எஸ்டிபிஐ கட்சி தொண்டர்களுக்கு!
பல கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. 50 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி உள்ளது. இங்குதான் எஸ்டிபிஐ ன் பங்களிப்பு அதிகமாகிறது. ஐம்பது தொகுதிகளில் தொகுதிக்கு 4000 வாக்குகள் எஸ்டிபிஐ வாங்கினால் அது பெரும்பாலும் இஸ்லாமியர்களின் வாக்ககாகவே இருக்கும். இங்கு தான் ஆட்சி அமைப்பதில் சில மாறுபாடுகள் வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.
கடந்த 60 ஆண்டு காலம் மிகவும் சிரமப்பட்டு தமிழகத்தை முந்தய
ஆட்சியாளர்கள் கட்டமைத்து வைத்துள்ளார்கள். பிஜேபி ஆதரவு அணி இந்த முறை ஆட்சி அமைத்தால்
அனைத்தும் பாழாகிப் போய் விடும். பிஜேபி வருவதால் இஸ்லாமியருக்கு மட்டும் ஆபத்தல்ல.
ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் ஆபத்து. பார்பனர்களின் நலனுக்காக ஆரம்பக்கப்பட்ட கட்சி
பிஜேபி. இதில் தலித், மற்றும் பிற்படுத்தப்பட்ட
மக்கள் அனைவரும் பாதிப்படைவர். உதாரணத்துக்கு நீட் தேர்வை எடுத்துக் கொள்ளலாம். இன்று
வலிந்து வட மாநிலத்தவர் தமிழர்களின் உiரிமைகளை பங்கு போடுகின்றனர். இது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஆபத்து.
திமுக ஆட்சி அமைத்தால் பாலாறும் தேனாறும் ஓடப் போவதில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால் மக்களின் முன்னேற்றத்துக்கோ, தொழில்களுக்கோ, படிப்புக்கோ, மத உரிமைகளுக்கோ எந்த பாதிப்பும் வந்து விடாது. இதனை கடந்த 60 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
எனவே தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட எஸ்டிபிஐ பெறப் போவதில்லை எனும் பட்சத்தில் தொண்டர்கள் வெற்றி பெறப் போகும் திமுக அணிக்கு பாடுபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நாகை தொகுதியில் தற்போதய எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஈகோவை எல்லாம் தூரமாக்கி விட்டு ஆளூர் ஷாநவாஸூக்காக வீதி வீதியாக வாக்கு கேட்டு செல்வதை பாருங்கள். அவரும் யாரோடவாது கூட்டணி வைத்து போட்டியிட முடியாதா? அவ்வாறு போட்டி இட்டால் அது பிஜேபிக்கு சாதகமாகி விடும் என்ற எண்ணத்திலேயே ஒதுங்கிக் கொண்டார். இதன் பலன்களை வருங்காலங்களில் தமீமுன் அன்சாரி அனுபவிப்பார். எனவே இவரை முன் உதாரணமாக வைத்து இந்த முறை திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுங்கள். உங்கள் உறவினர்களையும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்துங்கள். இதன் மூலம் தமிழகத்தை சூழவிருந்த மிகப் பெரிய நச்சுக் கிருமியை தூரமாக்கிய பெருமை உங்களையும் சேரும்.
செய்வீர்களா?
-சுவனப்பிரியன்
1 comment:
துரோகம் நயவஞ்சகத்தை கற்ற குரான் ஹதீஸ் முஹம்மதின் சுன்னா ஆகியவை சிறந்த ஆவணம் ஆகும்.ஆக துரோகம் காபீா் அழிப்பு ஆகிய கலைகளில் வல்லவா்களாக முஸ்லீம்கள் இப்படி சிந்திப்பது எதிா்பார்த்ததுதான்.
முஸ்லீம்களுக்கு வேறு கட்சி எத்ற்கு ? அனைவரும் திமுகழகத்தில் இணைந்து விடுவதுதானே பொருத்தமானது. SDPI Popular front of India Muslim League .. .. . . ,இப்படி பல கட்சிகளாக வோட்டுகளை சிதறடிப்பது ஏன் ?
Post a Comment