Followers

Friday, April 04, 2014

கோப்ரா போஸ்டின் 'ஆபரரேஷன் ராம ஜன்மபூமி'

கோப்ரா போஸ்டின் 'ஆபரரேஷன் ஜன்மபூமி' : பாபர் மசூதி இடிப்பை இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டுச் செய்தது அம்பலம்....

தேள் இன்னொருமுறை கொட்டிவிட்டது. வன்முறைக்குக் காரணமானவர்கள் பதறித் துடிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் இதென்ன கலாட்டா எனத் தடை செய்யக் கோருகின்றனர்.

கோப்ரா போஸ்டின் அசோசியேட் ஆசிரியர் கே.அசிஷ். தன்னை ராமஜன்ம பூமி இயக்கம் பற்றி ஆய்வு செய்ய வந்தவர் எனக் கூறிக் கொண்டு, 1992ல் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டம் ஆக்கியதில் முன்னணியில் நின்ற வினய் கத்தியார் உட்பட்ட 23 முக்கிய தலைவர்களைப் பேட்டி கண்டு சங் பரிவாரம் எப்படி இதை திட்டமிட்டு நிறைவேற்றியது என்பதை அம்பலப் படுத்துகிறார். கோப்ரா போஸ்ட் தளத்தில் இதை நீங்கள் நேரடியாகக் காணலாம். இவர்களில் 19 பேர் மசூதி இடிப்பிற்காக 'சார்ஜ் ஷீட்' போடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.எச்.பி, சிவசேனா மட்டத்தில் இச்சதி திட்டமிடப்பட்டது;

ஆர்.எஸ்.எஸ் அணிகளைக் கொண்டு ஒரு தற்கொலைப் படை (பலிதானி ஜாதா) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது;

பலமாதங்களுக்கு முன்னதாகவே கரசேவகர்களுக்கு உயரமான கட்டிடங்களில் தாவுவது உட்பட பயிற்சிகள் அளிக்கப்பட்டன;

எளிதான முறைகளில் மசூதியை இடிக்க இயலாவிட்டல் வேடி வைத்துத் தகர்க்க த்யார் நிலையில் இருந்தனர்;

அசோக் சிங்கால், வினய் கத்தியார், வி,எச் டால்மியா முதலியோர் அடங்கிய இரகசியக் கூட்டம் ஒன்று மசூதி இடிப்பு தொடர்பாக் வி.எச்.பி, பஜ்ரங்தள், ஆர்.எஸ். எஸ் அமைப்புகள் நடத்தின;

உள்ளூர் நிர்வாகம் பூரண ஒத்துழைப்பு நல்கியது; அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் முன்னின்று கர சேவகர்களுக்கு சத்தியப் பிரமாணம் (சங்கல்ப்) செய்வித்தனர்...

முதலான வாக்குமூலங்களைக் காதாரக் கேட்பீர்...!

http://www.cobrapost.com/index.php/news-detail?nid=5781&cid=70

நன்றி: மார்க்ஸ்

1 comment:

UNMAIKAL said...

கோப்ரா போஸ்ட் கிளப்புவது வன்முறையா???

பாபர் மசூதி இடிப்புக்கு பின்னணியில் உள்ள சதியை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது.

"இந்து முஸ்லிம் வன்முறையை" தேர்தல் நேரத்தில் தூண்டுவது கேவலமில்லையா? என சில பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பரிவாரங்கள் இணையத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தேர்தல் ஆதாயத்துக்காக கலவரத்தைத் தூண்டுவது கேவலமான விசயம்.

கோப்ரா போஸ்ட் இதழ், இந்தியர்களிடையே மதவெறியைத் தூண்டியவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அழுகிய புண்ணில் வாழும் புழுக்களைப் போல, இந்திய சமூகத்தில் கலவரங்களைத் தூண்டி, அந்தப் புண்ணில் அதிகாரத்தைத் தேடும் பாஜக பரிவாரத்தையும், ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளையும் - அவர்கள் வாயாலேயே அம்பலப்படுத்தியுள்ளது.


பாபர் மசூதியை இடிக்க 38 நாட்கள் பயிற்சி எடுத்து, திட்டமிட்டு சதி செய்தவர்கள் இந்துக்கள் அல்ல.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டுமென உணர்ச்சிகளை உசுப்பி விட்டதும் இந்துக்கள் அல்ல. மாறாக, இந்து மதத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அயோக்கியர்கள்.

இப்போது, அந்த அயோக்கியர்களை இந்திய மக்கள் அறிந்துகொள்ளச் செய்திருக்கிறது "கோப்ரா போஸ்ட்" இணையதளம். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான அந்த அரசியல் வில்லத்தனம் வெளியே வந்திருக்கிறது.

இதனால் இந்து - முஸ்லிம் சகோதரர்களாக வாழும் "இந்தியர்கள்" உண்மையை உணர்ந்துகொள்வார்கள்.

எனவே, அந்த சதி அம்பலப்பட்டதால், மக்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும், பிரிவினையால் அரசியல் செய்ய நினைக்கும் பாஜக பரிவாரம் தனிமைப்படும்.

THANKS TO: http://sindhan.blogspot.com/2014/04/blog-post_4092.html