது. இஸ்லாமிய கருத்துக்களை சொல்ல சினிமா பாடல்களை பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பதிவை உங்கள் இன் பாக்ஸிலும் இட்டுள்ளேன். நேரமிருப்பின் படித்து நேர் வழி பெற பிரார்த்திக்கிறேன்.

21 comments:

Mohamed ali said...

Iraivanin Ninaivaleye ullangal amaithi perum. dargavirku selvathu thozuvathurku kidaiyathu. avargalin
duavai peruvatharke.(dua enakkaka neengalum ketkalam)

suvanappiriyan said...

//Mohamed Khalith Faizal நல்ல அடியார்களுக்கு மரியாதை செலுத்துவது தவறு இல்லை நண்பரே அதே சமயம் ஜியாரத் பண்ணலாம் இணை வைக்க கூடாது//

அடங்கியிருப்பவர் நல்லடியார் என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்? நமது உறவினர்கள் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் பொது கபுர்ஸ்தானைத்தான் நாம் ஜியாரத் செய்து அங்குள்ளவர்களின் நலனுக்காக பிரார்த்திக்க வேண்டும். பொது கபுர்ஸ்தானுகளுக்கு சென்றால்தான் மறுமையைப் பற்றிய நினைவு நமக்கு வரும்.

ஆனால் தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களை நீங்கள் சென்றடைந்தால் பாட்டுக் கச்சேரி, நடனம், ஆண் பெண் உரசல், அந்த கபுரில் தலையை தாழ்த்தி சிர வணக்கம் புரிவது, அங்கு அடங்கியிருப்பவரிடமே உதவி தேடுவது என்பதெல்லாம் மார்க்கம் தடுத்த செயல்கள் தொடராக அரங்கேறுவதைக் காணலாம்.. எனவே தர்ஹாக்களுக்கு நாமோ நமது குடும்பத்தவரோ சென்றால் உண்மையை விளக்கி அவர்களை அன்பான போதனைகள் மூலம் நேர் வழிப் படுத்துவது நமது கடமை.

suvanappiriyan said...

//Mohamed Khalith Faizal இஸ்லாம் பற்றி நன்கு அறிந்தவர் இணை வைக்க மாட்டார்கள் நானும் தர்கா செல்வேன் யாருக்கும் தலை தாழ்த்த மாட்டேன் என்னை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர மூட பழக்க வழக்கம் தவிர்த்து தர்கா செல்ல இஸ்லாத்தில் தடையேதும் இல்லை நண்பரே யாசின் ஓதலாம் ஹதியா பண்ணலாம் தர்காவில் உள்ள ஆதரவு அற்ற மன நோயாளிகளுக்கு உதவலாம் உணவு அளிக்கலாம் அல்லா அவர்களுக்கு அளிக்கும் உணவை நீங்கள் அல்ல யார் நினைத்தாலும் தடுக்க முடியாது உங்கள் தஜக கொள்கை உங்களோட வச்சுகொங்க..!!//

யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும்,அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி.

உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.

நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312

எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.

கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக, “அபீமிர்சத்” என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம்

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.

இதற்கு பிறகும் நான் தர்ஹாவுக்கு போவேன். என்னை யார் தடுப்பது என்று கேட்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும்.

suvanappiriyan said...

//உங்கள் தஜக கொள்கை உங்களோட வச்சுகொங்க..!!//

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறுதான் கூறுகிறான்

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும்.அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் 2: 186)
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்குபதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமைஅடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம்புகுவார்கள்.
(அல்-குர்ஆன் 40: 60)

அல்லாஹ் என்ன கூறுகிறான் கேளுங்கள்

மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை.
(குர்ஆன் 35:22)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்¬லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக! (குர்ஆன் -10 : 18)

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், மதகுருமார்களையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்’.
(அல்குர்ஆன்-9:31)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39 : 3)

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சிததப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

(அல்குர்ஆன் 18 : 102)
நபிகள் (ஸல்) கூறினார்கள்
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும்கெட்டவர்கள்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி மற்றும்முஸ்லிம்.

suvanappiriyan said...

//உங்கள் தஜக கொள்கை உங்களோட வச்சுகொங்க..!!//

பிரார்த்தணை பற்றி இஸ்லாம்

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:

'நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன்;
ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை' என்று கூறி நீங்கள்அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹுல் புகாரி 6340

சப்போஸ்... பிரார்த்தித்து அது நிறைவேறவே இல்லை என்றால்... மறு உலகில் நன்மையாக அது நம்மை வந்தடையும். இவ்வுலகில் அது நமக்கு இல்லாமல் இருப்பதையே இறைவன் விரும்பி இருக்கிறான் என்று பொறுமையாக அமைதியாக இருக்க வேண்டும்.

விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில் அவனுக்கு இங்கேயே கொடுத்து விடுகிறோம், நாம் நாடுவதை! நாம் நாடுபவருக்கு மட்டும்!
( குர் ஆன் - 17: 18)

இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது எவ்வாறு?
இறுதியாக அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை பரிபூரணமாக்கி இனி இதுதான் மார்க்கம் என்பதை வரையறுத்துத்தந்தான்! ஆதாரம் வேண்டுமா? பாருங்கள் கீழே உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை!

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கிவிட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம்மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”
(அல் குர்ஆன் 5:3)

இனி, இதில் யாரேனும் தர்ஹாவை மட்டுமல்ல வேறு எதையேனும் புகுத்த இடமுள்ளதா..?

“(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்கு உரிய மற்றொருவரும் இருப்பதாக நீங்கள் சாட்சி கூற முடியுமா? என்று கேளும். அப்படி நான் சாட்சி கூற மாட்டேன் என்று நீரும் கூறும்” (அல்குர்ஆன்: 6:19).
لا اله الا الله محمد رسول الله

இதற்கு பிறகும் நான் தர்ஹாவுக்கு போவேன். என்னை யார் தடுப்பது என்று கேட்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும்.

Anonymous said...

முகமது நபி கூட 'தனது அடக்கஸ்தலத்தில் யாரும் பிரார்த்தனை செய்ய வர வேண்டாம்

என்பதற்கு ஆதாரம் தரவும் , உங்களை போன்ற முண்டங்களுக்கு வணக்கத்திற்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாத மடையர்கள் தான் நீங்கள் ஜியாரத் செய்வது கூடாது என்பதற்கு ஆதாரம் தந்து விட்டு அப்புறம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் மடையர்களே, எங்காவது நபி அவர்கள் என்னுடைய கபுரை ஜியாரத் செய்ய யாரும் வர வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்களா மடையர்களே ஆதாரம் தாருங்கள். யார் என்னுடைய கபுரை ஜியாரத் செய்கின்றார்களோ அவர்களுக்கு என்னுடைய ஷபாஅத் வாஜிப் என்று நபி அவர்கள் கூறி இருக்கின்றார்கள். நான்கு இமாம் வேண்டாம் என்று சென்ற மடையர்கள் தான் இப்போது நாற்பது கூட்டமாய் சிதறி கிடக்கின்றார்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Kissing and touching the Grave or Grill
of the Shrine of Prophet Mohammad (صلى الله عليه و آله وسلم)
and Graves of Sahabah and Awliya Allah

The following Quranic verses, Ahadith and rulings confirm that kissing, touching or placing of head on the graves of Awliya Allah and asking for their mediation is the tradition of Sahabah, Imams of Fiqh and all important Shuyooks and Scholars of Islam.

(1) It is in Hadith - Imam Qadi ‘Iyad writes in Shifa’ that: Naafi’ (رضئ اللہ تعالی عنہ) said that when Ibn ‘Umar (رضئ اللہ تعالی عنہ) would say Salam; he would say Salam on Rasulullah (صلى الله عليه و آله وسلم) and Abu Bakr (رضئ اللہ تعالی عنہ) more than 100 times, then he would go to the blessed pulpit (in Masjid-e-Nabawi) and touch the place with his hands where Rasulullah (صلى الله عليه و آله وسلم) sat and rub them over his face. (Qadi Iyad Shifa).

(2) It is in Hadith - Related with Abdullah bin ‘Umar (رضئ اللہ تعالی عنہ) that he wiped his face at the place where Prophet Mohammad (صلى الله عليه و آله وسلم) sat. (at-Tabqat al-Kubra ibn Sa’d, 1:254).

It is related about Sahaba (رضئ اللھ تعالی عنہم اجمعین ) that they touched the circular parapet that is next to the blessed shrine of Prophet Mohammad (صلى الله عليه و آله وسلم) with their right hand and then made supplications.

(3) It is in Hadith - It is reported in "Musannaf Ibn Abi Shaybah" : Abu Bakr - meaning Ibn Abi Shaybah- told us; he said: Zayd Ibn Habbab told us; he said: Abu Mawdudah told me; he said: Yazid Ibn Abd-il-Malik Ibn Qasit told me; he said: I saw a group of the Companions of the Prophet (رضئ اللھ تعالی عنہم اجمعین ) if the Masjid was free for them, they stood up and went to the free rummanah (knob) of the minbar, rubbed it, and made dua'. (Musannaf Ibn Abi Shaybah).

(4) Ibn Qaseet and ‘Utba narrate that when the companions (رضئ اللھ تعالی عنہم اجمعین ) would exit the Masjid an-Nabawi, they would touch the edges of the grave of the Prophet (صلى الله عليه و آله وسلم) with their hands and then make du’a.

//முகமது நபி கூட 'தனது அடக்கஸ்தலத்தில் யாரும் பிரார்த்தனை செய்ய வர வேண்டாம்

என்பதற்கு ஆதாரம் தரவும் ,//

எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.

Dr.Anburaj said...

இந்த உலகை மாற்றிப் போடும் சக்தி இறை வேதமான குர்ஆனுக்குத்தான் உண்டு.
அழித்து பாழாக்கிப்போடும் ஆற்றல் உண்டு. அரேபிய மத நாடுகள் அன்பின் விளைநிலங்களாக விஞ்ஞானத்தின் விளைவிலங்களாக பண்பாட்டின் எடுத்துககாட்டக்களாக உள்ளன. வாழ்க சிரியா வாழ்க எகிப்து

suvanappiriyan said...

// நீங்கள் சொல்லும் சில கட்டுபாடுகள் என்னென்ன..? //

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1619 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

குரானில் இசை ஹராம் என்ற ரீதியில் எந்த இடத்திலும் வரவில்லை. வட்டி,புறம்,திருட்டு, விபசாரம், பொய், சிலை வணக்கம், கொலை என்று தடுக்கப்பட்டவைகளை பட்டியலிடும் இறைவன் அங்கு இசையை தடுக்கப்பட்டதாக கூறவில்லை. நபிகள் நாயகம் மேற்கண்ட ஹதீஸில் இதன் காரணத்திலாயே அபுபக்கர் (ரலி) அவர்களை தடுத்ததாக அறிகிறோம். சில ஹதீதுகள் இசையை கடுமையாக தடுத்து வந்துள்ளன. இவ்வாறு இரு வேறுபட்ட கருத்துக்கள் நபி மொழிகளாக வரும் போது நாம் நேரிடையாக குர்ஆனைப் பார்க்க வேண்டும். குர்ஆனில் நேரிடையான தடை இல்லை எனும் போது அந்த செயலை செயல்படுத்திக் கொள்ளலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து.

ஆனால் இசை என்பது நம்மை அடிமையாக்கி விடாமல் இருக்க வேண்டும். இசையில் நம்மை பறி கொடுத்து விடுவோம் என்று அஞ்சினால் அந்த இசையிலிருந்து நாம் தூரமாக இருந்து கொள்வதே நலம். இறைவனே உண்மையை அறிந்தவன்.

ராவணன் said...

அண்ணாச்சி... இந்த உலகம் மட்டுமல்ல...இந்த பிரபஞ்சமும் ரொம்பப் பெருசு.

…யாரும் யாரையும் படைக்க முடியாது. என்னை எவனும் படைக்கவில்லை.

…நம்ம முனியாண்டிசாமிகூட எனக்கு நண்பன் மட்டுமே....

ஜமால் said...

அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் பிழைத்துக்கொண்டார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூற நான் கேட்டேன்.

​​மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343

அஹ்லுல்பைத்துக்களை பின்பற்ற வேண்டுமா? என்றால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)

கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)
அஹ்லுல்பைத்துக்களை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.

"முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)

• அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)

ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள்.

“யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)

நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)

என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.

என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்
கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

ஜமால் said...

எம் உயிரினும் மேலான நாயகத் திருமேனி ரசூல் நாயகம் ﷺ அவர்கள்,
அவர்களின் திருக்குடும்பத்தினர் (சங்கையான அஹ்லுல்பைத்தினர்) சத்திய சஹாபாக்கள் அவர்களை சங்கைபடுத்தாமல் நீங்கள் எத்தனை வஹ்ஹாபிய பயான்களை கேட்டாலும் இபாதத் செய்தாலும் இறைவன் அங்கீகரிக்கப்போவதில்லை என்பது நிச்சயத்திலும் நிச்சயம்.
குர்ஆனின் ரகசியங்களை நுட்பக்கருத்துக்களை அல்லாஹ்வின் அவ்லியாக்களே அறிவார்கள்.
அதனால் தான் அறிவின் தலைவாயில் செய்யிதினா இமாம் அலி அவர்கள் கூறினார்கள்.
*பாத்திஹா சூராவின்* அகமிய விளக்கத்தை கூறுவதானால் அதை சுமக்க 70 ஒட்டகங்கள் (Library) அளவுக்கு விளக்கமான நூற்கள் எழுத வேண்டும் ! சுப்ஹானல்லாஹ் !
*ரசூலுல்லாஹ் நாயகம் ﷺ கூறினார்கள்*
எவர் குர்ஆனுக்கு தன் மனம் போன போக்கில் (அல்லாஹ்வின் வலிமார்களை அடையாமல்) அர்த்தம் கொள்கிறாரோ அவர் தம் இடத்தை நரகத்தில் அமைத்து கொள்ளட்டும் என்றார்கள்.
மேலும் கூறினார்கள், நிச்சயமாக அதனின்றும் (குர்ஆன்) உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் வெளிக்கருத்தும், உட்கருத்தும் உண்டு என்றார்கள்.

ஜமால் said...

அஹ்லுல்பைத்துக்களை பின்பற்ற வேண்டுமா? என்றால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)

கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)
அஹ்லுல்பைத்துக்களை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.

"முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)

• அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)

ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள்.

“யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)

நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)

என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.

என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்
கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

ஜமால் said...

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மிக சரியான அகீதாவில் உள்ளார்.அல்லாஹ்வின் அவ்லியாக்களான இறைநேசர்களினால் தான் அவர் சத்திய இஸ்லாத்திற்கு வந்தார்.
வணக்கம் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே. இறைநேசர்களுக்கு நன்றி மரியாதை செலுத்துவது எப்படி இணைவைத்தலாகும் ?
வழிகெட்ட வஹ்ஹாபிஸ கொள்கையை அறிவீர்களா?
அவர்கள் தான் ஏக இறைவன் அல்லாஹ்விற்கு உருவம் வைத்து வணங்கும் வழிகேடர்கள்.
அல்லாஹ்வால் உகக்கப்பட்ட அஹ்லுல்பைத்தினரை புறக்கணிப்பவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிட்டார்.

ஜமால் said...

நபிகள் நாயகம் கூறினார்கள்:
"மார்க்கத்தில் முந்தியது அல்லாஹ்வை அறிவாகும்.
எவர் தன்னை அளிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்"

ஏக இறைவனான அல்லாஹ்வை அறியாமல்
அல்லாஹ் சுபுஹானஹுத ஆலாவை ஒரு மாபெரும் *உருவ ஜடப்பொருளாக அர்ஷில் (நாற்காலி)வானத்தில் வைத்து கற்பனை செய்து வணங்குவது இணைவைப்பதாகும். இதற்கு மன்னிப்பே இல்லை*