Followers

Tuesday, April 22, 2014

ஒரு சுயம் சேவகரின்(RSS) மன மாற்றம் !

ஒரு சுயம் சேவகரின் மன மாற்றம் !நேற்றைய பொழுது சென்னையில் மதிய தொழுகைக்கு மர்கசிர்க்கு சென்றபோது அங்கே நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான முன்னாள் சுயம் சேவகர் (rss ) முழு நேர ஊழியர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது...... ஒரு வித்தியாசமான சந்திப்பாக rss குறித்த எனது தேடலுக்கு உகந்த அனைத்து பதில்களும் சகோதரர் அவர்களிடம் கிடைத்தது .. நிறைய விஷயங்கள் பேசினோம். அவர் rss சேவகராக இருந்த நிலையில் இருக்கும் போது அவரின் பயணம் ,முஸ்லிம்கள் குறித்தான பார்வை ,இலக்கை நோக்கி பயணப்படுத்தல்,ஆசைகளையும் இச்சைகளையும் அடக்கி ஆளுதல் என பல விடயங்களையும் அறிய முடிந்தது. இதற்கு முன்னர் புத்தகம் மூலமாக மட்டுமே அறிய பட்ட ஒரு குரோதர்களின் செயல் பாட்டை முதல் முறையாக (இதற்க்கு முன்னர் சிலரை சந்தித்திருந்தாலும் அவர்களிடம் விஷயங்கள் எடுக்க முடியவிலை ..அவர்கள் அப்போதும் rss இன் ஊழியர்களாக இருந்தார்கள் ) ஒரு சுயம் சேவகரின் வாயாலே கேட்பதும் பெறுவதும் மாறுபட்ட ஒரு அனுபவமே!

அந்த சகோதரர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சகோ பிஜே இன் இஸ்லாமிய பிரச்சாரதால் கவரப்பட்டு இஸ்லாத்தின் மீதான தேடலில் தன்னை முழுவதுமாய் மாற்றிக்கொண்டு rss யை விட்டு வெளியேறி தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இன்றளவும் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்ல சொல்ல கண்ணீர் மட்டுமே என்னிடம் இருந்து பதிலாக் வந்தது..... அவரின் இஸ்லாம் பற்றிய புரிதல் மாஷா அல்லாஹ்! மிக சிறந்த புரிதலை இறைவன் கொடுத்திருக்கிறான்.. ஒரு சுயம் சேவகராக இருந்த நிலையில் கிடைக்காத ஒரு நிம்மதி மாற்றம தான் ஒரு முஸ்லிமாக மாறியவுடன் மட்டுமே அமைதியையும் வாழ்வின் உண்மையான் அர்த்தத்தையும் தம்மால் முழுமையாக உணரமுடிகிறது என்று கூறிய சகோதரர் பல விடயங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் அவரிடம் உங்கள் மாற்றத்தை ஒரு ஆவணமாக வெளி கொண்டு வரலாமா என கேட்ட போது இப்போது வேண்டாம். rss மற்றும் உளவுதுரையால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் முக்கியமான் சேவகராக நான் பணி செய்து வந்தேன். எனது மாற்றம் நிச்சயம் அவர்களுக்கு இழப்பே இன்றும் என்னை மிரட்டி கொண்டுதான் இருகிறார்கள். எனவே வெளியே சொல்ல வேண்டாம் என்றும் கூறி விட்டார். நேரம் வரும் போது சொல்கிறேன் அப்போது செய்யுங்கள் என்று கூறி விட்டார். அவர் ஒரு சினிமா கதை ஆசிரியரும் கூட. பிரபல சினிமா இயக்குனரின் உதவியாளர்.

சகோ பிஜே இன் மூலம் கவரப்பட்டு இஸ்லாத்தை தழுவிய சகோதரரர் இன்று சகோ பிஜே குறித்து எழுப்பும் பல கேள்விகளுக்கு என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை. சில கேள்விகள் ஏனைய முஸ்லிம்கள் அனைவரையும் பார்த்தும் இருந்தது. ஆனால் பதில்தான் இல்லை.

இஸ்லாமியர்களின் பிரிவினை, அரசியல் சந்தர்ப்பவாதம், போலி ஒற்றுமை என பல வேறுபாடுகள் இருந்தும் உண்மையான் ஒரு சகோதரத்துவமே நம்மை ஓர் புள்ளியில் இணைக்கிறது என்கிறார் அந்த சகோதரர்.

தான் rss இல் இருக்கும் நிலையில் தன் தங்கையை யாராவது கிண்டல் செய்தால் கோபம் எளிதில் வராது. ஏனென்றால் முந்தய நாட்களில் நானும் பல பெண்களை சீண்டி உள்ளேன்.. ஆனால் இன்றோ சக முஸ்லிம் சகோதரி பர்தா அணியாமல் வெளியே சென்றால் தனக்கு கோபம் வருகிறது, அவர்களை சந்தித்து பேசி மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது என்கிறார்.

வட்டி வாங்குவது ஹராம், கொலை செய்வது ஹராம், சினிமா ஹராம் என்று சொல்ல கூடிய முஸ்லிம்கள் பிறரை கழுவி குடித்து புறம் பேசுகிறீர்களே இது மட்டும் ஹராம் இல்லையா என்றும் கேட்கிறார்.

