Followers

Sunday, April 13, 2014

பீஹார் மாநிலத்தில் இந்த முறை வெற்றி யாருக்கு?



பீஹார் மொத்த மக்கள் தொகையில் யாதவர்கள் 15 சதவீதம், பார்பனர்கள் 16 சதவீதம், முஸ்லிம்கள் 17 சதவீதம் என்று பிரிந்து உள்ளார்கள். இந்த முறை வெற்றியை கணிப்பது மிக கடினமாக உள்ளது. லல்லு பிரசாத் காங்கிரஸோடு சேர்ந்து களம் காண்கிறார். நிதிஷ்குமார் இந்த முறை பிஜேபியை கழட்டி விட்டுள்ளார். ஆனால் இவரது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் திருப்தியடைந்துள்ளதாகவே பேட்டிகள் தெரிவிக்கின்றன. ஓட்டுக்கள் பலவாறாக பிரிந்து நான்கு முனையிலும் சிதறுவதால் இஸ்லாமியரின் ஓட்டு எங்கு செல்கிறதோ அவரே வெற்றிக் கனியை பறிப்பார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் பல மாணவிகளிடம் பேட்டி எடுத்ததில் ஒட்டு மொத்தமாக பிஜேபிக்கு எதிரான ஒரு நிலையையே பார்க்க முடிந்தது. பல மாணவிகள் 2002 குஜராத் கலவரத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டோம் என்று சொல்கின்றனர். இந்த மாணவிகள் அனைவருக்கும் இந்த முறை வாக்களிக்கும் உரிமை முதன்முதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முன்னேற்றத்துக்கு நிதிஷ் குமார் அரசு பல உதவிகளை வழங்கியுள்ளதை அதன் முதல்வர் விளக்குகிறார். இஸ்லாமியரின் ஓட்டு பெரும்பாலும் நிதிஷ் குமாருக்கே செல்ல வாய்ப்பிருக்கிறது.

முக்கிய தொகுதியான பாகல்பூரில் 20 சதவீதம் இஸ்லாமியர் உள்ளனர். அங்குள்ள ஒருவர் கூறுகிறார்: 'ஒரு பாட்டில் விஷத்தை வேண்டுமானாலும் நான் குடிப்பேன்: ஆனால் பிஜேபிக்கு ஓட்டளிப்பதைப் பற்றி சிந்திக்கவும் மாட்டேன்' என்கிறார். மற்றொருவர் 'இந்தியன் முஜாஹிதீன் யார்? யாரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு?அதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?' என்று கோபத்தோடு கேட்கிறார். குண்டு வெடிப்பில் சந்தேகத்தில் பிடித்து செல்லப்பட்ட முஸ்லிம் கல்லூரி மாணவனின் தாய் 'தனது மகனின் எதிர்காலம் இனி என்னாவது' என்று உடைந்த குரலில் கேட்கிறார். இந்த தொகுதியில் பிஜேபியின் தலைவர் ஷாநவாஸ் ஹூசைன் போட்டியிடகிறார். ஆனால் வெல்லப் போவது நிதிஷ் குமார் கட்சிதான் என்பது நோக்கர்களின் கருத்து. பீஹார் முஸ்லிம்கள் அன்று முதல் தங்களின் வாக்கு பிஜேபிக்கு செல்லாமல் அதனை எதிர்க்கும் பலம் வாய்ந்த கட்சிக்கு ஒட்டு மொத்த ஓட்டையும் செலுத்துபவர்களாகவே இருந்துள்ளனர். அதுதான் இந்த முறையும் தொடரப் போவதாக பலரும் சொல்கின்றனர். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.



No comments: