Followers

Sunday, February 09, 2014

மனம் மாறிய யுவன் சங்கர் ராஜா!

மனம் மாறிய யுவன் சங்கர் ராஜா!



தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து 'இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்' என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனம் இலேசாவதை உணர்ந்தார். நிம்மதியான தூக்கமும் அவரை ஆட்கொண்டது. அன்றிலிருந்து இஸ்லாமியனாக மாறி விடுவது என்று முடிவெடுத்து நண்பர்களின் உதவியால் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தனது பெயரை அப்துல்லாவாக மாற்றியுள்ளதாக கேள்விப்படுகிறேன். 'யுவன் சங்கர் ராஜா' என்ற பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் தொடரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் அவர் எந்த சாதி என்று அடுத்த கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் அரபு பெயராக இருந்தால் இந்த கேள்வி எழாது. இதை அனுபவத்தில் பலமுறை நாம் பார்த்திருப்போம். 'அப்துல்லாஹ்' என்ற பெயருக்கு 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். மிக அழகிய பெயர். இறைவனுக்கு பிடித்த இரண்டு பெயர்கள் அப்துல்லா, அப்துல் ரஹ்மான். அந்த இரண்டு பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்த யுவனை வாழ்த்தி வரவேற்போம்.

தனது டிவிட்டர் தளத்தில் யுவன் கொடுத்துள்ள சில செய்திகள் கீழே!

My family supports my decision and there is no misunderstanding between me and my dad.

I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah!

Without you,I'm nothing. I love you all for supporting me all though my life. Nandri endra oru varthai pathadhu. May god bless you all.

I don't hate nobody,after all we are humans n we breathe the same air.

I know God is with me.

I don't believe in awards and rewards.I believe in being righteous and doing my work properly,rest is up to GOD.

எல்லா புகழும் இறைவனுக்கே!

குர்ஆன் ஒரு மனிதனை எந்த அளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு மேலே உள்ள யுவனின் ட்விட்டர் செய்திகளே சாட்சி!



இசையை பொருத்த வரையில் இஸ்லாத்தில் கூடுமா? கூடாதா? என்று அறிஞர்களிடத்தில் இரு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சவுதியிலும் அறிஞர்களிடையே 'இசை நம்மை அடிமையாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டுப்பாட்டோடு அனுமதிக்கும் அறிஞர்களும் உண்டு.

குடி, சூது, வட்டி, விபசாரம், திருட்டு, புறம் பேசுதல், கொலை, பொய் என்று பல தவறுகளை பட்டியலிடும் குர்ஆன் இசையைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. முகமது நபியின் சில ஹதீதுகள் இசையை தடுக்கச் சொல்லி வருகின்றன. மற்றும் சில ஹதீதுகள் இசையை அங்கீகரித்து வந்துள்ளன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்த வகையில் இசையே கதி என்று கிடக்காமல் அதற்கு அடிமையாகி விடாமல் நமது சந்தோஷமான நாட்களில் பாடல்களை கேட்பது ஆகுமாக்கப்பட்டதாகவே எண்ணுகிறேன். இறைவனே உண்மையை அறிந்தவன்.

புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த யுவன் வழமை போலவே எல்லா மதத்தவரையும், இனத்தவரையும் அதே அன்போடு அணுக வேண்டும். உலக மக்கள் யாவருமே ஆதமுடைய மக்களே! எல்லோரையும் படைத்தது அந்த ஏக இறைவன் ஒருவனே!வெறுப்பை நீக்கி அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த செய்தியைத்தான் இஸ்லாமும் உங்களுக்கு சொல்கிறது. வருங்காலங்களில் இசையில் ஆபாசம் இல்லாமல் மக்களை தவறுகளிலிருந்து விலக்கி விடும் சக்தியாக உங்கள் இசை இருக்க வேண்டும். ஏ ஆர் ரஹ்மானைப் போல் உலக புகழ் பெற வேண்டும். தமிழனுக்கும், இந்தியனுக்கும், உலக மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.

