Followers

Saturday, October 03, 2015

இந்துத்வாவின் மிரட்டலுக்கு பணிய மறுக்கும் நேபாளம்!(நேபாள பாரளுமன்றத்தில் சமய சார்பற்ற நாடாக ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவுடன் உறுப்பினர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி)

உலகில் உள்ள ஒரே இந்து நாடு நேபாளம் என்பதால் மோடி அரசு பல சலுகைகளை முன்பு அந்த நாட்டுக்கு வழங்கி வந்தது. ஆனால் அங்கு கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கி நேபாளத்தை இந்து மத நாடு என்ற அடையாளத்தை நீக்கி 'மதசார்பற்ற நேபாளமாக' மாற்றி விட்டனர். உடன் மோடிக்கும் அமீத்ஷாவக்கும் மூக்கின் மேல் கோபம். பல கலவரங்களை உண்டாக்கி இந்தியாவை இந்துத்வா நாடாக மாற்ற முயற்சிக்கும் வேளையில் இப்படி ஒரு சிக்கலா? என்ற கோபத்தில் நேபாளத்துக்கு அனுப்பி வந்த பெட்ரோலிய பொருட்கள் முதற்கொண்டு பல அத்தியாவசியப் பொருட்களை இந்திய இந்துத்வா அரசு தடுத்து வைத்துள்ளது.

நேபாளத்தின் உதவி பிரதமரும் உள்துறை மந்திரியுமான பாம்தேவ் கவுதம் டிஎன்ஏ செய்தி ஸ்தாபனத்தக்கு அளித்த பேட்டியில் 'இந்தியாவின் இந்த செயலால் அப்பாவி பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவும் ஒரு வகையில் எங்களுக்கு நல்லதுதான். எப்போதும் இந்தியாவையே சார்ந்திருக்காமல் மாற்று வழிகளை தேட இது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்' என்கிறார்.

தலைவலி போய் தற்போது மோடிக்கும் அமீத்ஷாவக்கும். திருகு வலி வந்துள்ளது. அண்டை நாடுகளில் நேபாளம் எப்போதும் நம்மோடு நட்புடனேயே இருந்து வந்துள்ளது. இந்துத்வா ஆட்சியினால் இன்று அந்த நாடும் நம் கையை விட்டு போகப் போகின்றது. சீனாக்காரன் இனி ராணுவத் தளத்தையும் அங்கு நிறுவி வீடுவான்.

கோமாளிகளின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் ஹாஸ்யங்கள் அரங்கேறப் போகிறதோ?

மன் மோகன்சிங், ப. சிதம்பரம், சோனியா காந்தி போன்றோரின் அருமை இப்போதுதான் நமக்கு தெரிகிறது.

தகவல் உதவி
dnaindia
ndtv
28-09-2015

1 comment:

முஹம்மத் அலி ஜின்னா said...

அரேபியாவில் ஒரு தனி ஹிந்து தேசம்:

இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர். ஜீஸஸ்தானாக்க வாட்டிகனுடன் சேர்ந்து கிருத்துவ சர்ச் முழுமூச்சில் செயல்படுகிறது. காலிஸ்தான், காஷ்மீர், மாவோயிஸ்ட், மணிப்பூர், நாகலாந்து மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசமாக மாற்ற வேண்டுமானால் “அரேபியாவில் ஒரு தனி ஹிந்து தேசத்தை” ஹிந்துக்கள் உருவாக்குவதே அருமையான தீர்வு.
——————–

துபாயில் மோடியை வைத்து பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் அரபி பேச வைத்தபின், அரபியை எப்பொழுது உதைக்கலாம் என 60 கோடி இந்தியா-பாக்கிஸ்தான் முஸ்லிம்களும் பாக்கிஸ்தான் ராணுவமும் கறுவிக்கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.

இதற்கான முதல் கட்டம்தான் “இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என RSS, BJP, ஹிந்துத்வா அமைப்புகள் அறிவிக்க வேண்டும்.

பாக்கிஸ்தானுக்காக ஏன் ஹிந்துத்வா அறிவிக்க வேண்டுமென கேட்கலாம். அதற்கு பெயர்தான் பக்கத்து இலைக்கு பாயாசம். இது தவிர, இப்படி ஒரு கோரிக்கையை ஹிந்துத்வா வைத்தால், 20 கோடி பாக்கிஸ்தானியரும் முழு மனதோடு வரவேற்பர். இந்தியாவை ஒரு மிகப்பெரிய ஹீரோவாக பாக்கிஸ்தானியர் பாராட்டுவர். அனைத்து வெறுப்பும் மறைந்துவிடும்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியமூன்று நாடுகளும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

முட்டாள் அரபியால் என்ன புடுங்கமுடியும்?.
--------

பழைய அடிமைத்தனத்தை விட்டு வெளிவர ஹிந்துக்கள் பயந்தால், இந்தியாவை காப்பாற்ற முடியாது. பாரதமாதாவை காக்க அரேபியாவை ஹிந்துக்கள் போட் தள்ளினால் என்ன தவறு?.