மத்திய காவி அரசின் பாகுபாடு அரசியல்
கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் வீடுகளையும் பொருட்களையும் இழந்து தத்தளித்தபொழுது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தபிறகு மத்திய காவி அரசால் வெளிநாட்டு உதவி எங்களுக்கு வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் சென்னை பெருவெள்ளத்தின்பொழுதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலிருந்தும் இன்னபிற அயல்நாடுகளிலிருந்தும் சென்னை நோக்கி நிவாரணப்பொருட்களை சுமந்துவந்த விமானங்களை சென்னை விமான நிலையத்தில் பொருட்களை இறக்கவிடாமல் வேண்டாம் என திருப்பி அனுப்பியது மத்திய காவி அரசு.
ஆனால் இப்பொழுது வட இந்திய மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் தத்தளித்து மரணங்களை கொத்துக்கொத்தாக பார்த்தபிறகு பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து கண்டெய்னர்கள், கண்டெய்னர்களாக ஆக்ஸிஜன் டேங்கர்கள் நிவாரணமாக வந்தபிறகு அதை எங்களுக்கு வேண்டாம் என திருப்பி அனுப்பாமல் வேண்டும் என பெற்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய காவி அரசு.
தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஏற்பட்டது பேரிடர்காலம் என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் இந்திபேசும் வட இந்தியாவிற்கு ஒரு அரசியலும், இந்தி பேசாத தென்னிந்தியாவிற்கு ஒரு அரசியலும் செய்கின்றது இந்த மத்திய காவி அரசு.
ஆக தென்னிந்திய மக்களுக்கு நல்லதோ, உதவியோ நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மத்திய காவி அரசு.
ஒரே நாட்டில் மாநிலங்களுக்கிடையே பாகுபாடு அரசியல் செய்யும் மதவாத காவி மத்திய அரசின் சூழ்ச்சிகளை புரிந்த எந்த தமிழனும், மலையாளியும் இனியும் அவன் பின்னால் சென்றால் வரக்கூடிய அடுத்த தலைமுறைகள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
இதுவரை தென்னிந்தியாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்தவித வளர்ச்சித்திட்டங்களையும் செய்யாத மத்திய காவி அரசிற்கு பின்னாலும் கொடிதூக்கி ஜால்ரா அடிக்க நினைத்தால் நிச்சயம் புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு ஒரு அவசரகால உதவி என்றால் அந்த மத்திய காவி அரசு "எல்லை கைமீறிவிட்டது, எங்களால் உங்களுக்கு உதவிட முடியாது" என்று கைவிரித்துவிடும். எனவே இனியாவது விழித்துக்கொள் தமிழா...!
மருத்துவமனை வேண்டும், மருத்துவர்கள் வேண்டும், கல்விச்சாலைகள் வேண்டும், வளர்ச்சித்திட்டங்கள் வேண்டும் என்று வடஇந்தியாவில் பலரும் யோசித்திருந்தால் இன்று மதவாதிகளின் கையில் நாடு போயிருக்காது.
ராமர் கோவில் வேண்டும் என்றுதானே ஓட்டுப்போட்டீர்கள். இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆக்ஸிஜனும் இல்லை, மருத்துவர்களும் இல்லை. மருந்துகளும் இல்லை. ஆக நீங்கள் எது நாட்டிற்கும் நாட்டுமக்களும் அத்தியாவசியமோ அவற்றை கொண்டுவரும் அரசை ஏற்படுத்தாமல் கோவில் கட்டும் அரசை கொண்டுவர துடித்ததன் விளைவு இன்று தெருவோரங்களில் சாரைசாரையாக பிணங்கள்...!
-வாட்ஸ்அப்பில் வந்த செய்தி....
1 comment:
மததிய அரசு முறையாக அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.கொரானாவின் இரண்டாம் அலை உருமாறிய கொரானா சற்று வீரியமான முறையில் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்தியர அரசு தொடா்ந்து எச்சரிக்கை செய்தும் மாநில அரசும் மக்களும் எதையும் கேடகவில்லை.
1 நாட.்டு மக்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை கபசுர குடிநீா் ஆடாதொடை கசாயம் குடிப்பவர்கள் எத்தனை போ்
2. ஊரடங்கு முடிந்தவுடன் கை கால்களை கழுவியபின் வீட்டிற்குள் செலபவர்கள் எத்தனை ?
3.தினவலி ஆவி பிடிப்பவர்கள் எத்தனை பேர்கள் ?
நாட்டு மக்கள் அலட்சியம் காட்டினால் ..... அனுபவிக்க வேண்டியதுதான். ஆனாலும் பொறுப்புள்ள அரசு நிவாரண உதவிகளை பிரமாண்டமான முறையில் பெற்று வழங்கி வருகின்றது.
ஸஅடெரிலைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்துி செய்யக் கூட உடனடியாக அனுமதி வழங்கும் மனப்பக்குவம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் பிராணவாயு தமிழ்நாட்டுக்குதான் -முன்னுரிமை என்று கேணத்தனமாக முழங்க வருகின்றாா் ஸ்டாலின் -எதிா்கட்சி தலைவா்..
ஒட்டகத்திற்கு கோணல் ஒன்றா இரண்டா. தொட்டமிடம் எல்லாம் கோணல்தான்.
Post a Comment