



காது கேட்காமல் வாயும் ஊமையாகிப் போய் தனது சிறு வயதில் தவறுதலாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி பாகிஸ்தான் சென்று விட்டார் சகோதரி கீதா. அவரை 14 வருடங்களாக தனது வீட்டிலேயே தனது மகளைப் போல பாவித்து அவரது விலாசத்தையும் கண்டு பிடித்து தற்போது இந்தியாவில் அவரது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ள அப்துல் சத்தார் குடும்பத்துக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக!
அந்த பெண் கீதாவின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவர் வழிபடும் தெய்வங்களின் படங்களை ஒரு ரூமில் வைத்து அவருக்கு சகல சௌரியங்களையும் செய்து கொடுத்துள்ளது அப்துல் சத்தார் குடும்பம். 'இந்த மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை' என்ற குர்ஆனின் வசனத்தை செயல்படுத்திக் காட்டியுள்ளது இவரது குடும்பம்.
இதனிடையே கீதாவை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த எதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையான 'டான்' வெளியிட்ட செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிதியை அறக்கட்டளை நிறுவனர் அப்துல் சத்தார் எதி பணிவுடன் மறுத்துவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரது மகன் அன்வர் காஸ்மி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக அந்தப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்துத்வாவாதிகளே!
இனியாவது அப்துல் சத்தாரைப் போன்று மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். மாட்டை காட்டி மனிதனைக் கொல்லும் மிருக புத்திக்கு இனியாவது விடை கொடுங்கள்.
3 comments:
சத்துவ குணம் கொண்டோா் -வருணத்தால் அந்தணா்கள் - எல்லா காலமும் எல்லா இடங்களிபாக்கிஸ்தானிலும் சத்துவ குணம் மேலோங்கியவா்கள் என்றும் உள்ளாா்கள். வாழ்க வளமுடன். நன்றி. நல்ல தகவல். நாம்தான் நல்ல, தீய நடத்தைகளை நயவஞசகமாக இந்து கிறிஸ்தவன் முஸ்லீம் என்று தவறாக பேதப்படுத்தி நொந்து கொள்கின்றோம்.
நமது பிரதமா் அன்புடன் அளித்த நன்கொடையை ஏற்றிருக்க வேண்டும். அது நன்றிக் கடன் அல்ல. நல்ல மனநிலையைக் காட்டுவதாக அமையும். பெரும்பாலாக பாக்கிஸ்தானியா்கள் தேச பிாிவினையை விரும்பவில்லை என்பதுதன் அப்துல் அவர்களின் செய்கை காட்டுவது.
இனியாவது அப்துல் சத்தாரைப் போன்று மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். மாட்டை காட்டி மனிதனைக் கொல்லும் மிருக புத்திக்கு இனியாவது விடை கொடுங்கள்.
ஒரு இந்துவின் கருத்து ” சிலை வழிபாட்டைக் காரணம் காட்டி பாக்கிஸ்தானை உருவாக்கி 800 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் இந்துக்களை கொன்று குவித்தக் கொண்டிருக்கும் அரேபிய காடைத்தனத்தை விட்டு மனிதநேயம் மிக்க மக்களாய் வாழுங்கள் அரேபிய மதத்தவா்களே !
இந்துக்களில் மதவெறிபிடித்தவன் விதிவிலக்கானவன். அரேபியமதத்தில் மதவெறி பிடிக்காதவன் விதி விலக்கு. அவன் அந்த சமுதாயத்தில் மதிப்பில்லாதவன். இந்து காபீா்களை அழித்தவன் துன்புருத்தியவனுக்கே மாியாதை. முகம்மதுஎன்ற நபியின் போதனையும் அதுதான்.முகம்மது அலி ஜின்னா வே வெளிப்படையாக அறிவித்துள்ளாரே!
Post a Comment