Followers

Friday, February 07, 2014

அமீர் பாஷா பாயின் இறுதி நாட்கள்!



மாலை நேர தொழுகைக்கு முன்பு அரசாங்க அலுவலக வேலைகள் முடிக்கப்பட்டு அமீர் பாஷா அவர்களின் உடல் ரியாத் எக்சிட் 15 ல் உள்ள அல்ராஜி பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உடலை கழுவி சுத்தம் செய்ய அரசு நியமித்த ஆட்கள் தயாராக நின்றிருந்தனர். மிகப் பெரிய குளியல் அறை. பல உடல்கள் அங்கு ஏற்கெனவே குளிப்பாட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அதோடு அமீர் பாஷா அவர்களின் உடலும் குளியலுக்கு தயாரானது. குளியல் முடிந்தவுடன் தூய வெள்ளை உடையால் அவரது உடல் மூடப்பட்டு அவிழாமல் இருக்க துணியைக் கொண்டு இழுத்துக் கட்டப்பட்டது. அதன் பிறகு அதே ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தனர். அதன் பிறகு நமது தமிழ் ஆட்கள் நான்கு பேர் அந்த உடலை தோளில் சுமந்த படி பள்ளியின் உள்ளே கொண்டு சென்றனர். ஏற்கெனவே அங்கு சில உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. தலைநகரான ரியாத்தில் இறந்து போகும் உடல்கள் பெரும்பாலும் இந்த பள்ளியில்தான் குளிப்பாட்டி தொழ வைக்கப்படுவார்கள். எனவே மாலை நேரத் தொழுகைகளில் எப்போதும் பத்து உடல்களாவது வந்த வண்ணம் இருக்கும்.

அன்றும் எட்டு உடல்கள் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. மாலை நேரத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. தொழுகைக்காக தலைவர்(இமாம்) நிற்கும் இடத்துக்கு முன்பாக அந்த உடல்கள் வைக்கப்பட்டன. இறந்தவர்கள் தனது வாழ்நாளில் செய்த பாவங்களை மன்னிக்கும் முகமாக இறைவனிடம் நாம் கோரிக்கை வைப்பதற்காக இந்த தொழுகை இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இது இறந்தவருக்காக செய்யப்படும் பிரார்த்தனை.

மிகப் பெரிய மசூதி. ஒரு வரிசைக்கு 500 பேர் வரை நிற்கும் வகையில் கட்டப்பட்ட அந்த பள்ளியில் 20 வரிசைக்கு மேல் ஆட்கள் தொழ தயாராக நின்றனர். கடமையான தொழுகை முடிந்தவுடன் தலைவர் 'எட்டு இறந்த உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரார்த்தனை தொழுகை இப்பொழுது நடைபெறும்' என்று அரபியில் சொன்னார். உடன் தொழுகைக்காக நாங்கள் அனைவரும் தயாரானோம்.

தொழுகை முடிந்தவுடன் அரசின் ஆம்புலன்சில் அனைத்து உடல்களும் ஒவ்வொரு வண்டியிலும் வரிசையாக ஏற்றப்பட்டது. பாதுகாப்புக்காக ஒரு உறவினர் அந்த உடலோடு வண்டியில் உட்கார வைக்கப்பட்டார். நான் எனது மிட்சுபிசி வாகனத்தை எடுத்துக் கொண்டு நஸீம் மைய வாடியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.

20 நிமிட பயணத்துக்குப் பின் மைய வாடியை அடைந்தேன். வண்டியை உள்ளே கொண்டு செல்லவும் நிறுத்தவும் இடம் இருக்கிறது. எனவே வண்டியோடு உள்ளே சென்றேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் சமாதிகள். ஆண்டான், அரசன், சவுதி, இந்தியன், பாகிஸ்தானி, பிலிப்பைனி, ஆப்ரிக்கன், ஐரோப்பியன், அமெரிக்கன் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளதை பார்த்து மெய் சிலிர்த்தேன். ஒரு முறை இந்த மைய வாடியை பார்க்கும் எவருக்குமே உடம்பு ஒரு முறை உலுக்கி விடும்.

புதிதாக 30 குழிகள் வெட்டப்பட்டு தயாராக இருந்தது. விட்ட இடத்திலிருந்து வரிசையாக வாகனத்திலிருந்து உடல்கள் இறக்கப்பட்டன. நாடு, இனம் வித்தியாசம் இல்லாமல் வரிசையாக உடல்கள் குழிக்குள் இறக்கப்பட்டன. அவரவர் சொந்தங்கள் அவரவரின் உடல்களை பெற்று குழிக்குள் இறக்கினர். நமது அமீர் பாஷா அவர்களின் உடலை இங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் வாங்கி உடலை மண்ணுக்குள் இறக்கினர். மண் உடல் மேல் விழாமல் இருக்க மண் கட்டிகளால் தடுப்பு வைக்கப்பட்டு மண் வெட்டியைக் கொண்டு மண்ணை தள்ள ஆரம்பித்தனர். பல சவுதிகளும் ஆர்வத்தோடு மண் வெட்டியைக் கொண்டு மண்ணைத் தள்ளினர். நானும் எனது பங்குக்கு மண் வெட்டியால் மண்ணை குழியில் தள்ளினேன். இந்த வேலையை செய்வதற்கு கோடீஸ்வரர்களான பல சவுதிகள் 'நான்' 'நீ' என்று போட்டி போட்டுக் கொண்டு எட்டு உடல்களையும் அடக்குவதில் மண்ணை தள்ளுவதில் ஆர்வம் காட்டினர். 'பிடி மண்' போடுவதற்கும் பல சவுதிகள் ஆர்வமாக வந்தனர்.

தனது உறவினரோ சகோதரனோ இறந்தால் எப்படி நின்று வேலை செய்வோமோ அது போல் யாரென்றே தெரியாத அமீர் பாஷா அவர்களின் அடக்கத்துக்கு சவுதிகள் அதிகம் வேலை செய்தனர். அவரின் முதலாளியும், அவரது பிள்ளைகளும் கடைசி வரை நின்று அந்த உடலை சிறந்த முறையில் அடக்க உடலால் உழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

அரபு கலாசாரத்துக்கும் நமது தமிழக கலாசாரத்துக்கும் மக்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நாடு, இனம், மொழி என்று எதிலும் ஒத்து வராத இரு இனங்கள் இஸ்லாம் என்ற ஒன்றிணைக் கொண்டு பாசத்தால் பிணையப்பட்ட இந்த நிகழ்வு எந்த விளம்பரமும் இல்லாமல் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.





அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.

குர்ஆன்[23:55,56]

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, அழகிய வேலைப்பாடுகள் மிக்க மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

குர்ஆன்[26:129]

‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

குர்ஆன்[4:78]

“ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வாழ்வுக்கும், வீழ்வுக்கும் ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்”

குர்ஆன் 7:34

5 comments:

அஸ்மா said...

சலாம் சகோ.

நமக்கு வர இருக்கும் மரணத்தை நினைவூட்டும் பதிவு.

யார் இறந்தாலும் நமக்குரிய‌ நினைவூட்டலாக அதை யார் எடுத்துக் கொள்ளவில்லையோ, அவர்களிடம் இறைவன் மீதுள்ள அச்சமும் மறுமை வாழ்க்கையின் சிந்தனையும் குறைவாகவே இருக்கும் என்றுதான் சொல்ல முடியும்.

அல்லாஹ் நம்மனைவரின் மறுமை வாழ்வையும் மேன்மையானதாக்கி வைப்பானாக!

அஸ்மா said...

சலாம் சகோ.

நமக்கு வர இருக்கும் மரணத்தை நினைவூட்டும் பதிவு. ஜஸாகல்லாஹ் ஹைரா.

அல்லாஹ் நம்மனைவரின் மறுமை வாழ்வையும் மேன்மையானதாக்கி வைப்பானாக!

suvanappiriyan said...

சலாம் சகோ!

//நமக்கு வர இருக்கும் மரணத்தை நினைவூட்டும் பதிவு. ஜஸாகல்லாஹ் ஹைரா//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

பழங்குடி இன பெண்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடத்தி சென்று கற்பழிக்கிறார்கள்; பழங்குடி இன தலைவர் பூரியா குற்றசாட்டு !

மத்திய பிரதேஷ் மாநில கிராம புறங்களில் பரவலாக ஆர்.எஸ்.எஸ் காரர்களால் பழங்குடி-ஆதிவாசி இன பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள் என்று முன்னால் மத்திய அமைச்சரும் ஆதிவாசி இனத்தின் தலைவருமான காந்திலால் பூரியா குற்றம் சாட்டி இருக்கிறார்.

போபாலில் காங்கிரஸ்-ஆதிவாசி இன பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய காந்திலால் பூரியா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆதிவாசி கிராமங்களில் வீடு வீடாக செல்கிறார்கள் உணவும் மற்றும் சில வாக்குறுதிகளுடன் செல்லும் இவர்களின் இவ்வாறான வருகை என்பது பெண்களை லட்சியமாக கொண்டே அன்றி வேறில்லை என்று தெரிவித்த பூரியா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள் என்றும் ஆதிவாசி இன மக்களிடம் எச்சரிக்கை செய்தார்.

இவ்வாறான குற்றசெயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்ய காவல் துறையினர் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.ஆளும் பிஜேபி அரசு சங் பரிவார் குற்றவாளிகளை காப்பாற்றியும் அவர்களை பராமரித்தும் வருகிறது என்றும் பூரியா அவ் விழாவில் பேசினார். பூரியாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திர பாபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து இருக்கிறார்.

காவி பயங்கரவாதிகளின் காவாலித்தனத்தை நாடு காணட்டும்.

http://www.sinthikkavum.net/2014/02/blog-post_7.html

Anonymous said...

பன்றித்தலையை பள்ளிவாசலுக்குள் வீசி அராஜகம் : ஆந்திர மாநிலம் ஆதிலாபாதில் கடும் பதற்றம் !

சங்கபரிவார் கும்பலை சேர்ந்த 5 விஷமிகள் கைது !!

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தின் 'மாதூல்' பகுதியில், தொழுகை நடந்துக் கொண்டிருந்த வேளையில், பன்றியின் தலையை பள்ளிவாசலுக்குள் வீசி, சங்பரிவார் கும்பல் விஷமம் செய்துள்ளது.

அதிகாலை 'பஜ்ர்' தொழுகை வேளையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் வகையில், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தேறியது.

மோப்ப நாய்களின் துணையுடன் தான் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என்ற முஸ்லிம்களின் அழுத்தம் காரணமாக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.

பன்றியின் தலை கிடந்த பள்ளிவாசல் வளாகத்திலிருந்து கிளம்பிய மோப்ப நாய், 'சீனு' என்ற சங்பரிவார் விஷமியின் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு, அங்கிருந்து நேரே காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டது.

இதற்கு முன்பும், சீனு வகுப்புக் கலவரங்களில் ஈடுபட்டவன் தான் என அறிந்த போலீசார், அவன் கொடுத்த தகவலின் பேரில், கிஷோர், அஞ்சையா, கவுடா, சின்னண்ணா ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து கலவரங்கள் நடவாமல் இருக்கும் வகையில் இன்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த மாவாட்ட காவல் கண்காணிப்பாளர், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.

https://www.facebook.com/arhanzozo