தன அக்காவின் மகன் ஒரு முறை rss சாகாவில் சேர சென்ற போது அங்கே போக வேண்டாம் என கூறிய போது தன்னை தீவிரவாதி என்றும் அவன் வெடிகுண்டு வைக்கும் மதத்தில் இணைந்து விட்டான் என்று அவரின் உடன் பிறந்த அக்காவே தன மகனுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார் என வருத்தமுடன் கூறுகிறார்

எங்களை போன்றவர்கள் இஸ்லாத்தை தேடி உணர்த்து வருகிறோம்.. என்னைப் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் போது மட்டும் போட்டி போட்டு இணைத்து கொள்ளும் அனேக முஸ்லிம இயங்கங்கள் நாங்கள் பின் நாட்களில் சந்திக்கும் பிரச்சினை குறித்து கவலை படுவதோ, ஒரு பின் தொடரலோ இல்லாத நிலையில் எதிரிகளின் அச்சுறுத்தல், உளவுத்துறையின் அய்யோக்கிய தனம்.. இதற்கிடையில் வீட்டினரின் கொடுமைகள், பாச போராட்டங்கள் என்று பல சிக்கல்களுக்கு ஆளாகிறோம்... இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் அனேக பேர் உண்மையான் முஸ்லிமாக கடைசி வரையில் வாழ்ந்து விடுவதில்லை.. அதற்கு காரணம் முஸ்லிமாக மாறியவுடன் இருக்கும் அரவணைப்பு பிற்காலங்களில் அந்த மக்களுக்கு கிடைப்பதில்லை.

இந்நிலையில் ஒரு சில கிருத்துவ இயங்கங்கள் இன்றளவும் தம்மை சந்தித்து கிருத்துவானாகி விடு உன் எல்லா தேவைகளையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தினம் என்னை சந்தித்து வருகிறார்கள்.
இன்றும் rss இல் இருந்து எனக்கு மிரட்டலும் அதே நேரத்தில் மீண்டும் ஹிந்து வாகி விடு என்றும் கூறி அழைப்பு வருகிறது இருந்தும் இன்று நான் இஸ்லாமியனாகவே உள்ளேன் என்று சொல்கிறார்.

இறுதியாக பிரியும் நிலையில் அவர் என்னிடம் "சகோதரா! நன் எழுதிய ஒரு கவிதை இருக்கிறது அதை வேண்டும் என்றால் வெளி இடுங்கள். எனது பெயரையோ புகை படத்தையோ வெளி இட வேண்டாம்" என்று கூறி விட்டார்... அவரின் பெயர் மற்றும் புகை படம் வெளியிட வர மறுத்தது பயத்தால் அல்ல.. அவர் இந்த மனித சமூகத்திற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது.. .நீண்ட தூர பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் மட்டுமே வேண்டாம் என்கிறேன் என கூறிய சகோதரரிடம் ஆறுதல் கூறி பிரிந்து வந்தேன். இறைவன் நாடினால் வெகு விரைவில் அவரின் மாற்றத்தை ஒரு புத்தகமாக வெளி இடுவேன் இன்ஷா அல்லாஹ். பிரார்த்தனை செய்யுங்கள் அந்த சகோதரருக்கும் எனக்கும்!


இது அவரின் கவிதை

ஓடி விடுங்கள் !!!

ஓ!இந்துக்களே!
இந்தியாவை ஆள ஒரு நாய்
வாலாட்ட போகிறதாம்
ஜாக்கிரதை
முஸ்லிம் மீது
பழிபோடுவதற்காக
இந்துவான காந்தியை கொன்ற
கோட்சே கூட்டம்
முஸ்லிம்கள் மீது
பழிபோடுவதற்காக
நாளை
உங்களையும்
கொல்ல நேரலாம் !!!

ஓ!கிருஸ்தவர்களே!
ஒரு
கரடி
நாடாள வருகிறதாம்
ஜாக்கிரதை
பாதிரியாரை குடும்பத்தோடு காரில் வைத்து
கொளுத்திய கூட்டத்தால் நாளை
கன்னிமேரிகள் கற்பழிக்கப்படலாம்!!!

ஓ!முஸ்லிம்களே!
ஒரு
ஓநாய்
நாடாள
வருகிறதாம்
ஜாக்கிரதை!
இந்தியாவே
குஜராத்தாகி விடும்
அல்லது
முஸ்லிம் கர்ப்பிணி பெண்களின்
வயிறு கிழிக்கபடலாம் !!!

ஓ!மிருகங்களே!
ஒரு கரடி
காடாள வருகிறதாம்
ஜாக்கிரதை
ஓடிவிடுங்கள் !!!

ஓ இந்தியாவின் பாமரனே!
காந்தியை கொன்றது
கோட்சே கூட்டம்

இந்திராவை கொன்றது
சீக்கியர் கூட்டம்

ராஜிவை கொன்றது
விடுதலை புலிகள்

ஆனால் எந்த ஆதாரமும்
இன்றி இன்றும்
முஸ்லிம்கள் மட்டும்
தீவிராதிகளாம் ......
ஓடி விடுங்கள் ???

-இப்படிக்கு முன்னாள் rss முழு நேர ஊழியன்


என்றும் இறைப்பணியில்

அன்சர் மீரான்
திருவிதாங்கோடு

தமக்கு ஏதெனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள்: நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழிப் பெற்றோர்.

குர்ஆன் 2:156,157

No comments: