Followers

Sunday, October 25, 2015

கோமாதாவுக்காக குல மகளை பலியிடப் போகிறார்களாம்!மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பெங்களூரு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சேத்தனா தீர்த்தஹள்ளி கன்னடத்தில் 5-க்கும் மேற்பட்ட புனைவு நூல்களை எழுதியுள்ளார். அவ்வப்போது இலக்கிய இதழ்களில் பெண் அடிமை, வரதட்சணை கொடுமை, சாதி கொடுமை ஆகியவற்றை எதிர்த்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

நாட்டில் அதிகரித்துவரும் எழுத்தாளர்கள் மீதான வன்முறை, தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்ட விவகாரம், கோயிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் எரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை கண்டித்து தமது பேஸ்புக்கில் அவர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த மாத‌ம் பெங்களூருவில் நடைபெற்ற மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்று மாட்டிறைச்சி சாப்பிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பல்வேறு இந்துத்துவா அடிப்படைவாதிகள் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு பேஸ்புக் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இன்னும் சிலர் முகத்தில் ஆசிட் வீசப்போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த மதுசூதன கவுடா பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில்,

‘‘இந்து மதத்தை அவமதித்து மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கல்புர்கியைப் போல சேத்தனா தீர்த்தஹள்ளியை கொலை செய்வேன்’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்தனா தீர்த்தஹள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் மதுசூதன கவுடாக்கு எதிராக புகார் அளித்தார். போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததால் நேற்று பெங்களூரு மாநகர துணை ஆணையர் லோகேஷ் குமாரை சந்தித்து புகார் அளித்தார்.

இதனை பெற்றுக்கொண்ட லோகேஷ் குமார்,

‘‘எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்வார்கள்’’என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
25-10-2015

நமது நாட்டை நாசமாக்கியே தீருவோம் என்று வெறி பிடித்த இந்துத்வா கூட்டம் களமிறங்கியுள்ளது. கண்டிப்பாக இவர்களின் முயற்சியை பெரும்பான்பை இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் முறியடிப்பார்கள். இந்துக்களாலேயே இந்துத்வாவாதிகள் அடித்து விரட்டப்படும் காலமும் வரும். அது வரை பொறுத்திருப்போம்.

2 comments:

Dr.Anburaj said...

இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்க வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் குழப்பங்கள் வரும். முஸ்லீம்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டு விட்டுப் போகட்டும். இந்துக்கள் சாப்பிட வேண்டாம். நான் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டேன் சாப்பிட்டதும் இல்லை. சாப்பிடப் போவதும் இல்லை.பட்டினியால் செத்தாலும் சாி.
அதற்கான மாட்டுக்கறி தின்னும் விழாக்களை நடத்துகின்றவன் நீசன்.வம்புக்காரன்.

Dr.Anburaj said...

அன்புடன் இஸ்லாம் என்ற வலைதளத்தில் இருந்தது

நான் சவுதி அரேபியாவில் 18 வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன்
நான் சவுதி அரேபியாவில் 18 வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன்.

எனக்கு வாழ்வளித்த நாடு என்ற நன்றியுணர்வு எனக்கு மிகவும் அதிகம். அங்குள்ள சில நல்ல விசயங்கள் எனக்குப் பிடிக்கும்.ஆனால்....
வேலைக்கு ஆட்களைக் கொண்டுவருவதிலும், அவர்களுக்கான உரிய வேலையைக் கொடுப்பதிலும், விரும்பிய வேலையில் மாறுவதற்கான உரிமையைக் கொடுப்பதிலும், சம்பளம் தராமல் கொடுமைப் படுத்துவதிலும் சவுதி அரேபியாவில் நான் இஸ்லாமியச் சட்டங்களைக் கண்டதில்லை.பணி நிமித்தமாக வந்தர்களை ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குக்கூட பயணப்படவிடாமல் தடுப்பதிலும். எந்த ஒரு சாலை விபத்திலும் வெளிநாட்டவர்களையே பலிகடாக்களாய் ஆக்குவதும் அங்கே நான் கண்டவை.

பணியாளர்களுடன் பழகும் விதத்தில் ஒரு துளியும் அன்பும் பண்பும் இருக்காது.

பணியாளர்களைப் பணியாளர்களாகப் பார்ப்பதில்லை பெரும்பாலும் அடிமைகளாகத்தான் பார்ப்பதைக் கண்டிருக்கிறேன்.

இது எதையுமே நபிகள் நாயகம் விரும்பியதில்லை. அவரின் சொல் அவர் பிறந்த மண்ணில் இன்னும் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை.

சில நல்லவர்களைக் காணலாம் ஆனால் அதன் விழுக்காடு மிகவும் குறைவாகவே இருந்தது. இப்போது கொஞ்சம் மாறி இருக்கலாம். மாறி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எனது கடிதம்”

இந்தியாவில் மக்களை 10000 வருடங்களுக்கு மேலாக பக்குவப்படுத்த நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு எவ்வளவு பலன் என்பதை யார்முடிவு செய்வது.பிரம்மச்சரியம் என்றும் ஏக பத்தினிவிரம்,பிறன்மனை நோக்கா பேராண்மை என்றும் அற்பதமாக மனித நேயத்தை மானுடத்தை,சகோதரத்துவத்தை எடுத்துச் சொல்லியும் காட்டுமிராண்டிகளுக்கு பஞசம்யில்லையே.திருக்குறள,தொல்காப்பியம் (கொளதம புத்தர் )போன்றவை காலத்தால் குரானுக்கு முந்தியவை.இருப்பினும் 5வயது சிறுமியைக்கூட காம வல்லுறவு கொள்ளும் செய்திகளை இந்திய மண்ணில் நடப்பதாக கேட்கும்போது மனம் என்னவோ வேதனைப்படுகிறது.
மக்களுக்கு சிறு வயது முதல் அமைதியாக அமர்ந்து வழிபாடு -தியானம் - செய்யக் கற்றுக் கொடுக்காததுதான் பெரிய தவறு. அன்று மனுதர்மம் மக்களைக் கெடுத்தது.இன்று சமயசார்பற்றத்தன்மை என்று இந்துக்களுக்கு பண்பாட்டுணர்வை ஏற்படுத்தாமல் காட்டுமாடுகளாய் வாழவிட்டுவிட்டோம். பயிற்சியற்ற காட்டுமாடு என்ன செய்யும் ????????? நாட்டுநிலைமை யைச் சொல்ல வேண்டுமோ ?இறைவா இந்தயாவைக்காப்பாற்று? எனது இளைஞர்கள் பிரம்மச்சரயித்தில்,எகபத்தினிவிரத்தில் உறுதி கொள்வது என்று !