மலை போன்ற நன்மைகளை மறுமையில் பெற்றுத் தரும்.
எங்கள் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள மரங்களில் நிறைய சிட்டுக் குருவிகள் வாழ்க்கை நடத்துகின்றன. மணிப்புறாக்களும் நிறைய உலவுகின்றன. மரங்களுக்கு பக்கத்தில் சென்றாலே அவைகளின் கீச்சுக் குரல் மிக ரம்மியமாக இருக்கும்.
ஒரு பழைய தண்ணீர் பாட்டிலை
அறுத்து மரத்துக்குக் கீழ் வைத்து தண்ணீரும் தற்போது தினமும் ஊற்றுகிறேன். மீதமாகும்
ரொட்டித் துண்டுகளை பொடியாக்கி தூவி விடுகிறேன். துவரம் பருப்பை சற்று தூளாக்கி தூவி
விடுகிறேன். இதனால் அந்த இடத்தில் சிட்டுக் குருவிகள் ஆனந்தமாக அமர்ந்து தண்ணீர் அருந்துகின்றன.
உணவும் உண்கின்றன. தற்போது வெயில் காலம் ஆகையால் வாய்ப்புள்ளவர்கள் இது போன்று ஆங்காங்கே
தண்ணீர் வையுங்கள். மொட்டை மாடிகளிலும் இதனை செய்யலாம். நாம் அற்பமாக நினைக்கும் ஒரு
செயல் மலை போன்ற நன்மைகளை மறுமையில் பெற்றுத் தரும்.
ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா
(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில்
கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது
எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது நஸயீ-3666)
“ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
1 comment:
சென்னையில் சிந்தாரிப்பேட்டையில் தினம் 6000 கிளிகளுக்கும் கூட்டம் கூட்டமாக வரும் சிட்டுக்களுக்கும் புறாக்களுக்கும் ஒரு குடும்பம் தீனி வைக்கிறார்கள்.தம்பதியா்கள் பெயா் சுதா்சன் ஷா----ஸ்ரீவித்யா . விசாரித்து அவர்களின் சாதனையை தொண்டை பதிவு செய்யலாம். ( இந்துக்கள் செய்யும் தொண்டுகளை பதிவிடமாட்டீர் என்பது எனக்கும் தெரியும்)
சென்னை கடற்கரையில் புறாக்களுக்கும் பற்வைகளுக்கும் தீனி போடும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.
சிட்டு குருவிகளுக்கு மறுபெயா் அடைக்கலம் குருவி. வீடுகளில் வைத்து பராமரிப்பது பெரிய புண்ணியம் என்று இந்துக்களுக்கு உபதேசம் மேல் உபதேசம். அதன் விளைவு இத்தகைய ஏற்பாடுகள் மிகவும் பரவலாக உள்ளது. பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணா் பஞ்சபுத யக்யம் என்று அழைக்கிறாா்.
பாலைவனத்தில் தண்ணீரின் தேவை மிக...மிக .. அதிகம். எனவே முஹம்மது அவர்கள் இப்படி ஒரு உபதேசத்தை செய்திருப்பது பொருத்தமானதுதான். பறவைகள் அதிகம் அப்பகுதியில் வாழந்திருக்காது. எனவே முஹம்மது இது குறித்து பெரிய உபதேசங்களைச் செய்திருக்க வாய்ப்பில்லை. மரங்களின் தேவை அரேபிய இலக்கியங்களில் வலியுருத்தப்பட்டுள்ளது.
பகுத்துண்டு ”பல்லுயிர்” ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.குறள்.322
இப்படி ஒரு குறளை குரானிலோ ...அரேபிய புத்தகங்களிலோ காட்ட முடியுமா?
Post a Comment