Followers

Friday, June 29, 2012

அபு ஜிந்தால்- நாம் செய்ய வேண்டியது என்ன?



"கவலையே படாதீங்க! எல்லா பிரச்னையையும் ஒரு மூலையில தூக்கிப் போடுங்க! நான் ஜனாதிபதியாயிட்டா குப்பனும் சுப்பனும் டாட்டா பிர்லாவா மாறிடலாம். தீவிரவாதம் ஒழிக்கப்படும். பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்! நம்புங்க!"

________________________




பாகிஸ்தானின் கராச்சியை மையமாக வைத்து அபு ஜிந்தால் திட்டங்களை தீட்டியிருப்பதாகவும் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை பேரை அவன் தேர்வு செய்திருக்க முடியாது என்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். திட்டங்களை செயல்படுத்தி விட்டு பங்களாதேஷ் வழியாக சவுதி சென்று இத்தனை நாள் தங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசும் இந்திய அதிகாரிகளோடு இவனது பாஸ்போர்டில் உள்ள பிரச்னையை வைத்து நம்மிடம் ஒப்படைத்துள்ளது. மதத்தின் பெயரை பயன்படுத்தி நாச வெலையில் ஈடுபட்ட இவனை போன்ற துரோகிகளை சவுதி பாரபட்சம் பார்க்காமல் இந்தியாவிடம் ஒப்படைத்திருப்பது பாராட்டக்குரியது. உண்மையான இஸ்லாத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்பதை இந்நிகழ்வு நமக்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது.



எனக்கு பழக்கமான பங்களாதேசை சேர்ந்த ஒருவன் அவன் நாட்டுக்கு செல்வதற்காக மும்பைக்கு டிக்கெட் எடுத்திருந்தான். நான் ஆச்சரியப்பட்டு 'நீ பங்காளி அல்லவா? எப்படி மும்பைக்கு டிக்கெட் எடுத்துள்ளாய்?' என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே 'மும்பையில் இறங்கி பிறகு பஸ்ஸில் திரிபுரா அல்லது அஸ்ஸாம் செல்வேன். அங்குள்ள காடுகளை தாண்டினால் எங்கள் நாடு பங்களாதேஷ் வந்து விடும். அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு சென்று விடுவேன்' என்றான் சர்வசாதாரணமாக.

ஆச்சரியத்தோடு நான் 'பாஸ்போர்ட் எப்படி எடுத்தாய்?' என்று கேட்டேன்.

"பணம் கொடுத்தால் இங்கிருந்தே எனக்கு இன்னொரு பாஸ்போர்டடை மும்பையில் எடுக்க முடியும்" என்றான். இந்த சம்பாஷணை நடந்து பல வருடங்களாகிறது. தற்போது அந்த நிகழ்வு ஞாபகம் வந்தது. வல்லரசாக துடிக்கும் ஒரு நாடு எல்லைப் புறத்தில் இவ்வளவு அசட்டையாக இருக்கலாமா?

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்களை இந்தியாவைக் காட்டி பயமுறுத்தி அடக்கி வைக்க அந்நாட்டு அரசு செயல்படுத்தும் பல தீவிரவாத செயல்களை நாம் அறிவோம். உதவிக்கு வர இஸ்ரேலும் அமெரிக்காவும் எப்போதும் தயாராகவே இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தரை மார்க்கத்தை சுற்றி இரும்பு வேலி அடைக்க ஏன் நிர்வாகம் முயல்வதில்லை. எத்தனையோ காரியங்களுக்கு பணத்தை தண்ணீராக செலவழிக்கும் அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயததில் ஏன் இவ்வளவு அசட்டையாக இருக்கிறது.




அடுத்து சில மதரஸாக்களில் இஸ்லாம் தவறாக கற்பிக்கப்படுகிறது. ஆதாரமில்லாத இஸ்லாமிய எதிரிகளால் எழுதப்பட்ட சில போலி ஹதீஸ்களை இளைஞர்களுக்கு இதுதான் இஸ்லாம் என்று போதிக்கப்படுகிறது. ஜிஹாதுக்கு தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. குர்ஆனின் வசனங்களுக்கும் தவறாக மொழி பெயர்ப்பை அந்த மாணவர்களின் மனதில் விதைக்கினறனர். இதற்கு சில கள்ள மார்க்க அறிஞர்களும் உடந்தை. இவற்றையும் முதலில் கண்டுபிடித்து அவ்வாறு தீவிரவாதத்தில் ஈடுபடும் மதரஸாக்களை பாகிஸ்தான் இழுத்து மூட வேண்டும். குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்ட மதரஸாக்கள் உருவாக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் இவ்வாறு சில மதரஸாக்களில் முன்பு தவறான பாடத் திட்டங்கள் வைக்கப்பட்டிருந்தது. தவ்ஹீத் (வஹாபிகள்) வாதிகளின் தொடர் பிரச்சாரங்களால் அந்த பாடங்கள் தற்போது மத்ரஸாக்களில் போதிக்கப் படுவதில்லை. ஆனால் வட நாடுகளில் இன்றும் போதிக்கப்பட்டு வருகிறது. இது போன்று தவறான பாடத் திட்டங்களில் செயல்படும் மத்ரஸாக்களை இழுத்து மூடினாலே பல பிரச்னைகள் ஒழிய வாய்ப்புண்டு. மத்ரஸாக்களின் துணை இல்லாமலேயே இஸ்லாத்தை பலரும் அதன் தூய வடிவில் அறிந்து வருகின்றனர். நானும் கூட மதரஸா சென்று இஸ்லாத்தை தெரிந்து கொண்டவன் அல்ல. இந்தியா முழுமைக்கும் சீரான பாடத்திட்டத்தை இஸ்லாமிய அறிஞர்களான பி.ஜெய்னுல்லாபுதீன், ஜாகிர்நாயக் போன்றோரின் உதவி கொண்டு அரசு முறைப்படுத்த முயல வேண்டும்.

அடுத்து சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு குற்றவாளி பிடிபட்டால் அவனை உடன் தூக்கில் தொங்க விட்டால் அடுத்து எல்லை தாண்டி வருவதற்கு பலரும் யோசிப்பர். சவுதியில் பெரும் டிரக்குகளை சில ஆப்ரிக்க கொள்ளையர்கள் டிரைவர்களை கொலை செய்து விட்டு பொருள்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்கதையானது. மஃப்டியில் ஒரு மாதம் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் முடிவில் இரண்டு கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர். பிறகென்ன....விசாரணை ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு தலை வெட்டப்பட்டது. உடலை பார்வைக்காக சில வாரங்கள் அந்த வழியிலேயே கட்டி தொங்க விட்டிருந்தனர். இதைப் பார்க்கும் எவருக்காவது திருட மனம் வருமா? அன்றிலிருந்து எந்த பிரச்னையும் இல்லாமல் டிரக்குகள் ஒழுங்காக சென்று வருகின்றன.

அஜ்மல் கசாபுக்கு அவனது குடும்பத்திற்கு பல லட்சங்கள் தருவதாக சொன்னதன் பேரிலேயே மும்பை வர ஒத்துக் கொண்டுள்ளான். அடுத்து அவனுக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? என்பதும் இந்தியாவில் அவர்களை இந்த அளவு சுதந்திரமாக அனுமதித்தது யார் என்பதையும் உலகுக்கு தெரிவிக்க வேண்டும். குஜராத் எல்லையை அவர்கள் பயன்படுத்தியது எவ்வாறு? கடல் கண்காணிப்பில் இருந்த அதிகாரிகள் எப்படி இவ்வளவு பேர் அனுமதியின்றி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்? என்ற விபரங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும். மேலும் விசாரணைக் கைதிகளை மறைவில் வைத்து விசாரிக்காமல் பொதுவில் வைத்து விசாரித்தால் சில நாட்களிலேயே உண்மை வெளி வந்து விடும். போலீஸாரின் மிரட்டலுக்கு பயந்து தரும் வாக்கு மூலமாகவும் அது இருக்காது. பாராளுமன்ற தாக்குதலில் அப்சல் குரு எவ்வாறு சிக்கவைக்கப் பட்டார் என்று முன்பு பல பதிவுகளில் பார்த்துள்ளோம். நம் நாட்டு அரசு தரும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை முதலில் இனம் காண வேண்டும். இதை எல்லாம் நேர்மையாக நடக்கும் சிதம்பரம் மனது வைத்தால் செயல்படுத்த முடியும். ஆனால் அதிகார வர்க்கம் இதை செயல்படுத்த முன் வருமா? என்பது கேள்விக் குறியே!

Pointing out to the Indian nationals nabbed in the Mumbai terror attacks, Mr. Malik said India should look inwards instead of always pointing the accusing finger at Pakistan. “Zabiuddin Ansari is an Indian.” When Ansari did everything in India, he questioned why Pakistan was being held solely responsible for the Mumbai terror attacks. “That means your agencies failed to control their citizens. Please look at your system also.’’
http://www.thehindu.com/news/national/article3576826.ece

சிதம்பரம் இந்த கைதுக்கு பிறகு பாகிஸ்தானை குறை சொன்னதற்காக அந்நாட்டு அமைச்சர் மாலிக் கொடுத்த பேட்டியைத்தான் நாம் மேலே பார்க்கிறோம். நம் உள் நாட்டு பாதுகாப்பிலும் பல குறைபாடுகள் உண்டு. அதையும் சரி செய்ய வேண்டும். அடுத்து பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், போன்ற நாடுகளின் எல்லையை கண்காணிப்பதில் இன்னும் சிரத்தை எடுக்க வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு மத முத்திரையை குத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எந்த மதமும் இல்லை. அஜ்மல் கசாபை எப்படி பார்க்கிறோமோ அதே நிலையில்தான் சாது பிரக்யாசிங்கையும் நாம் பார்க்க வேண்டும். நாட்டு நலன் முக்கியமாக்கப்பட்டு குற்றவாளிகள் நமது சொந்தங்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கொண்டு விடும் பக்குவம் நமக்கு வர வேண்டும். இந்தியாவை சிறந்த தேசமாக பார்க்க நினைக்கும் அனைவரும் இதை கடைபிடித்தே ஆக வேண்டும். இத்தகைய தேசபக்தி மிக்க மக்களாக நம் அனைவரையும் எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!!

ஜாவேரி குடும்பமும் காந்தியும் சுதந்திர போராட்டமும்.

மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.

(கடைசில இப்பவாவது ஏற்றுக்கொள்கின்றீர்கள்தானே முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு வகித்தள்ளார்கள் என்று? அப்படியே உங்கள் சகா தினமனி குருமூர்த்தி ஐயருக்கும் இதை சொல்லிடுங்க தினமலர்)

நன்றிங்க..

FULL VERSION PUBLISHED IN
" KUMUDAM REPORTER " 12.07.07

அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையொட்டி ஆயிரம் சர்ச்சைகள்.. அமெரிக்காவின் கொடூரமான போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்ஸ் கப்பல் எனக்கூறி, சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்பந்தர் துறைமுகத்தில் 1897_ம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க சத்தமில்லாமல் போராடி வருகிறது, போர்பந்தரை பூர்வீகமாகக் கொண்ட ஜவேரி என்கிற குடும்பம்.

வரலாற்றுப் பொக்கிஷங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்ற வருத்தமும் ஜவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.

போர்பந்தர்! ‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே’ என்றெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.

இந்த ஜவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்துல்கரீம் என்பவர், மதுரையில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். போர்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றி பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் கொட்டினார்.

‘‘எனது கொள்ளுத் தாத்தா அப்துல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்துல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

1893_ம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்துல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளைஞர். அவர பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுன்.

அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளயார் சுழி போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களான என் கொள்ளுத்தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.

எங்கள் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.

1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் உள்ள எங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் வீட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.

1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற எங்கள் கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.

காந்தி டர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்களை பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்ல. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.

இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.

‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் எனது கொள்ளுத்தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து என முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது. (அதையும் நம்மிடம் காண்பிக்கிறார்.)

அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்துல்லா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தைக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்ல’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.

1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியானது. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.

முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந்த முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து என் பாட்டனார்கள் ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.

சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட காந்தியை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்ல. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மொத்தத் துணி வியாபாரம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர், 1970_ல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைவாசியாக நான் மாறிவிட்டாலும் போர்பந்தரை மறக்கவில்லை. 1985_ல் என் சகோதரியை போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது, அங்கு நான் போயிருந்த நேரம்தான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அபகரிக்கத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடர்ந்தேன்.

உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அதனை லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமானது என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காண்பிக்கிறார்) அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடையது என கோர்ட்டில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.

இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினத்தாரோ என்னவோ, எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள் நான் காங்கிரஸில் சலுகைபெற முயல்வதாக தவறாகப் புரிந்து கொண்டார்கள். ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி என பலருக்கும் கடிதம் எழுதினேன். (கடித நகல்களக் காட்டுகிறார்) மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமென்ற என போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம் பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் என்னிடம் உள்ளது.



இந்தத் தகவல்கள எல்லாம் பி.பி.சி.யில் பேட்டியாக கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால், என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போகத் தயாராக இல்லை. ஆனால், காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விஷயத்தில் அரசு ஏன் அசிரத்தையாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.



இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை காட்சியகத்தில் வைத்தால், என்வசமுள்ள காந்தியின் கடிதம் போன்ற அரிய ஆவணங்களை அதற்குத்தர தயாராக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். காந்தியின் சுதந்திரப்போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்ற பெயர் மட்டும் போதும்! என வேதனயுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.

இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் எம். அலி அக்பரிடம் பேசினோம்.

‘‘காந்தியின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட ஜவேரி சகோதரர்கள், அதற்காகவே சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடமும், இப்போதைய அமைச்சர் ராஜாவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜவேரி சகோதரர்களின் வாரிசுகள் பற்றி காங்கிரஸ் பேரியக்கம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் எம்.பி. காஜாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஒரு பொக்கிஷத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’’ என்றார் அக்பர் அலி.

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதற்கிடையே மகாத்மா காந்தியை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
"KUMUDAM REPORTER" 12.07.07

http://www.hindu.com/2004/04/03/stories/2004040305100500.html

Thursday, June 28, 2012

பாலஸ்தீனத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்வோம்!

பாலஸ்தீனத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்வோம்!

இஸ்லாமியர்கள் போல் உலகெங்கும் உள்ள கிறித்தவர்க‌ளும் பெத்லகேம் புனிதப் பயணம் செல்வது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது.அப்படி செல்பவர்கள் இயேசு பிறந்த பெத்லகேம்,வசித்த ,பயணம் செய்த பல பகுதிகள் இபோதைய ஜோர்டான், பாலஸ்தின மேற்கு கரைகளில் வருவதால் இபபகுதிகளை சுற்றிப் பார்க்கின்றனர்.

இதில் இயேசு பிறந்தாக கூறப்படும் நேட்டிவிட்டி சர்ச்,ஒரு குகையாக இருந்து ஆலயமாகப்பட்டது விக்கிபிடியா குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.இது ரோம பேரரசன் கான்ஸ்டன்டைனால் பொ.ஆ 327ல் தொடங்கி பொ.ஆ 333 ல் கட்டி முடிக்கப்பட்டது.இந்த ஆலயம் இல்லாமல் இன்னும் பல பழமையான் கிறித்தவ தேவாலயங்கள் பெதலகேம்,பாலஸ்தீனத்தில் உண்டு.

http://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity

இபோது இந்த ஆலயம் உள்ளிட்ட சில இடங்களை யுனெஸ்கோ அமைப்பின் உலகின் தொன்மையான இடங்கள் என அங்கீகாரம் பெற பாலஸ்தீன அரசு முயற்சிக்கிறது.இதற்கான வாக்கு இரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை 29 ஜூன் நடக்கிறது.

இதில் பாலஸ்தீனர்களுக்கு இரு விடயங்கள் இலாபம்

1. யுனஸ்கோவின் அங்கீகாரம் இன்னும் அதிக சுற்றுலா பயணிகள்,அது சார்ந்த வேலை வாய்ப்பு,பொருளாதாரம் வலுப்படும்.

2.இந்த ஆலயத்தை நகரை சுற்றி ஆக்கிரமிப்பு அமைக்க முயலும் இஸ்ரேலை தடுத்து விடலாம்.


பாலஸ்தினர்களில் கிறித்தவர்கள் பலர் உண்டு.இவர்கள் 10% இஸ்ரேலிலும்,4% சதவீதம் மேற்கு கரையிலும்,1% காசா பகுதியிலும் வாழ்கின்றனர்.பால்ஸ்தீன கிறித்த‌வ ,இஸ்லாமியர்களிடையே மண உறவு மிக இயல்பான ஒன்று.இந்த ஆலயத்தில் நடை பெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அனைவரும் பங்கு கொள்வர்.

http://en.wikipedia.org/wiki/Palestinian_Christians

நன்றி: http://aatralarasau.blogspot.com/2012/06/blog-post_28.html



வாழைப்பழம்! வாழைப் பழம்! வாழைப் பழம்!

ராஜ்: யானைக்கிட்டே வாழைப்பழம் என்ன சொல்லும்?

கண்ணன்: தெரியாது! நீயே சொல்லேன்!

ராஜ்: ஒண்ணும் சொல்லாது! ஏன்னா? வாழைப்பழத்துக்கு பேசத் தெரியாது. :-)

----------------------------


ராஜா: ஹே! குமார்!

குமார்: ஹ்ம்.......சொல்லு!

ராஜா: உன் காதுல வாழைப்பழம் இருக்கு.

குமார்: என்ன சொல்றே!...

ராஜா: உன் காதுல வாழைப்பழம் இருக்குடா!....

குமார்: நீ என்ன சொல்றே? சுத்தமா விளங்கல்ல...

ராஜா: (கோபத்தோடு) உன் காதுல வாழைப்பழம் இருக்குது. புரிஞ்சுதா!

குமார்: ராஜா நீ சொல்றது எதுவுமே எனக்கு விளங்கல்ல...ஏன்னா...என் காதுல வாழைப்பழம் இருக்கு!

------------------------------


ஆப்பிள் அழுது கொண்டு இருந்தது

வாழைப்பழம்: ஏம்பா அழுவுறே!

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்கப்பா!!!

வாழைப்பழம்: நீ யாவது பரவாயில்லை. எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துட்டுல்ல சாப்பிடுறாங்க!!

----------------------------------

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.




மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
– THANKS TO ALAVUDEEN




Tuesday, June 26, 2012

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

நாமக்கல் : நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா(28). இவரது மகன்கள் ஸ்ரீகாந்த்(8), பிரேம்நாத்(6). நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் சிமில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர். விளக்கு தவறி விழுந்ததில் சசிகலாவின் உடையில் தீப்பற்றியது. அவர் வீட்டில் அங்கும் இங்கும் ஓடியதால் வீடு முழுவதும் தீ பரவி உள்ளது. இதில் சசிகலாவும், அவரது இரு மகன்களும் தீக்காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சசிகலாவும், ஸ்ரீகாந்தும் நேற்று இரவு உயிரிழநதனர். இந்நிலையில் பிரேம்நாத்தும் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தினமலர்
27-06-2012

சிறிய அலட்சியம் எந்த அளவு சோகத்தை தந்து விடுகிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இரவு படுக்கப் போகும் முன் எரியும் திரிகளை அணைத்து விட்டு படுப்பதால் என்ன சிரமம் வந்து விடப் போகிறது? இதற்கு சோம்பல் பட்டு படுதது விடுவதால் மூன்று உயிர்களை அந்த குடும்பம் இழந்துள்ளது. அந்த குடும்பத்துக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது போன்ற தனி மனித பாதுகாப்பில் கூட இஸ்லாம் சில கட்டளைகளை மனிதனுக்கு இடுகிறது. கீழ் வரும் நபி மொழிகள் மனிதர்கள் படுக்கப் போகும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அழகாக நமக்கு சொல்லித் தருகிறது.

'இரவில் தாமதமாகி வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள், இரவு என்பது நிசப்தமானது, உங்களைச் சுற்றி எந்த வகையான விலங்கை இறைவன் அனுப்பியுள்ளான் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி விடுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(நூல்: புஹாரி - 6295,6296, புஹாரியின் அதபுல் முப்ரத்)

கதவை தாழிடுதல்:

முதன்முதல் அறிவுரை தூங்கச் செல்லு முன் கதவை தாழிட்டுக் கொள்வதாகும். இப்பொழுதெல்லாம் திருட்டு பல இடங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. அதனால் கதவை தாழிட்டுக் கொள்வதை சொல்லாமலேயே செய்து விடுவார்கள். திருட்டு பயம் இல்லாதிருந்தாலும் கதவை இரவில் தாழிட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள் வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க கதவை தாழிடத்தான் வேண்டும்.
கதவை மூடி தாழிட்டுக் கொள்வது பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

தண்ணீர் பாத்திரத்தை மூடுதல்:

அந்த காலத்தில் குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் போதுமான தண்ணீர் கிடைக்காத காலம். போதுமான தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். குடிநீர் தண்ணீர் பைகளிலே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். தண்ணீர் பைகளாகட்டும் தண்ணீர் உள்ள பாத்திரமாகட்டும் தண்ணீர் பைகளின் வாய் கட்டப்படவும் தண்ணீர் பாத்திரங்கள் மூடிவைக்கப்படவும் வேண்டும் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்போது தான் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களோ பூச்சிகளோ அதில் விழுந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

உணவுப் பாத்திரத்தை மூடுதல்:

இதே முறை மற்ற உணவுப் வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் குழம்பு வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் பொருந்தும். மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகள் அதற்குள் சென்று விடலாம். தூசியோ தீங்கு விளைவிக்கும் பொருளோ அதில் விழுந்து விடலாம். அது உடலுக்கு சக்தி கொடுக்கும் உணவாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் உணவாக மாறி விடலாம்.

விளக்கை அணைப்பது:

இங்கே சொல்லப்பட்டிருப்பது அகல்விளக்கு அல்லது அது போன்று திறந்த நிலையில் எண்ணெய் ஊற்றி திரியின் மூலம் எரிக்கப்படும் விளக்காகும். இப்படிப்பட்ட விளக்குகள் காற்று கூறுதலாக வீசும் போது அதன் தீப்பிளம்பு கூடும், அல்லது பூனை போன்ற விலங்குகளால் தீ விபத்து ஏற்பட முடியும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

'நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டில் உள்ள நெருப்பை அணைக்காமல் விட்டுவிடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புஹாரி - 6293, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி - 1873, இபுனுமாஜா)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
'உங்கள் வீடுகளில் விளக்கை திறந்திருக்கும் நிலையில் விட்டு விடாதீர்கள், அது உங்களது பகைவனாகும்' நபிமொழி. (நூல்: புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

முஸ்லிமல்லாத மக்களில் சிலர் தங்களது சில பண்டிகையின் போது அதிநவீன மின்சார விளக்குகள் இருந்தும் பெருவாரியான அகல்விளக்குகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கார்த்திகை தீபம் அன்று இவ்வாறு அகல்விளக்கை பயன்படுத்துகிறார்கள். அப்போது குறைந்தது விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.


மார்க்கத்தின் குரு இறைவனுக்கு சமமாக முடியுமா?

இன்று பல குடும்பங்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலையாய பிரச்னை ஆன்மீகம். மனிதன் தற்போது அவசர உலகத்தில் மன நிம்மதியின்றி வாழ்கிறான். எங்கு பார்த்தாலும் எந்திர வாழ்க்கை. மன நிம்மதி வேண்டி தன்னை படைத்த இறைவனை நோக்கி அவனது கவனம் செல்கிறது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சில கயவர்கள் தங்களை ஆன்மீக குரு என்றும் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறி அப்பாவி மக்களை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். சில பெண்கள் கற்பையும் இழந்து சொத்து சுகங்களையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். பத்திரிக்கைகளிலும் தினமும் படிக்கிறோம்.


முகமது நபி மனிதப் படைப்பல்ல: அவர் தேவர்களை ஒத்த விஷேச படைப்பு என்று பலர் கூறி அதுபோல் தாங்களும் தெய்வாம்சம் பொருந்திய ஒரு மகான் என்று வலையை விரிப்பர். பிற்காலத்தில் தன் பெயரால் இது போன்று பல பொய்கள் அரங்கேற்றப்படும் என்று தெரிந்ததால்தான் அதன் வாசல்கள் அனைத்தையும் முகமது நபி அடைத்து விட்டு சென்று விட்டார். இதற்கு ஆதாரமாக ஒரு அருமையான நபி மொழியைப் பார்ப்போம்.

"என் பெயரில் ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதாவது உங்கள் உணர்வுகள் அச்செய்திக்குப் பணியுமனால் இன்னும் அச்செய்தி உங்களுடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதைக் கூறுவதில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்."
"என் பெயரில் ஏதேனும் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால் இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களுடைய வாழ்க்கைக்கு சாத்தியப்படுவதை விட்டும் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் தூரமானவன்"

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூ உஸைத்
நூல்: அஹமத் 15478


பெரிய தலைப்பாகையோடு பெரிய தாடியோடு ஒரு பெரியவர் வந்து 'நான் இறைவனுக்கு நெருக்கமானவன்: என் காலில் விழுந்து ஆசி பெறுங்கள்' என்று கூறினால் உடன் தெளிவில் இருக்கும் ஒருவனின் மனசாட்சி இதை ஒத்துக் கொள்ளாது. நம்மைப் போன்று ஆசா பாசங்கள் நிறைந்த மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கிற ஒருவன் எப்படி இறைவனாக முடியும்? எப்படி இறைவனுக்கு நெருக்கமானவனாக முடியும்? என்ற கேள்விகளை எழுப்பும். ஆன்மீகத்தைப் பற்றியும் கடவுளின் வல்லமையைப் பற்றியும் அறியாத ஒருவன் அந்த போலி ஆன்மீகவாதியிடம் உடன் சரணடைந்து விடுவதைப் பார்க்கிறோம்.

முகமது நபியை பற்றி கூறும்போது 'தனக்கு பின்னால் நடப்பதை எல்லாம் அறிவார்: அவருக்கு ஞானக் கண் உள்ளது. உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் அறியும் ஆற்றல் பெற்றவர்:' என்று கூறும் சிலரை நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு முகமது நபிக்கு இறைத்தன்மையை கொடுப்பதோடு 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற கொள்கையை சொல்லி தனக்கும் கூட்டம் சேர்க்கும் பல போலி ஆன்மீக வாதிகளை அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம்.

'"நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்: எனக்கு இறைவனிடமிருந்து வரும் செய்தியைத் தவிர வேறு எந்த சிறப்பும் பெற்றவன் அல்ல" என்று முகமது நபி கூறினாலும் சில ஆதாரமில்லாத நபி மொழிகளை கொடுத்து பாமர மக்களை வலையில் வீழ்த்த முயற்ச்சிப்பர்.

அடுத்து ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இளைஞர்களை மார்க்க போதனை என்ற பெயரில் சில பொய்யான நபி மொழிகளை போதித்து தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதை பார்க்கிறோம். ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுக்கப்படுகிறது. குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் இந்த வலையில் வீழ மாட்டான். அவனுக்குத் தெரியும். அப்பாவி மக்களை கொல்வது குர்ஆனில் எந்த அளவு தடுக்கப்பட்டுள்ளது என்பதை. மொசாத்தும், சிஐஏ வும் சில கள்ள மார்க்க அறிஞர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் மசூதிகளில் குண்டு வைப்பதை பார்க்கிறோம். இந்த இளைஞர்கள் எல்லாம் மேலே உள்ள நபி மொழியை சரியாக சிந்தித்தார்கள் என்றால் அழிவிலிருந்து வெளி வருவார்கள்.