'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3


உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு யுவனின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

8 comments:

Unknown said...

(யுவன்) சங்கர் (ராஜா) என்ற பெயரில் உள்ள சங்கர் என்பது சங்கரன் என்ற பிற மதத்தவரின் கடவுளரைக் குறிப்பதால், அதனை பயன்படுத்த இயலாது. யுவன் ராஜா என வைத்துக் கொள்வதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்காது.

Anonymous said...

There has been lot of rumours in the industry that composer Yuvan Shankar Raja has tied the knot for the third time. The grapevine seems to have reached the composer himself, who took to the social networking site to clarify.

The composer has posted a message on his page, saying, "I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah." He also added on his page, "My family supports my decision and there is no misunderstanding between me and my dad."

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-clarifies-on-his-marriage/articleshow/30103480.cms

mohamedali jinnah said...

யுவன் சங்கர் ராஜாவை
இஸ்லாத்தை விரும்பி வந்ததை பலரும் பாராட்ட
அவரை பாராட்டும் நோக்கம் உயர்வாக இருக்க
சில காலம் கழித்து
அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காமல்
அவரை ஒரு பிரிவுக்குள் உள்ளடக்காமல் இருப்பது உயர்வு
(இஸ்லாத்தில் பிரிவு கிடையாது )

அவரது இசை ஆர்வத்தை குறைக்க விரும்பினால்
அவர் பாரிசுக்கு போய் தாவா செய்ய ஆரம்பித்து விடுவார்

இறைவன் அவருக்கு நல்வழி காட்ட
அவர் தனக்கென (இஸ்லாம்) ஒரு வழியை தொடர்கிறார்
என்ற நினைவோடு இருப்போம்

ஆனந்த் சாகர் said...

பாவம் இந்த யுவன்.இஸ்லாமியர்களின் தகியாவுக்கு(இஸ்லாத்தை பரப்புவதற்கு அனுமதிக்கப்படும் பொய்) அவர் இரையாகிவிட்டார்.

suvanappiriyan said...

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!
குர்ஆன் : 49:17

Anonymous said...

சமீபத்தில் முடிவெட்ட சலூனுக்கு சென்றிருந்தேன். எனக்கு வழக்கமாக முடிவெட்டும் தலித் சகோதரர்(அவரை விட்டால் வேறு யார் வெட்டுவார்?) தருமபுரி சாதி கலவரத்தை பற்றி பேச்சு கொடுத்தார். எங்களிடையே நடந்த சம்பாஷனை இது.

"எங்கள்ட்ட முடிவெட்ட வந்தா, நாங்க ஜாதி பார்ப்பதில்லை. அனைவரையும் சரிசமமா மதிக்கிறோம். சேவை செய்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை மனுஷனாவே மதிப்பதில்லை. எங்க கடை ஓனர் ஒரு பாய். தங்கமான மனுஷன். வீட்டில் எந்த விசேசம் என்றாலும் எங்களை முதலில் கூப்பிட்டு அவரே விருந்து பரிமாறுவார். ஆனா உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் எங்கள உள்ளாரவே நுழைய உட மாட்டாங்க. ஜாதிய ஒழிச்சாத்தான் இந்த நாடு உருப்படும்”.

"ஜாதி என்ன மூட்டைப்பூச்சியா மருந்தடிச்சு ஒழிப்பதற்கு?. எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களால் ஒழிக்கவே முடியாது”.

"அப்ப எண்ணன்னே பன்றது?”.

"ஜாதியை விட்டு வெளியேறுங்கள்" .

"அதெப்படிண்னே”?

"நாங்க முஸ்லிம்க எப்படி வெளியேறினோம்.?. அப்படி”.

அதற்குப் பிறகு நன்பர் பேசவில்லை. ஏதோ சிந்தனையில் மவுனமாகிவிட்டார்.
-----------

ஒரு நசுக்கப்பட்ட சகோதரனை முப்பது நிமிடங்களில் சிந்திக்க வைத்து விட்டேன். கூண்டுக்கிளியின் கதவு திறக்கப்பட்டு விட்டது. இனி சுதந்திர வானில் அது சிறகடித்து பறப்பதை, இன்ஷா அல்லாஹ் எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.

ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கூண்டுக்கிளியின் கதவை திறந்து விடுவேன் என்று சபதமெடுத்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மோடி மஸ்தான் கும்பல் மாயமாய் மறைந்துவிடும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இனி இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் மானம் மரியாதையுடன் வாழவேண்டுமென்றால், கூண்டுக்கிளியின் கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

Anonymous said...

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்!
சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையில்
மேதினியில் இட்டார் பெரியோர்
இடாதார் இழி குலத்தோர்
பட்டாங் கிலுள்ள படி"

என்று இரண்டாயிரம் வருடங்களாக பாடுகிறோம், பரீட்சையில் எழுதுகிறோம். கடைசியில் ஜாதி சான்றிதழை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கும் வேலைக்கும் அலைகிறோம். ஆனால் ஜாதியை விட்டு வெளியேறுவதெப்படி என்பது பற்றி சிந்திக்கிறோமா என்று ஒரு சகோதரர் மனசாட்சியை தட்டி எழுப்பினார்.

இந்த வாதத்தை கேட்டு ஒரு நிமிடம் வாயடைத்து போய்விட்டேன். ஒரு தலித்தால் வேதத்தை தொட முடியாது. சங்கராச்சாரியாராக முடியாது. ஆனால் திருக்குரானை மனனம் செய்யமுடியும். இமாம் ஆகமுடியும். ராவுத்தார், லெப்பை, மரக்காயர், தக்னி என்று சில பிரிவுகள் முஸ்லிம்களில் இருந்தாலும் கூட, பள்ளிவாசலில் நுழைந்தால் அங்கே தொழுகை நடத்தும் இமாமின் ஜாதி, இனம், குலம், கோத்திரம் என்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது. பேரரசன் கூட அந்த இமாமை பின் தொடர்ந்துதான் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

இறைவனை வணங்காத நாத்திகர்கள் கூட ஜாதியென்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?.

1400 வருடங்களாக சிந்தித்தவரெல்லாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

Anonymous said...

சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்:

தலித் சூத்திரர் தீண்டத்தகாதவரென பிறந்து இட ஒதுக்கீட்டால் இஞ்சினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே திருமணம் என்று வந்து விட்டால் உயர்ஜாதிப் பெண்களை மணப்பதையே விரும்புகின்றனர், திரு.அம்பேத்கர் உட்பட. எத்துனை பேர் ஓலைக்குடிசைக்கு சென்று சித்தாள் வேலை செய்து பிழைக்கும் மாமன் பெண் கருப்பாயி, மூக்காயிக்கு தாலி கட்டினர் என்பதை சிறிது ஆய்வு செய்தால் நல்லது.

பிரச்னை என்னவென்றால், திருமணம் செய்த தம்பதியருக்குள் மேல்ஜாதி கீழ்ஜாதி வேற்றுமைகள் உடனே தலைதூக்கி விடுகிறது. "உனது பெற்றோருக்கு தனியாக வீடு வாங்கி கொடுத்து விடு. இங்கே அவர்கள் வரக்கூடாது. நம்மோடு இருந்தால், நமது சமூக அந்தஸ்துக்கு ஒத்து வராது. நீ அவர்களை தனியாக சந்திப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நமது குழந்தைகளை அழைத்துச் செல்லாதே" போன்ற நிபந்தனைகளை ஏற்று உயர்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்யும் நிலை. ஒரு அடிமை சாசனத்திலுருந்து விடுபட்டு மற்றொரு அடிமை சாசனம் எழுதித் தரவேண்டிய நிலை.

