Followers

Tuesday, April 20, 2021

அகோரிகளின் வாழ்வை பரிதாபத்தோடு பார்க்கிறேன்!

 

அகோரிகளின் வாழ்வை பரிதாபத்தோடு பார்க்கிறேன்!

 

பல குடும்பங்களிலிருந்து காசிக்கு வந்தவர்கள் பக்தி என்ற பெயரில் அகோரிகளாக மாறி வருவதை பார்க்கிறோம். சிறு வயதிலேயே இங்கு கொண்டு வந்து விட்டு விடுகின்றனர். படித்து பட்டம் பெற்று ஒரு நல்ல மனைவியை திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு வாழ வேண்டும் என்றுதான் பெற்றவர்கள் நினைப்பர்.

 

ஆனால் இங்கோ பக்தி என்ற பெயரில் உடல் முழுக்க திருநீரை பூசிக் கொண்டு உடைகள் எதுவும் இன்றி அம்மணமாக திரிவதை இந்த உலகம் எப்படி பார்க்கும். உழைப்பு என்பது இல்லை. கங்கையில் பாதி எரிந்த நிலையில் கிடைக்கும் மனித உடல்களை பொசுக்கி சாப்பிட்டு விட்டு கஞ்சா அடித்து விட்டு எப்போதும் ஒரு அரை மயக்கத்திலேயே இருப்பதை நாகரிக சமுதாயம் எந்த கண்ணோட்டத்தோடு பார்க்கும்.

 

'நான் கடவுள்' என்ற படத்தில் பாலா இதனை மிக சிறப்பாக சொல்லியிருப்பார். பெற்ற தாய் தனது மகன் கஞ்சா அடித்துக் கொண்டு ரவுடியாக சுற்றுவதை பார்த்து வயிறு எரிகிறது என்று தனது கணவனை திட்டும் காட்சியை படத்தில் பாலா வைத்திருப்பார். பக்தி என்ற பெயரில் எத்தனை குடும்பங்கள் நாசமாகி வருகின்றன. வீட்டுக்கும் ஒரு பிரயோசனமில்லை. நாட்டுக்கும் ஒரு பிரயோசனமில்லை. இந்து மத வேதங்களில் இவ்வாறு கஞ்சா அடித்து கொண்டு அம்மணமாக மனித உடல்களை தின்று வாழ வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. பண்டைய தமிழ் நூல்கள் எதிலும் இது போன்ற ஒரு துறவறத்தை எங்கும் வலியுறுத்தவில்லை.

 

மதமும் சொல்லவில்லை: நாட்டுக்கும் கேடு: வீட்டுக்கும் கேடு: காசி சுற்று வட்டாரத்தில் உள்ள இந்து குடும்பங்கள் 'ஊரைச் சுற்றி எப்போதும் கஞ்சா வாசனை நாசியைத் துளைக்கிறது. இதனால் எங்கள் குழந்தைகளும் பாதிப்படைகின்றனர்' என்று புகார் அளிக்கின்றனர். இப்படி பல பிரச்னைகளை கொண்டு வரும் அகோரிகளின் வாழ்வு இந்து மத முன்னேற்றத்துக்கு வழி வகுக்குமா? இது வரை நடந்ததை மறந்து இனி இளைஞர்கள் இவ்வாறு அகோரிகளாக மாறுவதற்கு தடை சட்டம் கொண்டு வரப்படுமா? இப்போது வாழ்ந்து வரும் அகோரிகளை தனி தீவு போன்று அமைத்து அங்கு அவர்களை குடியமர்த்தலாமா? என்பதை இந்து மத பெரியவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

 

மோடியோ, அமித்ஷாவோ இதற்கு தீர்வு காணப் போவதில்லை. இவர்களை பொருத்த வரை ஈஷா யோகம், ராமர் கோவில், பசு மாடு, முத்தலாக் இதுதான் இந்து மத முன்னேற்றம். அப்போதுதான் வாக்கு அறுவடை செய்ய முடியும். நான் சொல்ல வருவது கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற உண்மையான இந்து மத பெரியவர்களை... 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

 

நூல்: புகாரி 6704



 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 comments:

Dr.Anburaj said...

மோடியோ, அமித்ஷாவோ இதற்கு தீர்வு காணப் போவதில்லை. இவர்களை பொருத்த வரை ஈஷா யோகம், ராமர் கோவில், பசு மாடு, முத்தலாக் இதுதான் இந்து மத முன்னேற்றம். அப்போதுதான் வாக்கு அறுவடை செய்ய முடியும்.

தவறான முட்டாள்தனமாக வாதம்.
1000 ஆண்டுகள் முகலாய அரேபிய மங்கோலிய டச்சு போர்த்துக்கீசிய ஆங்கிலேய மன்னா்களின் படையெடுப்பால் நாசம் ஆன இந்தியாவில் இப்படி ஒரு சீரழிவு எற்பட்டு விட்டது. முறையான சமய கல்வியை விவேகானந்தரை அரசு அனைத்து இந்து
குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தால் இந்த பிரச்சனை ஏற்கனவே தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் மதசார்பற்ற தன்மை என்று இந்துக்களின் ஆன்மீக பலத்தை பாழாக்கும் திட்டங்களையே காங்கிரஸ் திமுக செய்து வருகின்றார்கள்.

Dr.Anburaj said...

மோடியோ, அமித்ஷாவோ இதற்கு தீர்வு காணப் போவதில்லை. இவர்களை பொருத்த வரை ஈஷா யோகம், ராமர் கோவில், பசு மாடு, முத்தலாக் இதுதான் இந்து மத முன்னேற்றம். அப்போதுதான் வாக்கு அறுவடை செய்ய முடியும்.

தவறான முட்டாள்தனமாக வாதம்.
1000 ஆண்டுகள் முகலாய அரேபிய மங்கோலிய டச்சு போர்த்துக்கீசிய ஆங்கிலேய மன்னா்களின் படையெடுப்பால் நாசம் ஆன இந்தியாவில் இப்படி ஒரு சீரழிவு எற்பட்டு விட்டது. முறையான சமய கல்வியை விவேகானந்தரை அரசு அனைத்து இந்து
குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தால் இந்த பிரச்சனை ஏற்கனவே தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் மதசார்பற்ற தன்மை என்று இந்துக்களின் ஆன்மீக பலத்தை பாழாக்கும் திட்டங்களையே காங்கிரஸ் திமுக செய்து வருகின்றார்கள்.
---------------------------------------------------------------------------------
அகோரிகள் குறித்த தங்கள் கட்டுரை சரியானதுதான். இதுபொல் ஜெனினர்களும் இப்படி நிா்வாணமாக வாழ்ந்து மற்றவர்களை சங்கடப்படுத்துகின்றார்கள்.