Followers

Thursday, April 22, 2021

குதிரைக்கறிக்கு நான் எங்கே போவேன்?

 கொரானவைத் தடுக்க வேதகால உணவைச் சாப்பிடச் சொல்றாங்க கங்கனா ரனாவத். குதிரைக்கறிக்கு நான் எங்கே போவேன்?

5 comments:

Dr.Anburaj said...

அவளுக்கு கொளுப்பு சற்று அதிகம்.

Dr.Anburaj said...

அவளுக்கு கொளுப்பு சற்று அதிகம்.
----------------------------------------------------------------------------------
மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க கொரோனா பக்கத்தில கூட வராது

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆவி பிடித்தால் சாதாரண சளி தொந்தரவுகளும் நீங்கும் கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சமின்றி இருக்கலாம்.

Dr.Anburaj said...

இயற்கையான முறையில், தலைவலி, உடல் வலி, சளித் தொந்தரவு, இருமல் என எதுவாக இருந்தாலும் சரி முதலுதவியாக செய்து வருவது ஆவி பிடிப்பது தான். அதோடு, இயற்கையாக எளிய முறையில், நமது சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளையும் நோய்க் கிருமிகளையும் வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட மிக எளிய வைத்திய முறை தான் ஆவி பிடித்தல் ஆகும். இது பைசா செலவழிக்காமல் நம் முன்னோர்கள் கையாண்ட கை வைத்திய முறையாகும்
தோற்றப் பொலிவு கூடும்
ஆவி பிடிப்பதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதோடு, ஆவி பிடிப்பதால், நமது தோலின் மேற்புறம் விரிவடைந்து, உள்புறத்திலுள்ள தேவையற்ற அழுக்குகள் விரைவாக வெளியேறிவிடும். இதனால் நம் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த நோய்க்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறையாவது ஆவி பிடித்தால் முகப்பொலிவு கூடும். அதோடு முகச்சுருக்கம் மற்றும் முதுமைத் தோற்றத்தையும் தவிர்க்கலாம்.

Dr.Anburaj said...

ஆவி பிடித்தல்
ஆவி பிடிப்பதற்காக நாம் ஒன்றும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இருமல், ஜலதோஷம், சளித் தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் இதெல்லாம் பறந்தொடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும். மேலும், இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் செய்துவரவேண்டியது அவசியமாகும்.
எப்படி ஆவி பிடிப்பது
சூடான நீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்துகொண்டு, நம்மை போர்வையால் மூடிக்கொண்டு, சூடான நீர் உள்ள பாத்திரத்தின் மூடியை சிறிது சிறிதாக விலக்கி, பாத்திரத்தில் இருந்து வெளியேறும் ஆவியை நாம் ஆழமாக சுவாசிக்க வேண்டும். கூடவே, முகம், முன் நெற்றி, கழுத்துப்பகுதி,களில் ஆவி படும்படி திருப்பி திருப்பி செய்துவர வேண்டும். அதே சமயத்தில் நமது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான், பைசா செலவு இல்லாமல் மிக எளிமையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது.
கெட்ட நீர் வெளியேறும் இவ்வாறு சுமார் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை செய்ய வேண்டும். காலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவேண்டும். இப்படி, ஆவி பிடிப்பதால், தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலை வலியால் அவதிப்படுபவர்களுக்கு, கெட்ட நீர் முழுவதும் வெளியேறிவிடும். சளிக்கட்டு, சளித் தொந்தரவு, தொண்டையில் சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றுகள் முழுவதும் அழிந்துவிடும்.

Dr.Anburaj said...

ஆவி பிடிக்க தகுதியானவர்கள் தினமும் பிரச்னை தீரும் வரை ஆவி பிடிக்கலாம்.


கண்களை ஈரத்துணியால் கட்டிக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். ஆவியின் சூடு கண்களுக்கு உகந்ததல்லை.
---------------------------------------------------------------------------------

ஆயுர்வேதத்தில் வியர்வை உண்டு பண்ணக் கூடிய முறை 4 வகைப்படும். அதில் ஆவி பிடிக்கும் முறை 'பாஷ்ப ஸ்வேதன' முறைகளில் ஒன்று. ஆவி பிடிப்பது மூக்கிலுள்ள சைனஸ் துவாரங்களை விரிவடைய செய்து, மண்டையிலுள்ள சளி, நீரை வெளியேற்றுகிறது. மூக்கடைப்பு ஜலதோஷம், சளித்தொல்லை, தலைபாரம், தலைவலி, ஒவ்வாமை போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கொரோனா காலத்திலும் இம்முறை உகந்தது. ஆவி பிடிப்பதால் உடலில் உள்ள நாடிகள் சுத்திகரிக்கப்படுகின்றன. வெந்நீர் பருகுதல், மூச்சு, உடற்பயிற்சி சுவாச பாதையை சுத்திகரித்து காற்றோட்டம், ரத்த ஓட்டம் சீராகும். மூச்சு பயிற்சியின் போது வாயை மூடி மூக்கினால் மூச்சு விட வேண்டும்.