அடுத்து திருட்டு, கொலை, விபசாரம், பொய், வட்டி போன்ற பெரும்பாவங்களை என் மனசாட்சி நியாயப்படுத்துகிறது: எனவே மேலே உள்ள நபி மொழிக்கிணங்க நான் செய்கிறேன் என்ற வாதத்தை வைப்பதும் சிறு பிள்ளைத் தனமானது. இந்த பெரும்பாவங்கள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று குர்ஆன் தெளிவாகக் கூறி விடுகிறது. எனவே சந்தேகம் உள்ள ஒரு செய்தி முகமது நபி சொன்னதாக நமக்கு கிடைத்தால் முதலில் அது குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் உடன் புறம் தள்ளி விட வேண்டும். மேலும் சில பொதுவான விஷயங்களில் நமது மனசாட்சியைக் கேட்டாலே அழகிய பதில் கிடைத்து விடும். குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான நபி மொழிக்கும் மாற்றாக ஒரு செய்தி நமக்கு கிடைத்தால் நம் மனசாட்சியிடம் கேட்டு நாமே ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இதில் குழப்பமே இல்லை. இதற்காக ஒரு பெரிய மார்க்க அறிஞரை தேடுவதும்: அவர் தவறான வழியை இவருக்கு காண்பிப்பதும்தான் தற்போது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் முகமது நபி அவர்களிடம் வந்த போது 'இந்த மக்கள் யார்?' என்று நபிகள் நாயகம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அங்கிருந்த மக்கள் 'இவர்கள் ரபீஆ குடும்பத்தினர்' என்றார்கள். இதைக் கேட்ட முகமது நபி அவர்கள் 'இழி நிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நல்வரவாகுக' என்று வாழ்த்துக் கூறினர்.

-அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்
நூல்கள்: புகாரி 53, 87, 4368


இந்த நபி மொழியின் படி தனக்கு முன்னால் உள்ள மக்கள் கூட்டம் யார் என்பதை அறியாதவர்களாகவே முகமது நபி இருந்துள்ளார். மற்றவர்கள் சொன்னபோதுதான் இவர்கள் இன்னார் என்று நபிகளுக்கே விளங்குகிறது. இது போல் பல நபி மொழிகளை நாம் பார்க்கிறோம்.

இறைவன் சில நேரங்களில் அறிவித்துக் கொடுத்தால்தான் அவர்களால் சில மறைவான விஷயங்களை அறிய முடிகிறது. மற்ற நேரங்களில் அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதராகத்தான் வாழ்ந்து மறைந்தார்கள். ஒரு இறைத் தூதருக்கே இஸ்லாத்தில் இந்த நிலைதான். ஆனால் நாமோ நாகூரிலும், ஏர்வாடியிலும், அஜ்மீரிலும் அடங்கியுள்ளவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள். நமது தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பல கள்ள மார்க்க அறிஞர்களையும் போலி சாமியார்களையும் நம்பி நமது தன்மானத்தை இழந்து நிற்கிறோம்.

என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்.


மேற்கண்ட நபி மொழி முகமது நபியின் பெயரால் ஒரு பொய்யை சொல்லுவது எந்த அளவு குற்றம் என்பதையும் விளங்குகிறோம்.

எனவே உண்மையான இஸ்லாத்தை உணர்ந்து அதன்படி அமல் செய்யக் கூடிய நன் மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிவனாக!





Sunday, June 24, 2012

முஹம்மது முர்ஷி எகிப்தில் வெற்றி பெற்றார்!



இஸ்ரேல்: ஐயையோ! என்னய்யா இது! எகிப்துல இஹ்வான்கள் ஆட்சியைப் புடிச்சுட்டானுங்க!

யுஎஸ்: மவனே! இனி வாலை ஆட்டுனே! ஒட்ட நறுக்கிபுடுவானுங்க! அவ்வளவுதான் நான் சொல்லுவேன். இனி பார்த்து நடந்துக்க!

--------------------------------



பல நாள் இழுபறிக்குப் பிறகு இன்று 'முஸ்லிம் பிரதர்ஹூட்' ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்து காட்டிய குள்ளநரித்தனங்களையும் காலடியில் போட்டு மிதித்து இன்று மிகப் பெரிய வெற்றியை முர்ஷி பெற்றுள்ளார்.



60 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியாளர்களையே பார்த்து வந்த எகிப்திய மக்கள் இன்று தூய இஸ்லாமிய ஆட்சியை உளமாற வரவேற்றிருக்கிறார்கள். இனி சன்னம் சன்னமாக குர்ஆனிய ஆட்சி முறை அமுல்படுத்தப்படும். மதுக்களும் சிகப்பு விளக்கு பகுதிகளும் இனி தொடர்வது எகிப்தில் கேள்விக் குறியே! அரை குறை ஆடையோடு சன் பாத் எடுக்கும் கலாசாரத்துக்கும் இனி மூடுவிழா நடத்தப்படலாம். இதனால் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையலாம். இவர்களினால் ஏற்படும் இழப்பை அரசு வேறு மார்க்கத்தில் இனி ஈட்ட வேண்டி வரலாம்.



தஹ்ரீர் சதுக்கத்தில் 'இஹ்வான்களின்' வெற்றிச் செய்தியை கேட்டமாத்திரத்தில் இளைஞர்கள் உற்சாக கரகோசம் எழுப்பியும் நடனமாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மோர்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் அதி கூறும்போது 'விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த அளவு சந்தோஷத்தில் இருக்கிறோம். சகோதரர்கள், தியாகிகள் செய்த உயிர் தியாகம் எங்களுக்கு இந்த வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.' என்கிறார்.




எகிப்திய தேர்தல் கமிஷன் 51.7 சதவீத வாக்குகளை 'முஸ்லிம் பிரதர் ஹூட்' கைப்பற்றியுள்ளதாகவும் முபாரக் ஆதரவு பெற்ற கட்சி 48.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்லாமிய கட்சி ஆட்சிக்கு வருவதை ராணுவ ஆட்சியாளர்கள் தடுக்க எவ்வளவோ முயற்சித்தனர். இதற்கு அமெரிக்காவின் ஆதரவு வேறு இருந்தது. இருந்தும் மக்கள் சக்திக்கு முன்னால் மக்களின் எண்ண ஓட்டத்துக்கு முன்னால் வல்லரசுகளெல்லாம் காணாமல் போய் விட்டன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வெற்றியை விரும்பாத அமெரிக்கா இனி ராணுவத்தோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க தன்னாலான முயற்சிகளை இஸ்ரேலின் துணையோடு செய்ய முயற்சிக்கும். ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான்களை கவிழ்த்தன் பலனை அமெரிக்கா இன்று வரை அனுபவித்து வருகிறது. மற்றொரு தவறை செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாது என்றே நம்புவோம்.

அதிபர் முர்ஷிக்கு வயது 60 ஆகிறது. அமெரிக்காவில் படித்த இன்ஜினீயர் இவர். முபாரக்கினால் சிறை வைக்கப் பட்டவர். 'சர்வதேச சமூகத்துக்கு என்றும் மதிப்பளிப்பேன். 1979 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுடனான உறவு தொடரும். ராணுவத்தோடு உள்ள முறுகல் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படும். பல சவால்களை இன்று நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.' என்கிறார்.

சவுதி அரேபியாவை முன் மாதிரியாகக் கொண்டு குர்ஆனின் அடிப்படையில் எகிப்திய புதிய அரசு உண்மையான இஸ்லாத்தை கையிலெடுத்து சிறுபான்மை மக்களான கிறித்தவர்களுக்கும் உரிய பங்கினை அளித்து வெற்றி நடை போட வாழ்த்துவோம்.

Thursday, June 21, 2012

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுதல்: காஃபிர்: ஜிஸ்யா வரி:

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுதல்: காஃபிர்: ஜிஸ்யா வரி:


இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.

இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம். இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம் இது.

இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)

தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)

முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.

மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள். ”உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்” என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள். ”இவளைக் கொன்று விடட்டுமா?” என நபித்தோழர்கள் கேட்டதற்கு ”கூடாது” என நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

----------------------------
...

இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர், ஏற்காதவர் என்பது தான். இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காபிர்கள்) எனக் கூறுகிறது. ஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது. ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும். இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள். இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது. முஷ்ரீக் என்றால் ”பல கடவுள்களை நம்புபவர்கள்” என்பது பொருள். பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்! இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.

-------------------------

ஜிஸ்யா வரி


பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ”ஜிஸ்யா வரி” என்பதும் ஒன்றாகும்.

”இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்.” என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது. அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது. வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.


பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பல மடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்) இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்? என்ற என்பதே அந்த ஐயம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும். ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார். ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்” என்று குர்ஆன் கூறுகிறது. எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.

-பி.ஜெய்னுல்லாபுதீன்

Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு முன் புலி: பின்னே பூனை!




காட்டில் ஒரு புலி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் புலியின் குடும்பத்தினர் விமரிசையாக செய்யத் தொடங்கினர். காட்டின் அனைத்து மிருகங்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. இதற்காக ஒரு மேடையும் தயார் செய்யப்பட்டது. திருமண நாளன்று விழா மேடை அலங்கரிக்கப்பட்டது. அந்த மேடையில் புலிகள் மட்டுமே நடனமாட அனுமதிக்கப்பட்டனர். மற்ற மிருகங்கள் எல்லாம் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தன. புலிகளின் நடனம் தொடங்கியது. மேடையின் ஓரத்தில் ஒரு பூனை தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தது. மணமகன் புலி மேடையில் ஒரு பூனை ஆடுவதைப் பார்த்து ஆச்சரியத்தோடு வந்து அந்த பூனையிடம் கேட்டது:

"மன்னிக்கவும்! இந்த மேடை புலிகளுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டதாச்சே! வேறு மிருகங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"

அதற்கு அந்த பூனை சொன்னது: "எனக்கும் தெரியும். திருமணத்துக்கு முன்னால் நானும் புலியாகத்தான் இருந்தேன். எனது திருமணத்திலிருந்து பூனையாக மாற்றப்பட்டு விட்டேன். என்னை நம்பவும்!"

புலி: "!!!!!!!!!!!!!!!............"

டிஸ்கி: திருமணத்துக்கு முன் வரதட்சணை கூடாது என்று வீர வசனம் பேசிய பலர் தனது திருமணம் என்று வரும் போது 'அம்மா பேச்சை தட்ட முடியாதுல்ல..' என்று ஜகா வாங்கும் பலருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

--------------------------------



நான் முதியவனல்ல - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
6/13/2012

நான் ஒரே நேரத்தில் தென்னை மரத்தையும்

என் மகனையும் வளர்த்தேன்,

தென்னை எனக்கு நிழல் தருகிறது,

இவன் நிழலில் நானிருக்க ஒரு

அரை கூட இவன் வீட்டில் இல்லை,

தென்னை எனக்கு இளநீர் தந்தது,

இவன் இளவயதில் கூட எனக்கு நீர் தரவில்லை,

தென்னை எனக்கு தேங்காய் தந்தது,

அன்னை என்னை இவன் முதியோர் இல்லத்துக்கு தந்தான்...

என் மன வேதனை இவனுக்கு என் வயது

வரும்போது வரகூடாது என் ஆண்டவா...

நான் முதியவனல்ல - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
6/13/2012
-தின மலர்



Monday, June 18, 2012

கோவில் கட்டுவதை அனுமதிக்க மாட்டேன்!

ரசிகர்கள் எனக்கு கோவில் கட்டுவதை கண்டிப்பாக நான் அனுமதிக்க மாட்டேன் என்று நடிகை ஹன்சிகா‌ மோத்வானி கூறியுள்ளார். சினிமாவில் வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு அவர்கள் மனதில் குடி கொண்டு இருக்கிறார் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகாவிற்கு மதுரை அருகே ரசிகர்கள் கோவில் கட்டட தயாராகி வருகிறார்கள். இதற்காக இடமெல்லாம் பார்த்து, கோவில் கட்ட நன்கொடையும் கூட வசூலித்து வருகின்றனர். கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்க உள்ளனர்.




இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஹன்சிகா கூறும்போது, ஒரு சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை சந்தித்து கோவில் கட்ட அனுமதி கேட்டனர். இப்படி அவர்கள் சொன்னதும் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு புரிந்தது. ஆனால் அதற்காக கோவில் எல்லாம் கட்ட நான் அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்படுவது தவறான செயல் என்று கூறியுள்ளார்.

-தின மலர்

17-06-2012

இறைவனுக்குரிய இலக்கணம் என்னவென்று தெரியாததால்தான் அந்த இளைஞர்கள் இது போன்ற காரியத்தை செய்யத் துணிந்திருக்கின்றனர். ஒரு நடிகை கதாநாயகியாக நட்சத்திரமாக மின்னுவதற்கு எவ்வளவு பெரிய தியாகஙகளை எல்லாம்:-) செய்ய வேண்டும் என்பதை அறியாதவர் அல்ல நாம். கோவில் கட்ட முனைந்திருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். இருந்தும் கடவுள் என்றால் யார்? யாரைத்தான் கடவுளாகக் கொள்ள வேண்டும்! யாரை கடவுளாக்கக் கூடாது என்ற சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படாததால் அந்த இளைஞர்கள் இது போன்ற காரியத்தை தங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். அந்த ஊர் பெரிய மனிதர்களும் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதுதான் அதிசயம். ஏற்கெனவே குஷ்புவுக்கு கோவில் கட்டி மந்திரங்கள் சொல்லி வழிபாடு நடந்ததால் இதனையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.

இன்று நம்மிடையே தெருவுக்கு ஒரு கடவுள் எவ்வாறு வந்தது? அதே போல் ஊருக்கு ஒரு தர்ஹா எவ்வாறு வந்தது? அந்த ஊரில் தலைவரக இருந்தவர் பண வசதி படைத்தவர் இறந்து போனால் அவருக்காக தங்களின் வசதியை முன்னிட்டு சமாதிகளை அழகிய முறையில் கட்டி வைப்பார்கள். அதோடு அவர்களின் படங்களையும் சிலைகளையும் ஞாபகத்துக்காக வைப்பது அன்றைய வழக்கம். அது நாளடைவில் மரியாதை பக்தியாக பரிணமிக்கும் போது அங்கு கோவிலோ தர்ஹாவோ உண்டாகி விடுகிறது. தமிழகத்தின் அல்லது இந்தியாவின் அநேக கோவில்களின் தர்ஹாக்களின் வரலாறுகளை நீங்கள் தோண்டிப் பார்த்தால் மேற் சொன்ன உண்மைகள் வெளி வருவதைக் காணலாம்.

இப்படி சினிமா நடிகைகளுக்கெல்லாம் கோவில் கட்டுவதை பல வட நாட்டவர் பார்த்து விட்டு நம்மிடம் வந்து ஹாஸ்யமாக இதைப் பற்றி விசாரிக்கும் போது நமக்கு வெட்கமாக இருக்கிறது. அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றி யாருக்குத்தான் கோவில் கட்டலாம், ஏன் தர்ஹா கட்டக் கூடாது என்ற விபரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்தால் சட்டத்தின் மூலம் தடுக்க வசதியாக இருக்கும்.

கோவலன் கண்ணகி கதை கூட எகிப்தில் மக்களால் பேசப்பட்டு வந்த ஒரு கதையை இளங்கோவடிகள் நம் தமிழ்நாட்டு சூழலில் கையாண்டுள்ளார் என்பதை விளக்கும் பதிவு இது. படித்துப் பாருங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

-----------------------------

நாகர்கோவில்: காதல் திருமணம் செய்தவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால், நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே பறக்கை செட்டித்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்,25. லோடு ஆட்டோ ஓட்டுனர். இவர், இடலாக்குடி பகுதியை சேர்ந்த நிஷா,20, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பகை இருந்து வந்தது. இந்நிலையில், ரமேஷை சவாரிக்கு அழைத்து சென்ற சிலர், அவரை கடுமையாகத் தாக்கினர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரமேஷ் இறந்தார். இது தொடர்பாக நிஷா கொடுத்த புகாரின் பேரில், அவரது சகோதரர் செய்யது அலி மற்றும் ஹவுசி, ஆசீப்கனி உட்பட ஏழு பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரமேஷின் கொலையை தொடர்ந்து, இடலாக்குடியில் ஒரு சமுதாயத்தினர் வீடுகள் மீது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்கினர். இதில், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதனால், பதட்டம் ஏற்பட்டது. வீடுகள் மீது தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, எதிர் தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பாஸ்கரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

--தின மலர்
16-06-2012

ஒரு குடும்பம் செய்யும் தவறால் தற்போது இரண்டு சமூகங்கள் மோதிக் கொள்ளும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. வேறு மதத்தவருக்கு தனது தங்கையை தர விருப்பமில்லை என்றால் தங்கையை கண்டித்து வளர்த்திருக்க வேண்டும். திருமணம் செய்தவுடன் அந்த பெண்ணை உங்கள் குடும்பத்திலிருந்து விலக்கி விட்டீர்கள். அதோடு பிரச்னை முடிந்தது. அவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படியாவது ஓட்டிக் கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டியதுதானே! ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனை வெட்டி கொலை செய்வது கண்டிக்கத் தக்கது. கொலையாளிகளுக்கு யாரும் துணை போகாமல் காவல் துறை வசம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கு மாறாக குற்றவாளிகளை மறைத்து வைப்பதும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதும் கண்டிக்கத்தக்கது.


அதே போல் கொலையுண்ட குடும்பத்தினர் கொலை செய்த நபரை சட்டத்தின் பிடியிலோ அல்லது அவர்களின் விருப்பத்தின்படியோ ஏதாவது செய்து கொள்ளட்டும். அதை விடுத்து அவர் சார்ந்த மதத்தை சேர்ந்த சிலரது வீடுகளை சேதப்படுத்துவதும் அவர்களின் வியாபாரத் தலங்களை சேதப்படுத்த முயல்வதும் கண்டிக்கத் தக்கது. இதைத்தான் சமூக விரோதிகள் எதிர்பார்க்கிறார்கள். உணர்ச்சி வசத்தால் சிலர் செய்யும் தவறு பலரது உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவித்து விடுகிறது. நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் இதுபோன்ற கலவரங்களை விரும்ப மாட்டார். பல மொழிகள் பல இனங்கள் பல மார்க்கங்கள் உள்ள நமது நாடு பல கலாசாரங்களையும் உள் வாங்கி அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. அந்த அமைதி தொடர வேண்டும் என்பதே நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களின் விருப்பம்.

-----------------------------

நமது நாட்டின் வட மாநிலங்களில் தக்காபூர் எனும் கிராமத்தில் மழை வர வேண்டி ஒரு விசித்திரமான பழக்கத்தை கையாள்கின்றனர். இரண்டு தவளைகளை பிடித்து வந்து மாலை மரியாதை எல்லாம் செய்து அவைகளுக்குள் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. இறைவன் அருளால்தான் மழை பெய்கிறது என்பதை விளங்கி அந்த மக்கள் படைத்த கடவுளிடம் முறையிடுவதே சரியான வழி முறை. எப்படியோ மழை பெய்து அந்த மக்கள் சந்தோஷமாக இருந்தால் நமக்கும் மகிழ்ச்சியே!





Sunday, June 17, 2012

சவுதி இளவரசர் நாய்ஃப் பின் அப்துல் அஜீஸ் மரணமடைந்தார்!

இளவரசரின் இறந்த உடல் கொண்டு செல்லப்படும் காட்சிகள்





ஜெனிவாவில் இளவரசர் நாய்ஃப் 16-06-2012 சனிக்கிழமையன்று சுகவீனத்தினால் மரணமடைந்தார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

"நாங்கள் இறைவனுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக."
ஆதாரம்: முஸ்லிம் 1525


இறைவன் இவரது பாவங்களை மன்னித்து இவரை சுவனத்தில் பிரவேசிக்க வைப்பானாக! இவரது பிரிவால் வருத்தமுற்றிருக்கும் இவரது குடும்பத்தாருக்கு மன நிம்மதியைத் தந்தருள்வானாக!





78 வயதை தொட்டிருக்கும் இவர் சவுதியின் உள்துறை மந்திரியாக 1975 லிருந்து பணியாற்றி வருகிறார். இவரது அதிகாரத்தில் சவுதியில் அல்காய்தாவின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழித்தார். 2003 லிருந்து 2006 வரை இவரது தலைமையில் மிகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து தீவிரவாதத்தை முற்றிலுமாக சவுதியில் ஒழித்தார். இளவரசர் சுல்தானின் இறப்புக்கு பிறகு அவரது பொறுப்புகளை மன்னர் அப்துல்லா நாய்ஃபிடம் தந்தார். பாதுகாப்பு அமைச்சராகவும் தனது பணியை சிறப்புடன் செய்தார். தனக்கு கொடுக்கப்பட்ட எந்த பொறுப்புகளையும் சிறப்பாக செய்வதில் இளவரசர் நாய்ஃப் வல்லவர்.

ஞாயிற்றுக்கிழமை மரணத்திற்கான தொழுகை மெக்காவில் நடத்தப்பட்டு எல்லோரும் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடியில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும். சவுதி அரேபியா முழுமையாக எங்கும் இதற்காக துக்கம் கொண்டாடியோ கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டவோ செய்யவில்லை. அவரவர் அவர்களின் வேலைகளை வழக்கமாக செய்து வருகின்றனர். நம் ஊர் மெரினாவைப் போல் சமாதியின் மேல் சிறப்பான கட்டிடங்கள் கட்டி அங்கு ஜோதி தொடர்ந்து எரிவது போல் எரிக்கப் போவதில்லை. மண் தரையில் வெறும் கூழாங் கற்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்படும். இவரது உருவச்சிலையை திறந்து இவரது பிறந்த இறந்த நாளன்று அனைத்து தலைவர்களும் மாலைகளை அணிவிக்கப் போவதில்லை. அடையாளத்துக்காக குவிக்கப்பட்ட சிறிய மண் மேடு கூட மழை நீரால் சில நாட்களில் கரைந்து தரை மட்டமாகி விடும்.

மிகப் பெரிய செல்வந்த நாட்டின் உள் துறை மந்திரியாகவும், பாதுகாப்பு மந்திரியாகவும், மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்த நிலையிலும், இளவரசராகவும் கம்பீரமாக வலம் வந்தவரின் உலக தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. இனி நிரந்தரமான மறு உலக பயணத்துக்கு சாதாரண மனிதனாக தயாராகி விட்டார்.



இவரது மறு உலக வாழ்வு சிறப்பாக அமைய இந்நேரம் பிரார்த்திப்போம்.

டிஸ்கி: இளவரசர் நாய்ஃப் இறந்ததற்காக அவருக்காக பிரார்த்தித்து பள்ளியில் இன்று இரவு தொழுகையில் கடமையான தொழுகைக்கு அடுத்து அவருக்காகவும் தொழுகை நடத்தப்பட்டது. நானும் கலந்து கொண்டேன்.

Thousands gather to bury Saudi crown prince - Middle East - Al Jazeera English



Friday, June 15, 2012

தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?

தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?



சோமாலியாவில் இஸ்லாத்தை தவறாக விளங்கி தர்ஹாக்களை கட்டிய ஒரு இடத்தில் அதனை இடித்து தரை மட்டமாக்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தர்ஹாவை இடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை ஆதரிக்காமல் இருந்திருந்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு இடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

ஒருவன் இஸ்லாத்தை தவறாக விளங்கி தவறான வணக்கத்தை செய்தால் அவனுக்கு குர்ஆனின் சட்டங்களையும் நபி அவர்களின் உண்மையான போதனைகளையும் தொடர்ந்து எடுத்துக் கூறி வர வேண்டும். காலப் போக்கில் அவன் உண்மையை உணர்ந்து கொண்டு தர்ஹா வணக்கத்தை தூரமாக்குவான். ஐந்து வேளை பள்ளிக்கும் தொழுக வந்து விடுவான். அவனை கிண்டலடிப்பது, வேறு தகாத வார்த்தைகளால் அவனை கண்டிப்பது: போன்ற செயல்களை பலர் செய்வதால் அவன் வீம்புக்காகவாவது தர்ஹா வணக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பான். இது மனித இயல்பு. எனவே தவறான கொள்கையில் நமது சகோதரன் இருந்தால் அவனை அன்போடும் பரிவோடும் நெருங்கி அவன் செய்து வரும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்.

15 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நாகூரில் தர்ஹாவுக்கு சிறிது தொலைவிலேயே தர்ஹா வணக்கத்தை கண்டித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தர்ஹா வருமானத்தில் வயிறு வளர்த்து வரும் ஃபக்கீர்கள் விடுவார்களா? சிறப்பு பேச்சாளராக பி.ஜெய்னுல்லாபுதீன். பெரும் கூட்டம். ஜெய்னுல்லாபுதீன் பேசிக் கொண்டிருக்கும் போது கற்கள் வந்து மேடையில் விழ ஆரம்பித்தது. கட்டப்பட்டிருந்த ட்யூப் லைட்கள் வரிசையாக அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் ஜெய்னுல்லாபுதீன் தனது பேச்சை அப்படியும் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இது போல் தமிழகம் முழுவதும் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்த பிரசாரம். தற்போது அதற்கான பலன் தமிழகத்தில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நாகூர் தர்ஹா டிரஸ்டுகளின் முக்கியஸ்தர்கள் வீட்டு இளைஞர்கள் பலர் இன்று தர்ஹா வணக்கத்துக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளனர். தற்போது தமிழகம் முழவதும் இந்த நிலைதான். கொடி ஊர்வலம்: சந்தனக் கூடு வைபவம்: சமாதி வழிபாடு அனைத்தும் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிக் கண்ணனே தனது ஒரு பதிவில் 'எங்கள் ஊர் நாகையில் முன்பு நாகூர் சந்தனக் கூடு பல ஊர்களுக்கும் வரும்: ஹந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெறும்: பல நாட்கள் நடைபெறும்: பெரும் கூட்டமும் வரும்: இந்த வஹாபிகளின் பிரசாரத்தால் நாகூர் ஹந்தூரி வழமைபோல் அவ்வளவு சிறப்பாக இல்லை. கூட்டமும் குறைந்து விட்டது' என்று வருத்தப்படும் நிலையில்தான் உள்ளது. கோவிக் கண்ணனுக்கு வருத்தமாக தெரியும் ஒரு நிகழ்வு எனக்கு சந்தோஷமாக தெரிகிறது. இஸ்லாத்தை விளங்க வேண்டிய முறையில் விளங்கியதால் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தவறாக விளங்கியதால் அவருக்கு வருத்தத்தைத் தருகிறது.

