Followers

Wednesday, February 26, 2014

அஹமதாபாத் நகரம் பிறந்து 604 வருடங்களாகிறது!

குஜராத்தின் மிகப் பெரும் நகரமான அஹமதாபாத் பிறந்தது 26-02-1411 ஆம் ஆண்டு. நேற்றோடு இந்நகரம் பிறந்து 604 வருடங்களாகிறது. அம்மாபெரும் நகரை உருவாக்கிய மன்னர் அஹமத் ஷா வை யாராவது நினைவு கூறுகிறார்களா? ஒரு பத்திரிக்கை செய்தியாவது உண்டா? அஹமதாபாத் என்ற அழகிய பெயரையே சிதைத்து ஆமதாபாத் என்று எழுதியும் பேசி வரும் இந்நாட்டில் எதைத்தான் நாம் எதிர் பார்க்க முடியும்?

ஒரு முஸ்லிம் சூஃபி ஞானியின் உத்தரவின் பேரில் இந்நகரின் அடிக்கல் அஹமத் ஷாவால் நாட்டப்பட்டது. மோனாக் பாபா என்று பலராலும் அறியப்படும் இந்த சூஃபி ஞானியைப் பற்றி அந்நகரத்தில் பலரும் அறிந்து வைத்துள்ளனர். முகலாயர்களின் கட்டிடக் கலை இந்நகரைச் சுற்றியும் கம்பீரமாக நிற்கிறது.

அஹமத் ஷா தனது இந்து மனைவிக்காக 'பத்ரா மந்திர்' என்ற பெரும் கோவிலையும் கட்டி இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை வளர்த்தார். அந்த கோவிலும் கம்பீரத்தோடு நிற்கிறது.




ஆனால் அஹமதாபாத் இன்று அதன் பொலிவை இழந்து காணப்படுகிறது. இந்து முஸ்லிம் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த இந்த இடம் உருக்குலைந்து போயுள்ளது. கேவலம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக இன்று இந்த இரு சமூகங்களையும் பிரித்து வைத்துள்ளது இந்துத்வா. இதனால் அரசியல்வாதிகள் லாபம் அடைந்தனர். ஆனால் மனித மனங்கள் என்றும் மாறாத வடுவை சுமந்து கொண்டு பலரை நடைபிணங்களாக வாழ வைத்துள்ளது.

முகாம்களில் அடைபட்டுள்ளனர் லட்சக்கணக்கான முஸ்லிம்கள். இஸ்லாம் வாழ்ந்த இதே அஹமதாபாத்தில் முஸலிம்கள் மோடியின் ஆட்களால் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள். வாடகைக்கு இடம் கிடைப்பதும், தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதும் இன்று முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

இது போன்ற திட்டமிட்ட ஒதுக்கல் அந்த மாநிலத்தின் முன்னேற்றத்துக்கே வேட்டு வைக்கக் கூடியது என்பதை ஏனோ இந்த அரசியல்வாதிகள் உணர்வதில்லை. வறுமையில் வாழ்க்கையை வெறுத்து தீவிரவாதிகளாக மாறினால் அது எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாதவரல்ல மோடி. இது போல் சமூகம் மேலும் பிளவுபட வேண்டும் என்றே இவரைப் போன்றவர்கள் விரும்புகின்றனர்.

காலம் எந்நாளும் இதே போல் பயணிக்காது. இந்நாட்டின் மிக இழிவான ஒரு அரசியல்வாதியாக மோடியை நமது வரலாறு பதிவு செய்யப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அத்தனை வலிவு உண்டு.

//Opening one after the other layer, Justice Suresh explained his point and feared that it would be dangerous for the country to have Modi as Prime Minister.//

http://www.bilkulonline.com/features/articles/4847-it-is-dangerous-for-the-country-to-see-modi-as-pm-justice-s-suresh

'மோடி போன்ற ஒரு பயங்கரவாதி நம் நாட்டின் பிரதமராக வருவது மிக அபாயகரமானது' என்கிறார் நீதிபதி சுரேஷ். இவர் முன்னால் மும்பை நீதிபதி. 'சச்சாய் குஜராத் கி' அதாவது 'குஜராத்தின் உண்மை' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை ஆம்ஆத்மி பார்ட்டி இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தை பலரும் வாங்கி பலரையும் சென்றடைய முயற்சிப்போமாக!

5 comments:

UNMAIKAL said...

'அஹமதாபாத்' 'அமதாவாத்'தாக மாற்றம் - வரலாற்றுப் பாரம்பரிய நகரங்களின் பெயர்களை மாற்றும் மோடி அரசு

1411 ஆம் ஆண்டு முஸ்லிம் மன்னர் அகமது ஷா என்பவர் இந்த நகரத்தை தோற்றுவித்தார் என்று ஆதாரப்பூர்வமான வரலாறு கூறுகிறது.

