Followers

Saturday, October 24, 2015

ஆரிய ஆர்.எஸ்.எஸின் சதிகளும் தமிழக சவால்களும்!மத்தியில் இப்போது பாஜக அரசு ஆட்சி நடத்தினாலும் அவர்களை எல்லா துறைகளிலும் இயக்கும் இயங்குசக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்தான் என்பது அரசியல் தெரிந்த சாதரணமானவர்களுக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்த மதவெறிக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கத்தை அறிந்து கொண்டால் தான் அவர்களின் எதிர்கால சதிதிட்டமென்ன என்பன போன்ற பலவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த மதவெறிக் கும்பல் அடுத்த இலக்காக வைத்திருப்பது அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் இரு மாநிலத் தேர்தல்கள் தான். அதில் ஒன்று மேற்கு வங்காளம், மற்றொன்று தமிழகம். இந்த சூழ்நிலையில் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் வண்ணம் இந்த சிறியக் கட்டுரையை எழுதுகிறோம். இதுவே முழுமையானது அல்ல.

முதலில் ஆர்.எஸ்.எஸின் நோக்கத்தை தெரிந்து கொண்டால் தான் அதன் இன்றைய செயல்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்தியா இந்துக்களின் நாடு என்றும், இங்கு வாழும் அனைவரும் இந்துக்களே என்றுகூறி மத அடிப்படைவாதத்தையும், சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களை சேர்ந்தவர்களுக்கு எதிரான முழக்கத்தையும் முன்வைத்து, 1925ல் ஆர்.எஸ்.எஸ் உதயமாகிறது. அன்றிலிருந்து தனது அடிப்படைவாதத்திற்கு வலுவூட்ட பல்வேறு மதக்கலவரங்களையும், கொலைகளையும் செய்து வருகிறது. அதன் உச்சம் தான் கோட்சே என்பவனை வைத்து காந்தியை சுட்டுக் கொன்றது.

இப்படி கொடூரமான செயலை செய்த ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது இதுவரை நான்கு முறை இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டோமென்று மன்னிப்பு கேட்டு தடையை நீக்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு மோசமான இயக்கமான ஆர்.எஸ்.எஸின் பிடியில் தான் இந்தியா சிக்குண்டுள்ளது. இவர்களின் கருத்துகளை வலுவூட்ட கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும். அப்படிப்பட்ட சூழல் தான் இப்போது இருக்கிறது என்பதை உணர்ந்து தான் மோடியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

மோடி வருகையும் ஆர்.எஸ்.எஸின் திட்டமும்:

கடந்த ஜீலை’2013 அன்று மஹாராட்டிராவிலுள்ள அமராவதி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் ஆரிய இனவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் கூட்டம் நடைபெற்றது. அதில் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதுதான் சிறந்த நேரம் ஆர்.எஸ்.எஸின் துணையுடன் பாஜகவை ஆட்சியில் ஏற்றி நமது கொள்கைகளை நாடெங்கும் கொண்டு செல்வோமென்று மேற்கு வங்கம் மற்றும் ஓரிசாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பேசினார்கள்.

அதன் விளைவே இளம் வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்சின் நீண்ட கால உறுப்பினரும், குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களைப் படுகொலை செய்த மோடியை சீனியரான அத்வானியை ஓரம்கட்டி பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறார்கள். பெரிய பெரிய கார்ப்ரேட் முதலாளிகளும் மோடியைக் கொண்டுவர கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க, விளம்பரங்கள் மூலமே 26 மே 2014ல் ஆட்சியை பிடிக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

பாஜகவில் ஆர்.எஸ்.எஸின் ஆட்கள்:

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் வேலை தொடங்குகிறது. அதாவது மோடியின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸில் இருந்த ஏழு பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதில் முக்கியமானவர் வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். இவர்தான் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவர வேண்டுமென்று தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.

மேலும் அந்த கட்சியில் தலைவராக அமித் ஷாவை கொண்டு வருகிறார்கள். இவர் ஒரு அதிதீவிரமான ஆர்.எஸ்.எஸ்காரர். அதுபோக கட்சியில் தற்போது பொதுச் செயலாராக இருக்கும் ஐந்துபேர்களில் மூன்று பேர் (ராம் மாதவ், ராம் லால் மற்றும் முரளிதரராவ்) ஆர்.எஸ்.எஸினால் நேரடியாக பாஜகவுக்கு அனுப்பப்பட்டவர்கள். மீதமுள்ள இரண்டு பேர் (புபேந்திர யாதவ் மற்றும் சரோஜ் பாண்டே) ஆர்.எஸ்.எஸிடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இதுபோக இதுவரை இல்லாத நடைமுறையாக அமித் ஷா நான்கு இணைச் செயலாளர்களை நியமிக்கிறார். அவர்கள் நால்வரும் ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர்கள்.

மேலும் நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளான பண்பாடு, கலாச்சாரம், கல்வி முதலியனவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸின் ஆட்களே நியமிக்கப்படுகிறார்கள். உதாரணமாக

1. ஆர்.எஸ்.எஸ் ஊறுப்பினரான கஜேந்திர சவுகான் இந்தியாவின் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி இயக்குனரகத்தின் தலைவராகிறார்.

2. ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான பல்தேவ்சர்மா தேசிய புத்தக அறக்கட்டளைக்கு தலைவராகிறார்.

3. ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருக்கின்ற இந்தர் மோகன் காபபி என்பவர் பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினராகிறார்.

4. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான ஓய்.சுதர்சன ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படி நாடு முழுவதையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் அதி தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸின் தற்போதைய செயல்திட்டங்கள்

ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை இந்தியாவெங்கும் பரப்ப, அதிகாரம் தனது கைகளில் இருக்கும் இந்த நேரம் தான் சரியானது என்று முடிவெடுத்து எந்தெந்த மாநிலங்களெல்லாம் தனக்கு செல்வாக்கு இல்லையோ, அங்கே மத அடிப்படை வாதத்தையும் போலி மோதல்களையும் உருவாக்கி அதன்மூலம் தனது செல்வாக்கை நிலைநிறுத்த தற்போது தீவிரமாக முயற்சி செய்கிறது. இதை தற்போது நடந்து கொண்டிருக்கும் பீகார் தேர்தலைப் பார்த்தாலே நமக்குப் புரியும்.

2014ல் உத்ரபிரதேசத்தில் அமித் ஷாவை தலைவராகக்கொண்டு ஆர்.எஸ்.எஸின் காவி தொண்டர்களும், பாஜகயினரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தனர். இதில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 71 இடங்களை கைப்பற்றியது. அதேபோல அடுத்தடுத்து நடக்கும் எல்லா மாநிலத் தேர்தலைகளையும் குறி வைத்திருக்கிறது. அதில் தற்போது முதலில் இருப்பது பீகார், அடுத்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் தான்.

உத்திரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனும் 100 பேரையாவது பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டுமென்றும், மேலும் அந்த 100 பேருக்கும் தான் ஒரு இந்து என்றும், சிறுபான்மையினர் நமக்கு எதிரிகள் என்றும் நம்ப வைக்க வேண்டும் என்பது தான் அயோக்கியன் அமித் ஷாவின் தேர்தல் வியூகம். அதன்படியேதான் தற்போது மேற்கு வங்காளத்திலும் தமிழகத்திலும் தனது வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்கிறது.

ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டமும் மேற்குவங்கம் மற்றும் தமிழகம் ஓப்பீடும்

மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு இரண்டும் மத அடிப்படை வாதத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கும் மாநிலங்கள். அதிலும் குறிப்பாக தமிழகம் இவர்களின் புரட்டுக்களை இராண்டாயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வந்தவர்கள். மேற்கு வங்காளம் கம்யூனிச சித்தாந்தத்தையும், தமிழகம் பகுத்தறிவு சித்தாந்தத்தையும் கொண்ட மாநிலங்கள்.

இந்தச் சூழலில் மேற்கு வங்காளத் தேர்தல் குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் இந்த வருடத்தில் மட்டும் 5 முறை நடந்துள்ளது. கடந்த முறை 2011ல் நடந்த தேர்தல்களில் மொத்தமிருக்கிற 290 இடங்களில் ஒரு இடம் கூட பாஜக வெல்லவில்லை என்பதை மாற்ற வேண்டுமென்று மோடி விரும்புகிறார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா பேசியிருக்கிறார். மேலும் இங்கு யார் தலைவராக வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்சே முடிவு எடுத்துக் கொள்ளலாமென்றும் ஓப்புதல் அளித்திருக்கிறார் அமித் ஷா. மேலும் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுவதன் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை முழுவதையும் மற்றும் சீனா எல்லையோரத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் பேசியிருக்கிறது. இதனை பாஜகவின் மூத்த தலைவரான சித்தார்த் நாத் சிங் தனது பேட்டி ஒன்றில் அறிவித்தார்.

இதனையடுத்து மேற்குவங்காளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிட்டது,. முதன்முறையாக அந்தத் தேர்தலில் அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் ஆளை நிறுத்தி தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டது. அந்த தேர்தலில் குறைந்தளவு வெற்றியை பெற்ற போதிலும் அதாவது மொத்தமிருந்த 1943 இடங்களில் வெறும் 16லிருந்து 74 இடங்களையே பெற்றிருந்தது. இருந்தாலும் எங்களுக்கும் மேற்கு வங்காளத்தில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிற்கவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்; நாங்களும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மம்தா பேனர்ஜியின் கட்சிக்கு இணையாக இங்கு இருக்கிறோமென்று மக்கள் மனதில் நிலைநிறுத்தியது. அடுத்ததாக அது கையில் எடுத்தது மதச்சண்டைகள்.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை 1971ல் வங்கதேசம் தனிநாடாகப் பிரிந்த போது உருவான இந்து முஸ்லீம் பிரச்சனைகளை தவிர, அங்கு அதன் பிறகு பெரிதாக மதச்சண்டைகள் உருவாகவில்லை. ஆனால் இன்று தொடர்ச்சியாக அங்கு மதச்சண்டைகளை உருவாக்கும் விதமாக தொடர்ந்து பேசி சிறுபான்மையினருக்கு எதிரான அணி திரட்டலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இதுதான் தமிழகத்திலும் நடந்தது/நடக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது அது பெற்ற இடங்கள் கார்ப்ரேசன் கவுன்சிலர் 4, முனிசிபால்டி சேர்மன் 2, முனிசிபால்டி கவுன்சிலர் 37, பாஞ்சாயத்து தலைவர் 13 மற்றும் வார்டு மெம்பர் 181 பேர் என மொத்தம் 237 இடங்களை கைப்பற்றி, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. அதன் மூலம் ஒரு பெரிய கூட்டணியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தி பாஜக என்ற கட்சியை மாற்று கட்சியாக முன்னிலைப்படுத்தியது.

மேலும் தனக்கு வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரைத்து, அதன் மூலம் கிராமம் தோறும் தமிழகத்தில் காலூன்றுகிற ஒரு முயற்சியையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செய்கிறது.

இது ஒருபுறமென்றால் மறுபுறம் முன்னைவிட வீரியமாக அவ்வப்போது மாட்டிறைச்சிக்கு தடை, இடஓதுக்கீடுக்கு எதிரான முழக்கங்கள், பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க வேண்டுமென்று புதுப்புது சர்சைகளைக் கிளப்பி அதன் மூலம் மக்கள் மனநிலையையும் முற்போக்கு இயக்கங்களின் மனநிலையையும் எடை போடுகிறது. மேலும் தனக்கு சாதகமான ஆட்களை காட்சி ஊடகங்களில் வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸின் கருத்துகளை மக்கள் கருத்தாக மாற்றும் வேலையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையும் சிலர் ‘நாமெல்லாம் இந்துக்கள் தானே, ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தால் நல்லது தானே’ என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறுயில்லை. ஏனென்றால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி சொன்னது ’சிங்களவர்களுக்கும் எங்களுக்கும் ஆரிய உறவு’ என்று. அப்படியானல் தமிழர்கள் யார்? அவர்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது தமிழர்கள் வேறு; இந்துக்கள் வேறு என்று. ஆனால் இங்கு தான் சிலர் ‘என் பெயர் கோபலாகிருஷ்ணன்’ என்று 16வயதினிலே சப்பாணி மாதிரி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவன் தமிழர்களை எதிரியாகவே பார்க்கிறான்/பார்ப்பான்.

ஒருவேளை இந்தியாவெங்கும் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுகிறதென்றால் அது ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய இனமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே இருக்கும். இதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாயாஜி ஜோசி சமீபத்தில் தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதாவது “இந்துஸ்தான் என்பது இந்துக்கள் வாழும் இடம். எனவே இங்கு வாழும் அனைவருமே இயற்கையாகவே இந்துக்கள் தான். இதனை மறுப்பவர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை” என்ற பகிரங்க மிரட்டலை விடுத்திருக்கிறார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று வெளியுலகை நம்ப வைத்துக்கொண்டு அதற்கு வேட்டுவைக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் இந்த ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் மக்கள் புரிந்துகொண்டு புறக்கணிக்க வேண்டும். இதனை தமிழர்களாகிய நாம் தொடங்கி வைப்போம்.

- சு.கி.கொண்டல், மே 17 இயக்கம்

எழுத்தாளர்: சு.கி.கொண்டல்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2015

7 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

பார்ப்பனீயத்தை வேரறுக்க இஸ்லாமே இறுதித் தீர்வு. தமிழகத்தை வலிமைமிக்க இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம்:

முஸ்லிமை கொலை செய்தது பற்றி பேசினால், தலித்தை கொலை செய்கிறான். தலித்தை கொலை செய்தது பற்றி பேசினால், முஸ்லிமை கொலை செய்கிறான். வேறு வழியில்லாவிட்டால், “அய்யோ பாக்கிஸ்தான் வர்ரான், பாக்கிஸ்தான் வர்ரான்” என பூச்சாண்டி காட்றான்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமை ஒழிந்து நல்வாழ்வு மலர இஸ்லாமே இறுதித்தீர்வு. தலித் சகோதரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், தமிழகத்தில் கலீபா உமரின் நல்லாட்சி மலரும். சவூதி அரேபியா, துபாய், மலேஷியா, புரூனே போன்ற பணக்கார முஸ்லிம் நாடுகள் பல பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும்.

வட்டியில்லா வங்கி, பைத்துல் மால் ஆகியவற்றை பட்டி தொட்டியெங்கும் நிறுவி, சவூதியை விட பல மடங்கு பணக்கார நாடாக தமிழகத்தை 5 வருடங்களில் நம்மால் மாற்றிக்காட்ட முடியும். பாலும் தேனும் ஆறாக ஓடும்.

பாப்பானை அட்ரஸ் இல்லாமல் செய்யும் நேரம் வந்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவட்டும். ஒரு வலிமை மிக்க இஸ்லாமிய தேசமாக தமிழகம் மாறும்.

“எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழமுடியும், இன்ஷா அல்லாஹ்”.

பாப்பானால் என்ன புடுங்கமுடியும்?.

முஹம்மத் அலி ஜின்னா said...

ரிஷிமூலம் நதிமூலம்:

இஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதியை விட்டு வெளியேறி வந்த பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். சொல்லப்போனால் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷி எனும் பிராமணர் குலத்தில்தான் அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான்.

பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அபுதாலிப். அவருடைய மரண தருவாயில், பெருமானார்(ஸல்) அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறார். அப்பொழுது “நான் விரும்பினாலோழிய இஸ்லாத்துக்கு யாரும் வரமுடியாது. உங்களுடைய கடமை எடுத்துச்சொல்வது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்” என அல்லாஹ் பெருமானாரை(ஸல்) கண்டித்தான்.

இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கலீபா உமர் காபாவில் 360 சிலைகளின் பெரிய பார்ப்பன பூசாரியாக இருந்தார். ஒரு நாள் “முஹம்மதின் தலையை கொய்து வருகிறேன்” என ஹுபால் சிலை மீது சத்தியம் செய்து உருவிய வாளுடன் கலீபா உமர் கிளம்பினார். செல்லும் வழியில், திருக்குரானின் வசனங்களை கேட்டு, கண்ணீர் வழிய உடல் நடுங்க பெருமானாரின்(ஸல்) கைகளைப் பற்றி இஸ்லாத்தை தழுவினார்.

அண்ணல் நபியின்(ஸல்) முதல் எதிரி அவருடைய சொந்த பார்ப்பன பெரியப்பா அபு லஹபும், உறவினன் அபு ஜஹலும்தான். உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடை 360 சிலைகளை வணங்கிகொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என்று காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனயும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.

இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களான அபு பக்கர் சித்தீக், உமர், உஸ்மான், ஹஜ்ரத் அலி ஆகிய அனைவரும் காபாவில் 360 சிலைகளை வணங்கிய பார்ப்பன குலத்தில் பிறந்துதான் இஸ்லாத்தை தழுவி இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவர்களாக மாறினர்.

மெக்காவில் இஸ்லாத்தை தழுவிய பிராமின்ஸ்தான் இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தனர். காஷ்மீரில் (இந்தியா + பாக்கிஸ்தான்) வாழும் 2 கோடி முஸ்லிம்களும் பட், சவுத்ரி, ராவ், கசூரி, கேர், குரு போன்ற ப்ராஹ்மின் பண்டித ஜாதிப்பெயர்களை தாங்கி இன்றைக்கும் வாழ்கின்றனர். இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியவர் காஷ்மீர், ஆப்கான், சிந்து, பாக்கிஸ்தான் ஆகிய இடங்களை ஒன்றாக இணைத்த “ஆரியவர்த்தா” எனும் பிராமின் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த பிராமின்ஸ்தான் என்பது கண்கூடு.
—————————————–

அன்னை ஆயிஷா யார்?:

அன்னை ஆய்ஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். ஆண்பாலை குறிக்கும். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பட்டம். shastry எனும் பெயர் ஆதாரம்).
-----------------------

ஆகையால் பிராமின் சமுதாயம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றவேண்டும் என்பதே எங்களுடைய அழைப்பு. இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். வறுமை ஒழிந்து அமைதி மலரும். “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” என்பதுதான் திருக்குரானின் அடிப்படை. அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

பார்ப்பனீயத்தை ஒழிக்க, பிராமின் சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவட்டும். பிராமின் சகோதரா, வர்ணதர்மத்தை விட்டு வெளியேறு. திருக்குரானை எடு. உனது முன்னோர்களின் அக்ரஹாரம் புனித மெக்கா நோக்கி உனது குதிரையை செலுத்து.

முஹம்மத் அலி ஜின்னா said...

பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:

திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் "இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்" என நபிகள் நாயகம் அறிவித்தார்.
சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார்.

"ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்" எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.

"நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்" என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது.

இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.

இது தவிர, "ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது" எனும் அல்வாவை ப்ராமின் பனியா ஆதிக்க கூட்டம் அம்பேத்கருக்கு கொடுத்தது. ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.

வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.
-------------------

பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. "நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை" என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் "நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்" என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

ஆகையால்தான் தந்தை பெரியார் "ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு" என போதித்தார்.

Dr.Anburaj said...

