Followers

Monday, October 12, 2015

சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்டது!



பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்டது மிதமான ஜனநாயக முறையிலான போராட்டம் என சிவசேனா தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, "குல்கர்னி மீது மை வீசப்பட்டதா? தார் வீசப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது? பொதுமக்கள் கோபம் எப்படி வெடிக்கும் என்பதையும் கூறமுடியாது.

இருப்பினும் 'மை' வீசி தாக்குதல் நடத்துவது என்பது மிதமான போராட்டமே. ஜனநாயக நெறியிலான போராட்டமே. எங்கள் எதிர்ப்பையும் மீறி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது மும்பையில் கருப்பு மை வீசப்பட்டது. சிவசேனா கட்சியினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. -

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-10-2015

பூசப்பட்ட தாருடனேயே விழா மேடைக்கு வந்திருந்து புத்தகமும் வெளியிடப்பட்டது. காவிகளின் ஈனச் செயலை உலகம் அறிந்து கொள்ளட்டும் என்று பூசிய மையை அழிக்காமலேயே மேடைக்கு வந்தது பாராட்டத்தக்கது.

இன்னும் பாக்கி உள்ள மூன்றரை வருடத்தில் இந்த நாட்டை அழிவின் விளிம்புக்கே காவிகள் கொண்டு சென்று விடுவார்கள் போல் இருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் அராஜகம் அரங்கேறுகிறது பொறுத்திருந்து பார்போம்.

2 comments:

Dr.Anburaj said...

இருக்கும் தலைவலி போதாது பாருங்கள். பாக்கிஸதானின் வெளிநாட்டு மந்திாியாக இருந்த ஒரு ............ புத்தகத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். இதொல்லாாம் ஒரு செய்தியா.

C.Sugumar said...

பதவியில் இருக்கும் போது அன்பு நடபு என்று பேசாமல் ஒய்வு பெற்ற பிறகு பாக்கிஸ்தானின் வெளிநாட்டு மந்திாிக்கு இங்கே என்னடா வேலை? சிவசேனா காரன் ரோசக்காரன் . வாழ்க சிவாஜி சேனா