'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, April 24, 2014
அரவிந்த் கெஜ்ரிவால் மகனுடன் ஒரு பேட்டி!
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற சமயம் எடுத்த நேர் காணல்.
நிருபர்: அரவிந்த் கெஜ்ரிவால் மகன் கொல்கேத் நம்முடன் உள்ளார். உங்கள் தந்தை டெல்லி முதல் மந்திரி ஆனது பற்றி உங்கள் கருத்து?
கொல்கேத்: எனது தந்தை முதல் மந்திரி ஆனது மகிழ்ச்சியளிக்கிறது. சாமான்ய மக்களின் பிரச்னைகளை எனது தந்தை தீர்ப்பார் என்று நினைக்கிறேன்.
நிருபர்: உங்கள் தந்தை பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறீர்களா?
கொல்கேத்: தன்னால் எது முடியுமோ அதனைத்தான் எனது தந்தை மக்களிடம் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பேன் என்று சொன்னது போகிற போக்கில் தெளித்து விட்டு சென்ற வார்த்தைகள் அல்ல. பல அறிஞர்களைக் கொண்டு ஆய்வுகள் பல செய்து இதனை தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன்தான் வாக்குறுதிகளை எனது தந்தை கொடுத்துள்ளார். தற்போதய அரசின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸின் ஆதரவும் தேவைப்படும். சில நாட்களுக்குப் பிறகு சன்னம் சன்னமாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனது தந்தை.
நிருபர்: உங்கள் தந்தை முழு நேர அரசியல்வாதியாகி விட்டதால் குடும்பத்தவர்களோடு செலவிடும் நேரம் குறைந்து விடவில்லையா? இது உங்களுக்கு ஒரு இழப்புதானே?
கொல்கேத்: இந்த நாட்டு நலனுக்காக எனது தந்தை அதிக நேரத்தை செலவிடுவது எனக்கு பெருமையே! பலரும் என்னிடம் 'உனது தந்தை பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்' என்று என்னிடம் கூறும் போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களோடு தனது நேரத்தை செலவிட எனது தந்தை தயங்கியதில்லை. எனவே எனக்கு இது ஒரு பிரச்னையாகவும் இருக்கவில்லை.
நிருபர்: உங்கள் தந்தைக்கு விஐபி களுக்காக தனி மரியாதை செய்வது பிடித்தமில்லாதது. ஆனால் தற்போது உங்களை எல்லோரும் 'அரவிந்தின் மகன்' என்று பார்ப்பர். பள்ளிகளிலும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கொல்கேத்: அப்படி எல்லாம் எதுவும் நிகழாது. பழைய நண்பர்கள் அனைவரும் பழைய மாதிரியே தற்போதும் என்னிடம் பழகுகின்றனர். ஒரு சிலர் விளையாட்டுக்காக 'முதல்வரின் மகன்' என்று நகைச்சுவையாக கூறுவர். என்னைப் பொருத்த வரையில் படாடோபம் இல்லாத சாதாரண வாழ்வையே விரும்புகிறேன்.
நிருபர்: குடும்பத்தோடு உங்களின் தந்தை இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வார். படிப்பு விஷயங்களில் ஆலோசனைகளும் வழங்குவாரா?
கொல்கேத்: படிப்பில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதனையும் தீர்த்து வைப்பார். ஆலோசனைகளாக அவர் சொல்வது 'எது செய்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும். எந்த நிலையிலும் தவறான வழியை தேர்ந்தெடுத்து விடாதே! எந்த மனிதருக்கும் துன்பத்தைக் கொடுக்காதே! வாழ்வில் முன்னேற நன்கு முயற்சி எடு. ஆனால் உண்மை வழியிலிருந்து பிறழ்ந்து விடாதே' என்று அடிக்கடி எனக்கு சொல்லிக் கொண்டிருப்பார்.
நிருபர்: படித்து பெரிய ஆளாக ஆனவுடன் என்னவாக விருப்பம் உங்களுக்கு. உங்கள் தந்தையைப் போல் அரசியலில் நுழைவீர்களா?
கொல்கேத்: எனது அப்பா எனது வருங்காலத்தை தீர்மானிப்பார். இது வரை நான் எதுவும் யோசிக்கவில்லை. பெரியவனானதும் அவசியம் ஏற்பட்டால் அரசியலுக்கும் வருவேன்.
நிருபர்: இவ்வளவு நேரம் எங்களோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
கொல்கேத்: உங்களுக்கும் எனது நன்றி!
இந்த சிறு வயதில் என்னவொரு ஆணித்தரமான ஆழமான பதில்கள். தந்தை எவ்வழி மகனும் அவ்வழி. இந்த சிறுவனிடம் எந்த நேரமும் ரத்த வெறியுடன் அலையும் நரேந்திர மோடியையும், அமீத் ஷாவையும், பாபு பஜ்ரங்கியையும் மற்ற இந்துத்வாவினரையும் பாடம் படித்துக் கொள்ள அனுப்ப வேண்டும். இது போன்ற சிறுவர்களே இந்த நாட்டை நிர்மாணிக்கப் போகும் வருங்கால சிற்பிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment