Followers

Wednesday, December 03, 2014

பிஜே தொழாமல் தன் கடையில் கல்லா கட்டுகிறாரா?

பிஜே தொழாமல் தன் கடையில் கல்லா கட்டுகிறாரா?

திரு சாரங்கன்!

//இவ்வளோ செய்த தவ்ஹீத் அண்ணன், ஏன் கள்ளக்கடத்தலையோ, பாம் செய்வதையோ, ஹிந்து தலைவர்களை கேவேலமாக வெட்டிக் கொள்வதையோ தடுக்க முடியல.//

உலகில் எங்கோ எவனோ செய்யும் சில கிறுக்குத்தனங்களுக்கு தவ்ஹீத் ஜமாத்தின் அண்ணன் பிஜே எப்படி பொறுப்பேற்க முடியும். உங்கள் மதத்திலும் பிரக்யாசிங், ஜெனரல் புரோகித், அசீமானந்தா, சாமியார் ராம்பால் என்று இன்று வரை பட்டியல் நீளுகிறதே அதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? அல்லது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி என்ன செய்துள்ளது என்று நானும் கேட்கலாமே....

அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ஒரு மாதம் முழுக்க தமிழகமெங்கும் தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதை நீங்கள் அறியவில்லையா? புதிய வாழ்வியல் இதழில் வந்த இந்த பேட்டியை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
http://www.tntj.net/290312.html
தீவிரவாதத்தை இன்றும் என்றும் கடுமையாக எதிர்ப்போம். அதில் மாற்றுக் கருத்தில்லை.

//தொழுகைக்கே போகாம கல்லா கட்டும் அண்ணனை வழி நடந்து செல்லும் தவுஹீத் ஜமாத் வால்க//

ஏதோ பீஜே அண்ணனுக்கு செகரட்டரி போல் பேசுகிறீர்கள்? அவர் தொழுவதில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? அவர் தனது மேடைப் பேச்சுகளுக்கு எந்த சன்மானமும் வாங்குவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊருக்கு அவர் வந்த போது அதிக பணம் நாங்கள் கொடுத்தும் போக்குவரத்து செலவுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு பாக்கியை திருப்பி தந்து விட்டார். அதுவும் எளிமையாக பேரூந்தில்தான் வந்தார்.

அமெரிக்காவில் நாசாவில் பணியிலிருக்கும் விஞ்ஞானி ஆத்மராம் என்ற பிராமணர் அண்ணன் பிஜேயின் சொற்பொழிவுகளை இணையத்தின் மூலமாக கேட்டு தெளிவடைகிறார். சென்னை வந்த அவர் அண்ணன் பிஜேயை அலுவலகத்தில் நேரில் சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை தருகிறார்.

'என்ன இது?' - பிஜே

'எங்கள் வழக்கப்படி இது குரு தட்சணை. இறைவனை எவ்வாறு நெருங்குவது அதன் வழி முறைகள் என்ன என்பதை பல இடங்களில் தேடி அலைந்தேன். எங்கு சென்றாலும் எனது மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. முடிவில் உங்களின் ஆன்லைன்பிஜே வெப் சைட் கிட்டியது. அதன் மூலம் பல அரிய உண்மைகளை தெரிந்து கொண்டேன். எங்கள் மதத்தில் எங்களின் வேத புத்தகத்தில் உள்ள பல செய்திகள் குர்ஆனிலும் இருப்பதை தெரிந்து கொண்டேன். குழப்பமடைந்த என் மனம் இன்று ஒரு தெளிவான நிலைக்கு வந்துள்ளதென்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம். எனவே இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்' - ஆத்மராம்.

'நான் இது போன்ற அன்பளிப்புகளை வாங்குவதில்லை. உங்களுக்கு ஏதும் கொடுக்க விருப்பமிருந்தால் அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இல்லங்களை தவ்ஹீத் ஜமாத் என்ற எங்கள் இயக்கம் மூலம் நடத்தி வருகிறோம். அதற்கு இந்த தொகையை கொடுத்து ரஷீது பெற்றுக் கொள்ளுங்கள்' - பிஜே

இதனை சற்றும் எதிர் பார்க்காத ஆத்மராம் பிஜே யின் மதிப்பு தன் அளவில் மேலும் உயர்ந்துள்ளதாக கூறியதைப் பார்க்கிறோம். புத்தகங்களின் மூலம் வரும் வருமானமும், சென்னை மண்ணடியில் அவர் வைத்துள்ள கடையின் வருமானமும் தான் அவரது குடும்பத்தை நடத்துகிறது. அந்த கடையின் மூல தனம் கூட தொண்டியில் உள்ள தனது பூர்வீக சொத்தை விற்று அந்த பணத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார். எனவே இந்த அளவு கை சுத்தமானவரை நெஞ்சறிந்து எவ்வாறு உங்களால் பொய்யுரைக்க முடிகிறது?

//ஒன்றே குலம் அது இஸ்லாம்தான் இருக்கணும் இல்லாட்டி அங்கு ரத்தக் குளம் தான் மிஞ்சும். இது தானே இஸ்லாத்தின் கொல்கை.//

'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'

-குர்ஆன் 2:256

எவரையும் வற்புறுத்தி இந்த மார்க்கத்தில் இணைக்கும்படி குர்ஆன் எங்களுக்கு கட்டளையிடவில்லை.

'இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

-குர்ஆன் 9:6

இறைவன் இந்த வசனத்தில் சிலை வணக்கம் புரிபவர்களை பாதுகாப்பு கோரி வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படியும் அவர்களின் சொந்த இடத்தில் பாதுகாப்பாக சேர்ப்பிக்கும் படியும் நபிக்கு இறைவன் கட்டளையிடுகிறான். குர்ஆன் இப்படி கூறியிருக்க அதற்கு மாற்றமாக தக்கியா செய்வது நீங்களன்றோ!

No comments: