Followers

Wednesday, August 06, 2014

சாரங்கன் சமஸ்கிரத மந்திரத்தை பிஜே யின் மேல் ஏவலாமே!

சாரங்கன்!

//ஒரு வெள்ளி கிழமை தொழுகைக்கு போய் வருபவன் முகம் கோவத்தில் பொங்குகிறது,//

கோபத்தில் பொங்குகிறதா? அழகிய அமைதி தவழுகிறது. நேற்று இஸ்லாத்தை தழுவிய யுவன் சங்கர் ராஜா முதல் பெருநாளை தனது குடும்ப உறுப்பினர்களோடு கொண்டாடிய அந்த மகிழ்வான நேரத்தில் அவரது முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பாருங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/07/blog-post_80.html

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Yuvans-Biriyani-treat-for-Eid/articleshow/39296026.cms

//இஸ்லாம் ஹிந்து மதத்தை இழிவு படுத்தவில்லையா. idol worshippers பற்றி என்ன சொல்கிறது இஸ்லாம். ஏன் இந்த புரட்டு.//

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

ரிக் வேதம்

'மா சிதான்யாத்வி சன்ஷதா'

'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'

ரிக் வேதம் 8 : 1: 1

இந்து மத வேதங்களே நீங்கள் பண்ணி வரும் இன்றைய வழிபாட்டு முறைகளை கண்டிக்கிறதே! உண்மை வழியிலிருந்து தவறி இன்று பல தெய்வ வணக்கத்தில் புகுந்தது உங்களது குற்றமில்லையா? அதனையேதான் குர்ஆனும் சொல்கிறது. இதில் மட்டும் ஏன் குறை காண்கிறீர்கள்?

//இது நிற்க. மந்திர சக்தி என்பது நிரூபணமான ஒன்று. தமிழுக்கு சக்தி பக்தியுடன் கலந்தால் தான் வரும். சமஸ்க்ருத (சந்தஸீ) அக்ஷர கூட்டங்களுக்கு அது தானே அமைந்துள்ளது. அப்படி பட்ட சப்த பிரயோகங்கள் அம்மொழியிலேயே இருக்கின்றன. இதை விளங்கிக் கொள்ள கொள்ள மந்தரகிரம சாஸ்திரங்களை படிக்க வேண்டும்.//

சாரங்கன் சொன்னதை நம்பியதாலோ என்னவோ சமஸ்கிரத மொழியில் அகோரி மணி கண்டன் சில நாட்களாக யாகங்களை ஆரம்பித்து விட்டார். அவரது யாகத்தால் பிஜேயை முடக்கப் போகிறாராம். சூனியம் வைத்து அவரது வழிக்கு கொண்டு வரப் போகிறாராம். அந்த செய்தியை பாருங்கள்:

இஸ்லாமா ? சூனியமா ?
இஸ்லாமிய அறிஞரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனருமான பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூனியத்திற்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும்.

அவ்வாறு செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்தில் பேசியிருந்தார்.

அவரது பேச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக காட்டுத்தீப்போல் பரவியது.

இந்நிலையில்....

திருச்சி அரியமங்களம் சர்பநதிக்கரையை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து சூனியம் செய்ய முடியும் என்பதை தாம் நிரூபிக்க தயார் என்று பகீரங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில் சரியாக 48 நாட்களுக்குள் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களே சூனியத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கிறேன் அல்லது அவரை சூனியத்தின் மூலமாக தற்கொலை செய்ய வைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அகோரி மணிகண்டன் கூறியது போல் 48 நாட்களுக்குள் சூனியம் செய்து வெற்றியடைந்து விட்டால் பி. ஜைனுல் ஆபிதீன் தரப்பினர் 50 லட்சம் ரூபாயை அகோரி மணிகண்டனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் அமுலில் ஆகும் நாள் 01.08.2014 ஆரம்பம் ஆகிறது.

சரியாக 48 நாட்கள் கழித்து 18.09.2014 அன்று உண்மையை உலகம் அறிந்து கொள்ள இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கே வெற்றி....!!https://www.facebook.com/photo.php?v=10203418517916251&set=vb.1011415831&type=2&theater
VIDEO
PART 1
https://www.facebook.com/photo.php?v=828999217119094
PART 2
https://www.facebook.com/photo.php?v=829023683783314
PART 3
https://www.facebook.com/photo.php?v=829042950448054
PART 4
https://www.facebook.com/photo.php?v=829064550445894
PART 5
https://www.facebook.com/photo.php?v=829074763778206
PART 6
https://www.facebook.com/photo.php?v=829488773736805

சமஸ்கிரதத்தை மிக நன்றாக அறிந்த சாரங்கன் யாகம் நடத்தும் அகோரி மணிகண்டனோடு சேர்ந்து மந்திரங்களை உச்சரித்து பிஜேயை ஒரு வழி பண்ணி விடலாமே! முயற்சிக்கலாமா? இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. வென்று விட்டால் பரிசுத் தொகை 50 லட்சம்.


3 comments:

Anonymous said...

//சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும்.\\

ரர் PJ அவர்கள் 11-nov -2007 அன்று அந்நஜாத் என்ற பத்திரிக்கையில் பணியில் உள்ளபோது சூனியம் பற்றிய கேள்விக்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் அதனை அப்படியே பதிவு செய்கிறேன்.
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா? M. சேகு இஸ்மாயில் , தொண்டி.

பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், “அங்கே சூனியம் நீக்கப்படும்” என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.

சகோதரர் PJ இந்த பதிலை கொடுக்கும் போது சுயநினைவுடன்தான் இருந்தார் என்று நம்புகிறோம். அப்போது சூனியம் உண்டு என்று நம்பியவர் தற்போது மறுப்பதற்கான காரணம்.

இன்னும் எத்தனை காலம்தான் உங்களை நம்பி வரும் தோழர்களை பைத்தியக்காரன் ஆக்குவீர்கள் என்று பார்ப்போம்.
zahir.bukhari

Anonymous said...

\\சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது\\
அதென்ன அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால், “இஸ்லாத்தை ஏற்று” சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உஙகள் மதத்திற்கு அவரை இழுப்பதற்கான முயற்சிதானா இந்த போட்டியும் ஒப்பந்தமும்? நாளையே நீஙகள் அவரது நிழற்படத்தைப் பதிவிட்டு கணக்கு காட்ட முயல்கிறீர்களா?

இமையம் இன்குலாப் said...

\\சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது\\
அதென்ன அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால், “இஸ்லாத்தை ஏற்று” சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உஙகள் மதத்திற்கு அவரை இழுப்பதற்கான முயற்சிதானா இந்த போட்டியும் ஒப்பந்தமும்? நாளையே நீஙகள் அவரது நிழற்படத்தைப் பதிவிட்டு கணக்கு காட்ட முயல்கிறீர்களா?