ஒரு இந்து இளைஞனின் உருக்கமான வேண்டுகோள்!
'நான் அனில் வாஸ்தவானி பேசுகிறேன்!
நேற்று என் நண்பனும் எனது உறவினர் ஒருவரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டனர். உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனையின் கீழ் தளத்தில் இறந்த உடல்கள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சில தன்னார்வ முஸ்லிம்கள் உடலை அடையாளம் காட்டி எங்களுக்கு தந்தனர். சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்பூர் மயான மேடையிலும் பல முஸ்லிம்கள் இருந்து பொது சேவை செய்து வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இறந்த உடலுக்கு சொந்தமான இந்துக்கள் கொரோனா பயத்தினால் பிணத்தின் அருகில் கூட வரவில்லை. ஆனால் முஸ்லிம்களோ எந்த பயமும் இல்லாமல் கவச உடைகளோடு இறந்தவருக்கான கடைசி கிரியைகளை சங்கோஜமின்றி செய்து கொண்டிருந்தனர். உறவினர்களுக்கு முகத்தை காட்டி மிக்க மரியாதையோடு ஈமக் கிரியைகளை செய்ததை எண்ணி நெகிழ்ந்து விட்டேன்.
கொரோனா தாக்கத்துக்கு பின் நாம் யாரையும் வெறுக்காமல் எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற பரந்த எண்ணத்துக்கு வருவோம் தோழர்களே! வெறுப்பை கைவிடுங்கள். அன்பை கையிலெடுங்கள்..
பொது சேவையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இறைவன் பூரண நலத்தை தருவானாக! மீண்டும் ஒரு சலாமை அன்பு இஸ்லாமிய உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
2 comments:
இந்துக்கள் கொரோனா பயத்தினால் பிணத்தின் அருகில் கூட வரவில்லை. ஆனால் முஸ்லிம்களோ
எந்த பயமும் இல்லாமல் கவச உடைகளோடு
இறந்தவருக்கான கடைசி கிரியைகளை சங்கோஜமின்றி செய்து கொண்டிருந்தனர். உறவினர்களுக்கு முகத்தை காட்டி மிக்க மரியாதையோடு ஈமக் கிரியைகளை செய்ததை எண்ணி நெகிழ்ந்து விட்டேன்.
-----------------------------------------------------------------------
நாட்டில் ஒரு அசாதரணமாக சுழ்நிலை நிலவுகிறது. அதில் நிவாரணமாக யாா் எதைச் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்துக்கள் கொரோனா பயத்தினால் பிணத்தின் அருகில் கூட வரவில்லை -இந்த பதிவிற்கு அவசியம் இல்லை. முஸ்லீம்களுக்கு கிடைத்தது போல் கவச உடைகள் இந்துக்களுக்கும் வாங்க திராணி யிருந்தால் ... வாங்கியிருக்கலாம். நெருங்கி வந்து மேற்படிகாரியங்களை நிறைவேற்றியிருக்கலாம்.
---------------------------------------------------------------------------------
ஆனால் முஸ்லிம்களோ
எந்த பயமும் இல்லாமல் கவச உடைகளோடு
இறந்தவருக்கான கடைசி கிரியைகளை சங்கோஜமின்றி செய்து கொண்டிருந்தனர்.
ஆம்.முஸ்லீம்கள் படித்தவர்கள். பணபலம் மிக்கவர்கள். பைதுல்மால் என்ற சமூக நீதியை வைத்திருப்பவர்கள். அரேபிய நாடுகளில் பெரும் தொகை உதவியாக பெறுபவர்கள்.முஸ்லீம் ஜமாத்தோடு ஒரு சாதாரண இந்து குடும்பத்தை ஒப்பிடுவது முட்டாள்தனமாக வேலை. சுவனப்பிரியனுக்கு தான் ஒரு முட்டாள் என்பதை நிரூபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
ராஷ்ரிரிய ஸ்வயம் சேவக் சங்கம் நாட்டின் பலபகுதியில் நடத்தி வரும் 15000 பள்ளிகளை கோரானா வார்டு ஆக மாற்றம் செய்ய அனுமதி அளித்துள்ளது-சர் சங்க சாலக் அறிவிப்பு.
ஆாஎஎஸ வலிமையாக இருக்கும் இடங்களில் அனைத்து வகை நிவாரண பணிகளையும் அருமையாகச் செய்து வருகின்றார்கள். என்றாவது அந்த செய்தியை பதிவிட்டதுண்டா?
அரேபிய விஷம் உடலெங்கும் ஓடும் ஒரு விநோதமான மிருகம் சுவனப்பிரியன்.
If muslims also accept it then it will be out but ghey will never accept others, all other Christians, hindus, jews and atheists are kaffirs for them.
Post a Comment