'கதவைத் திற காற்று வரட்டும்' என்ற தொடர் தனது பக்தர்களுக்கு ஒருவர் எழுதியதை நாம் அறிவோம். பக்தர்களுக்கு காற்றை வரவழைத்து விட்டு தனக்கு அதாவது ஒரு சந்நியாசி எதை எல்லாம் தூரமாக்க வேண்டுமோ அதை எல்லாம் தனது அறைக்கு வரவழைத்தார். தனது மதம் சொன்ன கட்டளைகளை மீறினார். தற்போது 'கதவை திறந்தேன் போலீஸ் வந்தது' என்ற தொடரை வேறொரு பத்திரிக்கையில் தொடராக எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எந்த மதமாகவும் மார்க்கமாகவும் இருந்தாலும் புதிதாக புகுத்தப்பட்ட வணக்கங்கள் தூரமாக்கப்பட வேண்டும். இறை வேத நூல்கள் என்ன கட்டளை இட்டுள்ளதோ அதற்கு மாற்றமாக ஒரு வழக்கம் இருந்தால் அது எத்தனை வருடமாக நாம் பின் பற்றி வந்தாலும் தூரமாக்க தயங்கக் கூடாது.

இந்த புரிதலுக்கு நாம் வந்து விட்டால் பல குழப்பங்கள் தீர வழியுண்டு.

கடந்த 25 வருடங்களாக தொடர்ந்த ஏகத்துவ பிரசாரத்தின் காரணமாக பல மூடப்பழக்கங்கள் ஒழிந்துள்ளன. இஸ்லாமியர்களிடையே படிப்பதில் அதிக ஆர்வம் உண்டாயிருக்கிறது. பெண்களும் இன்று கல்லூரியை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தப்பட்டு இஸ்லாத்தின் மேல் முஸ்லிம்களின் மேல் மாற்று மத சகோதரர்களுக்கு இருந்த தவறான கண்ணோட்டம் களையப்பட்டுள்ளது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் சுத்தமாக குறைந்துள்ளன. இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்க நினைத்து வைத்த குண்டுகளும் காவல் துறையால் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்கள் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.



இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் எந்த சண்டைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அமைதி தொடர வேண்டும். அனைத்து மதங்களிலும் மார்க்கங்களிலும் உள்ள தவறான கொள்கைகள் களையப்பட வேண்டும் என்பதே நம் அவா!

-------------------------------

அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது:

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746
--------------------------------

கப்ர்களை கட்டக்கூடாது:

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610

--------------------------------

நபிமார்களின் கப்ர்களை கூட வணக்கஸ்தலங்களாக ஆக்க கூடாது:

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

--------------------------------

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்:

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

--------------------------------

நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை:

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி

--------------------------------

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத் தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.

இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோத மான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

-------------- 28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை. ”குடி அரசு” - சொற்பொழிவு - 02.08.1931





Wednesday, June 13, 2012

நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள் ஒதுக்குவோமா...?

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம்செய்யும் தவறுகளில் ஒன்று....

விலைவாசி உயர்வுக்கு அரசு மட்டுமா காரணம்?

விலைவாசி உயர்வுக்கு நாமும் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்.....

ஒரு வருடத்திற்கு முன் 1 US$ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா.... ???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!! !

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்புசெலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10...அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

--------------------------

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

--------------------------

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE,VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

--------------------------

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

--------------------------

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

-------------------------

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

------------------------
TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

------------------------

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

------------------------

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR,NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

-------------------------

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

------------------------

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma, Biriyani

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

(மேலே உள்ள தகவல்கள் usetamil தளத்திலிருந்து எடுத்தது. வேறு தயாரிப்புகள் ஏதும் விடுபட்டிருந்தாலோ அல்லது உள் நாட்டு தயாரிப்புகள் லிஸ்டில் ஏதும் தவறிருந்தாலோ சுட்டிக் காட்டுங்கள். திருத்தி விடுகிறேன்.)

-------------------------------------------


இப்படி நம் நாட்டுப் பொருட்களை மட்டும் வாங்கினால் அது மற்ற நாடுகளை பாதிக்காதா? என்ற கேள்வி எழும். அதை அந்த நாட்டு அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் பார்த்துக் கொள்வர். நாம் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி விட்டு பிறகு மற்ற நாடுகளைப் பற்றி யோசிப்போம். அதுவரை முடிந்த வரை நம் நாட்டு பொருட்களை வாங்கவே விருப்பப்படுவோம்.

ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து தாயகம் செல்லும் போது 100 கிலோ அல்லது 150 கிலோ என்று பொருட்களை சிலர் சுமந்து செல்வதை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். இந்திய ரூபாய்க்கு கணக்கு பண்ணிப் பார்த்தால் இவர்கள் இங்கு வாங்கிய பொருட்கள் அனைத்தும் அநியாய விலையாக இருக்கும். இருந்தும் வெளி நாட்டு பொருட்களின் மீதுள்ள மோகம் நம்மை பாடாய் படுத்துகிறது.




சில இலங்கை சகோதரர்கள் பருப்பு, எண்ணெய், மசாலா சாமான்கள், என்று கார்கோவில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பொருட்களை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். நான் ஆச்சரியப்பட்டுக் கேட்டால் 'இதை விட டபுள் விலை கொடுத்துதான் நாங்கள் இலங்கையில் வாங்க வேண்டும்.' என்பர். தற்போது நிலைமை ஓரளவு சீராகி இருப்பதாக சொல்கின்றனர். இது போன்ற நெருக்கடிகள் இந்தியர்களான நமக்கு இல்லை என்றாலும் ஊர் செல்லும் போது மூட்டை கட்டும் பழக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. ஒரு மாதம் முன்பே இதற்காக திட்டமிட்டு வாங்கி சேர்ப்பதென்ன! அந்த பெட்டியை அழகாக கட்டுவதற்காக ஸ்பெஷலிஸ்டுகளை தேடுவதென்ன! தராசை கொண்டு வந்து தினம் தினம் நிறுத்துப் பார்ப்பதென்ன! என்று படு தமாஷாக இருக்கும். இதை எல்லம் கூடிய வரை குறைத்துக் கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் இரண்டு மூன்று செட் பேண்ட்களும் சட்டைகளும் தைத்து எடுத்து வந்து விடுவேன். வீட்டில் டிவியிலிருந்து செல் போன்கள் வரை அநேக பொருட்கள் இந்திய பொருட்களாகவே இருக்கும். முடியாத பட்சத்துக்கு வேண்டுமானால் வேறு வழியில்லாமல் வெளி நாட்டு பொருட்கள் வாங்கும் நிர்பந்தம் ஏற்படும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை.

எனவே கூடியவரை அந்நிய பொருட்களை தவிர்த்துக் கொள்வோம்: இந்திய பொருட்களை வாங்க முயற்சிப்போம். வீழ்ந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நம்மால் ஆன இந்த சிறிய முயற்சியை செயல்படுத்த துணிவோம்.



Tuesday, June 12, 2012

வசதியுள்ளவர்கள் இவருக்கு உதவலாமே!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே,

ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது.



மருத்துவ அறிக்கை


திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார்.

லிப்ஃட்டில் செல்ல தேவைப்படும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டீல் ரூம்(அறை) ஒன்றை இணைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கையில் லிப்ஃட் ரூமுக்கு மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையில், இணைப்பு வேலை நடந்துக் கொண்டிருந்த சம‌யம், க‌ட்டப்பட்டிருந்த கயிறு தீடீரென்று அறுந்து விட்டதால், மூன்றாம் தளத்திலிருந்து, அதனுடன் இணைக்கப்பட்ட ரோலர்வீலோடு, மிகவும் வேகமாக, நேரடியாக அந்த ஸ்டீல் ரூம் தரை தளத்தை மோதியது. இந்த கடும் அதிர்ச்சியின் எதிர்வினையால் (அதிர்ச்சியில் மேலே நோக்கி சென்ற ஒரு கணத்தில்), ரூமிற்கு மேலை உட்கார்ந்திருந்த‌ சகோதரரின் நடு முதுகெலும்பு பகுதியின், குமிழ் எலும்புகள் ஒன்றோடொன்று மோதி, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

அதன் விளைவாக, தலை முதல் வயிற்றுக்கு சற்று மேல்பகுதி வரை உணர்வுகளோடும், மறுபாதியான, அதற்கும் கீழே உணர்வுகளே இல்லாமலும் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கான அத்தியாவசிய அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியே அனுப்பி விட்டது.

முழு லிப்ஃட் பணி எடுத்த பெரிய கம்பெனி, "என் கம்பெனியில் வேலை செய்யவில்லை" என்று தட்டிக்கழித்து விட்ட பின்பு, அவர் வேலை பார்த்த கம்பெனியும், "சின்ன கம்பெனி, நாங்கள் என்ன செய்ய முடியும், முடிந்தவரை ஆயிரம் இரண்டாயிரம் தருகிறோம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய‌ கான்ட்ராக்ட்க‌ள் எடுத்து ந‌ட‌த்தும் க‌ம்பெனியாத‌லால், எந்த‌ பெரிய‌ உத‌வியும் அவ‌ர்க‌ளிட‌மிருந்து கிடைக்க‌வில்லை.

கேர‌ளாவின் கோட்ட‌ய‌த்தில் உள்ள‌ ஒரு ஆஸ்ப‌த்திரியில் அவ‌ரை சேர்த்து, சிகிச்சை அளிக்க‌ அவ‌ரின் உற‌வின‌ர்களும், ந‌ண்ப‌ர்க‌ளும் முய‌ற்சி செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

ரியாத் பத்தா - ஷிஃபா அல்‍ஜஜீரா ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், ரியாத் சமுதாய சேவகர் ஷிஹாப் மற்றும் கேரள சமூக‌ சேவை அமைப்பின் உதவியுடன் ஒரு அறையில் தங்கியிருந்து, ஊருக்கு போகும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவ‌ர்க‌ளை திருமணத்திற்காக‌ க‌ரைசேர்க்கும், மிக‌ப்பெரிய‌ பொறுப்புட‌ன் வ‌ந்த‌ அவ‌ருக்கு நேர்ந்த‌ க‌தி, மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.