அஹமதாபாத்,பிப்.17:நூற்றுக்கணக்கான இடங்களில் அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்(AMC) என்பதை அமதாவாத் முனிசிபல் கார்ப்பரேஷன் என்று மாற்றப்பட்டுள்ளது.

வெளிப்படையாகவே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது.

அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பா.ஜ.க அரசாங்கத்தால் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இன்னும் பல முக்கிய இடங்களில் உள்ள பெயர் பலகையில் அஹமதாபாத் என்பதை அழித்து அமதாவாத் என்று ஒரே இரவில் மாற்றப்பட்டுள்ளது.

நகராட்சியின் அடையாள குறியீட்டில் கூட அஹமதாபாத் என்ற பெயர் அழிக்கப்பட்டு அமதாவாத் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படியாக நிறைய இடங்களில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. ஒரு ஆங்கில நாளிதழ் தவிர மற்ற அனைத்து நாளிதழ்களும் இதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிர உறுப்பினரான இந்த நகரத்தின் மேயர் அசிட் வோரா இதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

வேண்டுமென்றே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களை இந்நகரத்தை விட்டு ஒதுக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் 600 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நகரத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பா.ஜ.க அரசு.


1987 ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தை கைப்பற்றிய ஹிந்துத்துவவாதிகள், அன்றிலிருந்து இதன் பெயரை மாற்றவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களோடு தொடர்புடைய அமைப்புகளான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஏனைய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நகரத்தின் பெயரை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மஹாபாரதத்தின் கதாபாத்திரமான கர்ணன் தான் இந்நகரத்தை தோற்றுவித்தார் என்று நம்புவதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் இந்த கூற்று ஒரு உறுப்படியான காரணம் இல்லை என்றும், முஸ்லிம்களை எதிர்ப்பதற்க்காகத்தான் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று நடுநிலையான இந்துக்கள் கூட கருதுவார்கள்.

ஆனால் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிக ஆதரவு இருப்பதாலும், வலுவான சக்திமிக்க‌ சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இல்லாததால் இதனை எதிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் முஸ்லிம்களை கருவருத்த நரேந்திர மோடி தற்போது முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்கவும் அவர்களை நகரத்தை விட்டு வெளியேற்றவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது பட்டவர்த்தனமாக விளங்குகிறது.

மத்தியிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் அஹமதாபாத் என்ற பெயரே உபயோகப்படுத்தப்பட்டாலும், பா.ஜ,க அரசு அஹமதாபாத்தில் வசிக்கும் மக்களின் எண்ணங்களில் அமதாவாத் என்ற பெயரையே பிரபலமாக்கி வருகிறது.

இதனை விமர்சித்த மக்களின் குடியியல் விடுதலை சங்கத்தின் (PUCL) தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா கூறுகையில், இத்தகைய செயல் பா.ஜ.க மற்று ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை தெளிவுபடுத்துகிறது என்றார்.

முஸ்லிம் பெயரையோ அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கும் பாரம்பரியத்தையோ ஒருபோதும் இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சமூகம் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஒரு போதும் வெளியேறமாட்டோம்! நாம் இங்கே வசிப்பதற்க்காக‌த்தான் இருக்கின்றோம். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கு காவிகளிடமிருந்து நன்மதிப்பு தேவை என்ற எந்த அவசியமும் இல்லை என்று மேலும் அவர் கூறினார்.

ஜாபிர் மன்சூரி என்ற சமூக ஆர்வலர் கூறும் போது, இத்தகைய வகுப்புவாத செயல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பெறும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

முஸ்லிம் பெயர்களை மாற்றுவதினால், முஸ்லிம்களை நகரத்திலிருந்து வெளியேற்றிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள். இத்தகைய செயல்களினால் முஸ்லிம்கள் வெளியேறப்போவதுமில்லை, அவர்களுக்கும் இந்நகரத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்துவிடப் போவதுமில்லை என்று கூறினார்.

ஆயிரக்கணக்கான அடையாள சின்னங்கள், மஸ்ஜிதுகள் மற்றும் இந்நகரத்தை தோற்றுவித்த அகமது ஷா அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் உள்ளது. இத்தகைய வரலாற்று சின்னங்களை இவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது
என்று கூறினார்.

நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து

Ref:பாலைவனத் தூது

suvanappiriyan said...

//அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? இதுதான் எங்க கேள்வி. ஆட்ச்சியாளர்கள் கொடுமைப்படுத்தினால், உங்கள் கடவுள் ஆட்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முடியாதா? உங்கள் கடவுளால் முடியும் என்றால் ஏன் இதுவரை காப்பாற்றவில்லை. முடியாது என்றால், அந்த வக்கில்லாத கடவுளை பிடித்து ஏன் தொங்குகிறீர்கள்?//

இந்த உலக வாழ்ககை என்பது நிரந்தரமான மறு உலக வாழ்வுக்கு பரீட்சை ஹால் என்று சொல்லலாம். சொற்ப நேரம் இந்த பூமியில் தங்குகிறோம். இங்குள்ள மனிதர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. நன்மை எது தீமை எது என்பதை பட்டியலிட்டு சொல்லியாகி விட்டது. இந்த பரீட்சையில் உங்களுக்கு சோகமும் கிடைக்கலாம். அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்களா? என்று சோதிக்கவே சிலருக்கு சிரமத்தை இறைவன் கொடுக்கிறான். இந்த உலகில் படும் துன்பங்களுக்கு பகரமாகத்தான் மறு உலகில் அனைத்து சுகங்களையும் தருவதாக வாக்களிக்கின்றான்.

இந்த பதில் பலமுறை சொன்னதாலேயே சாய்ஸில் விட்டேன். மற்றபடி தருமி சார் கேட்ட பல கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லியாகி விட்டது.

திருப்பி...திருப்பி ....திருப்பி எத்தனை முறை சார். :-(

suvanappiriyan said...

//இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! //

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது இந்த தவ்ஹீது இயக்கம். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் இந்துக்களை கேள்வி கேட்க வைத்து அவர்களின் சந்தேகங்களை போக்கி வருகிறோம். இதன் மூலம் தமிழகத்தில் பதட்டமான சூழல் குறைந்தது. எவ்வளவு கிண்டலாக கேட்டாலும் புன் சிரிப்போடு அதற்கு பதிலளிக்கும் முறையை வஹ்ஹாபிகள்தான் கொண்டு வந்தனர்.

படிப்பில் ஆர்வம் இல்லாதிருந்த முஸ்லிம்களின் கவனத்தை திருப்பி இன்று மற்ற சமூகத்தோடு போட்டியிடும் அளவுக்கு இஸ்லாமியர்களை தயார்படுத்தியுள்ளோம்.

தட்டு, தாயத்து, தர்ஹா, என்று மூடபபழக்கத்தில் மூழ்கியிருந்தவர்களை குர்ஆனின் பக்கம் கொண்டு வந்துள்ளோம்.

இன்று தமிழகத்தில் ரத்ததானத்தில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது இதே தவ்ஹீத் ஜமாத்தான்.

காவல்துறையினர் கூட மதிக்கும் ஒரு ஜமாத் இந்த தவ்ஹீத் ஜமாத்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியருக்கு தனி இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். இன்று அதனை அதிகரிக்க போராடி வருகிறோம். இன்னும் 20 ஆண்டுகளில் எங்களின் சதவீதத்துக்கு தக்க அரசு வேலைகளை பெற்று விடுவோம்.

இதெல்லாம் தெரிந்தும் கண்ணை இறுக மூடிக் கொள்ளும் உங்களை நினைத்து பரிதாபம்தான்பட முடியும்.


suvanappiriyan said...

//9. தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும் நினைக்காமல் ‘நல்ல மனிதர்களாக’ இருந்துள்ளார்கள்.
இவர்களில் யார் நல்லவர்?//


எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை இருக்கிறது. மனிதாபிமானத்தினால் சிலர் நல்ல செயல்களை செய்யலாம். வாழ்வின் அனைத்து நாட்களிலும் அவர்களால் அவ்வாறு வாழ்ந்து விட முடியாது.

ஆனால் இறப்புக்கு பிறகு ஒரு வாழ்வு உண்டு. இங்கு செய்யும் தீய செயல்களுக்கான தண்டனையை இந்த உலகில் கிடைக்கா விட்டால் மறு உலகில் கண்டிப்பாக நான் அனுபவித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனின் மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அவனை எத்தனை கோடிகளாலும் விலை பேசி விட முடியாது. இஸ்லாமிய வரலாறுகளில் இதனை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

மேலும் நல்லது எது தீயது எது என்ற பாகுபாடு கொண்டு வரப்பட்டதே முந்தய இறை வேதங்களால்தானே. அது ஆழ்மனதில் குடி கொண்டதால்தான் அவ்வாறு அவனால் நேர்மையாக நடக்க முடிகிறது. அதற்கு மனிதாபிமானம் என்று பெயர் வைத்துக் கொள்கிறீர்கள். அவ்வளவே!

suvanappiriyan said...

//யாராவது புதுசா மார்க்கத்துக்கு வந்தா பெருசா மகிழும் இவர்கள்,மார்க்கத்தை விட்டு போறேன்னு கிளம்பினால் கொலை வெறியாவதேன்?//

போகிறவர்களை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

தஸ்லீமா நஸ்ரீன் போன்றவர்களின் நிலையே வேறு. குர்ஆனில் இல்லாத கற்பனைகளை தனது எழுத்துக்களை 'இதுதான் இஸ்லாம்' என்று சொல்லி மேற்கத்திய ஊடகங்களை மகிழ்விக்கும் போக்கைத்தான் கண்டிக்கிறோம். பெய்யான கருத்து எதற்கு. விவாதத்துக்கு நாங்கள் தைரியமாக அழைக்கிறோம். அங்கு வந்து கருத்துக்களை வைக்க வேண்டியதுதானே!