அப்படியும் பிரச்னை தீர்ந்ததா?. கல்யாணம் காட்சிகளில் மாமனார் வீட்டு ஹை சொசைட்டியினரின் மறைமுக தீண்டாமை. அதிலும் குழந்தைகளின் சாயல், தந்தை வழி மரபணு பக்கம் சென்று விட்டால் கேட்கவே வேண்டாம். கூடப் பிறந்த தங்கைகள், அய்யங்கார் வீட்டுக் கல்யாணத்தில் தன்னை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லையே என்று வைதேகி ஆண்டியப்பன் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழும் நிலை.

"கிரீமி லேயரா?... உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?. எனது கணவரின் ஐ.ஏ.எஸ் அதிகாரம் இங்கே செல்லுபடியாகாது. தடுக்கி விழுந்தால் இந்த சபையில் ஹார்வேர்டும், ஸ்டான்ஃபோர்டும்தான். நான் ஒரு நவீன தலித்" என்று எண்ணிக் கொண்டார்.

*************************

அடுத்த வாரம் துபாய் இப்ராஹிம் பாய் பையனின் திருமணம். பெண் மரக்கடை ராவுத்தரின் பேத்தி. ராவுத்தர் பரம்பரை பணக்காரர். 25 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம் பாய் எனும் முத்து, எருமை நாயக்கன் பட்டியில் ரோடு வேலை செய்து கொண்டிருந்தார்.

வைதேகி ஆண்டியப்பன் தம்பதியர் திருமண மண்டபத்தில் நுழைந்ததும் "அண்ணா வாங்க, அண்ணி வாங்க, வணக்கம், சலாமலைக்கும்" என்று இரு வீட்டாரும் தடபுடலான வரவேற்பு.

பிரியாணி சாப்பிட்டு வெத்திலை பாக்கு போட்டும் இப்ராஹிம் பாய் விடவே இல்லை. அவர் கட்டிய புது பள்ளிவாசலை அழைத்துச் சென்று காண்பித்தார். பள்ளியின் நுழைவு வாயிலின் அருகே கல்வெட்டில் "எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இந்த பள்ளியை கட்டியவர் ஜனாப்.இப்ராஹிம் பாய். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே" என்று எழுதப் பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.. வைதேகி ஆண்டியப்பன் தம்பதியருக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு. ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.

இப்ராஹிம் பாயிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு திரும்பும் வழியில், பள்ளியிலிருந்து "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.." எனும் தொழுகை அழைப்பு. "ட்ரைவர்..ஒரு நிமஷம் காரை திருப்பு" என்றனர் வைதேகியும் ஆண்டியப்பனும் ஒரே குரலில்.

இப்ராஹிம் பாய் பள்ளி நோக்கி கார் திரும்பியது. ஆண்டியப்பனும் வைதேகியும் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். அப்துல்லாஹ் ஆமினா என்று தங்களை அறிவித்தனர். குழந்தைகளுக்கு முஹம்மத், பிலால் என்று பெயர் சூட்டினர். இஸ்லாமிய சகோதரர்கள் "மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்" என்று வாழ்த்து தெரிவித்தனர்.

15 நாள் அலுவல் காரணமாக வெளியூர் சென்று வீட்டில் நுழைந்த திரு.அப்துல்லாஹ் அவர்களுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி. 20 வருடங்களில் ஒரு முறை கூட வீட்டு வாசப்படி ஏறாத அப்துல்லாஹ்வின் தலித் பெற்றோர் "வாப்பா வா" என்று கண்ணீர் மல்க வரவேற்றனர்

"நீதியைக் காட்டி, நேர்மையை ஊட்டி
நெறிவழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி, சடங்குகள் பேசி
சமூகத்தை கெடுத்தார் இருமுறை தாரார்
என்ன காலமோ என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ”.