ஏழ்மையான அந்த சகோதரருக்கு, உத‌வ‌ வேண்டி ந‌ல்லுள்ள‌ம் ப‌டைத்த‌ உங்க‌ளிட‌ம் வேண்டுகோள் விடுக்கிறோம். விமான‌த்தில், ஸ்ட்ரெச்ச‌ர‌ர் வ‌ச‌தியுள்ள‌ சீட்டில் தான் அவ‌ர் த‌ற்போதுள்ள‌ நிலையில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியும். ஏர் இந்தியா விமான‌த்தில், கொச்சினிற்கு நேர‌டியாக‌த் தான் ப‌ய‌ணித்து, கோட்ட‌ய‌ம் செல்ல‌ திட்ட‌மிட்டிருக்கிறார்க‌ள். இத‌ற்கு நிறைய‌ செல‌வு ஆகும்.

தங்களால் இயன்ற உதவியை imthias@imthias.com என்ற முகவரிக்கு அனுப்பினால், உங்களிடம் நேரடியாக வந்தோ அல்லது வங்கிமாறலோ பெற்று உரியவரிடம் சேர்ப்பித்து அவரின் உறுதிப்பத்திரம் பெற்று அனுப்புகிறோம்.

அவரின் புகைப்படம், வீடியோ மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்புடன்,
இம்தியாஸ்
செயலாளர் : ரியாத் தமிழ்ச் சங்கம் மற்றும் சவூதி தமிழ்ச் சங்கம்
தலைவர் : தஃபர்ரஜ்
தொலைபேசி - 0540753261

May Allah accept all our good deeds,

The following the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch



InshaAllah I shall handover the money to the concerns.


Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

----------------------------------------

HELP WANTED FROM KIND-HEARTED PEOPLE :

This letter is in regard to one of a Tamilian who was severely injured while working in Riyadh and is seeking all of our help.

Habibur Rahman from Melappalayam Tirunelveli District after completing his alim course from Usmaniyya arabic college , had to go to Riyadh to work and thereby support his family in poverty .

In his work , while he was trying to attach a built steel room onto the elevator , the rope that was tied with the rollerwheel , got cut , and fell right onto the steel room floor base and he was severely injured , his spine bones collapsed . . He wasn't able to feel anything from below his ribs. He was taken to the hospital for first aid treatment ...After a short treatment , the hospital administration sent him out.Don't know why !

The company that was in charge of the entire lift project declined that Habirur Rahman worked for them and they cannot offer help. The sub-contract company that he worked for, gave only Saudi Riyals 1000 or 2000 and said they can't do more. So his family and friends are trying to get him to a hospital in Kottayam in Kerala for further treatment. Meanwhile he is staying in a Riyadh baddha - aljazeera hospital room with the help of Br.Shihab and Kerala association

Br.Habib Rahman has three sisters. His family , being poor ,he took the responsibility of three sisters' wedding and everything .Now he himself is in a very bad condition.

So please if you could help with anything ,Allah SWT will reward you immensely. His family is trying to fly him in Air India ( with wheel chair assistance because he cannot sit ) to Cochin and then to Kottayam. It is definitely going to cost a lot.

So whatever your help would be , send them to imthias@imthias.com. We'll send them to concerned person as soon as possible.


Regards,
Imtiaz
Secretary
Riyadh and Saudi Tamil Sangam
Chairman: Taffaraj
Phone - 0540753261

May Allah accept all our good deeds, Kindly find below the bank details, you may transfer the bank below;

The following is the account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch


InshaAllah I shall handover the money to the concerns.
Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

Contact Person in India:
Mohamed Sheikh Farook : 0091-9952247585 (Patient’s father)
Account Number: 1109191937051,
Canara Bank, Melapalayam, Tirunelveli-627005
Tamil Nadu, INDIA.

டிஸ்கி:

அன்பின் நல்லுள்ளங்களே!

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

பாதிக்கப்பட்ட ஒரு தமிழருக்கு வேண்டி உதவிகோரி மின்னஞ்சல் அனுப்பியதில் பல பகுதிகளிலிருந்தும் அனைவரும் தாராளமாக உதவி செய்ததில் இறைவனின் உதவியால் இதுவரை 13,900ம் ரியாலும் 25,000ம் ரூபாயும் வசூலாகியுள்ளது.

இன்னும் சிலர் எனது வங்கிகணக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

அவரை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள்:-

· அவரை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்த தினத்தன்று ஏர்-இந்தியா விமானத்தின் வேலைநிறுத்தத்தால் அனுப்ப முடியாமல் போனது.

· சவூதியா விமானத்தில் பன்மடங்குத் தொகை கட்டவேண்டியிருந்ததால் ஆரம்பத்தில் யோசித்தாலும் பின்னர் வேறுவழியின்றி அனுப்பலாம் என நெருங்கி முயற்சி செய்தபொழுது இருக்கைகள் இல்லை. ஸ்டெச்சரில் வைத்து அனுப்ப குறைந்தது 4 இருக்கைகள் மேலும் அவருடன் ஒரு ஆள் செல்ல வேண்டிய நிர்பந்தம்.

· இருப்பினும் பல முயற்சிகள் இருக்கைகளுக்காக நடந்து கொண்டுள்ளது, கிடைத்துவிட்டால் இன்னும் சிலதினங்களில் நேரடியாக கேரளத்தில் உள்ள மருத்துவமனைக்கே அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது.

· அவரின் முதற்கட்ட மருத்துவ செலவிற்கு நீங்கள் செய்த உதவியில் ஒரு லெட்சம் ரூபாய்க்குண்டான காசோலையை அவருடன் அனுப்புகிறோம், மருத்துவம் தொடங்கியவுடன் பாக்கியுள்ள தொகையை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம், மெளலவி. ஹபீப்ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளின்படி அவருடைய தகப்பனாருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.

-----------------------------------------

ராகிங் புகாருக்கு தனி இ-மெயில் முகவரி காவல்துறை ஏற்பாடு

ராகிங் புகார்களுக்காக தனி இ-மெயில் முகவரியை காவல்துறை உருவாக்கியுள்ளது.
கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் கேலி செய்தல் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ழ்ஹஞ்ஞ்ண்ய்ஞ்ஸ்ரீர்ம்ல்ப்ஹண்ய்ற்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற இ-மெயில் முகவரியில் பெறப்படும் புகார்கள் தலைமையிடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்திலும் ராகிங் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாது.
இந்தப் புகார்களைப் பெறுவதற்காக காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு தனி செல்போன் எண்கள் அளிக்கப்படும். இதுதொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்,பணியாளர்கள், மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்துரையாடுவர்.
கல்வி நிலையங்களில் ராகிங்குக்கு எதிரான குழுக்கள் மற்றும் படைகளை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் குழுக்களுடன் அதிகாரிகள் தொடர்பு வைத்துக்கொள்வர்.
ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகிங், பெண்களைக் கேலி செய்தல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்ற விழிப்புணர்வை கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------


மின் திருட்டு நடக்கிறதா : தகவல் தர புதிய ஏற்பாடு

மின் திருட்டு குறித்த ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்பட்டு, மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்படும் என, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கிறது. கடன் நிலைமை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழக மின் துறை சார்பில், மின் திருட்டை தடுக்க, 17 பறக்கும் படைகளும், 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட மின்சார பாதுகாப்பு படைகளும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

சிபாரிசு ஏற்கப்படாது : இந்த நிலையில், மின் திருட்டு தொடர்பாக, தமிழக மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் வாரிய அமலாக்கப் பிரிவினர் மற்றும் பறக்கும் படையினர், தீவிர ஆய்வு மேற்கொண்டு, 8,563 மின் திருட்டுகளை கண்டுபிடித்து உள்ளனர். இதில், சமரசத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையாக, 60.66 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட குழுக்கள், கடந்த மார்ச் வரை, 8,254 மின் திருட்டுகளை கண்டுபிடித்து, 19.74 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மின்சார யூனிட்டுகளை கணக்கீடு செய்து, கண்டுபிடிக்கப்பட்ட மின் திருட்டுகளின் இழப்பீடு யூனிட் அளவு, 0.076 சதவீதமாக உள்ளது. மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், அதை தவிர்ப்பதற்காக அமலாக்கப் பிரிவினர், எந்தவித சிபாரிசையும் ஏற்றுக் கொள்வதில்லை. மின் திருட்டு சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்பட்டு, மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தகவலுக்கு... : மின் திருட்டு குறித்து, பொதுமக்கள் புகார் தர விரும்பினால், தகவல் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: பறக்கும் படை: 94440 18955, மேற்பார்வை பொறியாளர் (பறக்கும் படை): 044-2852 0928, 94444 06928. செயற்பொறியாளர்: 94458 56455, உதவி செயற்பொறியாளர்கள்: 94458 56456, 94458 56460