மனிதனுக்கு இவ்வளவுதான் உலகம்!
ரியாத் ரப்வாவில் எனது அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கும்பகோணத்தைச் சேர்ந்த பாஷா பாய் என்ற சகோதரர் டெயிலரிங் கடை சொந்தமாக வைத்து நடத்தி வந்தார். 12 வருடத்துக்கு மேலாக இந்த தொழிலில் உள்ளார். மகள் டாக்டருக்கு படிக்கிறார். இந்த வருடம் கடைசி வருடமாம்.
நேற்று மதியம் பாஷா பாய் உணவு சாப்பிட பாதையை கடக்கும் போது வேகமாக வந்த ஒரு கார் அடித்து தூக்கி வீசப்பட்டார். சில நேரங்களிலேயே உயிர் பிரிந்து விட்டது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
வாகனத்தை ஓட்டி வந்த சவுதி நாட்டவர் உடன் ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணினார். ஆனால் அதற்குள் உயிர் பிரிந்து விட்டது.
உடலை ஊருக்கு அனுப்புவதா! அல்லது இங்கேயே அடக்கம் செய்து விடுவதா என்று சொந்தங்களோடு பேசிக் கொண்டுள்ளனர்.
இது தான் உலகம். பல கற்பனைகளில் பல தவறுகளோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நாம் இது போன்ற இறப்புகளைப் பார்த்து நடுங்க வேண்டும். அத்தகைய மனநிலையை எனக்கும் உங்களுக்கும் இறைவன் ஏற்படுத்துவானாக!
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
குர்ஆன்:21:35
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்; “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
குர்ஆன் :63:10
1 comment:
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Post a Comment