'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 26, 2014
தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 2,400 கசையடி
தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 2,400 கசையடி
தாய்-தந்தைக்கு இஸ்லாம் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கி உள்ளது.
சீ என்றுக் கூட சொல்லி விட வேண்டாம் என்றும் கூறுகிறது இஸ்லாம்.
சீ என்றுக் கூட சொல்ல வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் கையை நீட்டி அடிப்பது என்பது ஏற்றுக் கொள்ளும் செயலா ?.
கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
சவுதி அரேபியாவில் தனது தாயுடன் காரில் சென்ற 30 வயது இளைஞர் தாயுடன் ஏற்பட்ட தகராறில் தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கினார்.
இதில் தாயின் பல் உடைந்தது. சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் தாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2400 கசையடியும் வழங்கித் தீர்ப்பளித்தது.
மேலும், 2,400 கசையடிகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை பொது இடத்தில் வைத்து 40 கசையடிகளாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இவை தவிர தாயின் பல்லை உடைத்ததற்காக, மகனின் பல்லை உடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://www.arabnews.com/news/529041
பெண்களுக்கு இஸ்லாத்தில் பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் செய்வோருக்கு இது சவுக்கடி.
இளமை பருவத்திலிருந்து முதுமை பருவம் வரை தாய்க்கு தனி அந்தஸ்த்து உண்டு இஸ்லாத்தில் .
'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார். அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5971.
நன்றி: அதிரை ஃபாரூக்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
"மலபாரில் உள்ள, 'ஒத்தப்பாலம்' என்ற இடத்தில் ஈழவ சாதியைச் சேர்ந்த சிவராமன் என்ற 17 வயது இளைஞர் சாதி இந்து ஒருவரின் கடைக்குச் சென்று 'உப்பு' வேண்டும் என்று கேட்டார்.
மலபாரில் உள்ள வழக்கப்படி 'உப்பு' என்ற சொல்லைச் சாதி இந்துக்கள்தான் பயன்படுத்தலாம். தீண்டப்படாதவர்கள் 'புளிச்சாட்டன்' வேண்டும் என்றுதான் கேட்க வேண்டும். சிவராமனோ தீண்டப்படாதவர். 'புளிச்சாட்டன்' வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக 'உப்பு' வேண்டும் என்று கேட்டார். இதனால் கோபமடைந்த உயர் சாதிக் கடைக்காரர் பலமாக அடித்ததால் சிவராமன் அந்த இடத்திலேயே இறந்து போனார்." (நவம்பர் 4, 1936 - 'பம்பாய் சமாசார்' என்ற இதழில் இச்செய்தி இருக்கிறது)
'உப்பு' என்று கேட்டதற்காக ஒரு கொலையா? என்று இச்செய்தியை நாம் அதிர்ச்சியாக பார்க்கிறோம். இச்சூழல்தான் இந்தியா முழுவதும் அன்று இருந்தது. ஆனால் 2014-லும் பல இந்திய கிராமங்களில் இதுபோன்ற 'சமத்துவ மறுப்பு' தொடரத்தான் செய்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். சமீபகால ஒருசில சம்பவத்தை பார்ப்போம்.
"தீண்டாதவர்கள் சமைத்த சத்துணவு சாப்பாட்டை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று மாணவர்கள் சத்துணவு புறக்கணிப்பு."
"மதுரை அருகே உள்ள கிராமத்தில் தீண்டாதவர்கள் ஊருக்குள் செருப்பு போட்டு நடக்கக் கூடாது. செருப்புக்களை கைகளில் எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்."
தீண்டாமையை கடைப்பிடிக்கும் / வலியுறுத்தும் மனிதர்கள் மனநோய் பிடித்தவர்கள். இவர்களைப் போன்ற மனநோயாளிகளாக நீங்களோ அல்லது உங்களைச் சுற்றியோ யாராவது இருந்தால் அவர்களுக்கு மனநலம் சார்ந்த நிவாரணிகள் தேவை.
ஒருவேளை, தீண்டாமை என்பது மனநோயாக இல்லாமல் தொற்றும் நோயாக இருந்திருந்தால் மலேரியா கொசுக்களை ஒழித்தது போல் ஒழித்திருப்போமே. ஆனால், தீண்டாமை உன்னை தாக்கவில்லை, என்னை தாக்கவில்லை, இன்னொருவனை தாக்குகிறது. அதை இன்னமும் நாம் அனுமதிக்கும் மனநிலை என்பது மனநோய் இல்லையா?
- தமிழச்சி
19/02/2014
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்
20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )
Hussain Ghani
//மேலும், 2,400 கசையடிகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை பொது இடத்தில் வைத்து 40 கசையடிகளாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இவை தவிர தாயின் பல்லை உடைத்ததற்காக, மகனின் பல்லை உடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.//
காட்டுமிராண்டிகளின் சட்டம் இப்படிதானே இருக்கும். அது எங்களுக்கு நான்கு தெரிந்த ஒன்றுதான். காட்டுமிராண்டி முஹம்மதுவை பின்பற்றும் காட்டுமிராண்டிகள் அதில் பெருமை கொள்வதில் வியப்பேதுமில்லை.
/// காட்டுமிராண்டிகளின் சட்டம் இப்படிதானே இருக்கும்.///
உங்கள் பல்லை ஒருவன் உடைத்தால் என்ன செய்வீர்?.
உங்கள் மகளை ஒரு அயோக்கியன் கற்பழித்து கொன்று விட்டான் என வைத்துக் கொள்வோம்(மன்னிக்கவும். அல்லாஹ் அப்படி நடக்காமல் அனைவரையும் காப்பற்றுவானாக). ஆனால் எந்த ஆதாரமுமில்லையென கோர்ட்டில் நிரூபித்து தப்பி விடுகிறான்.
சில நாட்களுக்குப் பிறகு அவன் குடித்து விட்டு தெரு முனையில் இருட்டில் மயங்கிக் கிடக்கிறான். சுற்றிலும் யாருமில்லை, நீங்கள் மட்டும்தான் அங்கே நிற்கிறீர்கள். அருகில் ஒரு பெரிய பாராங்கல் கிடக்கிறது.
நீங்கள் என்ன செய்வீர்?
----------
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ரத்தத்துக்கு ரத்தம், உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை என்பதுதான் திருக்குரான் சொல்லும் நீதி.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்று திருக்குரான் போதிக்கவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால், அறைந்தவன் கையை உடை, அவன் மீது ஜிஹாத் செய், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு என போதிக்கிறது. அந்த பயம் இருந்தால், கையை ஓங்குவானா?. உங்களுக்கும் அதுதான் நீதி, எங்களுக்கும் அதுதான் நீதி.
திருக்குரானுக்கு மேல் எந்த கொம்பனாலும் மனித நீதி சொல்லவே முடியாது.
//கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ரத்தத்துக்கு ரத்தம், உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை என்பதுதான் திருக்குரான் சொல்லும் நீதி.//
இதுதான் காட்டுமிராண்டித்தனம்.
/// இதுதான் காட்டுமிராண்டித்தனம். ///
தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துக் கொண்டால் எப்படி?. முதல் கேள்விக்கு பதில் சொல்ல பயமா?.
Post a Comment