மரண அறிவித்தல் (ஜனாசா நல்லடகம் இன்று அஸருக்குப்பின்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ரியாத் ரப்வாவில் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக டெயிலரிங் கடை வைத்து நடத்தி தமிழ்நாடு மாயாவரத்தைச் சொந்த ஊராகக் கொண்டு தற்பொழுது கும்பகோணத்தில் குடும்பம் வசித்துவரும் சகோ. அஹமது அமீர் பாஷா (வயது 45) அவர்கள் மூன்று தினங்களுக்கு முன் உணவு சாப்பிட பாதையை கடக்கும் போது வேகமாக வந்த ஒரு கார் அடித்து தூக்கி வீசப்பட்டார். சில நேரங்களிலேயே சம்பவ இடத்தில் உயிர் பிரிந்து விட்டது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். إنا لله وإنا إليه راجعون
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
அன்னாருக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண்குழந்தையும் உள்ளது, செய்தியறிந்து தஃபர்ரஜ் நிர்வாகக்குழு உறுப்பினர் சகோ. ஜமால் சேட் அவர்கள் அவரின் உடலை ரியாத்தில் தகனம் செய்வதற்குண்டான ஏற்பாடுகள் செய்து இன்ஷா-அல்லாஹ் இன்று (06-02-2014) அஸர் தொழுகைக்குப்பின் எக்ஸிட் 15ல் உள்ள அல்-ராஜி பள்ளியில் தொழுகை நடத்தி பின்னர் நசிம் மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள்அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நன்றி
-அஹமத் இம்தியாஸ்
3 comments:
இறைவன் நாடினால் நானும் இந்த தொழுகையில் கலந்து கொள்வேன். வாகன வசதியுடையவர்கள் அவசியம் தொழுகையில் கலந்து கொள்ளவும்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். إنا لله وإنا إليه راجعون
//அவரின் உடலை ரியாத்தில் தகனம் செய்வதற்குண்டான ஏற்பாடுகள்//
'தகனம்'.........!?
திருத்துங்கப்பா.
Post a Comment