Followers

Wednesday, February 05, 2014

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

ஒரு இந்துத்வா தளத்தில் இந்தியாவில் பவுத்தம் அழிய இஸ்லாம்தான் காரணம் என்று பொய்களை எழுதி மக்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை வரலாறோ வேறு விதமாக உள்ளது. நமது தமிழகத்தில் பவுத்தம் அழிய எந்த மதம் காரணம் என்பதை ஆதாரத்தோடு தருகிறேன். இந்த செய்திகளை அங்கும் பதிந்தேன். ஆனால் அதனை பிரசுரிக்க மாட்டார்கள் என்ற படியால் எனது முந்தய பதிவை மீள்பிரசுரம் செய்கிறேன்.

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'

-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.

படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.

நேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

8 comments:

suvanappiriyan said...

தளத்தின் நிர்வாகிகளுக்கு!

ஒரு கருத்தை பதிந்தால் அதன் எதிர் கருத்துக்களையும் பதியும் தைரியம் இருக்க வேண்டும். இந்துத்வாவாதியான உங்களிடம் அதனை நான் எதிர் பார்க்க முடியாது. ஆனால் இந்தியாவில் பவுத்தமும் சமணமும் துடைத்தெறியப்படுவதற்கு சைவ சமயமே முக்கிய காரணம் என்பதை அதே இந்து மதத்தைச் சார்ந்த அறிஞர்களின் கூற்றுக்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளேன்.

எனது தளத்துக்கு 800 லிருந்து 1000 பார்வையாளர்கள் ஒரு நாளுக்கு வருவதாக கூகுள் கூறுகிறது. இது அல்லாமல் ஃபேஸ் புக்கில் ஷேர் செய்யப்படுவது தனி. இத்தனை பேரை இந்த செய்தி சென்றடையும். எனவே இன்னும் எத்தனை பொய்களை அரங்கேற்ற முடியுமோ முடிந்த வரை செய்து வாருங்கள். நானும் எனது பங்குக்கு என்னால் முடிந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன்.

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!
ஒரு இந்துத்வா தளத்தில் இந்தியாவில் பவுத்தம் அழிய இஸ்லாம்தான் காரணம் என்று பொய்களை எழுதி மக்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை வரலாறோ வேறு விதமாக உள்ளது. நமது தமிழகத்தில் பவுத்தம் அழிய எந்த மதம் காரணம் என்பதை ஆதாரத்தோடு தருகிறேன். இந்த செய்திகளை அங்கும் பதிந்தேன். ஆனால் அதனை பிரசுரிக்க மாட்டார்கள் என்ற படியால் எனது முந்தய பதிவை மீள்பிரசுரம் செய்கிறேன்.

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_1527.html

Anonymous said...

//ஒரு கருத்தை பதிந்தால் அதன் எதிர் கருத்துக்களையும் பதியும் தைரியம் இருக்க வேண்டும். //

அடேயப்பா, அய்யாவிடம் அது நிறய இருக்கிறது, எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

அப்படியே கொஞ்சம் உலகம் எங்கும் இஸ்லாமியர்கள் அரங்கேற்றிய வன்முறைகள், காபிர்களின் கொலைகள், எப்படி முகமதுவின் காலத்துக்கு பிறகு இஸ்லாம் பிற நாடுகளில் பரவியது. இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட பிற சமயங்களின் வழிபாட்டு தலங்கள், குண்டு வெடிப்புகள். போன்ற வரலாறுகளையும் பதிந்தீர்கள் என்றால் உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும்

Anonymous said...

பார்சி மதத்தாலும், யூத மதத்தாலும் இந்துஸ்தானத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவில்லை. பார்சிகளும், யூதர்களும் பிற மதத்தவரால் தங்கள் தாயகத்தில் இருந்து விரட்டப்பட்ட போது, அகதிகளாக பலர் இந்துஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தனர். அடைக்களம் கேட்டு வந்த பார்சிகளையும், யூதர்களையும் இந்து மக்களும், இந்து அரசர்களும் அன்போடு அரவணைத்துக் கொண்டனர். பல நூற்றாண்டுகளாக நம்மோடு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் பார்சிகளாலோ, யூதர்களாலோ இந்துக்களுக்கும், இந்துஸ்தானத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. அதே போல, பெரும்பான்மை இந்துக்களால் அவர்களுக்கு நன்மைகள் தான் ஏற்பட்டதே தவிற, கடுகளவு தீமைக் கூட ஏற்பட்டதில்லை. 1948_ல் இஸ்ரேல் உருவான போது, பல நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு திரும்பினர். அவர்களில் பலர், தாங்கள் வாழ்ந்த நாட்டில் எவ்வாறு எல்லாம் துயரப்பட்டனர் என்பது பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்களாம். ஆனால், பாரத தேசத்தில் வாழ்ந்த யூதர்கள் மட்டும் தாங்கள் எவ்வாறு தங்கள் வாழ்வை பாரத தேசத்து இந்துக்களுடன் மிகிழ்ச்சியுடன் கழித்தனர் என்பது பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்களாம். பல நூற்றாண்டுகளாக இந்துக்களுடனும், இந்துஸ்தானத்துடனும் எந்த பிரச்சனையுமின்றி பார்சி மதமும், யூத மதமும் ஒத்துப்போனது. ஆனால், இஸ்லாமியத்தால் இன்றளவும் நம் தேசத்துடனும், இந்துக்களுடனும் ஒத்துப்போக முடியவில்லை. ஏன்யென்றால், "இஸ்லாம்" என்பது பார்சியைப் போன்றோ, யூதத்தைப் போன்றோ தங்க இடம் கேட்டு வந்த மதமல்ல, மாறாக இந்துக்களையும், இந்துஸ்தானத்தையும் தாக்கி அழிக்க வந்த மதம். எப்பொழுது(712_களில்) அரேபிய இஸ்லாமியர்கள் பாரத தேசத்தில் காலடி எடுத்து வைத்தார்களோ, அன்று முதல் இன்று வரை, இஸ்லாத்தின் பெயரால் இந்துக்களின் இரத்தம், இஸ்லாமியர்களால் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு இந்து ஆட்சியின் கீழோ, அல்லது ஒரு இந்து பெரும்பான்மையுள்ள இடத்திலோ, இஸ்லாமியர்களாலும், கிறிஸ்தவர்களாலும் நிம்மதியாக வாழ்ந்து விட முடியும். ஆனால், ஒரு இஸ்லாமிய ஆட்சியின் கீழோ, அல்லது கிறிஸ்தவத்தின் ஆட்சியின் கீழோ ஒரு இந்து, இந்துவாக வாழ முடியுமா? அப்படி வாழ நினைத்தாலே, இந்துக்கள் தங்கள் உயிரை அல்லவா அதற்கு விலையாக கொடுக்க வேண்டியுள்ளது! இன்று, ஒரு சில இஸ்லாமிய இயக்க தலைவர்கள், இந்துஸ்தானில் நடந்த இஸ்லாமிய ஆட்சி குறித்து பேசும் போது, "ஆகா, அக்பர் ஆட்சியா, தங்கம் கரைபுரண்டு ஓடியதே! ஆகா, திப்பு சுல்த்தான் ஆட்சியா, முத்துக்கள் மழையாக பொழிந்ததே!" என்றெல்லாம் கயிறு திரிப்பதை தொலைக்காட்சி வழியாக காணமுடிகிறது. ஒரு சராசரி இந்து(உண்மையான இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி தெரியாத இந்து), இவர்கள் பேச்சைக் கேட்டால், மதிமயங்கி, "ஆகா! ஆட்சி என்றால் இதுவல்லவா ஆட்சி! இன்றும் நடக்கிறதே ஊழல் காங்கிரஸ் ஆட்சி!" என்று தனக்கு தானே கூறி வருத்தப்பட்டுக் கொள்வான். ஆனால், உண்மையிலேயே இஸ்லாமிய ஆட்சியில் கரைபுரண்டு ஓடியதும், மழையாக பொழிந்ததும் இந்துக்களின் இரத்தம் தான்.

Anonymous said...

சுவன்ப்ரியர். உமது இஸ்லாமிய மதத்தை இங்கே பரப்ப இவ்வளவு வெட்டி வியாக்கியானங்கள் பதிகிறீர்கள். ஆனால் உமது இஸ்லாமிய கூட்டத்தால் பிற மதத்தவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, எந்த நாட்டிலும் ஒருவர் கூட வாள் முனையில் எந்த காலத்திலும் மத மாற்றம் செய்யப்படவில்லை. உமது கூட்டம் 100 சதவீதம் பரிசுத்தமாகவே நடந்து கொண்டது என்று உறுதியாக உம்மால் கூற இயலுமா?

Anonymous said...

இஸ்லாம் எப்படி பரவியது என்பது பற்றி இஸ்லாமியர் ஒருவரே எழுதிய புத்தகம், படித்து தெரிந்து கொள்ளுங்கள் இஸ்லாமின் யோக்கியதையை


Islamic Jihad – A Legacy of Forced Convesion,

Imperialism and Slavery


BY M.A. Khan

Anonymous said...

“வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த முஸ்லிம்கள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ அல்லது அறிவியல் வளர்ச்சிக்கோ எதுவும் செய்யவில்லை. எந்த விதமான புதிய அரசிய கோட்பாடுகளோ அல்லது பொருளாதாரக் கோட்பாடுகளோ அவர்களிடம் இல்லை. அவர்களின் மத நம்பிக்கை காரணமாக உண்டாகியதாகக் கூறப்படும் சகோதரத்துவத்திற்கும் மேலாக ஒருவகையான ஆண்டான்-அடிமைக் கோட்பாடே அவர்களிடம் நிலவியது. தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் அதன் அடிப்படைக் கட்டமைப்பிற்கான அறிதலிலும் அவர்கள் ஒருபோதும் இந்தியர்களுக்கு நிகரானவர்களாக இருந்ததில்லை. மொத்தத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், பொருளாதார வாழ்க்கைக்கும் அளித்த பங்களிப்பு மிக, மிகக் குறைவானதே. அன்றைய இந்தியா இஸ்லாமிய நாடுகளை விடவும் எல்லா விதத்திலும் முன்னேறிய ஒன்றாகவே இருந்தது.”

...........ஜவஹர்லால் நேரு

Anonymous said...

//
ஒரு கருத்தை பதிந்தால் அதன் எதிர் கருத்துக்களையும் பதியும் தைரியம் இருக்க வேண்டும். இந்துத்வாவாதியான உங்களிடம் அதனை நான் எதிர் பார்க்க முடியாது. //

இஸ்லாம் எப்படி பரவியது என்பது பற்றி இஸ்லாமியர் ஒருவரே எழுதிய புத்தகம், படித்து தெரிந்து கொள்ளுங்கள் இஸ்லாமின் யோக்கியதையை


Islamic Jihad – A Legacy of Forced Convesion,

Imperialism and Slavery


BY M.A. Khan

இந்த இணைப்பில் படிக்கவும்
http://www.islam-watch.org/books/islamic-jihad-legacy-of-forced-conversion-imperialism-slavery.pdf