அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீது நிலவட்டுமாக!
கள்ளக்குறிச்சி வட்டம் அசகளத்தூரைச் சேர்ந்த தேவேந்திர வேலன், வயது 45 மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த தமிழர், நான்கு குழந்தைகளின் தந்தை. மனைவியும் பெற்றோர்களும் பண்ணையாள்களாக, சொற்பப் பணத்துக்குப் பண்ணை வேலை செய்கின்றனர். பிழைப்பிற்காக சவூதி அரேபியா வந்த இடத்தில் மாரடைப்பால் கடந்த 2012ம் வருடம் நவம்பர் மாதம் இறந்து விடுகிறார்.
இந்நிலையில் அவர்களின் வறுமைக் காரணமாகவும் இங்கு உதவிசெய்வோர் யாரும் இல்லாத காரணத்தாலும் அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யாமல் மனதளவில் தகனம் செய்துவிட்டு இருந்துவிட்டார்கள்.
இந்நிலையில், கேட்பாரற்ற இந்தப் பிரேதம் பற்றி இந்தியத் தூதரக அலுவலர் மூலமாக தஃபர்ரஜ் அமைப்பின் செயலாளர் ஷாஜஹானுக்கு விபரம் தெரிய வருகிறது. அவர் இந்த விபரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டதன் பேரில் பலரும் முன்வந்து உதவிசெய்ய சம்மதித்து சிலர் நேரடியாக சென்று குடும்பத்தைச் சந்தித்ததில் அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதையும் கடன் கொடுத்தவர்கள் இருக்கும் இந்தக் குடிசை வீட்டையும் பறித்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதையும் அறிந்து தகவல் சொன்னார்கள்.
தற்பொழுது அவரது உடலை இம்மண்ணிலேயே தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அவரின் நான்கு குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் அவரின் கடனை அடைப்பதற்கும் பல நல்ல உள்ளங்கள் உதவத் தயாராக உள்ளார்கள். அவ்வகையில் நாமும் நம்மாலான உதவிகள் செய்து அவரின் குடும்பத் துயர் துடைப்போம்.
'ஒரு மனிதரை வாழவைத்தவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவராவார்" என்ற இறைவசனத்திற்கேற்ப இறைப்பொருத்தம் மட்டுமே நாடி இறைவனுக்காக, இக்குடும்பத்தின் துயர் களைய உங்கள் பங்களிப்பை அளித்துதவுங்கள். நமது இம்மை மறுமை வாழ்க்கை நலமும் வளமும் பெறட்டுமாக.
தகவல் உதவி
சகோதரர் அஹமத் இம்தியாஸ்
No comments:
Post a Comment