ராஷடிாிய ஸவயம் சேவக சங்கம் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெரும் அளிவிற்கு இந்து மக்கள் இந்து பண்பாட்டில் ஒழுக்கத்தில் நிலைபெறுவாா்கள். மனித அறங்கள் ஓங்கி மனித வளம் பெறுகும்.சாதி மோதல்கள் அடியோடு அழிக்கப்படும். ஆாியசாமாஜம் செய்தது போல் ஸ்ரீநாராயணகுருசாதித்தது போல் மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களை ஒரு குடும்ப உறவிற்குள் வைத்தால்தான் சாதிச்சண்டை போட இயலாதவனாகிவிடுவான். எனவே ஒவ்வொரு இந்துவும் தன்னை இன்ன சாதிக்காரன் என்று உணரும் வரை சாதிச்சண்டைகளை ஒழிக்க முடியாது. அரேபிய மத உலகத்தில் சியா - சன்னி தாவாக்களால் பள்ளி வாசல்களில் சமய ஊா்வரங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் செய்திகள் தினசாி படிக்கலாமே. இந்தியா எவ்வளவோ பரவாயில்லையே. இந்து என்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பயிற்சியை ஆா் எஸஎஸ் அளித்து வருகின்றது. தன்னை இந்துவாக ஆழமாக நம்புகின்றவா்கள் யோக்கியனாக சாதிச சண்டை போடாதவனாக தனது மகன் வேறுசாதிப் பெண்ணை காதலித்து கூட்டிக் கொண்டு வந்தாலும் அன்புடன் மருமகளாக ஏற்கும் பண்பாடு உள்ளவனாக வாழ்ந்து வருகின்றான். இதுதான் இந்தியாவிற்கு தேவை. ஆா் எஸஎஸ் வளா்ச்சி இந்து விரோதிகளின் வீழ்ச்சி. அறங்கள் வளரும். அநியாயங்கள் தேயும். ஆா் எஸஎஸ் நாட்டிற்கு தேவை. அதன் கொள்கைகள் தெளிவாகவை. இந்திய மக்களின் பன்முக பண்பாட்டை ஏற்று வாழ மக்களை தயாா் செய்ய ஆா் எஸஎஸ் போன்று ஆயிரம் இயக்கங்கள் தேவை. ஆா் எஸஎஸ் வளர வளர அரேபிய அடிமைகள் திருந்தி விடுவாா்கள்.

Dr.Anburaj said...

இந்து மதத்தின் எதிாிகளை, அரேபிய காடையா்களை எதிா் கொள்ளும் துணிவு திரன் தியாகம் அனைத்தும் எல்லா இந்துக்களுக்கு உள்ளது. குறிப்பாக ஆா்.எஸ்எஸ் இயக்கத்திற்கு உள்ளது.
ஆா்.எஸ்எஸ் அன்பா்கள் பாடும் பாடலில் ஒரு பகுதி .

செல்வத்தை தந்தேன் உடலின் உழைப்பினைத் தந்தேன்
பிறவிகள் அனைத்தும் உனக்கு அா்ப்பணம் செய்தேன்
என்ன தந்த போதும் மனம் அமைதியற்றதால் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அா்ப்பணம்
ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெயபகவா

Dr.Anburaj said...


சிறு தி்ருத்தம்
செல்வத்தை தந்தேன் உடலின் உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அா்ப்பணம் செய்தேன்
என்ன தந்த போதும் மனம் அமைதியற்றதால் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அா்ப்பணம்
ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெயபகவா

C.Sugumar said...

சிறு தி்ருத்தம்
செல்வத்தை தந்தேன் உடலின் உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அா்ப்பணம் செய்தேன்
என்ன தந்த போதும் மனம் அமைதியற்றதால் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அா்ப்பணம்
ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெயபகவா

இவ்வளவு உத்தம குணங்களை விதைக்கும் இயக்கத்தை விஷம் என்று பிரச்சாரம் செய்வது முட்டாள்தனமானது.அரேபிய வல்லாதிக்க அடிமைத்தனம் ஆகும். அரேபிய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுங்கள். இந்தியாவை நேசியுங்கள்.